Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்!. 8

அதிரைநிருபர் | April 14, 2011 | , ,


10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.


 
விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?
1.ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்து கொள்ள முயற்சிக்கவும் :
ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : 
வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன் Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும். 

"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள். குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள்:
தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும் internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

10 மற்றும் +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு :
விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள். 9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2 வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள். +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள் தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள்.

+2  வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :
IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம். AIEEE - NIT மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

AIPMT - மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

மாணவர்களே! நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: S.சித்தீக்.M.Tech
                 
தகவல்: அதிரை மீரா B.E

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஐந்து வருடங்கள் காத்திருந்த தேர்தலும் முடிந்தாகி விட்டது ! இனி இளைய தலைமுறை மாணவர்களின் வேட்கைகள் தொடர வேண்டும், அவர்கள்தான் டார்டெஜ் இன்னும் இரண்டு மாதங்களுக்கு !

இன்னும் ஆக்கபூர்வமான பதிவுகளும் கலந்துரையாடல்களும் தொடரும் இங்கே !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சரியான தருணத்தில் மாணாக்கர்களுக்கு முறையாக வழங்கப்பட்ட அருமையான வழிகாட்டுதல் கட்டுரை இது.

மாணவர்கள் தங்களின் எதிர்காலம் என்னும் ரோட்டில் சுகமாக சவுகரியங்களுடன் பயணிக்க முதலில் போடப்படும் கோடு எங்குள்ளது எனில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பதினொன்றாம் வகுப்பில் எந்த துறை/பாடம் எடுக்க முடிவெடுக்கிறார்களோ அங்குள்ளது என்றால் மிகையில்லை.

சக மாணவ நண்பர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான் என் முடிவும் என்று அவர்கள் எண்ணுவார்களேயாயின் அது வெறும் பையுடன் கையில் காசில்லாமல் கடைத்தெருவுக்கு சாமான்கள் வாங்க சென்றது போல் ஆகிவிடும் இறுதியில்.

இருபது வருடங்களுக்கு முன்னர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் வெளிநாடோ அல்லது உள்நாடோ எங்கேயாவது ஒரு வேலையில் சேர்ந்து காலத்தை ஓட்டி விடலாம் என்றிருந்தது. பிறகு வந்த காலத்தில் குறைந்தது ஒரு இளங்கலை/பட்டப்படிப்பு வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அதற்குப்பிறகு உள்ள இன்றைய சூழ்நிலையில் குறைந்தது நல்ல தெளிவான பார்வையில் படித்த ஒரு முதுகலை பட்டப்படிப்பு மிகவும் அவசியமாகி அது இருந்தால் தான் இன்றைய உலகவியலில் ஓரளவு தவழ முடியும் என்றாகி விட்டது.

காரணம் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக புதிய, புதிய பாடத்திட்டங்களும், படிப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன. குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தால் மட்டுமே நம் பயோடேட்டா (தனி நபர் விவரக்குறிப்பு) பிறரால் சற்று திரும்பி பார்க்கப்படும்.

எனவே எந்த மொழியையும் தன் சொந்த மொழியாக எண்ணி ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை.

இதில் ஒரு சுவராஸ்யமான விசயத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடன் சக பணியில் உள்ள பாகிஸ்தான் (பட்டான்) நாட்டைச்சேர்ந்த நண்பர் பல வருட அரபுநாட்டு அனுபவத்தில் நம் தாய் மொழியாம் தமிழில் பல வார்த்தைகளை நாம் பேசுவது போன்றே கற்றுக்கொண்டுள்ளார். தமிழ்க்காரர்கள் யாராவது என் அலுவலகத்திற்கு வந்தால் உடனே அவர் 'சொல்லுங்க பாய்'. தமிழ் தெரியுமா? என்று கேட்கிறார். வந்தவரும் ஆஹா நம்ம ஆளாச்சே என்று தமிழில் தொடர்வதை பல முறை கண்டுள்ளேன். அந்த பாக்கிஸ்தான் நாட்டு நண்பரிடம் நான் பல முறை கூறியுள்ளேன். காலச்சூழ்நிலையில் நீங்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வர நேர்ந்தால் வட மாநிலங்களுக்கு தமிழிகத்திலிருந்து ஒரு சுற்றுலா செல்ல நாம் முயற்சித்தால் தங்களைத்தான் வழிகாட்டியாக தேர்ந்தெடுக்க நேரிடும். காரணம் நம் தமிழ் மக்களின் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர பிற மொழிகள் தெரியாது அது இந்தி/உருதாக இருந்தாலும் சரி என்று அவரிடம் சொன்னேன். அவர் உற்சாகத்தில் பலமாக சிரித்து விட்டார். இது நாம் சிரிப்பதற்காக மட்டும் இங்கு குறிப்பிட வில்லை. வெட்கத்துடன் வேதனைபட வேண்டிய ஒன்று. எனவே நாம் நம் சிறார்கள்/மாணவர்களுக்கு பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் புலமை பெற நம்மால் இயன்ற முயற்சிகளையும், செலவுகளை செய்யக்கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் எதிர்காலத்தை யாரும் பரிகாசிக்காமல் பிரகாசிக்க வல்ல ரப்புல் ஆலமீன் எல்லா வழிகளையும் திறந்து அவர்களுக்கு தீன், துனியாவுடைய கல்விக்கண்களை திறந்து விடுவாயாக என து'ஆச்செய்தவனாக என் பின்னூட்டதை நிறைவு செய்கிறேன். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


வஸ்ஸலாம்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

அவசியமான ஆக்கம்...இந்த விடுமுறையை மாணக்கர்கள் மிகவும் பயனுள்ளதாக ஆக்கி கொள்ளவேண்டும் ...குறிப்பாக பெண் பிள்ளைகளை உலக கல்வியுடன் ,மறுமைக்கல்வியையும் கற்க மதராஸாகளுக்கு அனுப்ப வேண்டும்...நல்ல தருணத்தில் வடிக்கபட்ட ஆக்கம்....

sabeer.abushahruk said...

அவசியமான இடுகை. எத்தனை பெரிய பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களிடமும் ஸ்போக்கன் இங்கிலிஷ் ரொம்ப பலவீனமாகத்தான் இருக்கிறது.

ப்ள்ஸ் 2 முடித்தவர்கள் உடனடியாக ஸ்போக்கன் இங்கிலிஷ் கற்பதே தலையாயது.

நன்றி மீரா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மீராவின் தீராத வேட்கையாயிருக்கும் இந்த அருமையான இடுகையைத் தொடர்ந்து MSM(n) பின்னூட்டத்தில் பன்மொழி பேச்சுப் பழக்கம் வெற்றியின் ரகசியம் என்று அற்புதமாக விளக்கியிருந்தார்.

சென்னையில் புதுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது என்னோடு பழகியவர்களில் (கடற்கரை ஓரமிருக்கும் "கரை" ஒதுங்கும் ஊர் தோழர்களில்) நல்லென்ன விரும்பி வலுக்கட்டாயமாக என்னை ஸ்ப்போக்கன் இங்கிலீஸ் படிக்க அவரும் சேர்ந்தே சஃபாரில் சேர்ந்தோம் அங்கு மாலையில் சென்று வர ஒலிந்து கொண்டு செல்ல நேர்ந்தது ஏனென்றால் "காயலின்" சாயலும் "கரை"யின் நேசமும் கொண்ட நண்பர்களின் கேளியும் கிண்டாலும்தான் அதனையும் தாண்டி சென்றோம் முடித்தோம் உடணடி பயனென்று சொல்லாவிடினும் பழக பழக கேட்க கேட்க கற்றோம் மொழி பெயர்க்கும் அளவிற்கும் அப்படியே தமிழில் எழுத்துருவாக்கும் மாற்றியெடுக்க பயனை இன்றும் அனுபவதித்துக் கொண்டிருக்கிறோமே...

ஒன்னாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அதிரைப்பட்டினத்தில் படித்தோம், அங்கே ஆசிரியர்கள் ஃபிராண்சிஸ் மற்றும், ஹாஜி முஹம்மத், அஹ்மத் தம்பி இவர்கள் அடி(ப்படை)களை மேல் அடி வைத்து படி படி சொன்னதும் ஏணிப் படிகளின் தங்கப் படிகள் !

மிக முக்கியமாக மேலேச் சொன்ன கரையோர நண்பன் அதே காலகட்டங்களில் சுருக்கெழுத்துப் (shorthand writing) பழக அழைத்தான் அப்போது உடணடியாகச் செல்லவில்லை நாளடைவில் அவன் தினமும் இரவில் விழித்திருந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பான் கேட்டால் சுருக்கெழுத்து பயிற்சி என்றும் சொல்லுவான் என்னடா சுருகெழுத்துன்னு சொல்லி இவ்வளவு நேரமா எழுதிறியேன்னு கிண்டலடித்தோம்.

பின்னர் நானும் அவனோடு சேர்ந்து சென்றேன் ஆனால் முழுமையாக நான் முடிக்க வில்லை அதே நேரத்தில் அன் முடித்து விட்டான். சமீபத்தில் இங்கு வெளிவரும் "The National" என்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் முதல் தலைப்புச் செய்தியில் தமிழகத்தில் எந்த அளவு சுருக்கெழுத்து பிரபலமாக இருக்கிறது என்பதை அரைப் பக்கத்தில் விளக்கியிருந்தனர் அதனைப் படித்ததும் மீண்டும் சென்னைக்கு தொடர்பு கொண்டேன் என்னுடைய சொந்தம் ஒருவரை அங்கு அனுப்பி வைத்து பிரக்டிகல் புக்கு வாங்கச் சொல்லி வரவைத்தேன் பழகிக்கலாம்னு தாங்க !

துபாய் வந்த புதிதில் ஹிந்தி எழுத்துக்கு தார் பூசும்போது பின்னாடி ஓடினமாதிரி பிரம்மையிருக்கும் அப்புறம் அட நான் ஒன்னுமே செய்யலைய்யே அப்புறம் ஏன் எனக்கு ஹிந்தி வரமாட்டேங்குதுன்னு வருத்தபட்ட நாட்களும் உண்டுங்க, இருப்பினும் இங்கேயும் அலுவலகத்தில் தேத்தநீர் எல்லாம் தருவதற்கு ஒருத்தரை வச்சிருந்தாங்க அவரோடு கொஞ்சி குலாவி பின்னர் மிஞ்சி அப்புடி இப்புடின்னு பேசி அதனையும் பேச கத்துக் கிட்டாச்சு. "கோபமாக பேசும்போதுதான் நீங்க நல்லா ஹிந்தி பேசுறீங்கன்னு" சூடா தேத்தநீர் தந்துவிட்டு ஐஸ் வைப்பார்

எதுக்குச் சொல்றேன்னா ! அதான் மேலே சகோதரர்கள் சொல்லிட்டாங்களே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எல்லா மாணவர்களும் அவசியம் செய்ய வேண்டியதை வழியுறுத்தி எழுத்தப்பட்ட பதிவு. சரியான நேரத்தில் நம்முடன் பகிர்ந்துக்கொண்ட சகோதரர்கள் மீரா, அதிரை முஜீப் மற்றும் கட்டுரையாளர் சகோதரர் சித்திக் அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நிச்சயம் இந்த ஆக்கத்தை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நிச்சயம் கவணத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

அதிரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்சமையம் ஏதாவது கோடை பயிற்சி வகுப்புகள் நடக்கிறதா என்ற விபரம் கிடைக்குமா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான் ஆக்கம்.சமுதாயத்தின் மேல்
கொண்ட அக்கறையை பறைசாட்டிவதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Yasir said...

தினத்தந்தியில் படித்தது இன்று..கல்வி சம்பந்தமானது

http://dailythanthi.com/article.asp?NewsID=641106&disdate=4/19/2011

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு