அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
அதிரை சகோதரர்கள் விரிந்த உலகின் ஸாரி உருண்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரின் ஏக்கமும் அதிரையில் அவர்களின் பால்ய கால இளமைக்கால பசுமையான நினைவுகளைச் சுற்றியே இருக்கும்.
உலகின் எங்கிருந்தாலும் பெருநாள் அல்லது ஏதாவது ஒரு விஷேசமான நாள் என்றால் அதிரை எப்படி இருக்கும் என்ற சிந்தனை ஓட்டங்களை ஓடவிடுவதில் நாம் சிகரத்தையே தொடுவோம்….
இதுநாள் வரை பிறை அங்கே கண்டோம் இங்கே கண்டோம் என்று கேள்வி பட்டதை அட ! அதிரையிலேயே கண்டோம்.. அதனை அதிரைநிருபரிலும் காண்கிறோம் !
வழக்கமான பெருநாள் இரவு வியாபாரம் தொய்வின்று தொடர்கிறது, அதிலும் கடந்த சில வருடங்களால அதிரையர்களின் தலைக்கு இணையாக வாகனங்கள் எண்ணிக்கையும் இருப்பது வியப்பளிக்க வில்லை… காரணம் கட்டு நடையை என்று போய், கூப்பிடு ஆட்டோவை என்று மருவி, அதன் பின்னர் எடு பைக்கை அல்லது காரை என்ற சூழலே இப்போது.
வாகனங்களின் இரைச்சலும் அதிரைப்பட்டினம் அதிரை-நகரமாக மாறியிருப்பதை மழுப்ப முடியவில்லை !
பால்யகால, இளமைக் கால அதிரை பெருநாள் இரவுகள் இன்றைய காலகட்டத்தில் எப்படி களை கட்டியிருக்கிறது என்ற காணொளிக் காட்சிகளும், புகைப்பட புத்துயிருட்டும் படங்களும் உங்கள் அனைவரின் ஊர் நினைவுகளை அசைபோட வைக்க இதோ !
அதிரைநிருபர் குழு
6 Responses So Far:
சூடச்சுட பிறைக்கண்ட செய்தியும் அதனை தொடர்து நடக்கும் நிகழ்வுகளும்,கடற்க்கரைத்தெரு கண்ணியத்திற்க்குரிய யூசுப் காக்காவின் கம்பீரக்குரல் தக்பீர் முழக்கமும்...ஏங்க வைக்கின்றன...அல்லாஹ் இம்மகிழ்ச்சி பொங்கும் பெருநாளில் நாம் செய்த அமல்களுக்கு தகுந்த நற்க்கூலியைத்தருவானாக !!! ஆமீன்
ஈத் முபாரக்!
அதிரையின் இரவும், ஒலிக்கும் தக்பீர் முழக்கங்களும், அங்கே கண்ட பிறையும், இரவுக் கடைகளின் காட்சிகளும் காணக் கிடைத்த பாக்கியம். ஜசாக்கல்லாஹ் ஹ்ஹைர்.
வலைதல அன்பர்களுக்கு பெருனால்வழ்த்துக்கள்
இடியப்பம் உன்டு செரிப்பதர்க்குல் பிரியானியையும்
உல்லே சேர்தனுப்பி தொன்டை வரை நோ வேகன்சி இரவு உணவை தவிற்க்களாம் என்றால் கேட்குமா
மணது பட்டுக்கோட்டையில் இட்டலி தினறால் தனே பெருனால் பூர்த்தியாகும் 5 நபர் சேர்ந்து காரில் சென்று 200 ரூபாய்க்கு இட்டலி சாப்பிட கட்டாயமாக காருக்கு 100 ரூபா பெற்றோல் செலவு
தக்பீர் முழக்கம் கேட்டவுடன் மர்ஹூம் புளியங்கொட்டை அப்பா நினைவு வருகிறது.அவர்களின் தக்பீர் முழக்கம் ஆலடித்தெரு,புதுமனைத் தெரு மற்றும் சுற்று வட்டாரம் எங்கும் கேட்கும்.அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக
பெருநாள் தரும் சுகம் ...
இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள் ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..
எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
தருமே மகிழ்வை ...
உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
உள்ளத்தில் நீங்கும் மாசு ..
உற்றார் உறவினர் தந்த காசு
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..ஒன்றுக்கு
இரண்டாக . காசுகளை கொடுத்து
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,கடற்பாசி
இசியாப்பம்,இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல்
நாவில்நீரூறும் ..செவியில் தேனூறும்
இவை யனைத்தும் ஒன்று கூடி
பசியாறுதல் .என்றழைத்து
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால்
பகல் உணவு மறந்து போகும்
பகலெல்லாம் பசித்திருந்த
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வேண்டாம்
பசியாறா ..பக்குவமாய் நிறைந்ததனால் ...
இன்னும் ஒன்று சொல்ல வேண்டும்
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில்
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி
விரட்டிடுவாள் என்று ..அது போல
பெருநாள் தொழுகை முடித்து விட்டு
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என
நரி குறவர் துரத்திடுவார் ..
ஐந்து ரூபாய் நோட்டு தன்னை
விட்டெறிந்து விரட்டிடுவர்..
உல்லாசம் பொங்கும்
உவகை பொங்கும் பெரு நாளில்
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால்
திரும்பி வரும் வழி வேறாக
இருக்க வேண்டும் .நரிக்குறவர்
தொல்லைக்காக அல்ல ..
மலக்குகளின் துஆகள் கிட்டும்
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....
பெருநாளைக்கு ஊருலே இல்லே என்ற குறைய நிவர்த்தி செய்யுது இந்த வீடியோ, நன்றி பகிர்வுக்கு
Post a Comment