Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

A E T - அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை அழைக்கிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின் அடுத்தக்கட்ட செயற்குழு கூட்டம் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் வரும் 21-08-2012 அன்று மாலை 04:15 மணிக்கு நடைபெற இருக்கிறது.

அதற்கான பிரத்யோக அழைப்பினை A E T-யின் செயலாளர் ஜனாப் M.S.தாஜுதீன் அவர்கள் இங்கே பதிந்து இருக்கிறார்கள். அதிரை மற்றும் வெளியூர்களில் வேலை செய்யும் நம் சகோதரர்கள் அனைவரும் பெருநாள் விடுப்பில் ஊரில் ஒன்று கூடும் இத்தருணத்தை பயன்படுத்தி இந்த நன்னோக்கு ஆலோசனை செயற்குழு கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நெறியாளர்
www.adirainirubar.in
-------------------------------------------------------------------------
AET அழைக்கிறது...
-------------------------------------------------------------------------


To
ADIRAITES


Dear Brother.

Assalamu  Alaikum

Wish you Eid ul Fitr !

This is to bring to your kind notice that the next Executive Committee Meeting of our Imam Shafi (Rah) Matriculation Higher Secondary School is scheduled to be held at 04.15 p.m. on 21.08.2012 at our school new building to transact various subjects.

Our School Management is of firm opinion  that you are a  well-wisher of Adirai in all walks of life.   Your participation in the above said Executive Committee meeting will be very beneficial, stimulative and advantageous,   particularly to the student community.

We, therefore, take privilege to extend our invitation to  you and request you to participate in the above Executive Committee meeting and offer your valuable suggestions for  the betterment of the school, as a whole.

Thanking you,

Yours faithfully,
For Adirampattinam Educational Trust,


M.S. Tajudeen,
Secretary
-----------------------

7 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வெளினாட்டில் வாழும் அனைத்து அதிரையர்களுக்கும் எனது உலம் கணிந்த ஈத் பெருனால் வாழ்துக்கள்

மு.செ.மு சபீர் அஹமது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையில் இருக்கும் அனைத்து சகோதரர்களும் அவசியம் கலந்து கொண்டு நல்ல ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்...

பதின்ம வயதொத்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பையும் நடவடிக்கைகளையும் கண்கானிக்க வேண்டும், ஆனால் பள்ளி ஆசிரியர்களோடு மோதல் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மூர்க்கம் காட்ட கூடாது !

மாணவர்களின் டைரியை தினமும் ஆசிரிரியர்களும் பெற்றோர்களும் அவரவர்களின் பங்களிப்பை அதில் அறிவுறுத்தி வரவேண்டும்... இதில் ஏதோ தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் காதுகளில் விழுந்தது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையில் இருக்கும் அனைத்து சகோதரர்களும் அவசியம் கலந்து கொண்டு பள்ளி முன்னேற்றம் சம்பந்தமாக நல்ல ஆலோசனைகளை வழங்குவதுடன் அத்துடன் ஷிஃபா விசயத்திலும் நல்ல முடிவுகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
லண்டன் ஆல் முஹல்லா நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பாக அதிரை வாசிகள்.

சேக்கனா M. நிஜாம் said...

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று நமது சமுதாயம் சார்ந்த காலஞ்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி நமதூருக்கு பெருமை தேடித்தந்தவர்கள். இந்நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடு மற்றும் மேலை நாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் மேலும் வலுவூட்டும் விதமாக சில தனியார் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை திறம்பட செய்து ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.

சரி விசயத்துக்கு வருவோம், நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு கல்வி கற்பதற்காக சென்று வர பயன்படுத்துவது வாகனங்களையே குறிப்பாக ஆட்டோ, ஆம்னி வேன், குட்டி யானை போன்றவற்றில் நிற்கும் நிலையிலும், டிரைவர் சீட்டின் மிக அருகிலும், பின்புற சீட்டில் உட்கார்ந்தும் மற்றும் நிற்கும் நிலையிலும், தலை, கைகளை கரம் சிரம் புரம் நீட்டிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே இவை உள்ளன.

இதில் அதிக எடையுடன் கூடிய அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக மாணவ, மாணவிகள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவ, மாணவிகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர்.

அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வதனால் கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் மேலும் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் முதுகு கூன் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஒரு ஆட்டோவில் அரசின் விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்ட இவர்கள், ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்னுதாரனமாக கடந்த கால தின நாளிதழில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் நாம் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.


பெற்றோரின் கனிவான கவனத்திற்கு !

இதுபோன்ற பாதுகாப்பாற்ற வாகனங்களில் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதி வேகத்தை தவிர்த்து, கூடுதலான குழந்தைகளை ஏற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.

தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !

உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் அச்சங்கள் நீங்கி அவர்களிடம் நற்பெயரை பெற்று பள்ளியின் தரம் மேலும் உயர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ( இன்ஷா அல்லாஹ் ! )


விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!

சேக்கனா M. நிஜாம்

அதிரை சித்திக் said...

உலகில் அணைத்து நாடுகளிமும் ஆதிக்கம்
செலுத்தும் அதிரை சொந்தங்களுக்கு
என் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ....
இமாம் ஷாபி புதிய கட்டிட த்தில் நடை பெரும்
விழா நிச்சயம் அதிரைக்கு மேலும் சிறப்பு
சேர்க்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது
உறுதி அனைவரு கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்
அதிரை மக்களுக்கு இனிய பெருநாள் நல வாழ்த்துக்கள் ..!

KALAM SHAICK ABDUL KADER said...

அல்-ஹம்துலில்லாஹ்! இப்படிப்பட்ட ஓர் ஏற்பாட்டை நான் மிகவும் எதிர்பார்த்தேன்; ஆனால், சென்ற மாதம் விடுப்பில் இருந்த போது இக்கூட்டமும் அழைப்பும் இருந்திருந்தால் நேரில் விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள; அவைகளை நேரில் விளக்கமாகப் பேசி ஆலோசனைகள் வழங்கலாம்; ஆனால், இப்பொழுது இந்தப் பின்னூட்டம் வழியே சில யோசனைகள்:

1) பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என்று அழைத்துக் கொண்டாலும் பெரும்பாலும் பெண்கள் தான் கலந்து கொள்கின்றனர். எங்களைப் போன்ற படித்த ஆண்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கலாம்.
2) ஆங்கில வழிக் கல்வி என்று பெயரளவில் தான் உள்ளது; ஆசிரியர்கள் மாணவ=மாணவிகளிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதில்லை; ஆங்கிலத்தில் பேசும் திறனை அம்மாணவ- மாணவியர்கள் பெறுவதற்கு அப்பள்ளியில் அதிக நேரம் ஆசிரியர்களிடம் இருக்கும் நேரத்தில் உரையாடும் பழக்கம் உண்டாக்கினாற்றான் இன்ஷா அல்லாஹ் வெளியில் வந்து கல்லூரியில் பயிலும் பொழுது சரளமாகப் பேச முடியும்.
3) மாதாந்திரத் தேர்வு நடைபெற்ற போது மாணவர்கள் வகுப்பறையில் எழுதாமல் பிரார்த்தனை மைதானத்தில் எழுதிக் கொண்டிருந்தார்கள்; அப்பொழுது அவர்களைக் கண்காணிக்க ஓர் ஆசிரியர் கூட இல்லை; இதனை சென்ற விடுப்பில் நான் கண்ட உண்மை.
4) ப்ளஸ் 2 மொத்தக் கட்டணம் 15000/= (ஓர் ஆண்டுக்கு) என்று வசூல் செய்கின்றார்கள்; ஆனால் அரசு அனுமதித்தக் கட்டணம் ரூ 9500 மட்டும்; மீதித் தொகை “ஸ்மார்ட் க்ளாஸ்” என்று போட்டு ரசீது தருகின்றார்கள்; “ஸ்மார்ட் க்ளாஸ்” என்றால் என்ன? என்று கேட்டால் யாரும் விளக்கம் தர பயப்படுகின்றார்க்ள்; இறுதியில் தெரிந்து கொண்ட விடயம்: “திருச்சியிலிருந்து வருகின்ற ஒரு பயிற்சியாளர் இப்பள்ளி ஆசிரியர்கட்கு சிறப்புப் பயிற்சி அளிப்பாராம்; அதற்கான சாதனங்கள் மிகவும் விலை உயர்ந்ததாம்; அதற்குண்டானத் தொகையே இவ்வாறு வசூலிக்கப்படுகின்றதாம்” என் கேள்வி:”உங்கள் ஆசிரியர்கட்குப் பயிற்சிக் கட்டணம் நீங்கள் -நிர்வாகத்திலிருந்து தானே கொடுக்க வேண்டும்? எங்களிடம் வசூல் செய்து உங்கள் ஆசிரியர்கட்குப் பயிற்சிக் கட்டணம் கட்டுவது நியாயமா?

இதற்கெல்லாம் விடைகளை இப்பின்னூட்டதில் தாளாளர் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்; நேரில் இதுபோன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேச வாய்ப்பிருந்தால் இன்னும் அப்பள்ளியில் நான் கண்டு வேதனைப்படும் பற்பல விடயங்களைப் பேசி அப்பள்ளியும் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் நற்பெயர் எடுக்க எங்களின் ஆலோசனைகள் வழங்குவேன், இன்ஷா அல்லாஹ்!

KALAM SHAICK ABDUL KADER said...

ஆச்சர்யம்; ஆனால் உண்மை!
1) பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தான் படிக்கப் போகும் ப்ள்ஸ் 2 அப்ளிகேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்யத் தெரியாமல் யாராவது பூர்த்தி செய்து தருவார்களா என்று கெஞ்சியது கண்டு வருந்தினேன்.
2)அலுவலகத்தில் “ஏசி” மட்டும் போட்டு நாகரிகமாக இருந்தாலும், ஒவ்வொரு க்ளார்க்கும் பேனா, பென்சில் போன்றவற்றிற்கும், மற்றுமுண்டான ஸ்டேஷனரி பொருட்கட்கும் பக்கத்து இருக்கையில் உள்ளவர்களிடம் கெஞ்சியது கண்டு வருந்தினேன்
3) இண்டர்வெல் பிரியடில் சமுசா வடை வாங்கித் தின்ன மாணவர்கள் வரிசையில் நிற்காமல் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறுவது போல் (சட்டை கிழிபடும் அளவுக்கு) வாங்குவதை விட ஓர் ஒழுக்கமாக வரிசையில் நின்று வாங்காதது கண்டும் வருந்தினேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு