Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)

~அதிரை என்.ஷஃபாத்

14 Responses So Far:

Noor Mohamed said...

கவியரங்கத் தொட்டினிலே கவி பாடிய தம்பி என். ஷஃபா அத் அவர்களின் கவிதை-அன்றைய ஆரோக்கிய வாழ்வு இன்றைய இளைஞர்களின் கனவுகளே!

மக்கள் மனநிலை மாறுமா? இந்தக் கவிதையும் தீர்வு காணுமா?!

Yasir said...

அசத்தல்,அருமை,அக்கறை...வாழ்த்துக்கள் சகோ.

sabeer.abushahruk said...


என் ஷஃபாத் – எனக்கு மட்டுமென்றாவதால்
எங்கள் ஷஃபாத்,

உஙகள்
எண்ண மழகு – அதைச்
சொன்ன தழகு!

எழுத்து மழகு – இதன்
கருத்து மழகு
மூத்த கவியொத்து
யாத்த தழகு

நான் எழுதியதுபோல்
தேன் சுவை!
என் எழுத்தைவிட
நன் றிவை!

வெளுத்து வாங்குதும்
கருத்துச் செரிவு
தரம் சேர்த்திடும்
குரல் சிறப்பு!

வாழ்த்துகள்.

Ebrahim Ansari said...

யதார்த்தம் ஆட்சி செய்யும் கவிதை. எச்சரிக்கை மணியடிக்கும் கவிதை.
வாழ்த்துக்கள்.

Abdul Razik said...

Dear Shafath, Very nice – Well Comparison

இருந்தாலும் இதையெல்லாம் படிச்சு என்னமா செய்ய முடியும்? திருப்பி உறல் உலக்கைக்கா போகப்போறங்க? அந்த அற்புதமான பொருட்களுக்கு பதிலாகத்தான் தஞ்சாவூர்ல நிறைய டாக்டர்கள் வந்துட்டாங்களே!!!

Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எப்போதும் ஷஃபாத் கவிதையை எழுதிய கையோடு அதே குரலிலே கவிதையும் திறந்தவுடன் வரவேண்டும் என்பதே என் அவா !

"கொடி" க்கு அப்புறம் யி போட்டு "டை" ன்னா அடிப்பாங்களோ !?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி ஷஃபாத்...

அம்மி,குளவி,ஆட்டு கல்லு உரலும் இன்று அதிரையில் உள்ள வீடுகளில் காண்பது மிக மிக அறிது. சாதாரணமாக சொன்னால் நம் பெண்களில் காதில் விழாது. இது போன்று ஒழிப்பேழை கவிதைகளில் எச்சரித்தாலாவது காதில் விழட்டு. நல்ல முயற்சி, தொடருங்கள்..

பின்னனி மெல்லிசையை தவிர்த்திருக்கலாம்... அதற்கு பதிலாக மழை, அருவி சப்தம் அல்லது அழகிய குரல் உள்ள பரவை சப்தத்தை இணைக்கலாம்.. இது என்னுடைய யோசனையே...

KALAM SHAICK ABDUL KADER said...



அன்பின் கவிஞர் என். ஷஃபா அத்,
அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களின் அற்புதமான கவிதைத் தோணி வாசித்தவரின் குரலைகளின் நதியில் செல்ல அதில் ஏறி உலா வந்தேன்; குடித்தேன் ஒருபடித்தேன்!

முன்பு நான் எழுதிய கீழ்க்காணும் கவிதையும் உங்களின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பென்று எண்ணும் பொழுது கவிஞர்கட்கு ஒரே எண்ணமும் எழுத்தும் உண்டாகும் என்பது நிதர்சனம்:இஃதே என் விமர்சனம்.


என் கவிதைத் தலைப்பு: “முரண்பாடுகளை முறியடிப்போம்”

உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,

தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;

விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,

குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;

நிறைய செலவு செய்கின்றோம்,

குறைவாகவே பெறுகின்றோம்;

பெரிய வீடுகள் உள,

சிரிய குடும்பமே வசிக்கின்றது;

நிரம்ப வசதிகள் உள,

குறைவான நேரங்களே கிடைக்கின்றன;

பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,

பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;

நிறைய அறிந்திருந்தாலும்,

அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;

அறிஞர்கள் அதிகமானதால்,

குழப்பங்களும் கூடி விட்டன;

மருந்துகள் பெருகிவிட்டன,

நிவாரணம் அருகிவிட்டன;

உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,

அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;

அதிகமாகவே பேசுகின்றோம்,

அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;

வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,

வாழ்க்கையை அல்ல;

ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,

வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;

விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,

மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;

வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,

உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;

காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,

ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;

அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,

அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?

உயர்வான ஊதியம் காணுகின்றோம்,

குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;

அளவையிலே நிறைந்துள்ளோம்,

தரத்தினிலே குறைந்துள்ளோம்;

இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,

உறவுகளை கழித்து விட்டோம்;

"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,

கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;

வகைவகையான உணவு பதார்த்தங்கள்,

மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;

இருவழிப் பாதையாக வருமானம்,

ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;

அலங்கார இல்லங்கள்,

அலங்கோல உள்ள்ங்கள்;

காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,

வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;

தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே

அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!

அதிரை என்.ஷஃபாத் said...

படித்த, செவியுற்ற, பாராட்டிய, ஆக்கப்பூர்வ அலோசனை வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி!!

அன்புடன்,
அதிரை என்.ஷஃபாத்

அப்துல்மாலிக் said...

சகோ ஷஃபாத் வார்த்தை விளையாட்டும் கோர்வையும் அதையும் மீறி சொல்ல வந்த கருத்தும் உலகுக்கு பறைசாற்றும்... அருமை

அ.நி. மறைந்த இத்தனை சாதனங்களை படம்புடித்து காட்டியமைக்கு நன்றி

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

பேச்சிகளால் / கவிதைகளால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த வித்தியாசமான நண்பரும் என் எதிர்விட்டு கவிஞருமான ஷஃபாத் அசத்திட்டப்பா,

கவிதை ஒலிப்பேழை அருமை வாழ்த்துக்கள்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

கவிதைக்கு பொய் அழகு என்பான் கவிஞன் (இவன் பொய்மை கவிஞன் )

ஆனால் உன் கவிதைக்கு நீண் சொல்ல்லியுள்ள மெய்யே அழகு ( நீயல்லவா உண்மை புது கவிஞன் )

KALAM SHAICK ABDUL KADER said...

எத்தனை சந்தம்! எத்தனை கவிதை! - எங்கே
இவையெலாம் விதைத்திருந்தாய்! -நீ
எத்தனை காலம் புதைத்திருந்தாய்!
அத்தனை முத்து! அத்தனை சொத்து!- உலகை
அதிலே அடைக்கின்றாய்!- எமக்கும்
அன்புடன் படைக்கின்றாய்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு