Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பர்மியர்க்கு அருள்வாய்ப் படைத்தோனே ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 04, 2012 | , , ,

பர்மிய முஸ்லிம் படுகின்ற வேதனை
தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை
புத்தன் பெயரில் புரியும் படுகொலை
நித்தம் அழுதேன் நினைத்து

பச்சிளம் பாலகர்ப் பற்றிய நோன்பினை
மெச்சியும் பார்த்து மெழுகாய் உருகினன்
நாதி யிலாநிலை நாட்டில் அகதியாய்;
நீதி வழங்குவாய் நீ

தாயை இழந்து தவிக்கும் குழந்தையை
நாயாய்க் கருதி நடுவீதி(யில்) சுட்டுப்
பொசுக்கும் மிருகமாய்ப் போனர்; இனத்தை
நசுக்கு மிவர்கள் நடப்பு

நோன்பின் தருணத்தில் நோவினைச் சேர்ந்ததைக் 
காண்போர் களின்கண்கள் கண்ணீர் சொரியுமே 
துன்பத்தை யெல்லாம் துடைக்கும் இறைவனே 
இன்பத்தை அங்கே இறக்கு!



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) 
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை) 
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

9 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

(*) காலை உணவும் உண்ணாது
இஃப்தார் என்பதும் இல்லாது
பாலை மண்ணில் புழுபோல
சோமாலியாவில் எம்மக்கள்..

(*) மேலை நாட்டின் கொடுஞ்செயலில்
மேலே விழும் குண்டுகளில்
பாலகரின் உயிர் இழப்புகளில்
ஆஃப்கன் வாழ் எம்மக்கள்.

(*) போதி மரத்து கபோதிகளின்
கோர கொலைகள் பர்மாவில்.
நீதிகெட்ட ஊடக நிசப்தத்தில்
நீர்த்துப் போயினர் எம்மக்கள்.

(*) முஸ்லிம் வாழும் தேசங்கள்
முழுவதிலும் பதட்ட நிலை.
இஸ்லாம் என்றால் அமைதியெனும்
இயல்பை அறியா மடமைநிலை.

(*) என்ன இயலும் நம்மாலே?
எதுதான் முடியும் எம்மாலே?- என்னும்
எண்ணம் இருந்தால் சொல்லுங்கள்..
இதை ஒருதரம் செய்யுங்கள்.

(*) இருகை தூக்கி மேலுயர்த்தி
இறைவனை வேண்டுதல் நிச்சயமாய்
அருளைப் பெற்றிட உதவிடுமே.- அல்லாஹ்வின்
அபயம் பெற்றுத் தந்திடுமே..

(*) இறைவனின் காவல் எட்டிவிடின்
இன்னொரு காவல் அவசியமா?
உறுதியாய்க் கேட்போம் யாவருமே..
உதவி விரைவில் கிட்டிடுமே (இன்ஷா அல்லாஹ்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பர்மிய மக்களுக்கான பிரார்த்தனையில்... நாமும் இணைகிறோம் !

தம்பி ஷஃபாத் : கவிதை உருக்கம் மட்டுமல்ல... ஈட்டியாய் குத்தும் வரிகள் !

//(*) முஸ்லிம் வாழும் தேசங்கள்
முழுவதிலும் பதட்ட நிலை.
இஸ்லாம் என்றால் அமைதியெனும்
இயல்பை அறியா மடமைநிலை.//

//(*) இறைவனின் காவல் எட்டிவிடின்
இன்னொரு காவல் அவசியமா?
உறுதியாய்க் கேட்போம் யாவருமே..
உதவி விரைவில் கிட்டிடுமே (இன்ஷா அல்லாஹ்)//

இன்ஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி கவிஞர் ஷஃபா அத் உடைய அழகிய முகத்தை இன்று அதிகாலை கனவில் கண்டேன்; அதன் காரணம் இதுவென இப்பொழுது உணர்ந்து கொண்டேன். அவரின் மீதும் அவரின் கவிதைகள் மீதும் அடியேன் கொண்ட பேரன்பே இவ்வண்ணம் இயல்பாக -”தெய்வீகமாக” கனவிலும் அவருடன் தொடர்பு கொள்ள வைத்து விட்டதென்றே உணர்கின்றேன்; மாஷா அல்லாஹ்! அவரின் கவிதையின் நடையழகை மெச்சுவதா (கல்லூரி ஆண்டு விழா மலரில் அவரின் கவிதைகளை நேசிக்கவும் வாசிக்கவும் வைத்தவற்றிலிருந்து இன்றைய கவிதை வரை) அல்லது உருக்கமாய் ஒரே தலைப்பில் அகிலமெலாம் அவதிக்குட்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலைமைகளை முழுவதும் உருக்கத்துடன் எழுதியுள்ள சோக ராகத்தில் இணைந்து அழுவதா என்ற ஒரு நிலமையில் உள்ளேன்!
நான் எடுக்க எண்ணிய (பட்டியிலடப்பட்ட நம்மவர்கள் படும் வேதனைகளை) கவிஞர் ஷஃபா அத் அவர்களின் கவிதை மூலம் என் எண்ணமும் நிறைவேறி விட்டது. “பரிமிய முஸ்லிம்...”என்ற வரியின் துவக்கம் என் தூக்கத்திலும் வந்து விழுந்ததால் முதலில் இப்பாடலை எழுதுவோம் என்று முடித்தேன்(பொதுவாக, கவிஞர்களின் கண்கள் தூங்கும்; ஆனால் ஆன்மா-சிந்தனை-கல்பு தூங்காது)கனவில் வந்தது போல் இப்படி எனக்கு அடிக்கடி பாடல் வரிகள் உதிக்கும் பொழுது அஃது அல்லாஹ்வின் ஏற்பாடோ (இப்படி பாடல் எழுது என்று என்னைத் தூண்டுகின்றானோ) என்ற ஓர் உறுதியான எண்ணம் வந்து விடும்; அதனால் அவ்வரிகள் அல்லாஹ் எனக்கு “அடி எடுத்துக் கொடுப்பதாகவே” எண்ணிக் கொள்வேன்; அதனாற்றான். இவ்வரிகளின் அந்த முதல் இரண்டு சீர்களும் வெண்பாவின் இலக்கணத்திற்குட்பட்டு விட்டதை கணித்து விட்டேன்; தொடர்ந்து அதே இலக்கணத்திற்குட்பட்டு மழைபோல் (இறையருளால்) பொழியும் சொற்களைக் கோர்த்துக் கொண்டே முழு விடயமும் இவ்வெண்பாவிலக்கணப் பாடலில் அமைத்துக் கொள்ள அல்லாஹ்வும் எனக்கு உதவியாக இருந்தான். அல்ஹம்துலில்லாஹ்!

அன்புத்தம்பி ஷஃபா அத் உடைய கவிதைகள் (அணைக்கட்டு முதல் இக்கவிதை வரை) அடிகள் தோறும் ஓசை நயம் கூடுதற் பெற்று நம் பாராட்டுகளைப் பெற்று விடுகின்றன; அருமை; இதே ஓசை நயத்துடன் “அளவொத்த சீருடன்” அமையும் பொழுது இன்னும் ஓசையும் கூடும்; ஓர் இலக்கண வரம்புக்குள்ளும் அமையும் (வஞ்சி விருத்தமாகவோ- அறுசீர் கண்ணியாகவோ)

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நெறியாளர் அருமைச் சகோதரர் அபூஇப்றாஹிம் எனும் நெய்னாதம்பி அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! என் எண்ணம் இத்தளத்தில் பதிவாக அமைவதற்குக் காரணமான உங்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”!

முதலில் இப்பாடலை “வெள்ளோட்டமாக” என் சக கவிஞர் குழுவினர்கட்கு விட்டேன்; அவர்களில் சிலர் உருகினர்; சிலர் ,”இஃது ஓர் அரசியல் குழப்பம்;தேவையற்ற ஒரு சூழலை நம்மவர்களே ஏற்படுத்தியதன் விளைவு;அஸ்ஸாமிலும் பர்மாவிலும் பங்காளிகள் குடியேறியதால் வந்த பழிவாங்கும் போக்கு” என்றெல்லாம் விமர்சனம் எழுதினர். ஆயினும், இவ்வரிகள் எனக்கு அல்லாஹ்வால் உதிப்பில் போடப்பட்டவைகள்; எக்காரணமானாலும் எம்மக்கள் எங்கெல்லாம் சோதனைக்குட்படுகின்றார்களோ அதனைப் பார்த்து என் உள்ளம் சும்மா இருக்க இடந்தராது என்ற ஒரே உறுதியில் இப்பாடலை உங்கட்கு “பதிவிற்காக” என்றே அனுப்பினேன்;நீங்களும் பரிசீலித்துப் பதிவிட்டதை இன்று அதிகாலையில் சஹர் நேரம் கண்டேன்.அல்லாஹ்வுக்கும் உங்கட்கும் நன்றியைக் கூறினேன்.
அல்ஹம்துலில்லாஹ்


ஜஸாக்கல்லாஹ் கைரன்

sabeer.abushahruk said...

//துன்பத்தை யெல்லாம் துடைக்கும் இறைவனே 
இன்பத்தை அங்கே இறக்கு!//

ஆமீன்!

sabeer.abushahruk said...

//உறுதியாய்க் கேட்போம் யாவருமே..
உதவி விரைவில் கிட்டிடுமே (இன்ஷா அல்லாஹ்)//

இன்ஷா அல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர் அவர்களின் அவாவும் துஆவும் கபூல் ஆகுக (ஆமீன்)

அப்துல்மாலிக் said...

என் வேதனைகளுடன் அமைதியான நம்மக்களின் சுதந்திரமான சூழலுக்கு என் துஆக்கள்..!

KALAM SHAICK ABDUL KADER said...

அப்துல் மாலிக் அவர்களின் அவாவும் துஆவும் கபூல் ஆகுக(ஆமீன்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு