அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான அதிரை சொந்தங்களே..
அதிரை தமுமுக கிளை சார்பாக இந்த வருடம் (2012) சஹர் உணவு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் நோன்பு பிறை ஒன்று முதல் மிக சிறப்பாக அதிரை ஜாவியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வெளியூர் நோன்பாளிகள் பயனடைந்து வருகிறார்கள். சஹர் உணவு ஏற்பாடு தொடர்பாக அதிரை தமுமுக நகர தலைவர் சகோதரர் சாதிக் பாட்சா அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி செய்தி உங்கள் பார்வைக்காக.
எங்கள் இடைவிடாத சமுதாய சேவைகளுக்கு உதவிகள் செய்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. எங்கள் சமுதாய சேவை தொடர நம் சகோதரர்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
இப்படிக்கு
அதிரை தமுமுக நகர கிளை
7 Responses So Far:
மாஷா அல்லாஹ் !
இந்த காரியத்தில் ஈடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் பொருளாதார உதவி, மற்றும் உடல் உழைப்பை வழங்கும் அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக, ஈடுபடும் சகோதரர்கள் அனைவரின் பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் செழுமையை ஏற்படுத்து வானாக ! இன்ஷா அல்லாஹ் !
ஒரு கேள்வி: ஏன் உள்ளூர்காரர்களை மட்டும் குறைவாக அனுமதித்து இருக்கிறீர்கள் ? உள்ளூரில் தேவையுடைவவர்கள் குறைவென்றா ? அல்லது வேறு காரணங்கள் ஏதுமுண்டா ? (இது விமர்சன கேள்வியல்ல அறிந்து கொள்ள வேண்டி பொதுவாக கேட்டு வைக்கிறேன்)
தமுமுகவின் சமுதாய பணிகளில் மிகவும் அவசியமான சஹர் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி நடத்தி வரும் நம் சகோதரர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் அருள் புரிவானாக!
எல்லாம் வல்ல அல்லஹ்வின் பேரருளாள் நடை
பெரும் நிகழ்சிக்கு பணம் கொடுத்து உதவியவார்கள்
ஏர்பாடு செய்பவர்கள் ஹிதுமத் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் எல்லா பவங்களையும் மன்னிப்பனாக ஆமீன்
அபு இபுராஹீம் (நெய்னா தம்பி )..
போன்று எத்தனையோ அறிய
ஆவலாக உள்ளார்கள் ..உதவிடவும்
தயாராக உள்ளார்கள் ..இ மெயில்..மூலம்
தம்பி அபு இப்ராஹிமுக்கு தெரிவிக்கலாமே ..
தா மு மு க நண்பர்களின் நற்பணி தொடரட்டும்
நற்கூலியை கொடுப்பதில் அல்லாஹ் ..பெரும் வள்ளல்
//ஒரு கேள்வி: ஏன் உள்ளூர்காரர்களை மட்டும் குறைவாக அனுமதித்து இருக்கிறீர்கள் ? உள்ளூரில் தேவையுடைவவர்கள் குறைவென்றா ? அல்லது வேறு காரணங்கள் ஏதுமுண்டா ? (இது விமர்சன கேள்வியல்ல அறிந்து கொள்ள வேண்டி பொதுவாக கேட்டு வைக்கிறேன்) //
அஸ்ஸலாமு அலைக்கும்,
சஹர் நேரத்தில் அதிரையில் நல்ல உணவு விடுதிகள் இல்லாத காரணத்தாலும், பள்ளிவாசல்களின் சஹர் உணவு பறிமாற்றத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் வெளியூர் நோன்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் உள்ளூர்வாசிகளின் தகுதி குடும்ப சூழல் தேவையறிந்து சில அதிரைவாசிகளுக்கும் கொடுக்கப்படுகிறது.
இந்த சஹர் உணவு மிகவும் சிறப்பாக எந்த பிரச்சினைகளும் இல்லாமல் சரியான திட்டமிடலுடன் ஏற்பாடு செய்து கொடுத்துவருகிறோம். நோன்பு முடிந்தவுடன் விரிவாக இது தொடர்பாக செய்தி வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.
அபுதபி த.மு.மு.க மண்டலம் சார்பாக நேற்று நடைபெற்ற இஃதார் நிகழ்வில் நமதூர் அப்துல் ஹாதி அவர்களின் சொற்பொழிவுதான் எல்லாரையும் கவர்ந்தது; அதில் த.மு.மு.க வின் சமுதாய நலப் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசியதும் இடையில் நமதூர் “அக்கால” மக்களின் கட்டுப்பாடு பற்றியும் பேசியதும் சிறப்பானவைகள். இந்த சஹர் உணவு பகிர்ந்தளித்தல் பற்றி அவர்கட்கு நினைவூட்டப் பட்டிருந்தால் அதனையும் அவர்களின் சொற்பொழிவில் சொல்லியிருப்பார்கள்.
இங்கே இயக்கம் என்பதை விட சமுதாய நலன் என்பதை மட்டும் நினைவு கூர்வதே நோக்கம்.
தமுமுகவின் சமுதாய பணிகளில் மிகவும் அவசியமான சஹர் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி நடத்தி வரும் நம் சகோதரர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் அருள் புரிவானாக!
Post a Comment