Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிலவே! நீதான் பிறையா !? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 13, 2012 | , , ,


நிலா நிலா - ஓடிவா
நில்லாமல் - ஓடிவா !
மலை மீது - ஏறிவா
மல்லிகைப் பூ - கொண்டுவா !
- நினைவில் இருக்கும் சிறு வயதுப் பாடல்

நிலவு, நிலா என்று கவிதைகளிலும் கதைகளிலும் கதாநாயகியாக சித்தரிக்கப்படும் சந்திரன், இதுதான் பூமிக்கு மிக அருகாமையில் (சுமார் 4,06,899 கிலோ மீட்டர் தூரம்) இருப்பதால் நாம் தினமும் சர்வ சாதாரணமாக கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றாகத் தெரிகிறது. பூமியை நான்காகப் பிரித்து மூன்று பங்கை நாம் (மனைகளாக) வைத்துகொண்டால் பாக்கி என்னவோ அதுதான் நிலவின் சுற்றளவு , அதாவது சுமார் 10,927 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதுதான் அந்த நிலா. அட! நமதூர் நிலங்களை வாங்கி விற்கும் ப்ரோக்கர்களை அங்கு அனுப்பினால் கிடைக்கின்ற இடங்களை அங்கு சிறு சிறு பாகங்களாக, சந்தும் பொந்துமாக, சாக்கடை ஓடக்கூட வழிவைக்காமல் துண்டு துண்டாக மனை போட்டுவிடுவார்கள்!.

நிலவை உற்று நோக்கினால் வட்டவடிவப் பகுதிக்கு நடுவே சிறு சிறு துகல்கள் போல் மங்கலாகக் கருப்பாக தெரியும் அது நிலவில் உள்ள மலைப் பகுதிகள். அந்த மலைப் பகுதி சூரிய வெளிச்சத்தை அதிகமாகப் பிரதிபலிக்காததால் நமக்குக் கருமை நிரமாகத் தெரிகின்றது நமது பூமியில் உள்ள மலைச் சிகரங்களில் மிக உயரமானது இமயமலையில் உள்ள everest சிகரம்.அதன் உயரம் 8,848 மீட்டர் (1955 ஆம் ஆண்டு இந்தியாவால் அளக்கப்பட்டது) ஆனால் நிலவில் உள்ள லைப்ரிட்ஸ் என்னும் மலை கிட்டத்தட்ட 10,600 மீட்டராகும். நிலவில் 120 டெசிபலை (நம் காதுகள் இந்த சப்தத்தில் செவிடாகிவிடும்) சப்தம் போட்டாலும் வெளியோ கேட்காது (நமதூர் குற்றால குளியல் பர்ட்டிகளின் சப்தமெல்லாம் அங்கு எடுபடாது) காரணம் சப்தத்தை கடத்த அங்கு அசைந்தாடும் காற்று இல்லை.

சூரிய ஒளி நிலவில் பட்டு அது பூமிக்கு வந்து சேர 1.3 வினாடிகள் ஆகிறது அதே சூரிய ஒளி சூரியனில் இருந்து நேரடியாக பூமிக்கு வர பல நிமிடங்கள் ஆகும் காரணம் சூரியன் தூரத்தில் இருப்பதால் வெளிச்சம் வந்து சேர தாமதம் ஆகும். சூரியன் அதே நிலவு இருக்கும் தூரத்தில் இருந்தால் (பூமி) நமலேல்லாம் கரிக்கட்டைதான் (அந்தோ கபாப் தான் போங்கள்)!. நிலவிலும் பூமியில் இருப்பது போல் எரிமலைகள் உள்ளன அதில் ஒலிம்பஸ் மான்ஸ் என்ற எரிமலை 3 கிலோ மீட்டர் உயரமும் 600  கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. 

நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்களும் 7 மணி நேரமும் 43 நிமிடங்களும் 11. 47 வினாடிகளும் ஆகும். நிலவின் இழுவிசை பூமின் இழுவிசையில் ஆறில் ஒரு பங்குதான். நாம் நிலவில் நின்று கொண்டு துள்ளிக் குதித்தால் அப்படியே ஸ்லோ மோஷனில் மேலும் கீழும் மிதந்து வருவோம்! நிலவு பூமியை மணிக்கு 3,700 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றது. சாதாரணமாக பயணிகள் விமானம் அதிகபட்சமாக 1000 கிலோ மீட்டர் வேகத்திற்குள் தான் பறக்கும். 

சில நேரங்களில் வானில் மேகமூட்டம் காணப்படுவதால் பிறையைக் காண்பதில் சிரமம் ஏற்படும் இது போன்ற நேரங்களில் நாம் சிறுவயதில் யோசிப்போமே நமது விமானப்படை விமானங்கள் மூலம் மேக மூட்டத்தை விளக்கிச் சென்று மறைந்திருக்கும் பிறையைப் பார்க்க ஏற்பாடுகள் செய்தால் நோன்பு வைப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உள்ள பெரும் குழப்பங்கள் தடுக்கப்படலாம் அல்லவா என்று ? ஆனால் நமது நாட்டு விமானப்படை மிக்20 மற்றும் மிராஜ் 2000 ரக அதி நவீன போர் விமானங்களைத் துரு பிடித்துத் தூக்கி போடுவார்களே தவிர இதுபோன்ற காரியங்களுக்குப் பயன் படுத்தவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். அது நம் சிறுவயது கனவுதான்.

சவுதியில் இருந்து நம்மைத் தாண்டி (இந்தியாவை) இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவில் எல்லாம் சவுதியில் நோன்பு என்றால் அங்கும் நோன்பு, சவுதியில் பெருநாள் என்றால் அங்கும் பெருநாள் கொண்டாடி விடுகின்றனர். அங்கு எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், நாம் மட்டும் (இந்தியாவில்) இரண்டு பெருநாள் மூன்று பெருநாள் என்று ஆளுக்கு ஒரு இயக்கப் பெருநாள் கொண்டாடி நம் ஒற்றுமையை உருக்குலைத்துக் கொள்கின்றோம்.

இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அனைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் ஒற்றைச் சொல்லை எட்டிப் பிடிப்போமா ?
மெய்யாலுமே இது ஒரு மீள்பதிவுதானுங்க !
Sஹமீத்

9 Responses So Far:

Abdul Razik said...

If the Indian Government governs under strict Islamic outlook, the Miraj war planes will fly over clouds and find the moon. Will this happen?. There is a lane 2 edges and split as 3 dots A,B and C . Here B located between “a” and “c” Logically if any travelling planes or planets will travel flanked by 2 edges, it must cross the middle. what a fool is here??? “A (Saudi)“ and “C(singapore)” are following similar. “B”(Adirai and surrounded area) deserted mean the first day of moon travel under the earth between 2 edges. And then from second day of Moon’s travel upper the earth???? Heyya what a irrational joke???? . Very nice article behind the Eid by brother Hameed. We hope our all Muhalla brothers will arrange a meeting and will have nice decision insha allah.

Abdul Razik
Dubai.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நிலா நம் உருண்டையை சுற்றிவர (27 நாட்களும் 7 மணி நேரமும் 43 நிமிடங்களும் 11. 47 வினாடிகளும்) 27.32 நாட்கள் எடுக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.அப்படிப் பார்த்தால் வருடத்திற்கு ஒவ்வொரு நோன்பும் 37 நாட்கள் முன்னதாக வரவேண்டும் ஆனால் சராசரியாக 11 நாள் தான் முந்தி வருகிறது.இது எதனால்?//

விஞ்ஞானியாக்கா இது போன வருசம் ஏற்பட்ட ஐயம். பதில் கிடைக்குமா?

KALAM SHAICK ABDUL KADER said...

நல்லதொரு இணையம் (அ.நி) பல்கலைக்கழகம்!

ஆய்வாளர்கள், மொழிப்புலமையும் மார்க்க அறிவுமுடையோர்கள், உளவியலார்கள்,அறிவியலார்கள், கவிஞர்கள்,காமிரா கலைஞர்கள் ...இப்படி பல்கலைகளிலும் தேர்ச்சியுடையோர்கள் உலா வரும் இத்தளத்தில் இன்று தெரிந்த நிலா என்னை வியப்பில் ஆழ்த்தியது. அறிவியலும் மார்க்க அறிவும் அலசப்படுகின்ற இக்கட்டுரையை எழுதிய அன்புச் சகோதரர் , இத்தளத்தின் நெறியாளர் மற்றும் பின்னூட்டங்கள் வழியாக தங்களிடம் உள்ள அறிவாற்றலை வெளிப்படுத்தி வரும் அன்புச் சகோதரர்கள் எல்லார்க்கும் பாராட்டுகள்! ஜஸாக்கல்லாஹ் கைரன்.

அதிரை எனும் பதியில் அதிசிறந்த அறிவாளிகள் உளர் என்பதை எண்ணும் பொழுதெல்லாம் என் மனம் மகிழ்ச்சி அடைகின்றது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இது ஒரு மீள்பதிவு என்றாலும் இன்னும் நம் சமூகம் பிறைவிசயத்தில் அரை, குறையாக இருந்து கரைபடியும் சமூகமாக கூறு போட்டு கொண்டிருப்பது மீளாத்துயர். இனி இன்ஹா அல்லாஹ் இந்த அவல நிலை களையப்படுமா ? இல்லை நீலாவில் கரைபோல் களங்கப்படுமா?

Ebrahim Ansari said...

//இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அனைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் ஒற்றைச் சொல்லை எட்டிப் பிடிப்போமா ?//

அனைத்து முஹல்லா அமைப்பு கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரராக விடக்கூடாது.

Aboobakkar, Can. said...

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது............

Unknown said...

"அனைத்து முஹல்லா அமைப்பு கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்." - Ibrahim Ansari

அனைத்து முஹல்லாவா...? அப்டீண்டா...?

கேட்பவர், செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர்.

Unknown said...

இதை விட யார் எளிமையாக நமக்கு சொல்ல முடியும் ?..அருமை

Unknown said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு