Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-8 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 01, 2012 | , ,


‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்தே மக்காவிலும் மதீனாவிலும் அரபிகள் தமக்குள் பல போர்களை நடத்தியுள்ளனர்.  மக்காவில் நடந்தவை, ‘ஹர்புல் ஃபிஜார்’ என்றும், மதீனாவில் நடந்தவை, ‘ஹர்புல் புஆத்’ (Buaath) என்றும் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பாக ‘சஹீஹுல் புகாரீ’ நபிமொழித் தொகுப்பில் இடம்பெற்ற தகவல் ஒன்றின்படி, ஒரு பெருநாளின்போது (மேற்கண்ட) ‘புஆத்’ போரின் பாடலைப் பாடிக்கொண்டு பாடகிகள் இருவர் தெரு வழியாகச் சென்றனர்.  அதனைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஷைத்தானின் கருவி, ஷைத்தானின் கருவி” என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்கள், “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு.  நமது பெருநாள் இந்த நாள்தான்” என்று கூறினார்கள்.                                      (புகாரீ-3931)

“ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்” என்று கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள், இது போன்ற ‘ஜாஹிலிய்யா’ப் பாடல்களையும் அனுமதித்துள்ளார்கள் என்றால், கவிதைகளை அவர்களும் ரசித்துள்ளார்கள் என்றுதானே பொருள்?   

ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم  لا عيش إلا عيش الاخره
فاغفر للأنصار و المهاجرة      

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.  அதனைக் கேட்ட அருமைத் தோழர்கள்,

نحن الذين بايعوا محمدا
على الجهاد ما بقينا أبدا 

என்று உணர்ச்சி பொங்கப் பாடினார்கள். (சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

“இறைவா!  உண்மை வாழ்வதுவோ 
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின் 
நேசர் களைநீ மன்னிப்பாய்!”
“நாங்கள் வாழும் காலமெலாம் 
நன்மார்க் கப்போர் செய்வமெனப்
பாங்காய் முஹம்மது நபியிடமே 
பகர்ந்த உறுதி மொழியன்றோ!”  

இஸ்லாமிய எழுச்சியின் தொடக்க காலத்தில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்கள் சொல்லொணாத் தொல்லை கொடுத்தனர்.  அத்தகைய வேதனைகளைச் சோதனைகளாக ஏற்றுப் பொறுமை செய்த பெருமானார் (ஸல்) அவர்கள், சில வேளைகளில் தம்  கவித் தோழர்களை விளித்துக் கவி பாடத் தூண்டியுள்ளார்கள் என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.  அதற்கோர் எடுத்துக்காட்டு:

‘பனூ குறைழா’ என்ற மதீனத்து யூத இனத்தாரின் வசிப்பிடத்தை அடைந்தபோது, ‘ஷாயிருன் நபி’ என்ற பெயர் பெற்ற நபித்தோழர் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களை விளித்து, “இணை  வைப்பாளர்களுக்கு  எதிராக வசைக் கவி பாடுவீராக!  வானவர் கோமான் ஜிப்ரீல் உமக்குத் துணை நிற்பார்” எனப் பணித்தார்கள்.                                           (சஹீஹுல் புகாரீ – 3213, 4123, 4124, 6153)                                                                        


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

16 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாத்தில் கவிதைக்கும் இடமுண்டு என்பதை ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//இறைவா! உண்மை வாழ்வதுவோ
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர் களைநீ மன்னிப்பாய்!”
“நாங்கள் வாழும் காலமெலாம்
நன்மார்க் கப்போர் செய்வமெனப்
பாங்காய் முஹம்மது நபியிடமே
பகர்ந்த உறுதி மொழியன்றோ!” //

வேண்டுதலையும்,உறுதி மொழியையும்,கவியாக பாடி கேட்ட சத்திய சஹாபாக்களை அங்கிகரித்த. நபி (ஸல்) அவர்களின் ஆதாரம் இருக்க.நாமும் நல்ல கவிகளை ஆதரித்து அவைகளின் மூலமும் படிப்பினை பெறுவோம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நபி (ஸல்) அவர்களே சில சந்தர்ப்பங்களில் நபித் தோழர்களை கவிதை பாடும் படி சொல்லியிருக்கிறார்கள்.

நல்ல கவிதைகளை பாடிய சிறுவர்களை தடுத்த நபித்தோழர்களை அவர்களைத் தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

நபித் தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்கள் மிகப் பெரிய கவிஞராக இருந்தார்கள். இவர் நபியவர்களின் கவிஞர் என்றே அறியப்பட்டுள்ளார். கவிதை எழுதுவது முற்றிலும் தவறானது என்றிருக்குமானால் நபியின் கவிஞர் என்று இவர் அழைக்கப்பட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இணை வைப்பாளர்களை தாக்கி வசைக்கவி பாடும் படியும் அப்படி பாடும் போது ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் ஹஸ்ஸான் அவர்களுக்கு உதவியாக இருப்பார் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நல்ல கவிதைகள், இணை வைப்பை எதிர்க்கும் வகையில் உள்ள கவிதைகள் அனுமதிக்கப் பட்டதுதான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)'' என்றேன். "பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன். (முஸ்லிம் - 4540)

உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகள் இஸ்லாமியக் கருத்துக்கு உட்பட்டவையாக இருந்த காரணத்தினால் தான் நபியவர்கள் அவற்றைப் பாடச் சொன்னார்கள். அவருடைய கவிதைகளில் 100 கவிதைகளை ஒரே நேரத்தில் ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் பாடிக்காட்டியிருக்கிறார்கள்.

சிறந்த கருத்துக்களை உடைய கவிதைகளை இஸ்லாம் தடுக்கவில்லை. இணை வைப்பிற்கு எதிரான ஏகத்துவக் கருத்துக்களைத் தாங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

\\இறைவா! உண்மை வாழ்வதுவோ
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர் களைநீ மன்னிப்பாய்!”// தூவாக்கள் கலந்த கவி கலவை

வாழ்த்துக்கள்...இன்னும் தொடரட்டும் இத்தொடர் பதிவு இன்ஷா அல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//“இறைவா! உண்மை வாழ்வதுவோ
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர் களைநீ மன்னிப்பாய்!”
“நாங்கள் வாழும் காலமெலாம்
நன்மார்க் கப்போர் செய்வமெனப்
பாங்காய் முஹம்மது நபியிடமே
பகர்ந்த உறுதி மொழியன்றோ!” //

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கவிதை இழையோடும் மன்னிப்பையும், சத்திய சஹாபாக்கள் அவர்களின் இறையச்சத்தையும் உறுதியையும் அல்லாஹ்வுக்கா தூதர் அவர்களிடம் அளித்த உறுதிமொழியை உரைக்கிறார்கள்...

அல்லாஹ்வின் பேருதவியால், மற்றுமொரு கவிதைப் பதிவில் அங்கே சகோதர சகோதரிகளின் மனமாற்றத்திற்காக நல்லுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் வாயிலாக அல்லாஹ் அவனது நேர்வழியை கோடிட்டு காட்ட வைத்திருக்கான்...

விரைவில் நற்செய்திகளால் நம் நெஞ்சம் நிறைய பிரார்த்திப்போம்.

sabeer.abushahruk said...

அஹ்மது காக்காவின் விளக்கங்கள் நான் அறியாதவை. தம்பி இர்ஃபானின் ஹதீஸ் பின்னூட்டமும் வியக்க வைக்கிறது.

ஆயினும், எதிர் வாதங்களைக் கொண்டு வாதாடும்போதுதான் மேற்கொண்டு விளக்கங்கள் பெற முடியும். ஆனால், தம்பி அர.அல. இதில் கலந்துகொள்ளாமல் விலகி இருப்பதில் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. வாதம் செய்வது விளங்கிக்கொள்ளத்தான். ஆகவே, எதிர்மறைக்கருத்துக்கள் இருப்பின் தம்பி லத்திஃபோ ஏனைய சகோதரர்களோ இங்கு பதியவும்.

அஹ்மது காக்கா: ஜஸாக்கல்லா க்ஹைர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரியே கவிதை !

சகாப்தம் நிகழ்ந்திக் கொண்டிருக்கிறது, பெருமைக்காக சொல்லவில்லை அனுபவபூர்வமாக சொல்கிறேன், என்னிடம் ஒரு நட்பு ஒன்று கவிதைகள் கேட்டுக் கொண்டதனை அப்படியே கவிக் காக்காவிடம் எடுத்துரைத்து எழுந்த கருதான் அழப்பாக வைத்த வைர வரிகள் சகோதரியே !

அதன் தாக்கம் தமிழ் கூறும் நேசங்களை சென்றடையட்டும் இன்ஷா அல்லாஹ்...

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நபி(ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரம், நபி(ஸல்) அவர்களின் பண்புகள், குணவியல்புகள் பற்றிய செய்திகள் அனைத்தும் ஹதீஸ் என்றும் சுன்னா என்றும் கூறப்படும் என்பது அனேக அறிஞர்களின் அபிப்பிராயமாகும்.
நபி(ஸல்) அவர்களின் மார்க்க ரீதியான சொல், செயல், அங்கீகாரம் என்பன பின்பற்றுதலுக்கும், நம்பிக்கை கொள்வதற்குமுரியதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறிய சில விடயங்கள் நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். மற்றும் சிலதும் செய்ய வேண்டியவைகளாக இருக்கலாம். இந்த வகையில் சுன்னா சொல்லும் செய்திகளை நம்புவதும், அதன் ஏவல்களை எடுத்து நடப்பதும், அதன் விலக்கல்களை விட்டும் விலகிக் கொள்வதும் கட்டாயக் கடமையாகும்.

நபி(ஸல்)அவர்களின் ஏவல் வந்தபின் அதை ஈமான் கொள்வதுதான் ஒரு மூஃமினுடைய பன்பாகா இருக்க வேண்டும், அதில் எங்குவாது ஒரு குறை தேடுவது என்பது தவாறான வழிமுறை. அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக....ஆமீன்

Unknown said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லையே?!

Unknown said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லையே?!

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

//ஆயினும், எதிர் வாதங்களைக் கொண்டு வாதாடும்போதுதான் மேற்கொண்டு விளக்கங்கள் பெற முடியும். ஆனால், தம்பி அர.அல. இதில் கலந்துகொள்ளாமல் விலகி இருப்பதில் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. வாதம் செய்வது விளங்கிக்கொள்ளத்தான். ஆகவே, எதிர்மறைக்கருத்துக்கள் இருப்பின் தம்பி லத்திஃபோ ஏனைய சகோதரர்களோ இங்கு பதியவும்.//

மார்க்க விசியத்தில் விவாதங்களை விட்டுவிட்டு குர் ஆன் சுன்னாவில் வந்தவைகளை ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அதில் விவாதத்தை தவிர்க்க வேண்டும்.......... அப்படி மார்க்க விசியத்தில் ஒரு குழப்பான சூல்நிளை வந்துவிட்டால் அதை மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு, அதைதான் நாம் அமல் செய்ய வேண்டும். அதை தவிர்த்து மார்க்க விசியங்களில் இல்மை சரியான முறையில் பெற்றுக்கொள்ளாத நாம் விவாதம் செய்தால் மிக பெரிய குழப்பத்தை உருவாக்கிவிடுவோம்.... அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

Unknown said...

ஓ....! அப்படியா....?

sabeer.abushahruk said...

சகோ. மு.யூசுஃப்,

//அப்படி மார்க்க விசியத்தில் ஒரு குழப்பான சூல்நிளை வந்துவிட்டால் அதை மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு//

எந்த அறிஞரிடம் என்று சொல்லித்தர மறந்துவிட்டீர்கள்.

இந்த அறிஞர் அவர் தவறு என்றும் அந்த அறிஞர் இவர் தவறு என்றும் பரைசாற்றும்போது பாவம் நான் யாரிடம் விளக்கம் கேட்பேன்.

எனவேதான், வாதங்களைக்கொண்டு நம்மூர் அறிஞர் அஹ்மது காக்காவிடம் விளக்கம் பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அபூ பிலால் காக்கா...

நீங்கள் இவ்வாறு “ஓ....! அப்படியா....?“ என்று ஏன் கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிய வில்லை.

மார்க்க விசியங்களை விவாதகளத்திற்க்கு கொண்டு வந்து அதில் சரியான திர்வை பெற முடியிமா?

”இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் கூற்று : மார்க்க விசியத்தில் தர்க்கங்களை விட்டு விடுவது ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஆதாரம் கிதாப்” உஸுளுஸ் ஸுன்னா”

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

sabeer.abushahruk காக்கா.....

//எந்த அறிஞரிடம் என்று சொல்லித்தர மறந்துவிட்டீர்கள்.//

குர் ஆன் சுன்னாவை சஹாபாக்கள்,தாபியின்ங்கள்,தபஃதாபியின்கள் மற்றும் இமாம்கள் (சுறுக்கமாக சலஃப்கள்) எவ்வாறு புரிந்து அதை அமல் செய்து வ்ந்தார்களோ அதே அடிப்படையில் விளங்குவது. இன்று யார் குர் ஆன் சுன்னாவை சலஃப்களின் புரிந்துனர்வின் அடிபடையில் மார்க்க கல்வியை போதிக்ரார்களோ அவர்களிடம் மார்க்கத்தின் விளக்கதை பெற்றுக்கொள்ள வேண்ட்ம்.

அதை தவிர்த்து பிற வழிமுறையில் (வாதம்,விவாதம்)விளக்கதைபெற்றால் அது மிக தவறான வழிமுறையாகும்.

அல்லாஹ் அஃலம்....

Unknown said...

فاسألو أهل الذكر إنكنتم لا تعلمون

Yasir said...

இஸ்லாத்தில் கவிதைக்கும் இடமுண்டு என்பதை ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன.அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானக ஆமீன்
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அஹமது காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு