தாய் -மகள் உறவு ...
தாய் பிள்ளைகள் உறவு முதல் மூன்று வருடங்களில் ஆண்-பெண் பிள்ளை என்ற பேதம் இருக்காது. கண்ணை இமைபோல் தாய் காத்து வருவாள், மூன்று வயதிற்கு பின்னர் பெண் குழந்தைக்கு தாய் புகட்டும் பாடம். ஆண்குழந்தயை விட சற்றே கூடுதலாக இருக்கும். அவ்வப்போது தாய் கொடுக்கும் அறிவுரைகள், கண்டிப்புகள், திருத்தங்களடங்கிய பாடங்கள் அனைத்தும் பண்பை வளர்ப்பதாக இருக்கும். சிறு பிள்ளையாக இருந்தாலும் ஒழுக்க விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பாள். பெண் பிள்ளைகளுக்கு மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும். ஆண் குழந்தைகளைவிட இயற்கையாகவே அதிகமாக இருக்கும்.
எட்டு முதல் பதின்ம வயதிற்குள் தாய்க்கு உற்ற தோழியாக உற்ற துணையாக பெண்குழந்தை மனம் இருக்கும். நாம், நம் என்ற உணர்வு என், எனது, என்ற உணர்வு வெகு விரைவிலேயே பெண் பிள்ளைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். தாய் பெண் பிள்ளைகளிடம் காட்டும் அன்பை விட பண்பையும் படிப்பினைகளையும் எடுத்து காட்டுவதே கூடுதலாக இருக்கும். அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுதல், பிறகு சரி செய்தல் என்ற நிலை காணப்படும். முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பருவமடைந்த பெண்ணின் தாய் தன்னுடனே இருக்குமாறு பார்த்துக்கொள்வாள். மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறேன் என்பார்கள்.
பெண்ணிடம் பணிவு, அதிகம் எதிர்பார்பார்கள், அடக்கம் வேண்டும் அதிர்ந்து பேசாதே என்ற கட்டுப்பாடுகள். இப்படியக அந்த பெண்களின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் அர்த்தம் கண்டெடுப்பார்கள் தாயின் மடியே அவர்களுக்கு பள்ளிக்கூடமாக இருந்த காலமது. நாளாடைவில் சூழல்கள் மாற "பள்ளிக் கூடங்கள்” தாயின் மடியாக மாறிப் போனது. மாறாக தாய்க்கு மகள் சொல்லிக் கொடுக்கும் சூழல் வளர்ந்து வந்தது. பள்ளிக்கூட நேரம் போக மற்ற நேரங்களில் தாயுடன் மனது திறந்து உணர்வுகளை பரிமாற்றம் செய்து கொள்வது நல்லதல்லவா ! ஆனால் ஹோம் ஒர்க், என்று மகளுக்கு தனிமையை சூழல் ஒதுக்கி கொடுத்து. தாய்க்கு தொலைக்காட்சிகளே கதியாகி , சீரியலே சீரியசானது தாய் - மகள் தனி, தனி தீவாக பிரிந்த அவலம் இன்றைய காலச் சூழலானது.
தாயிடம் அன்பு கொண்ட காலம், மறைந்து பல காலமாயிற்று தாய்-.தந்தை மீது வைத்திருந்த அதீத பாசம் காரணமாக கைபிடித்த கணவனையே பிரிந்து வந்த சம்பவங்களும் உண்டு. ஆனால், இன்று தாய்-தந்தை மீதான பாசம் இல்லா நிலை கனவுலகில் மிதக்கும் தன்மையிழந்த உலக கல்விக்கு ஆயத்தம் செய்யும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். ஏன், எதற்கு, என்ற கேள்வி பெண் பிள்ளைகளிடத்தில் என்றுமே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதன் நோக்கம் தெரியாமல் படிக்க வைப்பது பெரிய மடமை.
கண்மூடித்தனமான தன்னம்பிக்கை பெண்ணிடம் ஒட்டிக்கொள்கிறது நம்மவர்களில் 95 % பேர் பெண் பிள்ளைகளை கல்லூரி வரை படிக்க வைப்பது பகட்டுக்காகதான். படிப்பு என்ற திசையில் மகள் பயணிக்கிறாள் தாய் வேறு திசை இருவருக்கும் இடைவெளி அதிகரிக்கிறது. பெண்பிள்ளைகளின் படிப்பு சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் சாதாரணமாகவே, உற்ற தோழியாக தாய் மகள் வாழ்ந்து வந்த காலத்தில் கூட மணமான பின் முற்றிலும் மாறி போகும் நிலை அந்த காலம் தொட்டே நடை பெற்று வருகிறது. தாய் மகள் என்ற பந்தமே இல்லாத அளவிற்கு தன கணவனை சார்ந்து போகிறாள். அதுதான் நல்லது என்றாலும் உணர்வு மாறி போக கூடாது
மணமாகும் வரை அளவான அன்பு கண்டிப்பு. வாழ்கையின் நெறி உணர்த்தி வளரும் பெண் பிள்ளைகள் தாயின் அன்பை உணர்ந்து வளரும் தாய் மகள் உறவின் வினோதம் ..தாய் மீது கூடுதல் பாசம் பற்று இருக்குமானால் மணவாழ்வில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு ..பெற்றோர்கள் தூர நின்று அழகு பார்த்தலே ..நன்று !
(உறவின் பயணம் தொடரும் )
அதிரை சித்தீக்
12 Responses So Far:
அருமையான பதிவை தரும் சகோ சித்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்ஷா அல்லாஹ் இக்குறுந்தொடர் நெடுந்தொடராக அமையனும் என்பது என்னுடைய ஆவ
நல்ல அருமையான தாய்ப்பாசத்தை தூண்டும் ஆக்கம். நமதூரில் சில வீடுகளில் ஈன்றெடுத்த தாயை/தகப்பனை எனக்கென்னா வென பிள்ளைகள் விட்டுச்சென்று அவர்கள் இருப்பிடத்திலேயே தன் மல,ஜலங்களை கழித்து அப்படியே அதை உழப்பிக்கொண்டு, ஈமொய்த்துக்கொண்டும் வேதனையை வெளிக்காட்ட இயலாமல் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.
தொடரட்டும் உறவுகள்!
உம்மாவும் மகளும் உறவு எப்படி இருந்தது, இப்ப எப்படி ஆயிற்று, எப்படி இருக்கனும் என்ற அழகான உளவியல் மற்றும் உள்ளபடியான தொடர்.
//தாய் மகள் என்ற பந்தமே இல்லாத அளவிற்கு தன கணவனை சார்ந்து போகிறாள். அதுதான் நல்லது என்றாலும் உணர்வு மாறி போக கூடாது //
நமதூரைப் பொறுத்தவரை மகளுக்கு சீதன வீடு கொடுப்பதால் தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் கணவன் வீட்டிற்கு மகளை அனுப்பிவைத்தால் பாசமும் அதிகரிக்கும். தூர இருந்தால் சேர உறவு.
உறவுகள் இல்லையெனில் உலகம் இயங்காது. மகளுக்கும் தாயாருக்கும் உள்ள உறவைவிட மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையேயான உறவுதான் மிகவும் பலகீனப்பட்டுக் கிடக்கிறது.
பொருளாதாரக் கணக்கீடுகள்தான் உண்மையான பாசத்திற்கும் பரிவுக்கும் பங்கம் விளைவிக்கின்றன.
எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது அன்புதான் என்பதை உணர்ந்தாலே உறவுகள் பலப்படும்.
குடும்பப்பாங்கான தொடர், வாழ்த்துகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
நல்ல கருத்துக்களை தாங்கி வரும் பதிவு, அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் ரஸூல் காட்டித் தந்த குடும்பவாழ்வில் நாம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் புரிவானாக.
அன்புச் சகோதரி ஆமினா எனும் தாய்க்குலம் பாராட்டும் சிறப்பை, “தமிழூற்று” அதிரை சித்திக் அவர்கள் பெற்றிருப்பதிலிருந்து இன்னும் எத்தனை வாசகிகள்/சகோதரிகள் இக்கட்டுரையை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யூகிக்கலாம். காலத்திற்கேற்ற வழிகாட்டி! கவிவேந்தரின் கருத்தை 100 விழுக்காடு ஆதரிக்கின்றேன். ஆம். மாமியார்-மருமகள் உறவு சீர் கெட்டுப் போக சீரழிக்கும் ‘சீரியல்” வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன! இன்னும் இந்த மாமியார்-மருமள் “யுத்தம்” முடியாத- பிரகடனப்படுத்தாமலே தொடரப்பட்டு ஏதோ இப்படி நடந்துதான் தீர வேண்டும் பிடிவாதமாக மருமளைக் கொடுமைப் படுத்தும் மாமியார்கள் அதிரையிலும் இருப்பது தான் வேதனையிலும் வேதனை; அதிலும் மார்க்கம் தெரிந்த- மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற- மார்க்கதைப் பரப்புகின்றவர்கள் வீடுகளில் இப்ப்படி மருமகளை வேதனைப்படுத்தும் நிலையில் தான் அதிரையின் நிலை என்பதை கண்ணால் கண்டும் கண்ணீர் வடித்தே எழுதுகின்றேன்!
கவிக் காக்கா அவர்கள் சொல்லியிருப்பது போன்று, உறவுகள் இல்லையென்றில் உலகம் ஸ்தம்பிக்கும்.
மருமகள் மாமியார் உறவுகள்தான் அடிக்கடி தமிழ்நாடு மின்சார வாரியம் போன்று இருப்பதுதான் வேதனையே !
ஒவ்வொரு உறவாக அலசி வருகிறோம் ..
இன்ஷா அல்லாஹ் எட்டாவது ..அத்தியாயம்
மாமியார் மருமகள் உறவு பற்றி முழுமையாக
அலசுவோம் ..கல்லும் கரையும் தகவல் களுடன்
வருகிறேன் ...
சொந்த பந்தங்களுக்குள்ளே முதல் எதிரி இருக்கிறார்களென்றும் இதை வைத்து குரூப் அமைத்து ஒருவருக்கொருவர் எதிரியை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருக்கும் நம் சமூகம் உண்மையான எதிரியை நம்பி ஏமாந்துக்கொண்டிருக்கோம், இச்சமயத்தில் உறவின் முக்கியத்துவம் பற்றி தொடர் எழுதுவது சாலச்சிறந்த ஒன்று, தேவையான நேரத்தில் உறவின் உறவுகளை அவசியப்படுத்தும் இது மாதிரி பதிவுகள் நிறைய வரவேண்டும்....
//மருமகள் மாமியார் உறவுகள்தான் அடிக்கடி தமிழ்நாடு மின்சார வாரியம் போன்று இருப்பதுதான் வேதனையே !/
படித்த நம் கண்மணிகளாம் பெண்மணிகள் இருக்கும் வரை மருமகள்களாக உள்ளவர்கள் “அட்ஜெஸ்ட்” பண்ணிக் கொள்கின்றனர்; ஆனால், “படிக்காத” பழைய பழக்கத்தில் மாமியார்-மருமகள் யுத்தம் நடந்தே ஆக வேண்டும் என்ற தேவையற்ற வீண் வம்புகள் வளர்க்கும் மாமியார்கள் இருப்பது தான் மிகவும் கண்டிக்கத்தக்க வேதனையிலும் வேதனை!!!
ஒரு முதிர்ச்சி பெற்ற எழத்தாளரிடம் இருந்து வரும் எழுச்சி தொடர்...படிக்கவும்,பாலோவ் பண்ணவும் வேண்டிய கருத்துக்கள்
//ஆனால் ஹோம் ஒர்க், என்று மகளுக்கு தனிமையை சூழல் ஒதுக்கி கொடுத்து. தாய்க்கு தொலைக்காட்சிகளே கதியாகி , சீரியலே சீரியசானது// மிகவும் சிந்திக்கவேண்டிய வரிகள்...வாழ்த்துக்கள் காக்கா தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment