Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 2 5

தாஜுதீன் (THAJUDEEN ) | October 07, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த 2ம்தொடரை படிக்கவும். இரண்டாவது தொடர், வாசகர்களாகிய உங்களை சந்திக்க வந்து விட்டது. இனி தொடருவோம் வாருங்கள்:

வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும்

  நமது நாட்டு வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கவர்ச்சிகரகமான விளம்பரங்களை கொடுத்து மக்களை மயக்கி வீட்டு கடன் தருகிறார்கள். பணம் கட்ட தவறினால் வட்டி கூடும் பிறகு வீட்டையே இழக்க நேரிடும்.

கார் கடன் - கார் நமக்கு வந்து  விடுகிறது பணம் கட்ட தாமதமானால்  காரும் பறிமுதல் செய்யப்படும்.


நகை கடன் தருகிறார்கள். நகையை குறிப்பிட்ட தவனைக்குள் மீட்க முடியாவிட்டால் நகையும் ஏலம்(பறி) போகும் அபாயம்.

இப்படி பல பெயர்களில் நூதனமான கடன் திட்டங்களை வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் கடன் வாங்கலையா? கடன் என்று (தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர் போல) தொடர்ந்து அறிவித்து (அலறி)க் கொண்டு இருக்கிறது. நாம் வாங்கும் கடன்கள் அனைத்தும் நம்மை வட்டி என்ற படுகுழியில் தள்ளி விடுகிறது. படுகுழியில் விழுந்தாலும் தட்டு தடுமாறி எழுந்து விடலாம். ஆனால் வட்டி என்னும் பாதாளத்தில் தவறி விழுந்தால் மீள்வது சிரமமே. கடன் கொடுக்கும் வங்கிகள், நிறுவனங்களின் சட்டதிட்டங்களின் படிவங்களை படிப்பதற்கு நம் கையில் ஒரு பூதக்கண்ணாடி இருக்க வேண்டும். கடன் கொடுக்கும் வங்கிகளின் இரட்டை நிலைப்பாடு கோடீஸ்வரனுக்கும் - சாமான்யனுக்கும் வித்தியாசப்படும். நம்மை கடனாளியாக்க துணைபுரியும் சாதனங்களில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு விளம்பரத்தை திருப்பி திருப்பி பார்க்கும்பொழுது அந்தப்பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நம்மை வலுக்கட்டாயமாக தள்ளிவிடுகிறது. (பயனுள்ள பொருட்கள் வாங்குவதில் பிரச்சனையில்லை) தேவையில்லாவிட்டாலும் கௌரவத்திற்காக கடன் வாங்கி தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதில் நமக்கு ஒரு சந்தோஷம்.


கடன் அட்டை (Credit Card)
  
    கடன் அட்டை வைத்திருப்பது கௌரவம் என்ற நிலைக்கு மனிதர்களை ஆளாக்கி விட்டது இந்த நவீன உலகம். வங்கிகளில் பணிபுரிபவர்கள் கேன்வாஸ் செய்கிறோம் என்ற பெயரில் உங்களுடைய சம்பளத்தை எங்கள் பேங்கில் டிரான்ஸ்பர் செய்யாமலேயே நாங்கள் கடன் தருகிறோம். (அதாவது உங்களை கடன்காரனாக்கி வட்டி என்ற கடலில் மூழ்கடித்து விடுவோம்) சம்பள சர்டிபிகேட் கொடுத்தால் போதும் என்று அவர்களின் விளக்கப்படிவத்தை தந்து விட்டு செல்கிறார்கள்.

முன்பெல்லாம் (கடந்த காலங்களில்) மனிதர்களின் மணிப்பர்சுகளில் பணமும் விசிட்டிங்கார்டுகளும் இருப்பதை பார்க்கலாம். ஆனால் இன்றோ கடன் அட்டை (Credit Card) வைத்திருப்பதுதான் கௌரவம் என்ற கலாச்சாரம் தற்பொழுது மக்களிடம் பரவி விட்டதால் அதிலும் பல வங்கிகளின் கடன் அட்டைகள் கலர் கலராக மணிப்பர்சுகளில். இப்பொழுதெல்லாம் பணம் வைத்திருப்பதையே கௌரவ குறைச்சலாக நினைக்கும் மக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்கும் சலுகை திட்டங்களோ கார்டை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது போல் இருக்கும்.

கடன் வாங்கக்கூடாது என்று உறுதியாக வாழும் மனிதர்களையும் வங்கியில் பணிபுரியும் கடன் அட்டை பிரிவு விற்பனை பிரதிநிதிகள் சந்தித்து கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி கடன் (பிறகு வட்டி) என்னும் வலையில் விழ வைத்து விடுகிறார்கள். கடன் அட்டையால் நமக்கு நன்மைகள் 5% அல்லது 10% இருக்கலாம் ஆனால் தீமைதான் அதிகமாக ஏற்படுகிறது. அது என்ன தீமை? நாம் கடைகளுக்கு சென்றால் பொருள்களை பார்த்து பார்த்து வாங்குவோம். அதிகமாக எடுத்து விட்டாலும் மணிப்பர்சில் இருக்கும் பணத்திற்குள் பொருள்களை எடுத்துக்கொண்டு மீதியை திருப்பி கொடுத்து விடுவோம். ஆனால் கடன் அட்டை கையில் இருக்கும்பொழுது நம்மிடம் கட்டுப்பாடு இருக்காது. தேவைக்கு மீறி பொருள் வாங்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பணம் வங்கியில் செலுத்தப்படாத காரணத்தால் வட்டி நீளும் எதுவரை? வக்கீல் நோட்டீஸ் வரை....

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
    
முந்தைய பின்னூட்டங்கள்

8 - பின்னூட்டம்:




அபுஇபுறாஹிம் on Wednesday, October 06, 2010 11:57:00 PM said...



இங்கே (UAEல்)ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டுக்கு பக்கத்தில், கிரடிட் கார்டுகள்.. இரண்டுமே சுரண்டல்தான் healthஐயும் wealthஐயும் !எடுப்பவனுக்கு ஏலம் இழப்பவனுக்கு பறி... அருமை ! தொடருங்கள்

 Dawood on Thursday, October 07, 2010 9:14:00 AM said...
The GIANT corporation wants to convert India from "Savings" Economy into a "Spending" economy. US all these years was booming on spending economy that was the fundamental reason for this recession. The economy was build on a shaky foundation. I'm afraid India will one day collapse too.

alavud38 on Thursday, October 07, 2010 9:32:00 AM said...
சகோதரர் அபுஇபுறாஹிமிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி ! //// இரண்டுமே சுரண்டல்தான்/// என் அனுபவம் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றியது: டமான் என்னும் பகல் கொள்ளைகாரனிடம் கார்டு வாங்கியிருந்தேன்(600திர்ஹம்)உபயோகப்படுத்தவே இல்லை. நண்பர் என்ன கார்டு அப்படியே புதியதாக இருக்கிறது. உடல்நலமில்லாதபொழுது கார்டை பயன்படுத்து என்றார். நானும் ஜூரம் வந்தபொழுது பயன்படுத்தினேன்(ஒரு தடவைதான்) வயிற்றுப்பக்கம் வலி வருகிறது ஹெரனியா வலியாக இருக்குமோ என்ற சந்தேகம்(தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்) டாக்டரிடம் சொல்ல அவர் மெடிக்கல் வரலாறு என்ற படிவத்தில் நிறைய எழுதி டமானுக்கு அனுப்பி விட்டார் என்பது பிறகுதான் தெரியவந்தது (மீண்டும் புதுப்பிக்கும்பொழுது) விஸா புதுப்பிக்க கார்டு வேண்டும். டமானில் கேட்டால் 7500திர்ஹம் கட்ட வேண்டும் என்று எங்கள் டாக்டர் குழு பரிந்துரை செய்கிறது -- இது என்ன பகல் கொள்ளையாக இருக்கிறது, எதற்கு இவ்வளவு தொகை என்றால் உங்களுக்கு ஹெரனியா இருப்பதாக கணணியில் பதிவாகி உள்ளது. எனக்கு அதெல்லாம் இல்லை என்றேன் - அதற்கு மருத்துவ அறிக்கையில் இல்லை என்று கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்றார்கள். சரி மருத்துவ சோதனைக்கு தனியாரிடம் போய் கேட்டால் 1000திர்ஹத்திற்கு மேல் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். விஸா புதுப்பிக்க வேண்டும் அதனால் சலாமா என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 4ஆயிரம் கொடுத்து கார்டு வாங்கும்படி ஆகிவிட்டது. பின் இந்த கார்டை பயன்படுத்தவே இல்லை. கம்பெனி மீண்டும் டமானில்தான் கார்டு எடுக்க வேண்டும் என்றது. PRO எவ்வளவு பணம் கொடுத்தான் என்பது தெரியவில்லை. இதன் பிறகு டாக்டரிடம் சென்றால் கார்டு இல்லை என்று சொல்லி விடுவேன். ஊரிலும் கலைஞரின் காப்பீட்டு திட்டமும் ஒரு பகல் கொள்ளைதான். -அலாவுதீன்—

sabeer on Thursday, October 07, 2010 10:04:00 AM said...
சகோ. அலாவுதீன், தற்கால தனி மனித பொருளாதாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும் தலையாய கவர்ச்சியான கடன் அட்டைகளைப் பற்றிச் சுருங்கச் சொல்லாமல் மிகவும் தெளிவாக விளக்கவும்.என்றுமே கடன் அட்டை பயன் படுத்தியதில்லை என்ற நிலையில் சொல்கிறேன்; பயன் படுத்தியவர்கள் சொன்ன சோகக் கதைகள் ஏராளம்.

தொடரின் இப்பகுதியை சற்று நெடிதாக விளக்கவேண்டும் என்றும், நண்மை(?) தீமைகளை அனுபவம் மற்றும் அநுமானங்கள் மூலம் அனைவரும் அலசவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்


bro. Dawood,
Thanks for alarming us. pls give us few notes explaining how to survive from the predicted economic collapse. Thanks.


தாஜுதீன் on Thursday, October 07, 2010 10:04:00 AM said...
//கடன் அட்டையால் நமக்கு நன்மைகள் 5% அல்லது 10% இருக்கலாம் ஆனால் தீமைதான் அதிகமாக ஏற்படுகிறது.//
எதுவாக இருந்தாலும் அதில் ஒரு துளி தீமை இருக்கும் என்று வருமானால் அவைகளைவிட்டு தூரத்தில் இருப்பது தான் சிறந்தது. நல்ல தொடர் ஆக்கம், தொடருங்கள் அன்பு சகோதரர் அலாவுதீன்.


 alavud38 on Thursday, October 07, 2010 12:22:00 PM said...
சகோ. சபீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி!

/// கடன் அட்டைகளைப் பற்றிச் சுருங்கச் சொல்லாமல் மிகவும் தெளிவாக விளக்கவும்./// இன்ஷாஅல்லாஹ் 3ஆம் தொடரில் என்னால் முடிந்த அளவுக்கு விரிவாக சொல்கிறேன்.


alavud38 on Thursday, October 07, 2010 12:38:00 PM said...
சகோ.தாஜூதீன், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி!///ஒரு துளி தீமை இருக்கும் என்று வருமானால் அவைகளைவிட்டு தூரத்தில் இருப்பது தான் சிறந்தது.///
உலக காரியங்களில் தீமை மட்டுமே உள்ள காரியங்கள் தவிர மற்ற எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. மனித மனம் எப்பொழுதும் நிலையற்ற தன்மையாய் இருக்கும். நேராக அறிவுரை சொல்வதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளாது. எந்த ஒரு செயலையும உடனடியாக விட்டு விடு என்று சொன்னாலும் உடனே விடாது. பலவகைகளிலும் நன்மை என்ன தீமை என்ன என்று விரிவாக சொல்லி புரிய வைத்து இந்த தீமையிலிருந்து சகோதரர்களை வெளி கொண்டு வர வேண்டும். வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.


Yasir on Thursday, October 07, 2010 2:57:00 PM said...
//ஆனால் கடன் அட்டை கையில் இருக்கும்பொழுது நம்மிடம் கட்டுப்பாடு இருக்காது//நிதர்சனமான உண்மை..கட்டுப்பாடு உள்ளவர்களையும் கலைத்துவிடும் ஆற்றல் பெற்றது இந்த (c)red(it) card...












5 Responses So Far:

அதிரைநிருபர் said...

தொழிநுட்ப தடங்களால் இந்த கட்டுரையும் பின்னூட்டங்களும் மீள்பதிவு செய்துள்ளோம். இது எதிர்பாராமல் நிகழ்ந்தது.

தொடர்ந்து இணைந்திருங்கள்.....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சஃபீர் காக்கா சொன்னதுதான் எனக்கும் முன்னரே தோனுச்சு, இரண்டாவது அத்தியாயம் சீக்கிரமே வாசித்த உணர்வு சகோதரர் அலாவுதீனுக்கு வேண்டுகோல் இனிவரும் அத்தியாயங்களை கொஞ்சம் நீட்டித் தாருங்கள் ஒருவாரம் அசைபோடனுமே :)

அலாவுதீன்.S. said...

சகோ. சபீர், அபுஇபுறாகிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அதிகமான விபரம் இல்லை என்று தாங்கள் கூறியதால் இது சம்பந்தமாக எதுவும் விளக்கம் இணையத்தில் கிடைக்குமா என்று தங்களுக்காக தேடும்பொழுது -- கடன் அட்டை தெரிந்ததும் தெரியாததும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இன்று பார்த்தேன். இந்த லிங்கை பார்க்கவும்.

http://nidurseasons.blogspot.com/2010/03/blog-post.html

தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோ.அலாவுதீன் தாங்க காடிய "சுட்டி"யை தடித்தான் பார்த்தேன் இதனை ஏற்கனவே பார்த்திருந்ததாலும் மீண்டும் வாசிக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது, என் எதிர்பார்ப்பு உங்களின் ஆக்கம் வாரம் ஒருமுறை பதிவாவதால் அதன் நீளம் நீட்டித் தாருங்கள் என்பதே இன்ஷா அல்லாஹ் இதனை கவனத்தில் கொள்வீர்கள்.

அப்துல்மாலிக் said...

நல்ல விளக்கம்
இதுக்குதான் ஆணியே (கிரெடிட்கார்ட்) புடுங்க வேணாம் என்கிறது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு