Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண் வாசனை :: ஊர் பார்வை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2012 | , , ,

பார்வை - 1

கல் தோன்றி மண்தோன்றா காலம் தொட்டே  சமூக சூழலில் இயல்பாக எவராலும் நேசிக்கப்படுவது “மண், பொன், பெண்” இது காலந்தொட்டு தொடர்வதே… நமது ஊர் என்றல்ல எங்குமே காசு கொடுத்தால் எதனையும் வாங்கி விடலாம் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது (இந்த மலையேற்றம் என்றால் என்வென்று யாராவது சரியான விளக்கம் கொடுங்களேன்).அவசியமேற்படும்போது விவசாய நிலங்களை சீர் செய்வதற்கு அதாவது மேடு-பள்ளங்களை சமநிலபடுத்தி அதனை சரி செய்வதற்கு இருமன் ஏரி குளங்களில் தேவைக்கேற்ப முன்பு வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.  

இன்று நிலைமை தலைகீழ் இருமண் தேவைப்படுபவர்களின் பாடு பரிதாபம் காரணம் அரசு அதிகாரிகளின் தேவையற்ற கெடிபிடிதான் இதே நிலைமை நீடித்தால் இனி இறுமண் தண்ணீர் பாக்கெட்டு போல் போட்டு ஏதோ போதை பொருள் விற்பதுபோல் திருட்டுத்தனமாக விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள். ஊரில் ஏரி குளங்கள் தூர்-வாறாது கால்பந்து திடலகவும் கிரிக்கெட் மைதானமாகவும் மாறி போய் விட்டது. இறுமண் தேவைபடுபவர்களை மண் எடுக்க அனுமதித்தால் ஏரி குளங்களில் உள்ள இரு மண்களை அள்ளினால் ஏறி  குளங்கள் ஆழமாகும் மலைக் காலங்களில் விரயமாக கடலில் கலக்கும் நீரை இந்த ஏரி குளங்களில் தேக்கி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம் மேலும் நீரை அதிக அளவில் தேக்கி வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் ஆள் துளை கிணறுகளின் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும்.

உழவுக்கும் தொழில்லுக்கும் வந்தனம் செய்வோம் என்று கூறும் அரசு அதிகாரிகள் ஏரி குளங்களை தூர்வாறவும் விட மாட்டோம் இறுமண் தேவைபடுபவர்களை தூர்வாறவும் விடமாட்டோம் என்று அடாவடி செய்யும் அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்வது !?


நாயை வைக்கோல் போருக்கு காவல் போட்டால் மாட்டையும் திங்க விடாது நாயும் திங்காது.

--------------------------------------------------------------------------------------

பார்வை – 2

இவைகளை விடுத்து அடுத்த கட்டமாக மண் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட டிராக்டர்களின் அடாவடியையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஊரில் ஆற்று மணலை அள்ளிக்கொண்டு போகும் டிராக்டர்களின் வேகம் படு அமர்க்களமாக ஃபார்முலா ஒன் டிராக்கில் ஓட்டுவது போன்ற நெனப்புபோல. டிப்பரில் மணலை நிரப்பிக்கொண்டு ரோட்டில் போகும்போதும் வரும்போதும் நடுரோட்டில் சொல்லும் அனைவருக்கும் மணலால் குளியல்தான். நம் கண்களை மணலால் நிரப்பி கண் டாக்டர்களுக்கு நல்ல வருமானத்தை உண்டாக்கி கொடுக்கின்றார்கள் என்னதான் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போனாலும் நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மணல் நம் கண்களுக்குள் மண் புகுந்து வீடுகட்டி விடுகின்றது.

பைக்கில் பட்டுக்கோட்டைக்கு ஒரு எட்டு போய்வந்தால் கண்களில் கால்படி மண் கரை ஒதுங்கியிருக்கும். இவ்வாறான சுற்றுபுறச் சூழலை பலரும் அரசு அதிகாரிகளுக்கு எடுத்து சொல்லிய பிறகு மணல் அள்ளிக்கொண்டு போகும் டிப்பரில் பிளாஸ்டிக் படுதா கட்டவேண்டும் என்று அரசு அதிகாரிகள் கட்டளை இட்டனர் இந்த கட்டளை செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

ஒரு சில நேரங்களில் டிப்பரில் மணல் நிரப்பி கைக்குட்டை அளவு தார்ப்பாய் கட்டிக்கொண்டு மணல் டிராக்டர்கள் பறந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் கண்களை பணம் மறைத்துவிடுகின்றன சாதாரண மக்களின் கண்களை இந்த மணல்கள் மறைத்துவிடுகின்றன.


நாய் விற்ற காசு குறைக்கவாபோவுது என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கும் மாறவேண்டும் 

Sஹமீது
அதிரையிலிருந்து...

7 Responses So Far:

crown said...

மணல் அள்ளிக்கொண்டு போகும் டிப்பரில் பிளாஸ்டிக் படுதா கட்டவேண்டும் என்று அரசு அதிகாரிகள் கட்டளை இட்டனர் இந்த கட்டளை செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அதானே இந்த அதிகாரிகளுக்கு இது சரியா படுதா? இல்ல எங்காவது ஒரு டிராக்டரில் படுதா கட்டியிருப்பது நமக்கு படுதா?எல்லாம் கண்ணை கட்டி மண்ணை வெட்டி கொள்ளை வியாபாரம் செய்யும் கூட்டத்தினரின் சதியில் விவசாய மக்களின் சாப்பாட்டில் மண் அள்ளி போடுறாங்க! ஒரு புழுவைப்போல் நம்மை அவர்கள் பார்ப்பதும் இவனெல்லாம் மண்புழூ என முடிவு எடுத்ததும் அதி"கார"வர்கத்தின் தான்(மண்)தோன்றித்தனம்.

KALAM SHAICK ABDUL KADER said...

மண்ணோடு போட்டி போட்டு
மண்ணுக்குள் போவதால்
“மண்ணைக் கவ்வும்” தோல்வி!
மண்ணும் மனிதனைப் பார்த்து
மண்ணாய்ப் போன மண்டைக்குக் கேள்வி
”இன்னும் எத்தனை நாளைக்கு உன் ஆட்டம்”
பின்னும் பின்னும் மண்ணைத் தேடி ஓட்டம்
கண்ணும் கருத்துமாய் மார்க்கத்தைப் பேணாதால்
ஒன்னும் கிடைக்காது கப்ரு மண்ணுக்குள் மனிதா
தின்னும் ஆவலுடன் தினம் தினம் மண்ணும்
உன்னைக் கூப்பிடுதல் உணரவில்லை எளிதாய்..!!

Ebrahim Ansari said...

மண்ணின் மைந்தர் மா நகர் ( மா= அம்மா) போனதும் மண்ணைப் பற்றி - மண்ணாப் போயிடுவானுகள் பற்றி தந்துள்ள ஆக்கம், மன்னும் ஆக்கம். ( மன்னும் = நிலைபெற்ற) .

ஒரு வண்டி மண் மகிழங்கோட்டை வாய்க்காலில் இருந்து அடிக்க ரூ. 350/= அதை உள்ளே அள்ளிப்போட ரூ.100/= . போகிற போக்கைப்பார்த்தால் ஒரு துகள் மண்ணுக்கு ரேட் வந்துவிடும்போல தெரிகிறது. அப்புறம் மண்ணை எண்ணித்தான் வாங்கவேண்டும்.

ஏரி குளங்களை இருமண் எடுப்போரை தூர்வார விட்டாலே அரசுக்கும் மிச்சம். நமக்கும் வேலை நடக்கும். ஆனால் ஊர் உருப்பட்டுவிடுமே. அதற்கு அரசு சம்மதிக்குமா? தலை தெரித்துவிடாதா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மக்களின் தேவைகளுக்கு மண் அள்ளி போடாமல் இருக்க அரசு அதிகாரிகள் மிகக் கவனமாக இருக்கிறாய்ங்க !! :)))) !!!!

ஸாரி போகவிடாமல் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இருமண் என்றால் குருத்து மண்ணா?

நாட்லெ ம‌ண்ணு பிர‌ச்சினை இருக்குற‌துனாலெ தான் அமெரிக்கா அட்வாண்ஸா "க்யூரியாசிட்டி ரோவர்" என்ற‌ விண்க‌ல‌த்தை செவ்வாய்க்கிர‌க‌த்திற்கு அனுப்பி அங்குள்ள‌ ம‌ண் மாதிரியை வெட்டி எடுத்து வ‌ர‌ அனுப்பியுள்ள‌தோ? நமக்கு செவ்வாய்க்கிரகம் வெறும் 57 ஆயிர‌ம் கோடி கிலோ மீட்ட‌ர் தூர‌ந்தானாமுள்ளோ? அங்குள்ள‌ ம‌ண் குருத்து மண்ணா இருக்கிமா? இல்லாட்டி செம்ம‌ண்ணா இருக்கிமா? யாருக்குத்தெரியும்?

நாமெல்லாம் ப‌ச்ச‌புள்ளைக‌ளுக்கு வானில் நிலாவைக்காட்டி நிலா, நிலா ஓடி வா!!! நில்லாம‌ல் ஓடி வா!!! என‌ பாடுவோம். ஆனால் அமெரிக்கா அனுப்பிய‌ "க்யூரியாசிட்டி ரோவர்" என்ற‌ விண்க‌ல‌ம் செவ்வாய்க்கிர‌க‌த்திலிருந்து பூமியே, பூமியே ஓடி வா!!! அர‌சிய‌ல் இல்லாம‌ல் ஓடி வா!!! ம‌னிதாபிமான‌த்துட‌ன் ஓடி வா!!! என‌ பாட‌ ஆர‌ம்பித்து விடும் போல் தெரிகிற‌து.

சாகுலாக்காவுக்கா க‌ல‌ர், க‌ல‌ர் ஃபோட்டாவெல்லாம் எடுத்து அனுப்ப‌ ஆர‌ம்பிச்சிடுச்சாமுள்லெ??? வேறென்னாக்கொற‌ச்சி????

சமூக ஆர்வலராய் ந‌ல்ல‌ சிந்த‌னை செய்ய‌த்தூண்டும் ஆக்க‌ம்.

sabeer.abushahruk said...

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை
மனம்தான் உணர்ந்திட மறுக்கிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

//மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை
மனம்தான் உணர்ந்திட மறுக்கிறது. //

கவிவேந்தே!இதே வரிகளைத்தான் என் பின்னூட்டத்தில் இடலாம் என்று என் மனம் சொன்னாலும் நான் அவ்வரிகளை மாற்றி (சுற்றி வளைத்து) இதே கருத்தினையே வலியுறுத்தினேன். இவ்வரிகள் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரவரிகள் என்றாலும் இவ்வரிகளை அவர்க்கு ஊட்டியவர் ஒரு முஸ்லிம் பெரியவர் என்ற உண்மையையும் அவர் ஒரு பேட்டியில் ஒத்துக் கொண்டுள்ளார். பனைக்குளம் எனும் ஊரில் அப்பெரியவருடன் இக்கவிப்பேரரசு உரையாடி மகிழும்பொழுது இப்படிப்பட்ட நற்போதனைகளை அப்பெரியவர் வழியாகப் பெற்றிருப்பதாகவும் அப்பேட்டியில் சொல்லியிருக்கின்றார். இவ்வரிகளின் ஆணிவேர் நம் கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸில் உள்ளது.
“ஒவ்வொரு நாளும் கப்ரு உன்னை அழைக்கின்றது” என்ற கருத்தில் உள்ளதாக நினைக்கின்றேன்; அறிந்தவர்கள் அந்த ஹதீஸை ஆதாரத்துடன் அறிவிக்கலாம். (சகோ. அலாவுதீன் அவர்கள் அறிவிப்பார்கள் என்று நினைக்கின்றேஏன்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு