Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வித்தியாசமானவர்கள். 40

ZAKIR HUSSAIN | October 03, 2010 | , ,

ஆனந்த விகடனில் முன்பு வரும் கார்டூனிஸ்ட் மதனின் " முன் ஜாக்கிரதை முத்தண்ணா" வை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஆட்கள் இருப்பார்களா என யோசித்தது உண்டு. ஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கையில் சிலரை பார்க்கும்போது "எப்படியெல்லாம் யோசிக்கிரானுக" என நோஸ் மீது [F] பிங்கர் வைத்ததுண்டு.
    
பல வருடங்களுக்கு முன் என்னுடன் வேலை பார்த்துவந்த ஒருவர் பேட்டரி வாங்கி டேப்ரிக்கார்டருக்கு போடுமுன் அதில் அன்றைய தேதியை மார்க்கர் பேனாவில் குறித்துவிடுவார். இத்தனைக்கும் இந்த ஊரில் கரண்ட் போவது கிடையாது என சொல்லலாம். அப்படி அந்த பேட்டரி இவர்நினைத்த தவணைக்குமுன் 'பல்பிஸ்' ஆகிவிட்டால் யூனியன் கார்பாய்டு நிறுவனத்தின் மீது ஒரு கேஸ் போடலாம் [ எப்படியும் 30 வருடத்துக்குள் பதில் கிடைக்கும் ] , அவரின் மற்ற திருவிளையாடல்களில் ஒன்று கோல்கேட் பேஸ்ட் வாங்கினால் அதன் பேக்கிங்கை வீசி விடாமல் கடைசி 'பிதுக்கள்' வரை வைத்திருப்பார். [ உபயோகிக்க ஆரம்பித்த தேதி நிச்சயம் உண்டு ]
  
அவர் வாங்கிய அந்த டேப்ரிக்கார்டர் .சி ரூமில் இருந்தாலும் குரங்குக்கு சட்டை போட்டமாதிரி ஒரு துணியில் கவர் செய்து போட்டிருப்பார், கேட்டால் 'பொருள்களை என்னை மாதிரி பாதுகாக்க யாரும் கிடையாது' என சொந்த புராணம் வேறு.
ஒருவர் வெள்ளிக்கிழமையில் காசு [பிச்சை] கேட்டு வருவார், 10 காசுக்கு மேல் ஒரு காசு கொடுத்தாலும் நமது பூர்வீகம், மற்றும் மொகளாயர் காலத்தில் உள்ள நம் முன்னோர் முதற்கொண்டு ---------------போட்டு எழுதும் அளவுக்கு திட்டுவார்.
 
பிறிதொருவர் ஆபிஸில் உள்ள ரூலர்[ஸ்கேல்], பேனா எல்லாவற்றிலும் அவரது பெயரை மறவாமல் எழுதி வைத்து விடுவார். இந்த புத்தி மனோராவில் ஆரம்பித்து இருக்கலாம். சிலர் தன்னுடைய "ட்ரீம் கேர்ல்' பெயரை தன் பெயருடன் இனைத்து எழுதிவைப்பார்கள் [ என்னா ஒரு திருப்தி இவனுகளுக்கு] ...காலம் உருண்டு , தாண்டி, குதித்து ஒடி விட்டாலும் அந்த ட்ரீம் கேர்ல் எல்லாம் இப்போது "ட்ரம் கேர்ல்" மாதிரி பெருத்தது தெரியாமல் பழைய நினைவில் இவர்கள் க்ளோரா[F]பார்ம் கொடுத்த ஆடுமாதிரி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

இதில் வெளிநாடு பயணங்கள் ஆரம்பித்த காலம்பாஸ்போர்ட் பத்திரம்” என யாரோ காதில் ஊதியிருக்கவேண்டும் ஏர்போர்ட்டுக்கு போகும்போது அல்லது வெளிநாட்டிலிந்து வரும் போது பாஸ்போர்ட் இருந்த சின்ன பேக் ஜிப்பை திறந்து மூடியதில் கின்னஸ் சாதனை செய்துவிட்டார். பாஸ்போர்ட் சின்னதாக வெளியிட்டும் இவர்கள் இந்த பேக்கை விடுவதாக இல்லை. இவர்களிடம் வீட்டை அல்லது ரூமை பூட்டிவிட்டு வா என மறந்தும் சொல்ல கூடாது பூட்டிய பூட்டையே நம்பாததால் இவர்கள் பூட்டை பிடித்து தொங்கியே இவர்கள் பூட்டை ஒரு இன்ச் வளர்த்துவிடுவார்கள்.
 
முதன் முதலில் [பாலி ஐலேன்டில்-Indonesia] வாட்டர் ஹீட்டரில் டெம்பரேச்சரை எப்படி கையாள்வது என தெரியாமல் 'சூப்பில் போட்ட இறைச்சி' மாதிரி ஆன ஒருவரை எனக்கு வெகு நாட்களாக தெரியும். எங்கள் குரூப் டின்னரில் [ 5 ஸ்டார் ஹோட்டலில்] கை கழுவ வைத்திருந்த பாதி எழுமிச்சை போட்டிருந்த சுடு தண்ணியை குடித்து விட்டு "ஏன் அண்னே ஜூஸ் எல்லாம் இங்கே சூடா வச்சிருக்கானுங்க" என அவன் அப்ரானியாக கேட்டது இன்னும் சிரிப்புதான்.
  
சிலர் பொருள்களை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று கால்குலேட்டர், [F]பேன் இவைகளுடைய பாலிதீன் பேக்கிங்கை பிரிக்காமல் வைத்து இருப்பார்கள்.ஆனால் பாலிதீன் பேக்கை நீக்கினால் எழிதாக உபயோகப்படுத்த முடியும் என்பதை மறந்து விட்டு பல வருடங்கள் கஷ்டப்பட்டு பயன்படுத்துவார்கள். இதுவெல்லாம் குமுதத்தில் 38 ம் பக்க மூலை என்று ஒரு பகுதி வரும் இதைப்படித்தவர்களாக இருக்க வேண்டும். இது போன்ற சின்ன சின்ன கஞ்சத்தனமான ஐடியா உங்களை தொடர்ந்து ஏழையாக்கும் முயற்சி.
 
முன்பு ஊரில் செடியன்குளத்தில் குளிக்கும் காலம் , சட்டை துணி [ பாலிஸ்டர் ] மிஞ்சி விட்டது என அதை ஜட்டியாக தைத்து அதையும் வேலெ மெனக்கட்டு துவைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். [ எப்படிதான் பாலிஸ்டரில் ஜட்டி தைத்து உடுத்துகிறார்களோ]

நாம் மற்றவர்களை பார்த்து சிரித்தாலும் [சினிமாவில்] ஒரு ரயில்வே ஸ்டேசனில் காணாமல் போகும் பையன் 30 வருடம் கழித்து ஒரு பாட்டு பாடிதான் அவன் குடும்பத்துடன் சேர முடியும் எனும் மடத்தனமான க்லைமாக்சையும் கண்ணீர்விட்டு மூக்கு சிந்தி ரசித்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.

--ZAKIR HUSSAIN

40 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா "டிரீம் கேர்ள்" "டிரம் கேர்ள்" சூப்பரோ சூப்பர் ! ஜாஹிர் காக்கா [ ] போட்டவைகள் அனைத்தும் மனசோடு பேசுபவைகளே :)

தாங்க [F] பயன்படுத்தியிருப்பது [ஃ]= q க்கா ?

என் சுற்றத்தில் ஒருவர் இன்றும் தனக்கென்று தண்ணீர் பாட்டில் வைத்திருப்பார் ஸ்கேல் வைத்துதான் ஒவ்வொரு முறையும் அளந்தே வைப்பார் வேறு யாரும் குடித்திடக் கூடாது என்பதற்காக

Shameed said...

இந்த டேப் ரெக்கார்டர் இன்னும் பத்திரமாக உள்ளத ?

chinnakaka said...

எனக்கு தெறிந்த ஒருவர் பல் துலக்கும் பிரஸ்ஸை பிலாஸ்டிக்கில் சுற்றி வைத்து இருந்தார் எப்போது வாங்கியது என்றேன் அவருக்கே அது ஞபகம் இல்லை என்றாறே! இது போல் பல பேர்

Shafi said...

இந்த பிங்கர் பவுல் மேட்டர் என் காலேஜ் நாட்களை நினைவுபடுத்துகிறது. its another cool article.. keep writing..

sabeer.abushahruk said...

"முன் ஜாக்கிரதை முத்தண்ணா""சிரிப்புத் திருடன் சிங்காரவேலன்" ஜோக்ஸ் எல்லாம் ஒரே நேரத்தில் வாசித்த சந்தோஷம் கிடைத்தது.


//எப்படியும் 30 வருடத்துக்குள் பதில் கிடைக்கும்//
//குரங்குக்கு சட்டை போட்டமாதிரி ஒரு துணியில் கவர் செய்து போட்டிருப்பார்//,
//காலம் உருண்டு , தாண்டி, குதித்து ஒடி விட்டாலும் அந்த ட்ரீம் கேர்ல் எல்லாம் இப்போது "ட்ரம் கேர்ல்" மாதிரி//
//'சூப்பில் போட்ட இறைச்சி' மாதிரி//
//"ஏன் அண்னே ஜூஸ் எல்லாம் இங்கே சூடா வச்சிருக்கானுங்க" என அவன் அப்ரானியாக கேட்டது//

தவுசன்வாலா பட்டாசுமாதிரி கேப் விடாமல் போட்டுத்தாக்கிட்டே.

ஆக்கம் சார்ந்தே பின்னூட்டம் இடுவது நாகரிகம். எனவே என் பங்குக்கு ஒரு ஜோக் சொல்லிடறேன்பா.

ஜப்பானிய அமைச்சர் ஒருமுறை க்ளின்ட்டனைக் காண அமெரிக்கா செல்லவேண்டியிருந்தது. க்ளின்ட்டனை கை குழுக்கும்போது பேச மட்டுமாவது ஒரு சில ஆங்கில வார்த்தைகள் கற்றுத்தர உதவியாளர்களை கேட்க:
அவர்களும் இப்படி சொல்லிக் கொடுத்தனர்:

கை குழுக்கும்போது "how are you?" என்று கேளுங்கள். அதற்கு அவர் நிச்சயம் "I am fine. thank you. how are you?"என்றுதான் கேட்பார அதற்கு நீங்கள் "me too"என்று சொன்னால் போதும் என்று தயார் செய்து அனுப்பினர்.

அமெரிக்கா அடைந்த அமைச்சரை கிளின்ட்டனும் அவர் மனைவி ஹிலாரியும் வரவேற்றனர்.

கை குழுக்கிய நம் அமைச்சர் "how are you" என்பதை மறந்து "who are you?'என்று கேட்டு வைக்க கேள்வி வித்தியாசமாக இருப்பதால் தானும் வித்தியாசமாக "I am Hilary's husband" என்று சொன்னார். உடனே அடுத்து சொல்ல வேண்டியதை அச்சரம் பிசகாமல் சொன்னார் நம் அமைச்சர்: ."ME TOO"

அசத்தல் மன்னன் ஜாகிர் என்றாகிவிட்டது. எனினும், அடுத்து வந்து அசத்தப் போவது யாரு?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வித்யாசமான அசத்தல் மன்னர் சகோதரர் ஜாஹிர். தங்களின் முதல் இணைய கட்டுரையை படித்தப்போ "நோஸ் மீது [F] பிங்கர் வைத்ததுண்டு" தொடர்ந்து படிக்கும் போதும் தான். தங்களின் தனித்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

"எழுமிச்சை போட்டிருந்த சுடு தண்ணி ஜூஸ்" காமெடி மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பூட்டை பிடித்து தொங்கியே இவர்கள் பூட்டை ஒரு இன்ச் வளர்த்துவிடுவார்கள். //

இதைப்படித்ததும் எனக்கு ஞாபகம் வந்த ஒரு சீரியஸான மேட்டர் ஒன்றை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ஒருவர் புட்டிய கதவை பல முறை சோதித்துப் பார்ப்பார் சரியாக பூட்டினாரா என்று. ஒரு நாள் அவர் வேலை செய்த watch showroom ல், வேலை நேரம் முடிந்து showroomயை பூட்டிவிட்டு சிறிது தூரம் சென்றுவிட்டார், பிறகு சந்தேகத்தில் கதவு சரியாக பூட்டினாரா என்று சோதித்துப்பதற்காக மீண்டும் வந்து கதவை தள்ளி பார்த்திருக்கார், பாவம் கண்ணாடி கதவுக் கைப்புடி கையோடு வந்துவிட்டது.

இது தற்செயலாக நடந்தது. ஆனால் அந்த showroomல் security alarm அடிக்க ஆரம்பித்து போலிஸுக்கும் தகவல் போய்விட்டது. உடனே அடுத்த 10வது நிமிடத்தில் வந்த போலீஸ் சந்தேகத்தின் பேரில் நண்பரை அழைத்து சென்று 2 நாட்கள் விசாரனை என்று படாத பாடு படுத்தியுள்ளது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஜாஹிர் உங்க ஆக்கம் பற்றி எழுத இன்னும் ஹொம் ஒர்க் செய்யவேண்டியிர்க்கிறது.
சபீர் காக்காவின் ஜோக் குபீர் சிரிப்பை வரவழைத்துவிட்டது.அதனால் நாமும் தீடீர்ன்னு ஒரு ஜோக் அனுப்பலாம்னு இதை அனுப்புகிறேன். நரசிம்ம ராவ் ஒரு பைத்திய ஆஸ்பத்திரிக்கு விஜசம் செய்து ஒவ்வொரு பைத்தியத்திடமும் கை குலுக்கி அன்பா நடந்து போது ஒரு பைத்தியம் ராவிடம் கேட்டுஇருக்கிறது நீங்க யார்? அதற்கு ராவ் நான் தான் இந்த நாட்டுப்பிரதம மந்திரின்னு சொன்னதும் பைத்தியம் சத்தமாய் சிரிச்சிச்சாம்.உடனே ராவ் ஏன் சிரிக்கிறன்னு கேட்டதற்கு பைத்தியம் சொன்னிச்சாம் நானும்(ME TOO) இப்படிதான் சொல்லிக்கிட்டு இருந்தேன்னு...

crown said...

தாஜுதீன் on Monday, October 04, 2010 1:02:00 AM said...
"எழுமிச்சை போட்டிருந்த சுடு தண்ணி ஜூஸ்" காமெடி மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.தாஜ் இதுபோல் நான் என் சகோ. தம்முடைய சகோ. நண்பர்களுடன் ஒரு ரெஸ்டான்ட் சென்ற போது இப்படிதான் நடந்து கொண்டார் மேலும் அவர் அதை ரசிச்சி,ருசித்தார்....காக்காவிடம் கேட்டு கொள்ளவும் அவர் இப்ப அமெரிக்கவில்தான் இருக்கிறார்.மேலும் ஒருவர் பிஸ்மி ரெஸ்டாரண்டில் பொதுவா பிலேட் கழுவ தண்ணித்தருவாங்க பின் பிலேட்டை கழுவி அந்த தண்ணிய மேசைக்கீழே உள்ள வாலியில் ஊற்றிவிடுவோம் இவர் நினைத்தார் எலாரும் கால் கழுவுகிறார்கள் என நினைத்து கால்களை கழுவிட்டுச்சொன்னாரே பார்க்கலாம் கழுச்சல்லபோறானுவ கால் கழுவ யான் இந்த சிஸ்டம் வச்சனுவோன்னு!!!இவரும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்.முன்னவர் படித்த பட்டதாரி.பின்னவர் படிக்காதவர்.

ZAKIR HUSSAIN said...

நன்றி..சாகுல் [ போட்டோ இன்டர்னெட்டில் சுட்டது..உண்மையிலேயே அந்த மாதிரி டேப் ரிக்கார்டர் என்னிடம் பத்திராமாக "பின்ச் ரோலர்' மட்டும் பழுதாகி இருக்கிறது] சமயங்களில் டேப்பை மெண்டு துப்பும்.

Bro.Chinna kaakkaa, Shafi, Thajuden , Abu ibrahim ... i wonder how you all get to comment this must fast..Thanx a lot.

சபீர் ..இக்பால் இந்த ஆர்டிக்கில் படித்து விட்டு இ-மெயிலில் சிரித்து இருந்தான்..கொஞ்சம் எக்கொ எஃபெக்ட் உடன் எழுதியிருந்தான்.

ஃ எழுத எனக்கு இரவு பகல் பாராமல் கண்விழித்து கட் அவுட் வைத்து , தண்டவாளத்தில் ரயில் மறியல் செய்து கழகத்தின் குரோமொஸொமும், ஃஆர்த்தோ வாக இருக்கும் சகோதரர் "செவ்வக' செயலாளர் அபு இப்ராஹிமுக்கு வாழ்துக்கள்.

Zakir Hussain

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்படின்னா 2011 நம்ம கட்சிக்குதான் முதலமைச்சர் பதவி, கோலாலம்பூர் (வட்டங்கள் அங்கே இல்லையாமே) சதுரத்தின் மான்புமிகு தலைவர் "அசத்தல் மன்னர் (காக்கா)ஜாஹிர்" அவர்களின் கோரிக்கை அப்படியே மெய்யாகட்டும் (இப்போதான் தூங்கி விழித்தேன் ! )

Haja Shareef said...

அந்த mono tape recorderஐ பார்த்தவுடன் 30 வருடம் பின்னோக்கி செல்ல வைத்துவிட்டது. அதில் 100 மசாலா என்ற அட்டு புராணத்தை ஓடவிட்டு நாலரை மணிவீணடித்த நம்மவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அத ஏன் (சஃபீர்)காக்கா கேக்கிறீங்க ! மூக்கு கண்ணாடிய எங்கே வச்சோம்னு வீட்டையே இரண்டா புரட்டிப் போட்ட்வங்க கிட்டே "மிஸ் கால் கொடுத்துப்பாருங்க" சவுண்டு வந்த தெரியும் எங்கே இருக்குன்னு சொன்னா எப்படி ? இதுவும் நடந்திருக்கிறது என்னோடிப்பவர்களுடன்.

வல்லரசி ஆசைய செஞ்ச ஆட்டுக்கால் சூப்பை (எழுமிசை போட்டதல்ல) ஒரு கோப்பையில் எடுத்து வந்து புன்னிவான்கிட்டெ கொடுத்து இதுல உப்பு இருக்கா பாருங்கன்னு சொல்லி கேட்டாங்க அதுக்கு அவர் (கிரவ்ன் சொன்ன நட்புகளில் ஒருவர்தான்) "எங்கேடி ஒன்னுமே கானோம் எல்லாம் கரைஞ்சு போயிருக்கும்" அலுத்துக் கொண்டான் அதனை ருசித்திப் பார்க்காமலே !

sabeer.abushahruk said...

//கழுச்சல்லபோறானுவ கால் கழுவ யான் இந்த சிஸ்டம் வச்சனுவோன்னு!!!இவரும் அமெரிக்காவில்தான் // உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்.
//(கிரவ்ன் சொன்ன நட்புகளில் ஒருவர்தான்) //"

ஜாகிர், இந்த க்ரூப் நம்மது மாதிரி கலக்கலான க்ரூப்பாவுல தெரியுது. (அவிங்களா இவிங்க?)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஜாஹிர் வாழ்வின் பக்கங்களில் நடந்தவைகளை திருப்பிபார்த்து அதன் மூலம் இழந்த அந்த சந்தோச தருனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அழகே! அழகு! நீங்களும் வித்தியாசமானவர்தான் ( நீங்கள் வேறு மாதிரியான வித்தியாசமானவர்)அதாவது நல்ல மாதிரி வித்தியாசமானவர்.நீங்கள் குறிப்பிட்டுள்ள வித்தியாசமானவர்களில் ஒருவகை வித்தியாசமானவர்கள் இரயில் பயணங்களில் பார்க்கலாம் அவங்க பன்ற அலப்பறை தாங்கமுடியாது அய்யா!உலக விசயத்தை எல்லாம் கரச்சு குடிச்சவங்க மாதிரி அதிலேயும் சிலதுகள் வீட்டிலிருந்து கொண்டுவரும் டின்னர் அப்பப்பா!!!!கலரிசோரு தோத்துடும் போங்க! சிலதுகள் இங்கிதம் இல்லாமல் எல்லாரும் பார்க்க பல்ல குத்துரதும்,சத்தம் போட்டு பேசி சிரிக்கிறதும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.மற்றோரு வித்தியாசமான பொதுஜனம் ரயிலுக்குள்ளேயே சும்மாச்சுக்கும் ஓடுறது எதோ பரபரப்பா செஞ்சி கிழிச்சிர போறதா நெனப்பு.முத்துப்பேட்டை வந்ததுமே அதிராம் பட்டிணம் ரயில் ஸ்டேசன் தெரியுதான்னு எட்டி,எட்டி பாத்துக்கிட்டு(ரயில் சென்றடைந்தால்தான் சேர முடியும் என்ற சாதாரண அறிவுகூட இருப்பதில்லை) பாதையில தன்னுடைய சாமான்களை மட்டும் நிரச்சு வச்சுக்கிட்டு இந்த இம்சை அரசர்களைபற்றி பெரிய கட்டுரையே போடலாம்.

Yasir said...

நேற்று முழுவதும் ஆபிஸ் டென்ஷனில் இருந்தனால் ..அதிரை நிருபரை காணமுடியவில்லை..இன்று காலை திறந்தவுடன் தான் தெரிந்தது...டென்ஷனை குறைக்கும் மருந்து அதில் உள்ளது என்று...உண்மையிலே காக்கா உங்கள் கட்டுரையின் ஒவ்வருவரிகளும் அது எழுதப்பட்ட ஸ்டையிலும் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது..அடுத்து கமெண்ட போட்டவர்கள் வேட்டியை மடித்து கட்டி எழுதிய ஜோக்குகளும்..சார்லின் சாப்ளின் படம் பார்த்த உண்ர்வை உண்டாக்கியது..சூப்பர் காக்கா...எனக்கும் கொஞ்சம் training குடுங்க இதை மாதிரி எழுத

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//எனக்கும் கொஞ்சம் training குடுங்க இதை மாதிரி எழுத//

டாக்டர், அசத்தல் மன்னர், முதல் அமைச்சர், இப்போது சகோதரர்.யாசிரின் புதிய வேண்டுகோள் writing trainer.

தேடிவரும் multiple பட்டங்கள் சிலருக்குத்தான் கிடைக்கும். அதில் சகோதரர் ஜாஹிரும் ஒருவர் :)

Yasir said...

//டாக்டர், அசத்தல் மன்னர், முதல் அமைச்சர்// --டாக்டர் ஒகே, அசத்தல் மன்னர் டபுள் ஒகே----முதல் அமைச்சர் பட்டம் எப்ப கொடுத்தாங்க ---சொல்லவே இல்லை...யாரும் போட்டி போடுவதற்கு முன் நான் தான் முதல்வர் ஜாஹிரின் UAE branch -அமைப்பாளர்,செயலாளர் எல்லாமே ---பொருளாளர் பதவி மட்டும் சபிர் காக்காவிற்க்கு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மக்களே அமைதி அமைதி அமைதிகாக்கவும் இரண்டாயிரத்து பதினொன்னில்தான் சான்ஸ் ! அவசரப்பட்டு நீதிமன்றம் சென்றிட வேண்டாம் அப்புறம் மூணு பங்கா நம்மளையும் பிரிச்சுடுவானுங்க... சாஹுல் சொன்ன மாதிரி முப்பது நீத்பதிகளை தேடவேண்டிவரும்...

Shameed said...

கொஞ்சம் அசந்துட்டேன்
ஒரே பட்டமா பறக்குது

Shameed said...

sabeer
அவிங்களா இவிங்க?



அவங்களே தான் இவங்க<

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அவங்களே தான் இவங்க//

அவிங்க எவிங்க

Shameed said...

அவங்க + இவங்க = நாம

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஒரே பட்டமா பறக்குது//

"ஐயா" - இதுவும் பட்டம் தானே

ZAKIR HUSSAIN said...

To Bro.CROWN

உங்களிடம் எனக்கு பிடித்தது எப்போது கமெண்ட்ஸ் எழுதினாலும் அந்த ஆர்டிக்கிள் எழுதுபவரின் மனதையும் படித்து விட்டு எழுதும் தங்களின் தனிச்சிறப்பு.

நீங்கள் சொன்ன அந்த "மதராஸ்" ரயிலில் இரவு சாப்பாடு கொண்டு வந்து அலம்பல்பன்னும் பார்ட்டிகள்.ஊருக்கு திரும்பி வரும்போது முத்துப்பேட்டையிலேயே கம்பார்ட்மென்ட்டில் இருப்பவர்களை டென்சனாக்கும் வேலைகள் ..நானும் பார்த்ததுதான்.

சகோதரர் யாசிர், தாஜ், அபுஇப்ராஹிம்...இந்த பட்டம் சமாச்சாரம்....போதும் இருக்கிற பட்டம் ..இதுக்கு மேல் புதுசு எதுக்கு? [ காமெடி கீமடி இல்லையே]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே பட்டம் விடுபவர்களும் வித்தியாசமானவர்களே - "படித்து வாங்கிய பட்டமே போதுமென்று ஜாஹிர்(காக்கா) சொல்லிவிட்டதால் இனிமேல் படிப்போம் :).

இருப்பினும் இன்று எனது ஃபிரண்ட் ஒரு உதவி கேட்டார் இங்கே ஜெபல் அலி செக்யூரிட்டு கேட்டுக்கு வெளியில் அவரின் சொந்தக்காரர் காத்து இருக்கிறார் அவரை அழைத்து வந்து என் நன்பரின் கம்பெனியில் விடச் சொன்னார் சரி என்று சாப்பிடப் போகும் நேரமாதலால் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே அவரை அழைத்து வரச் சென்றேன் அதற்கிடையில் எனக்கு வேறு வேலை வந்துவிட்டது அங்கே செல்ல நேரமாகிவிட்டது அவசரத்தில் கிளம்பிவந்த நான் என்னோட மொபைலை எடுக்காமல் வந்துவிட்டேன் வெளியிலிருப்பவரிடம் தொடர்பும் கொள்ளமுடியாமல் ஒரு வங்கி அருகே எனது காரை நிறுத்தி விட்டு யாரும் தடுமாறி நிற்கிறார்களா என்று மெதுவாக அங்கே தேடினேன் சிறிது தேடலுக்கு பின்னர் காதில் விழுந்தது இப்படி "என்னடா மச்சான் எவனை அனுப்பினே, எங்கே போய்த் தொலைந்தான் ஃபோன் அடித்தாலும் எடுக்க மாட்டேங்கிறான் சாவுக்கிறாக்கி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ? இவனைடோல்லாம் எப்படி ஃபிரண்டா இருக்கே..

மறுமுனையில் என்ன கேட்டாரோ தெரியவில்லை - மீண்டும் தொடர்ந்தார் இப்படி "என்னையே ஒருத்தன் மாறி மாறி பார்துகிட்டு இருக்கான் தாடி வச்சுருக்கான், சேச்சே அவனா இருக்காது பார்த்தா அரபி மாதியிருக்கான், இவனமாதிரி டீசண்டாவெல்லாம் இருக்கமாட்டான் உன்னோட ஃபிரண்டு அப்படியிருந்தா இதுவரைக்கும் என்ன வந்து பிக்கப் செய்திருப்பானே.. என்ன இலவுட நீயே வாந்துடுடா ப்ளீஸ்ன்னு சொல்லு அந்த உரையாடல் நின்றது"

நானும் இவனேதான் அவனென்று மருவாதையா "you are Mr. " "ன்னு கேட்டேன்" அவரும் Yesன்னு சொன்னார் please comeன்னு சொல்லி என்பின்னாலே வரச் சொல்லி என் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றேன் அப்போது இவர் அந்த நன்பருக்கு ஃபோன் செய்தார் "மச்சான் அரபி மாதிரியிருக்கான்னு சொன்னேனே அவனையா அனுப்பினே நல்லதா போச்சுடா இவ்ளோ நேரம் உன்கிட்டே பேசுனது அவனுக்கு தெரிஞ்சுக்குமாடா இப்போ அவன் கூடதான் வருகிறேன்ன்னு சொன்னார்"

சரி இந்த நிலமையில நான் என்னா செய்திருப்பேன் சொல்லுங்க பார்க்கலாம் !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//.முத்துப்பேட்டை வந்ததுமே அதிராம் பட்டிணம் ரயில் ஸ்டேசன் தெரியுதான்னு எட்டி,எட்டி பாத்துக்கிட்டு(ரயில் சென்றடைந்தால்தான் சேர முடியும் என்ற சாதாரண அறிவுகூட இருப்பதில்லை) பாதையில தன்னுடைய சாமான்களை மட்டும் நிரச்சு வச்சுக்கிட்டு இந்த இம்சை அரசர்களைபற்றி பெரிய கட்டுரையே போடலாம்//

கிரவுன்னு நீ யாரை(யெல்லாம்) சொல்றானு வெளங்குது.. அப்போ இந்த பாழாப்போன மொபைல் இல்லையே இருந்திருந்தா இருந்த இடத்திலிருந்து கொண்டே ரன்னிங் கமெண்டரியுமல்லவா நடந்திருக்கும் அந்த நேரத்தில்..

ZAKIR HUSSAIN said...

"மொபைல் போன் இருந்தால் நண்பன் உங்கள் பக்கத்தில்...இல்லாவிட்டால் எதிரி உங்கள் பக்கத்தில்" ஏதாவது மொபைல் போன் டேக் லைனாக விளம்பரத்தில் பயன் படுத்தலாம்.

Unknown said...

சகோ. ஜாகிர் ஹுசைன் வித்தியாசமானவர், எழுத்தில்!

crown said...

ZAKIR HUSSAIN on Monday, October 04, 2010 8:29:00 PM said..
--சகோதரர் யாசிர், தாஜ், அபுஇப்ராஹிம்...இந்த பட்டம் சமாச்சாரம்....போதும் இருக்கிற பட்டம் ..இதுக்கு மேல் புதுசு எதுக்கு? [ காமெடி கீமடி இல்லையே]
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .சகோ.ஜாஹிர் இதுதான் உங்களிடம் பிடித்தது.சிலர் தம்பட்டம் அடிப்பாங்க. நீங்களோ பிறர் பட்டம் தந்தும் தம்பட்டம் அடிக்காம இருக்கிறீர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAKIR HUSSAIN on Tuesday, October 05, 2010 6:36:00 AM said...
"மொபைல் போன் இருந்தால் நண்பன் உங்கள் பக்கத்தில்...இல்லாவிட்டால் எதிரி உங்கள் பக்கத்தில்" ஏதாவது மொபைல் போன் டேக் லைனாக விளம்பரத்தில் பயன் படுத்தலாம். //

(ஜாஹிர்)காக்கா யோசனை அற்புதம் - IDEA mobile அவர்கள் மொபைளுக்கு விளம்பர யுத்திகளை சொல்பவர்களுக்கு "IDEA" lifetime talk national only கொடுக்கிறாங்களாம். :)

சரி நானே தொடர்கிறேன், நான் சென்ற வேலை முடிவுறாத நிலையில் அவரையும் என் காரில் அழைத்துக் கொண்டு என் வேலையைத் தொடர சென்ற இடம் ஜெபல் அலி போலீஸ் ஸ்டேஷன் அங்கே சென்றதும் இவர் அப்படியே அரண்டு போய்விட்டார் என்னுடன் இங்கிலிஸிலும் தமிழும் மாறி மாறி கேள்வி கேட்டார் யார் நீ எதுக்கு இங்கே என்னை கூட்டி வந்தாய் என்று ! சற்று நேரம் அமைதியாக இருந்திட்டு நம்ம "டமிலிலேயே" சொன்னேன் அட வென்னே இவ்ளோ நேரம் வீராப்பா பேசுனியே திட்டுனியே அவனேதான் நான் கொஞ்சம் நேரம் காத்திரு என் வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்னு சொன்னதும் அப்படியே வாயடைத்து நின்றார் சரி காரைவிட்டு வெளியில் நிற்கட்டுமேன்னு இறக்கிவிட்டு சென்றேன் திரும்பி வந்து பார்த்தால் ஆளைக் கானோம் என்னோட ஆஃபீஸ் வந்ததும் நன்பனுக்கு போன் செய்தேன் "அந்தச் சொந்தக்காரர் வந்த வழியே திரும்பி டாக்ஸி எடுத்துச் சென்று விட்டாராம்" இப்படியும் வித்தியாசமானவர்கள் !

sabeer.abushahruk said...

//சகோ. ஜாகிர் ஹுசைன் வித்தியாசமானவர், எழுத்தில்!//

காக்கா, சரியாகச் சொன்னீர்கள். இவன் எழுத்தில் மட்டுமல்ல, இயல்பிலேயே வித்தியாசமானவன்தான்.

வணிகம் கற்கச் சென்று
மனிதம் கற்பித்தவன்!
மனிதர்கள் மத்தியில் 
புணிதம் போதிப்பவன்! 

ரணங்கள் ஆற்றும் இவன்
நகைச்சுவைக்கு...
பிணத்தின் வாயிலும்
புன்னகைப் பூக்கும்!

இவனைப்பற்றி எழுதத்தூண்டாதீர்கள்.அயராது என் விரல்கள் (அ.நி.சாட்டையை சொடுக்க வேண்டாம். இது முகஸ்துதி அல்ல. மயிரிழையில் அதனின்றும் விலகி "அபிப்ராயம்" என்ற கட்டுக்குள் வருவதை கவனிக்க)

அஹ்மத் காக்கா, உங்களின் தனித்தண்மையும் தலைமையின் லாவகமும் கொண்ட பதிவிற்காக ரொம்ப ரொம்ப காத்திருக்கிறோம்.
கட்டுக்குள்
காத்திருக்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ரணங்கள் ஆற்றும் இவன்
நகைச்சுவைக்கு...
பிணத்தின் வாயிலும்
புன்னகைப் பூக்கும்!///

காக்கா இதத்தானே எதிர்பார்க்கிறோம் ஒற்றுமை உணர்வுகளை மவுத்தாக்கியவர்களின் வாயில் மட்டுமல்ல உள்ளமும் புன்னகைக்க காக்காமார்களின் ஆக்கமும், ஊக்கமும், ஒத்துழைப்பும், முன்னின்று வழி நடத்த ஆசைப்படுகிறோம் அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக !

///(அ.நி.சாட்டையை சொடுக்க வேண்டாம். இது முகஸ்துதி அல்ல. மயிரிழையில் அதனின்றும் விலகி "அபிப்ராயம்" என்ற கட்டுக்குள் வருவதை கவனிக்க)///

உங்களின் வசந்தம் தரும் வார்த்தைகள்தான் சாட்டைக்கே சந்தனம் பூசும் ஆகவே மனக்கும் வரிகளை நேசிக்கத்தான் செய்வோம் இனிமே எங்கே சொடுக்கிறது அதெல்லாம் சுருண்டுவிடும் காக்கா இதில் எவ்வித சந்தேகமுமில்லை, தாங்கள் இப்படி ஊசியும் போட்டு வைத்தால்தான் ஜுரமும் வாராது நம் எண்ணம் ஒத்திருப்பவர்களுக்கும்.

Yasir said...

அபுஇப்ராஹிம் காக்கா.நீங்க அநியாயத்திற்க்கு நல்லவரா இருங்கீங்களே ....எனக்கு இது மாதிரி ஒரு சம்பவம் நடந்து இருந்தால்...அவரே மெயின் கேட்டிலே நிற்க்க வைத்துவிட்டு கண்டும் காணாதது போல் வந்து இருப்பேன்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அதிரைஅஹ்மது அவர்களுக்கு நன்றி [உங்கள் எழுத்துக்கு நானும் காத்திருக்கிறேன் சபீரைப்போல்]

அபு இப்ராஹிம் ...இவ்வளவு அழகாக ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் நீங்கள் உடனே ஒரு ஆர்டிக்கிள் எழுதலாமே...[நம்புங்க நாங்க சும்மா ஒன்னும் சொல்லலே...உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Yasir on Tuesday, October 05, 2010 4:57:00 PM said...
அபுஇப்ராஹிம் காக்கா.நீங்க அநியாயத்திற்க்கு நல்லவரா இருங்கீங்களே ... /// ஓ இதுதான் காரணமா என்னோட முதலாளி அடிக்கடி என்னிடம் சொல்வது "your are like my son"ன்னு அப்படின்னா எனக்கு பங்கு கிடைக்குமா ? - அப்புரானியாவா இருக்கேன் :( / :)

ZAKIR HUSSAIN on Tuesday, October 05, 2010 5:08:00 PM said...
அபு இப்ராஹிம் ...இவ்வளவு அழகாக ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் நீங்கள் உடனே ஒரு ஆர்டிக்கிள் எழுதலாமே...[நம்புங்க நாங்க சும்மா ஒன்னும் சொல்லலே...உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை] ///

ஜாஹிர் காக்கா, கொடியேத்துர வேலையத்தான் சரியாத்தானே செய்றேன் அப்புறம் எதுக்கு கொடிமரத்துமேல ஏத்திவிடுறீங்க :) வேனாம் காக்கா யாசிர் சொன்ன மாதிரி நான் ரொம்ப அப்பிரானிகாக்கா... கலக்கல் காக்காமார்களும் கைகோர்க்கும் தம்பிமார்களும் இருக்கும்போது இந்த தம்பி தங்க(மான)தம்பியா இருப்பேனாம் சரியா :))

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சகோதரர் அதிரைஅஹ்மது அவர்களுக்கு நன்றி [உங்கள் எழுத்துக்கு நானும் காத்திருக்கிறேன் சபீரைப்போல்]//

நாங்கள் அனைவரும் தான் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.

Shameed said...

சகோ. ஜாகிர் ஹுசைன் வித்தியாசமானவர், எழுத்தில் மட்டுமல்ல எல்லாத்திலும் தான்.

மட்டறவர்களுக்கு உதவி செய்வதில் கூட அவரின் வித்தியாசங்கள் வெளிப்படும் .எனக்குத் தெரிந்து
மூன்று தலைமுறையாக அவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் பழக்கம் என்பதால் நான் இதை இங்கு சொல்கின்றேன்.

Shameed said...

அபுஇபுறாஹிம்
மச்சான் அரபி மாதிரியிருக்கான்னு சொன்னேனே அவனையா அனுப்பினே நல்லதா போச்சுடா இவ்ளோ நேரம் உன்கிட்டே பேசுனது அவனுக்கு தெரிஞ்சுக்குமாடா இப்போ அவன் கூடதான் வருகிறேன்ன்னு சொன்னார்"

இன்றைய தினத்தில் இருந்து நம்ம அபு இப்ராகிம் "அதிரை அரபி" என பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுக்குத்தானே சொன்னேன் "பட்டப்பேருல" கூப்பிடுறாங்கன்னு : மாதிரின்னு சொன்னாவெல்லாம் பட்டப் பெயர் வைக்கப்படாது அப்புறம் ஏற்கனவே நாம குடுத்தவங்களுக்கு மருவாதையா இருக்காது என்ன சாஹுல் காக்கா நான் சொல்றது ! அது சரி நீங்க மேலே ஏத்திவிட்டீங்களே ஏரோப்ளேனை வேற ஏதாவது இறக்கி வைக்க வேண்டியதுதானே !!.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு