இறைவன் படைப்பில் ஏராளம் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாதவை உள்ளன ஆனால் வல்லநாயன் நம் கண்ணெதிரே அற்புதங்களை காட்டிக் கொண்டிருக்கும்போது நாமோ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் மகிமையை ஆராயாது உலகவாழ்வில் லயித்து இருக்கிறோம்.
மொழியால் பினைப்பு தேடும் நாம்மால், அது மொழியென்றும் உணரமுடியாமல், உச்சரிப்பின் உயிரோட்டத்தையும் அறியாமல் சையகையாலே சாதனைகளும், சாகசமும் செய்யும் சகோதரர் மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா அவர்களை அறியாதவர்கள் குறைவே என்று சொல்வதைவிட அவரோடு நன்கு பழகியவர்களும் அவரை அறிந்தவர்களுமே அதிகமதிகம்.
இனிய ரமளான் பொழுதில் புன்னகையே பொருத்தமான இடத்தில்தான் இருக்கிறது என்று ஏங்க வைக்கும் அழகிய பொன்சிரிப்புக்கு சொந்தக்காரர் இவர்கள், தினமும் அவர்களை கண்டு வந்தாலும் இன்று அவரோடு மொழியாடும்போது விழியும் விரலும் பேசியது அங்கே அவர்களிடம் ரமளான் பாலிசி என்றொரு விடயத்தை விவரித்தார்கள் அதோடு அவர்கள் கையில் இருந்த நீண்டதொரு பட்டியலை நம்மிடம் காட்டியதும் ஆச்சர்யத்தில் அசந்தே விட்டோம் !
இன்றல்ல, இது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் வழக்கமென்பது அவர்களோடு பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும் (பின்னுட்டங்களில் தெரியவரும் அவைகள் யாவென).
கையில் சுருட்டி வைத்திருக்கும் 29 பள்ளிவாயில்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல். அதில் நாள் ஒன்றுக்கு ஒரு பள்ளிவாயில் என்று ரமளானில் இரவுத் தொழுகையை நிறைவு செய்வது வழக்கம் என்பதே அந்த பாலிசி. இதுவரை பத்து ரமளானை கடந்து விட்டதால் பத்து பள்ளிவாயில்கள் பெயர்கள் டிக் அடிக்கப்பட்டு விட்டது, இனி மீதமிருக்கும் பத்தொன்பது பள்ளிவாயில்கள் இன்ஷா அல்லாஹ்.
நம் சகோதரர்களிடையே இதனை பகிர்ந்து கொள்ள தூண்டியது இவர்களின் அன்றாட செயல்கள் மட்டுமல்ல இவர்களின் சுறுசுறுப்பும், வேக நடையும் இன்னும் கண்முன்னால் அடிக்கடி வந்து செல்லுவதனாலே….
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுடைய மற்றும் இவர்களைப் போன்று வல்லமை மிக்க அல்லாஹ்விடம் இறைஞ்சும் அனைவரின் பிரார்த்தனைகளையும் இந்த புனித ரமளான் மாதத்தில் அங்கீகரித்து அருள்புரிவானாக.
அதிரைநிருபர் குழு
27 Responses So Far:
மூன்று நிகழ்வுகள் ஒரு புள்ளியில்:
(முதல் நிகழ்வு)
கல்லூரி முடித்ததும் கைப்பையும் கனவுகளுமாய் பம்பாய் கிளம்பிச் சென்று அவதியுற்ற காலங்களில் சில நாட்கள் தாஹிர் பாய் அவர்களின் அலுவலகத்தின் மாடியில் தங்கியிருக்கும்போது அங்கு ஏற்கனவே தங்கியிருந்த வாய்பேச இயலாத சகோதரருக்கு அவர்களின் சைகைகளைக்கொண்டு அவர்களின் வீட்டுக்கு தபால் எழுதிக்கொடுப்பதுண்டு. அவர்கள் நம்மூர்தான் எனினும் எனக்குப் பரிச்சயமில்லை.
(இரண்டாவது நிகழ்வு)
அதிரை நிருபர் மூலம் பரிச்சயமாகி நட்பு வட்டாரத்துக்குள் வந்துவிட்ட எம் ஹெச் ஜே யுடனான அறிமுகமும் அன்பும் கூடிப்போனது
(மூன்றாவது நிகழ்வு)
என் மூத்த மகளின் திருமணத்திற்காக மூன்று மாதங்களுக்கு முன்னால் மனைவியுடன் நண்பர்களை அழைக்கச் சென்ற நான் என் மனைவியிடம் சொல்லி "எம் ஹெச் ஜேயின் மனைவியைப்பற்றி விசாரித்து அவர்களையும் அழைக்கச்" சொன்னேன்.
என் மனைவி தம் பால்ய தோழியிடம் விசாரிக்க அவர்கள் சொன்னார்களாம் "அடிப்பாவி, நான்தான்டி எம் ஹெ'ச் ஜேயின் மனைவி" என்று.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் எனக்குத் தெரியாமலேயே என் வாழ்க்கையில் எம் ஹெச் ஜேயின் ஊடுறுவல் இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
எம் ஹெச் ஜேயின் தந்தையுடன் நான் தங்கியிருந்தபோது அவர்களிடம் எல்லா விஷயங்களிலும் " ஸிஸ்ட்டமேடிக்" நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இதே தொழுகைச் செட்யூலை 3 வருடங்களுக்குமுன் என்னிடம்கூட காட்டினார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.
புகைப்படம்:
மூடியிருக்கும் வாய்க்குள்
கோடியிருக்கும் கூற
நேர்மையான நெஞ்சுக்குள்
நிறைந்திருக்கும் அருள்
வலிகளெல்லாம் உள்ளத்திலே
விழிவழி
வழிவதென்ன அன்பா
வாழச்சொல்லும் பண்பா
சைககள் எதற்கய்யா
கண்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது?
சொல்ல மறந்துவிட்டேன்.
எம் ஹெச் ஜே, நீங்கள் கொடுத்துவைத்தவர் இத்தகு நல்ல மனிதரை தந்தையாகப் பெற்றதற்கு. இத்துணை பள்ளிகளிலும் இன்னும் இவர்களின் வணக்க வலிபாடுகளிலும் தலையாய துஆ என்ன தெரியுமா?
அது
உம்
நலம் வேண்டிதானய்யா!
வாப்பாவைப் பார்த்துக்கொள்ளும் தோழரே. வாய்த்தால் என்னை நினைவுபடுத்தி என் சலாத்தையும் துஆவையும் தெரியப்படுத்திவிடுங்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும் எனது சாச்சா மற்றும் மாமனார் அவர்கள் அவர்களுடைய வாப்பா அதாவது எனது அப்பா அவர்களின் பழக்கம் இந்த தொழுகை இதை என்னிடமும் அவர்களுடை பேரன்களிடமும் சொல்லி வந்தார்கள் நாங்கள் நார்சாவாங்குவதில் ஒவ்வொரு பள்ளிவாசளிளும் கடை பிடித்தோம் ஆனா இவர்களோ தந்தை சொல்லை சரியாககடைபிடிக்கிறாகள்
1988 ஆண்டு ரமழான் மாதம், மதீனா மஸ்ஜித் நபவியில் கடைசி பத்து நாட்களில் இரவு தொழுகை தொழும்போது சுமார் இரவு 1:30 மணியளவில் சலாம் கொடுத்தவுடன் சகோதரர் மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா அவர்களும் அவருடைய நண்பரும் என்னருகில் வந்தார்கள். அப்போது நம் ஊரை சார்ந்த என்னை மட்டுமே அவர்களால் காண முடிந்தது. பிறகு நான் அவர்களை என் இருப்பிடம் அழைத்து சென்று சஹர் செய்து விட்டு சுபுஹு தொழுகைக்கு மீண்டும் மஸ்ஜித் நபவி வந்துவிட்டோம்.
எப்போது என்னை ஊரில் சந்தித்தாலும் அந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பின்னூட்டத்தை அவர்கள் படித்தாலே என் நினைவு அவர்களுக்கு வந்து விடும்.
2009 ஆண்டு ரமழானில் இவர்களை ஊரில் நான் சந்தித்த போது, இதுபோன்ற லிஸ்டை என்னிடம் காட்டினார்கள்.
நேசமான பார்வை ..
நாம் பேசுவதை கண்ணால் ..
கேட்கும் திறமை ..கொடுத்த பொறுப்பை
கண்ணும் கருத்துமாய் செய்யும் அருமை
கடமை தவறா கண்ணியமான என் அருமை உறவு
ஹனீபா ஹாஜியார் ..குறை ஒன்றும் இல்லை
அவர் வாழ்வில் ..இறைவன் கொடுத்துள்ள
திறமைகள் பல அவரிடம் உள்ளது ..
குழந்தைகளிடம் அவர்காட்டும் பாசம்
அப்பப்பா ..எனக்கு அவேர்களோடு ..
உலாவுவது என்றால் கொள்ளை பிரியம்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
ஐந்தாறு வயது முதல் தொட்டே வந்த
உறவு ..எனக்கு தொலை பேசி மூலம்
பேசினார் ..உண்மையாக தான் ..
ஹனீபா ..என்ற ஒற்றை சொல்தான் ..
அது ஓராயிரம் வார்த்தைக்கு சமம் ..
மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா காக்கா அவர்கள் ஒரு கால்பந்து பிரியர் ஆவார்கள். அதிரையில் எங்கு கால்பந்து போட்டிகள் நடந்தாலும் பார்வையாளர் வரிசையில் இவர்களைத் தவறாது காண முடியும். தவறாது (தராவீஹ் உள்ளிட்ட) தொழுகைகளை நிறைவேற்றி வரும் நல்ல மனிதர். !
வசிகரிக்கும் கண்களும் அதன் மொழியாடலும் இன்றல்ல... என் சிறுவயது முதல் ஊரில் இருந்த நாட்களில் அவர்களோடு பழகியிருக்கேன் அவைகளையும் அறிந்திருக்கிறேன்...
அவர்களோடு இருக்கும் நேரங்களில் உற்காசமான சூழலே இருக்கும்... !
MSM-MH அவர்களைப் பற்றிய பதிவினை கிரியேட் செய்ய ஆயத்தமாகும்போது சட்டென்று உதித்த தலைப்புதான் !
அட! ஆமாங்க அதுதான் நிஜமும் கூட ! என்றுமே அவர்கள் விஷுவல் டேஸ்ட் தான் எனக்கும் !
இங்கே, என் வாப்பாவை கெளரவித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அன்று முதல் கல்வி மாநாட்டில் முதல் பரிசு வாங்கியதும் இவர்களே என்பதை போடாமல் விட்டுட்டியலே!
கவிக் காக்கா;
உங்க சலாத்தை என் உம்மா மூலம் தெரியப் படுத்தி விட்டேன். அவர்களும் பதில் சலாம் சொன்னார்களாம்.
அன்று உங்க கையால் எழுதிய தபாலை என் வாப்பாவின் கடிதமாக மகிழ்ந்த நான் இன்று உங்க இணைய வசன வரிகளை ரசித்து வருகிறேன்.
//எம் ஹெச் ஜே, நீங்கள் கொடுத்துவைத்தவர் இத்தகு நல்ல மனிதரை தந்தையாகப் பெற்றதற்கு.//
அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் ஒரு சங்கடம் உண்டு.
என் மற்றும் என் தங்கை பிள்ளைகளோடு போனில் பேசும்போது விளையாட்டாய் அவர்களை பேசச் சொல்லி கொடுத்து விடுவார்கள். அவர்கள் குரல் கேட்டு கண்ணீர் வரும். (பேசமுடியவில்லையே என்று)
நூர் முஹம்மது காக்கா;
என் சலாம்.
மதீனா மஸ்ஜித் நபவி சம்பவம், சஹர் உணவு நினைவுகளை சொல்லி உங்களை அறியச் செய்தேன். தெரியும் என்றார்களாம். ஜஸாக்கல்லாஹ் காக்கா.
ஷஃபாத், சித்தீக் காக்கா;
என் நன்றியும் சலாமும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ஜகபர் சாதிக்,
இன்று சித்தீக் பள்ளியில் உங்கள் தகப்பனாரை சந்தித்தேன், இந்த பதிவை பார்த்தேன் என்று சொல்லி சந்தோசப்பட்டார்கள்.
இந்த புகைப்படம் எடுத்த நாள் அன்று சந்தித்து சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது, நம் வீடுகளில் உள்ள பழைய நினைவுகள் பற்றி ஞாபப்படுத்தினார்கள்.
:)
முஹம்மது ஹனீபா காக்கா அவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன் மறைக்காப்பள்ளியில் கடைசி பத்தில் இஹ்திகாப் இருப்பவர்களுக்கு உறுதுணையாக பல வேலைகள் (சமையலில் உதவி மற்றும் பாத்திரம் சுத்தம் செய்வது) செய்தார்கள் இன்றும் அதை சந்தோசப்பட்டு கூறிகொண்டே இருப்பார்கள்!
உண்மை தான் நானும் கேள்விப் பட்டிருக்கேன்
அவங்க பிக்சரை இன்று பார்த்தது மிக்க மகிழ்சி.
ஜாபராக்கா வாப்பா பற்றி இங்கு போட்டதுக்கு மிக்க நன்றி
இவர்களை நான் கடற்க்கரைத்தெரு பள்ளியில் நிறைய தடவை பார்த்து இருக்கின்றேன்..பார்ப்பவரிடம் பழகியவர்போல புன்னகையும் செய்து செல்வார்கள்...MHJ நிறைகளே தங்கள் த(ங்க)கப்பனாரிடம் நிறைந்திருப்பதால் குறைவொன்றும் தெரியவில்லை அவர்களின் நீண்ட ஆயுளுக்க்காக என்றும் துவாச்செய்கின்றோம்
எனக்கு அப்பா முறை வரும்.
எனது வாப்பாவை இவர்களுக்கு பிடிக்கும் என்பதால் சிறு வயதுமுதலே பல குடும்ப பந்தம் , பாசங்களை சைகையில் என்னுடன் என் சாச்சி(ஜகபர் சாச்சா மனைவி வீடு) வீட்டில் இதே ரமதானிலும் ,பெருநாளிலும் பகிர்ந்துகொள்வார். அவர்கள் பேசும் அந்த பேச்சைக்கண்டு எனக்கு அந்த உலகலாவிய மொழி பேசத்தேரியவில்லயே என்று ஒரு வகை வெட்க உணர்வுகூட வந்ததுண்டு..
எது எப்படியோ, அவர்களுடன் பேசி பழகியது இன்றைக்கு எனக்கு உதவுகின்றது..
அதாங்க... இந்த அரபி காரைங்க கையை சகட்டுமேனிக்கு ஆட்டி பேசுவானுங்க.. நமக்கு அந்த மொழி தெரியாததால நம்ம ஹனீஃபா அப்பாவிடம் பேசி கற்றுகொண்டதை நினைத்துக்கொண்டு நானும் கைய அசைத்து, வளைத்து, உடைத்து சமாளித்து உலகிற்கெல்லாம் ஒரே மொழியானதை பேசி பெருமூச்சுவிடுவோம்ல!!
இந்த சவூதி காரைங்க ஆங்கிலம் கத்துகிற்றவரைக்கும் நமக்கு இந்த மொழிதான் ஊன்றுகோல் போல..
நான் சிறுவயசில் பார்த்தா அதேமுகம் மாறாமல் இருக்கின்றாரே அதான் எப்புடின்னு தெரியவில்லை..ஒருவேளை ஓவரா பேசிப்பேசி எனக்கு மட்டும் வயசாகிடிச்சோ..
நாக்குவழிப் பேச்சினால் நாசமே உண்டாகும்;
நோக்குமொழி சைகையால் நோவினை யில்லாத
நற்பழக் கங்களால் நன்மைகள் சேர்த்திடும்
அற்புதம் கண்டேன் அசந்து
கவிவேந்தர் சபீர்:
நீங்களும் நம்ம கேஸூதானோ கையில் பையுடனும் கண்களில் கனவுகளுடனும் பம்பாய்ப் புறப்பட்டுப் போய் அரபு நாட்டுப் பிழைப்பை நாடி அவதிக்குட்பட்ட அக்கால நினைவுகளை மீண்டும் நினைவு நாடாக்களில் சுழல விட்டீர்; தாஹிர் என் மச்சான்.
ஜெஹபர் சாதிக்:
இக்கட்டுரையின் நாயகர் உங்களின் வாப்பா என்பதறிந்து கொண்டேன்; இவர்களின் தூய எண்ணமும் வாழ்வும் துஆவும் தான் உங்களை மேலை நாடு வரைக் கொண்டு சென்ற மேன்மைக்கு அல்லாஹ் அருளியுள்ளான் என்பதை அறிகின்றேன்.
நெறியாளர்கட்கும் பங்களிப்பாளர்கட்கும்:
இன்னும் எத்தனையோ நல்லவர்கள் அதிரை மண்ணில் உலா வருகின்றனர்; அவர்களை இத்தளத்தில் அறிமுகம் செய்வதன் மூலம் நாம் எல்லாரும் அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அதிகம் மதிப்பளிப்பக்க ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.
இந்த முறை ஊரில் இருக்கும்போது அபுஇப்ராஹிமும். எல்.எம்.எஸ் அபூபக்கரும் ' இது தான் எம்.ஹெச்.ஜே யின் தகப்பனார்" என்று இவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
எனக்கு எம்.ஹெச்.ஜே பழக்கம் என்ற சொல்லில் அவர்களின் உற்சாகமான முகம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.
இல்லாத குறையை தனக்கு இருப்பதாக கற்பனையில் நினைத்து வாழும் மனிதர்களிடையே, தனக்கு பேசும்திறன் இல்லாத குறையை தனது சுறுசுறுப்பால் விரட்டி அடித்த இளைஞனாகவே இந்த பெரியவரை நான் காண்கிறேன்.
இறைவனுக்கே எல்லாப்புகழும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் வாப்பாவின் நற்குணங்களை இங்கு எடுத்து வைத்த நெய்னா தம்பி காக்கா, அபுல் கலாம் காக்கா, ஜாஹிர் ஹுசைன் காக்கா, சகோதரர்கள் தாஜுதீன், யாசிர், ரபீக், சலீம், மீராசா ஆகியோர்களுக்கு மிக்க நன்றி.
நீண்ட நாட்களுக்குப்பின் ரமழானில் நமதூர் நண்பர்களை சந்திக்க தம்மாம் சென்றிருந்ததால் என் தாய் மாமா பற்றிய இப்பதிவை காண இப்பொழுதே இயன்றது. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்மையிலேயே பல அசாத்திய திறமைகளையும், நுண்ணறிவுகளையும் தந்திருக்கிறான் என்பதற்கு என் மாமாவும் ஒரு எடுத்துக்காட்டு. நமதூரில் இப்படி சில வாய்பேச இயலாதவர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் பொழுது அதை காணும் எனக்கு மனம் நெகிழும்.
இவர்கள் சவுதியில் வேலை செய்து ஊர் திரும்பும் பொழுது கம்பனில் வந்திறங்கும் இவர்களை வரவேற்க நமதூர் ரயிலடி சென்று குதிரை வண்டியில் இவர்கள் உடைமைகளுடன் இவர்களையும் அமரச்செய்து குதிரை வண்டியின் பின்னால் சைக்கிளில் தொடரும் என்னிடம் ஆசையாய் உனக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கி வந்துள்ளேன் என சைகையில் கூறுவார்கள். அந்த நேரம் எனக்கு வரும் எல்லையில்லா சந்தோசத்திற்கு வானமே எல்லையாக இருந்திருக்கும். காரணம், அக்கால சிறுவர்களுக்கு கைக்கடிகாரம் வாங்கி கொடுப்பது என்பது இக்கால சிறுவர்களுக்கு பல்சர் பைக் வாங்கி கொடுப்பதால் வரும் சந்தோசத்தை விட அலாதியானது.
என் தாயாருடன் பிறந்த சகோதரர்களில் மூவர் வாய்பேச இயலாதவர்கள் அவர்களில் ஒருவர் நான் பிறக்கும் முன்னரே மைசூரில் இருந்த என் தாயாரை காண ஆவலுடன் தனியே பஸ்ஸில் ஏறிப்போனவர்கள் தான் அப்படியே காணாமல் போயே விட்டார்கள். அவர்களின் இன்றைய நிலை இறைவனுக்கே வெளிச்சம். எஞ்சியிருக்கும் முஹம்மது ஹனீஃபா மாமா மற்றும் நூருள் அமீன் மாமாவுக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளை தந்தருள போதுமானவன்....ஆமீன்..
பதிவிட்ட அ.நி. வாழ்த்துக்கள்.
வாய்பேச இயலாத தன் சகோதரர்களைப்பார்த்து ஊரில் யாரேனும் கேலியும், கிண்டலும் செய்து அதை கேள்விப்படும் பொழுதோ அல்லது இவர்கள் வீடு வந்து சொல்லிக்காட்டும் பொழுதோ என் தாயார் கண்ணீர் விட்டு அழுது கேலி செய்பவர்களிடம் சண்டைக்கு சென்றதாக சொல்வார்கள். ஊரில் ஒரு குறிப்பிட்ட வயது வரை மாற்றுத்திறனாளிகளை கேலி, கிண்டல் செய்யும் போக்கு காரணமாக பின்னால் வரும் ஆபத்துக்களையும், துன்பங்களையும் அவர்கள் சரிவர உணருவதில்லை.
"வேதனைகள் தனக்கு வராதவரை எந்த உயிர்க்கும் அதன் வலி விளங்கப்போவதில்லை"
மரியாதைக்குரிய ஹனீபா காக்கா அவர்களை ஊரில் பார்த்திருக்கிறேன்.என் தந்தையுடன் அவர்களும்,அவர்களிடம் என் தந்தையும் மிக மரியாதையாக இருப்பார்கள்.ஊரில் எப்போது அவர்களைப் பார்த்தாலும் புன்னகையுடனே இருப்பார்கள்.அவர்கள் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களுக்கு தந்தை என்று இப்போதுதான் தெரியும்,மாஷா அல்லாஹ்.
சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்கள் எப்போதும் புன்னகையை வெளிப்படுத்தி,எல்லா அதிரைவாசிகளிடத்திலும் அன்பைப் பெற்ற ஒரு தந்தையை பெற்றிருக்கிறார்கள்,மாஷா அல்லாஹ்.
நாம் நாவால் பேசி பாவத்தை விலைக்கு வாங்கும் அதே நிலையில்,ஹனீபா காக்கா அவர்கள் தன் இதயத்தால் மக்களிடம் பேசி,அன்பைப் பொழிகிறார்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ்,இந்த ரமளானில்,அளவுக்கு அதிகமாக - எங்கள் ஹனீபா காக்கா அவர்களுக்கு அருள் செய்வானாக
To Brother Zahir,
ஊரிலிருந்த குறுகிய நாட்களுக்குள் நீங்களும் ஓரளவுக்கு நம் வலைத்தள வட்டத்திலுள்ளோர்கள்-அவர்களின் உறவுகள் எல்லாரையும் கண்டு விட்ட பேறு பெற்றவராய்க் காண்கின்றேன்.
என் கண்கள் காணத்துடிக்கும் இருவர்: நீங்கள் மற்றும் ஷா.ஹமீத் (just one day missed, otherwise I could have met him before my departure from Adirai)
சலாமும் நன்றியும் 2 மச்சான்ஸ் & Mr. அர அல
எல்லாப் புகழும் அல்லாவுக்கே!
//To Brother Zahir,
ஊரிலிருந்த குறுகிய நாட்களுக்குள் நீங்களும் ஓரளவுக்கு நம் வலைத்தள வட்டத்திலுள்ளோர்கள்-அவர்களின் உறவுகள் எல்லாரையும் கண்டு விட்ட பேறு பெற்றவராய்க் காண்கின்றேன்.//
To bro Abul Kalam.....may be i was not lazy to walk. and my time management allows me visit so many people in short time.
Dear Jafar
This is too late to script my representation and wishes beside with haneefa kaka’s articles cause of my deferred viewing of Adirai Nirubar. He has instructed me lots cute information about r’s trials even he powerless by his voice. I was really glad that time. Allah will pour his grace and pity on him to have a better health and certain life to continue his ibaadath eternal.
Abdul Razik
Dubai
ஜாபர் காக்கா மரக்க வேனடாம் வரும் வெழ்ழி கிழமை லன்டன் ஆல் முஹல்லாஹ் கூட்டம் நடைபெர இருக்குது எல்லொருக்கும் அழைப்பு குடுதாச்ச
அஸ்ஸலாமு அலைகும்
மு.செ.மு.முஹமது ஹனீபா அவர்கள் எனக்கும் ஏதோ ஒரு உறவுமுறை வரும் எனக்கு சரியாக தெரியவில்லை. என்றாலும் நான் அதிகம் அவ்ர்களுடன் நட்புபாராடியதில் எனக்கு மிக்க மகிழ்சி.
அவர்களின் கால்பந்து ஆர்வத்தை சொல்லிதான் ஆகவேன்டும் அன்மயில் முடிவுற்ற கால்பந்து போட்டியின் போது என்னிடம் அவர்கள் இன்டர்னேசனல் கால்பந்து போட்டிகளின் வீடியோ சீடி கள் வேன்டும் நான் டிவி அதிகம் பார்பது கிடையாது என்றார்கள், எனவே அவர்களுக்கு அதை பெற்று கொடுக்க முயற்சி செய்தேன் சூழ்நிலையால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதை அவர்களிடதில் விளக்கி விட்டேன். என்றாலும் அது தற்போது ஊரில் அவர்களுக்கு கிடைக்க தாஜிதீன் காக்கா முயற்சி செய்தால் அவர்களுக்கு நலமாய் (வேன்டுகோல் தான்) இருக்கும்.
அடுத்து இறுதிபோட்டிக்கு முதல் நாள் என்னிடம் நாளைக்கு நடக்கும் பரிசளிப்பு நிகழ்சியில் நானும் மேடையில் இருப்பேன் அதை இனையதள மூலம் என் மகன் பார்க்கனும் என்றார்கள். அதன்படி இறுதி போட்டி அன்று பிரத்யோகமான உடையிலும் வந்தார்கள் அவர்களின் விறுப்பபடி மேடையில் அவர்களும் இருந்தார்கள். நேரலை மற்றும் போட்டோ பார்தவர்கள் பார்த்திருக்கலாம்.
அவர்களின் இருலக வாழ்க்கையும் வெற்றி பெற துஆ செய்வோம் வஸ்ஸலாம்
Post a Comment