Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 13 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அமானிதத்தை நிறைவேற்றிடுதல்

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன்: 4:58)

''நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும் 1) பேசினால் பொய் பேசுவான் 2) வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான் 3) அவனை நம்பினால் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 199)

அநீதம் புரிதல் கூடாது

அநீதம் இழைத்தோருக்கு  எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 40:18)

அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 22:71)

 ''அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 203)

'உரிமைகளை அதற்குரியவர்களிடம் மறுமையில் நிறைவேற்றித் தரப்படும். எதுவரை எனில், இறுதியில் கொம்பில்லா ஆடு, கொம்புள்ள ஆட்டிடம் (அது முன்பு முட்டி இருந்தால்) பழி வாங்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 204)

''நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு (பிறரிடம் இருந்து பறித்து) ஒருவன் அநீதம் செய்தால், (அது போன்ற) ஏழு நிலங்களை (மாலையாக மறுமையில்) அவன் (கழுத்தில்) போடப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 206)

 ''நிச்சயமாக அல்லாஹ் அநீதக்காரனுக்கு (தண்டனை தருவதில்) தாமதம் செய்வான். பிறகு அவனை அல்லாஹ் பிடித்தால் அவனை விடவும் மாட்டான்'' என்று நபி(ஸல்) கூறி விட்டு, பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
''அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.''  (அல்குர்ஆன் : 11:102)
(அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 207) 

'ஒருவனிடம், தன் சகோதரனுக்குரிய கண்ணியத்திலோ அல்லது வேறு பொருளிலோ அநீதம் செய்து இருந்தால், இதற்காக இன்றே தீனாரும், திர்ஹமும் இல்லாத (அந்த மறுமை) நாள் வரும் முன் தன்னை தூய்மையாக்கிக் கொள்ளட்டும்! அவனிடம் நற்செயல் இருந்தால் அவன் அநீதமிழைத்தலுக்கு ஏற்ப அவனிடம் எடுத்து, (அவனது சகோதரனிடம் கொடுக்கப்படும்). அவனிடம் நன்மைகள் இல்லை என்றால், அவனது சகோதரனிடம் தீமைகள் இருந்தால் அந்த தீமைகள் எடுக்கப்படும் - இவனிடம் அது தரப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 210)

''ஒருவனின் நாவிலிருந்தும். அவனின் கையிலிருந்தும் முஸ்லிம்கள் அமைதி பெற்றுவிட்டால் அவனே (சிறந்த) முஸ்லிமாவான். அல்லாஹ் தடுத்துள்ளவைகளை விலக்கிக்கொள்பவனே 'முஹாஜிர்' ஆவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்அப்துல்லா இப்னு அம்ரூப்னு ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 211)

'ஒரு முஸ்லிமின் உரிமையை தன் வலக்கரத்தால் ஒருவன் எடுத்தால், அவனுக்கு  அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கி விட்டான். அவன் மீது சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அது சாதரணமாக இருந்தாலுமா?''என்று ஒருவர் கேட்டார். ''ஒரு 'அராக்' மரக்குச்சியாக இருந்தாலும்தான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஸஹ்லபா அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 214)

'ஒருவரை (பொருட்களை பாதுகாக்கும்) ஒரு பொறுப்புக்கு பணியாளராக நாம் நியமித்து, அவர் நம்மிடம் ஓர் ஊசியையோ,அதற்கும் மேல் உள்ளதையோ நம்மிடம் மறைத்து விட்டால், இது மோசடியாகும். இதை மறுமை நாளில் அவர் கொண்டு வருவார்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது மதீனாவாசிகளில் ஒருகறுப்பு நிறத்தவர் - (அவரை இப்போது நான் பார்ப்பது போல உள்ளது அறிவிப்பாளர்). அவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எனக்கு தந்த பொறுப்பை என்னிடமிருந்து (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார். உனக்கு என்ன நேர்ந்தது? என்று நபி (ஸல்) கேட்டார்கள். 'இவ்வாறு நீங்கள் கூறுவதை உங்களிடம் கேட்டேனே!' என்று கூறினார். 'நான் இப்போதும் அதையே கூறுகிறேன். பொறுப்புக்கு பணியாளராக ஒருவரை நாம் நியமித்தால், அவர் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் கொண்டு வரட்டும், அதிலிருந்து கொடுக்கப்பட்டதை எடுத்துக் கொள்வார். அதில் தடுக்கப்பட்டதை விலகிக் கொள்வார்.'என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீஇப்னு உமய்ரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 215)

''ஏழை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா?என எங்களிடம் நபி(ஸல்) கேட்டார்கள்.  ''எவரிடம் வெள்ளிக் காசும், பொருள்களும்,இல்லையோ அவரே எங்களில் ஏழை'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். 'என் சமுதாயத்தில் ஏழை என்பவன், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நன்மைகளுடன் வருவான். ஆனாலும் அவன் இவனை ஏசினான், இவனை இட்டுக்கட்டினான். இவர் பொருளை சாப்பிட்டான் (கொலை செய்து) இவனது இரத்தத்தை ஓட்டினான். இவனை அடித்தான் என்ற குற்ற நிலையிலும் வருவான். அப்போது இவனது நன்மைகளிலிருந்து (இவனால் பாதிக்கப்பட்ட)வர்களுக்கு பிரித்து வழங்கப்படும். இவனது குற்றத்திற்கு தீர்வு ஏற்படும் முன் இவனது நன்மைகள் அழிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்களின் குற்றங்களிலிருந்து எடுக்கப்பட்டு இவனிடம் தரப்படும். பின்பு நரகில் வீசப்படுவான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 218)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
S.அலாவுதீன்

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

ஊருக்கு செல்லும் முன்னர் இனொன்றும் வேண்டுமே ! :)

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சுபுஹானல்லாஹி வபிஹம்துஹி
வ அததஹல்கிஹி வ ரிலா நப்ஸ்ஹி
வ ஜீனத அர்ஸ்ஸுஹி
வ மிஜாதகலிமாத்துஹி
லல்லஹித்த அலா

இதை 3 தடவை ஓதி வந்தால் சுபுஹில்யிருந்து லுஹர்வரை திக்ர் செய்த நன்மை

என்னால் முடிந்த உபதேசம்

நாயகம்(ஸல்)தனது மனைவி அவர்களுக்கு கற்றுத்தந்தது

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோ. அலாவுதீன்!

நினைவூட்டலில் மிகச் சிறந்தது அல்-குர் ஆன் மற்றும் அல்-ஹதீஸ் என்பதை உங்களின் இத்தொடரில் குர்-ஆன் , ஹதீஸ் ஆதாரங்களை நினைவூட்டிக் கொண்டே இருப்பதைக் காண்கின்றேன். இவைகள் எத்தனை முறைகள் கேட்டிருந்தும் மறதியாளனாகாவே மனிதனை (இன்ஸான் எனும் சொல்லின் மூலச் சொல்லும் “தன்ஸ்” -மறதி எனும் சொல்லின் வேர்ச்சொல் என்றும் கூறுவர்)அல்லாஹ் படைத்துவிட்டதால் மனிதனுக்கு “நினைவூட்டல்” மிக மிக அவசியம்.

குர்-ஆனை மட்டும் சொல்லிக் கொண்டே போனால் “அஹ்லெ குர்-ஆன்” அல்லது “19 குரூப்”(”புதிய நினைவூட்டல்” போன்ற ஆபத்தான வழியாகிவிடும்!
ஹதீஸ்களை மட்டும் சொல்லிக் கொண்டே போனால் “அஹ்லே சுன்னா” போன்று குர்-ஆனை மறந்த வழியாகி விடும்!

குர்-ஆனும் ஹதீஸ்களும் இணையும் பொழுது “தெளிவான” முடிவெடுத்துச் சரியான வாழ்கையை நடைமுறைப் படுத்த முடியும்!
அதனாற்றான், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என்பதும் இறைகட்டளை என்றும் அறிகின்றோம். நீங்கள் அக்கட்டளையைச் சரியாகவே பின்பற்றுவதும் எங்களுக்கும் நினைவூட்டிச் செல்வதும் அல்லாஹ்வின் அருட்கொடை; அதிலும் அமல்களால் நிறையும் ரமலானில்!
அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ் உங்கட்கு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் வழங்குவானாக(ஆமீன்)

Unknown said...

http://adiraipost.blogspot.in/2012/08/blog-post_7168.html

வாடிக்கையாளருக்கு குர்ஆன் வழங்கி அதிரை சகோதரர் தஃவா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பல நினைவூட்டும் உபதேசங்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு