Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் நோன்பு பெருநாள் தொழுகை ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2012 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் அறிவித்தபடியே இன்று (20-08-2012) நோன்பு பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயல் திறந்த வெளி திடலில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதன் காணொளி மற்றும் புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக... 


















அதிரைநிருபர் குழு

29 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ் !

சந்தோஷமாக இருக்கிறது....

இதேபோல் ஊரின் மையப் பகுதியிலும் (இரண்டு மூன்று இடங்களில்) பெருநாள் திடல் தொழுகை நடைபெற வேண்டும்...

எங்கள் இடத்தில்தான், நாங்கள் சொல்லும் இடத்தில்தான் நடைபெறனும் / நடைபெறும் என்று அடம்பிடிக்காத ADT அமைப்பு இதற்கு வரும் ஹஜ் பெருநாளில் ஆவன செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்....

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இறைதூதர் காட்டித்தந்த வழியில் மைதானத்தில் பெரு நாள் தொழுகை சந்தோசம்.

அதேசமயம் இது நம் ஊரின் அனைத்து மக்களும் ஒருங்கினைந்து பாகுபாடின்றி சேர்ந்து தொழுதால் எப்படி இருக்கும்?

முதலில் ஏகத்துவம் பேசும் சகோதரர்கள் முதலில் இதற்க்காக தாங்கள் பிடிவாதம் பிடிக்காமல் அல்லாஹ்விற்காக தங்கள் போக்கினை சற்று மாற்றி பரஸ்பரம் இணங்கி வரவேண்டும். பின் ஏனைய நம் ஊர் ஜமாத் அனைத்து முஹல்லாக்களிலும் இது குறித்து பேச முயற்சிக்கலாம்

M.I.அப்துல் ஜப்பார் said...

//அல்ஹம்துலில்லாஹ் !

சந்தோஷமாக இருக்கிறது....

இதேபோல் ஊரின் மையப் பகுதியிலும் (இரண்டு மூன்று இடங்களில்) பெருநாள் திடல் தொழுகை நடைபெற வேண்டும்...//

உங்கள் ஆசைப்படி அதிரையில் E C R யிலும் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. புகைப்படம் அனுப்பினால் உங்கள் இளைய தளத்தில் போடுவதற்கு உங்களுக்கு அடம்பிடிக்காத மனம் இருக்கா?

முதலில் உங்கள் இளைய தளத்தில் ஒரு இயக்கத்தின் செய்திகளை மற்றும் போடுவதில்லை என்று அடம்பிடிப்பதை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முதலில் உங்கள் இளைய தளத்தில் ஒரு இயக்கத்தின் செய்திகளை மற்றும் போடுவதில்லை என்று அடம்பிடிப்பதை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். //

மருமகனே (M.I.A.J): அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அடம்பிக்காத அமைப்பிடம்தானே வேண்டுகோள் வைத்தேன், அடம் பிடிக்கும் எது இயக்கம் இதுவென்று அடையாளப்படுத்தவில்லையே... !

சரி அதெல்லாம் இருக்கட்டும் சந்தேகமே இல்லை, அற்புதமான காரியங்களில் ஈடுபடுகிறீர்கள், ஆனால் என்ன மனக்குறை, தனி(த்தன்மை)யாக செயல்படுவதாக சொல்லி தனித்தே இருப்பதை தவிர்த்து, அரசியல் கட்சிபோன்று இயக்கம் வளர்ப்பதற்கு பதில் அன்றைய எழுச்சியில் அண்ணன் அவர்களின் தன்னிகற்ற சேவை அன்றுபோல் இன்றளவும் தொடர்ந்திருந்தால் நிறைய கொள்கை சகோதரர்களை இந்தக் கேள்வி கேட்க வைத்திருக்காது.

தவ்ஹீத் சகோதரர்கள் என்று சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் கைகோர்ப்போம், தனி ஜமாத் சகோதரர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை (இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே!)

முதலில் நீ, நான், என்பதிலிருந்து விலகி நாம் என்று இருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

அதிரை தாருத் தவ்ஹீத் எந்த பேதமின்றி இருப்பதை ஓரளவு என்னால் உணரமுடிகிறது அதனாலேயே அப்படி கேட்டு வைத்தேன்...

வேறு உள்நோக்கமேதும் இல்லை !

புரிந்து கொள்ளுங்கள் மருமகனே ! :)

M.I.அப்துல் ஜப்பார் said...

T N T J இயக்கம் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணிகளை செய்துவருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அதிரை நிருபர் இணைய தளம் மட்டும் பல முறை அனுப்பியும் T N T J செய்யும் நற்பணிகளை போடுவதில்லை இதற்கு காரணம் என்ன?


//முதலில் நீ, நான், என்பதிலிருந்து விலகி நாம் என்று இருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...//

எதன் அடிப்படையில் ஒன்று இனைவது என்று சொல்லுங்கள் (நேற்று பெருநாள் என்று அறிவித்துவிட்டு இன்று ஒன்றாக தொழுததை போலவா?)

//அதிரை தாருத் தவ்ஹீத் எந்த பேதமின்றி இருப்பதை ஓரளவு என்னால் உணரமுடிகிறது //

தாருத் தவ்ஹீதின் இலக்கு என்ன? கொள்கை என்ன?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//T N T J இயக்கம் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணிகளை செய்துவருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அதிரை நிருபர் இணைய தளம் மட்டும் பல முறை அனுப்பியும் T N T J செய்யும் நற்பணிகளை போடுவதில்லை இதற்கு காரணம் என்ன? //

மாஷா அல்லாஹ்... எதனையும் மறுக்கவில்லை ! மாறாக, உடண்பாடில்லை காரணம் (அறிவிக்கப்படாத) அரசியல் கட்சிபோன்று செயல்படுவது... தனிமனித சாடல்.. அரசியல் களம் காணவென்று முதலில் இயக்கம் துவக்கிய மரியாதைக்குரிய அண்ணன் அவர்களே அதிலிருந்து விலகி தனி இயக்கம் கண்டது...

அல்லாஹ் நன்கறிவான், எங்களுக்கு தனிமனித வழிபாட்டையும், துதியையும் தவிடுபொடியாக்கி எங்கள் உள்ளங்களில் தெளிவை ஏற்படுத்த அண்ணன் அவர்களின் சொற்பொழிவு அன்று ஒரு உரைகல்லாக இருந்தது, ஏன் இன்றளவுக்கும்.

ஆனால் இன்று அதே நல்ல கொள்கைச் சகோதரர்களே தனிமனித சாடலில் ஈடுபடுவதை ஜீரனிக்க முடியவில்லை!

//தாருத் தவ்ஹீதின் இலக்கு என்ன? கொள்கை என்ன?// it's very simple !

"கொள்கை : இஸ்லாத்தின் மூலாதாரங்களான இறைமறை (குர் ஆன்) மற்றும் நம்பத் தகுந்த நபிவழி (ஸுன்னா) அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பிறருக்கும் எடுத்துரைப்பது; நல்லறச் செயல்களில் ஈடுபடுவது; அவற்றில் துணை நிற்பது.
நோக்கம் : கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த சமூக அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒற்றுமையும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைக்கு வழியமைத்தல்."

M. அப்துர் ரஹ்மான் said...

சகோதரர் நெய்னா தம்பி...
TNTJ தவறான கொள்கையில் உள்ளது போல் உங்கள் விமர்சனம் உள்ளது...
சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்!
TNTJ தவறான கொள்கையில் உள்ளது என்றால் அதை குரான் ஹதீஸ் அடிப்டையில் ஆதாரத்தோடு நீருபிக்க தயாரா..?

M. அப்துர் ரஹ்மான் said...

//தாருத் தவ்ஹீதின் இலக்கு என்ன? கொள்கை என்ன?// it's very simple !

"கொள்கை : இஸ்லாத்தின் மூலாதாரங்களான இறைமறை (குர் ஆன்) மற்றும் நம்பத் தகுந்த நபிவழி (ஸுன்னா) அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பிறருக்கும் எடுத்துரைப்பது; நல்லறச் செயல்களில் ஈடுபடுவது; அவற்றில் துணை நிற்பது.//

தாருத் தவ்ஹீத் கொள்கை குரான் ஹதீஸ் என்றால்..?
கோவை அயூப்பை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்..?

Unknown said...

சகோதரர் நெய்னா தம்பி அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

//மாஷா அல்லாஹ்... எதனையும் மறுக்கவில்லை ! மாறாக, உடண்பாடில்லை காரணம் (அறிவிக்கப்படாத) அரசியல் கட்சிபோன்று செயல்படுவது... //

அறிவிக்கப்படாத அரசியல் கட்சி என்றால் என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள். அரசியல் தவறு என்கிறீர்களா? அல்லது அரசியலில் ஓட்டு பிச்சை கேட்காமல், சமுதாயத்தின் உரிமையைகளுக்காக பாடுபடுவது தவறு என்கிறீர்களா?

//தனிமனித சாடல்.. //

எதை தனி மனித சாடல் என்கிறீர்கள்? பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை பகிரங்கப்படுத்த வேண்டும். சில நேரங்களில் தனி மனிதனின் தவறை கூட சாடி அடையாளம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வது தவறு என்றால், எந்த வகையில் தவறு என்பதை மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கவும்.

தனி மனித சாடல் தவறு என்றால் அண்ணண் என்ற தனிமனிதனை நீங்கள் சாடுவது ஏன்?

//அரசியல் களம் காணவென்று முதலில் இயக்கம் துவக்கிய மரியாதைக்குரிய அண்ணன் அவர்களே அதிலிருந்து விலகி தனி இயக்கம் கண்டது...//

அரசியலில் ஈடுபடாமல் சமுதாயத்தின் உரிமைகளை வென்று எடுப்பது என்ற நோக்கத்தில் தான் தமுமுக ஆரம்பிக்கப்பட்டது. அரசியிலில் நிற்க மாட்டேம் என்று தான் அன்றைய தமுமுக நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரம் செய்தனர். அதிலிருந்து தரம்புரண்டு அரசியலில் போய் நிற்க வேண்டும் தமுமுக தடம்புரண்டாததாலும், தவ்ஹீத் பிரச்சாரம் எங்களின் வளர்ச்சிக்கு தடை என்று ஜால்ரா மன்னர் எழுதிக்கொடுத்தாலும், தமுமுகவின் கொள்கையான தேர்தலில் நிற்காமல் உரிமைகளை பேராடி வெல்ல வேண்டும் என்பதை தனது வழிமுறையாக கொண்டு, போராடி வருகிறது. சட்டமன்றாத்திற்கு சென்று சாதிக்க போனவர்கள் பன்னீர் செல்வாமே பொறாமைப்படும் அளவுக்கு சால்ரா அடிக்கிறார்கள் என்ற ரகசியம் உங்களின் காதுகளுக்கு வரவில்லை போலும். பிஜேபி தலைவருடன் கைகொர்த்து செய்த கோவில் மீட்பு போராட்டம் உங்கள் காதுகளுக்கு வரவில்லையே?

ஒருவரின் மீது கொண்ட வெறுப்பால் இல்லாததை அள்ளிவிடாதீர்கள்.

தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கிப்பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அப்பறம் வண்டி வண்டியா வரும் அவர்களின் தவ்ஹீத்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ (அப்துர்)ரஹ்மான்:

//TNTJ தவறான கொள்கையில் உள்ளது போல் உங்கள் விமர்சனம் உள்ளது...
சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்!
TNTJ தவறான கொள்கையில் உள்ளது என்றால் அதை குரான் ஹதீஸ் அடிப்டையில் ஆதாரத்தோடு நீருபிக்க தயாரா..?//

அப்படிச் சொல்லவில்லை.. எனக்கு தனிமனித துதி(யில்) எனக்கு உடண்பாடில்லை என்பதே என் கருத்தாக மருமான் M.I.A.J.வுக்காக பதிந்த கருத்தில் சொன்னேன்.

//தாருத் தவ்ஹீத் கொள்கை குரான் ஹதீஸ் என்றால்..?
கோவை அயூப்பை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்..?//

இவ்வாறான கேள்விக் கனைகளால் வரிந்து கட்டுவதையும் தனிமனிதாக எனக்கு உடண்பாடில்லை...

கவனிக்க : அது என்னுடைய தனிப்பட்ட கருத்தே அன்றி ஏதோ ஒரு இயக்க சார்பு கருத்தன்று.

எனக்கு உடண்பாடில்லை என்றிருக்கும் பட்சத்தில் எவ்வாறு என்னை உடண்பட வைக்கவேண்டும் என்பதில் தங்களின் கருத்துக்களை பதிந்தால் நன்றியுடையவனாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்...

சகோதரா நிச்சயம் எவ்வகையிலும் எதிராவனவன் அல்ல ! கருத்தால் களம் கண்டு நம் கல்போடு இணைவோம் இன்ஷா அல்லாஹ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/~/அஸ்ஸலாமு அலைக்கும்./~/

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. சகோதரர் அப்துல் ஹமீது

//மாஷா அல்லாஹ்... எதனையும் மறுக்கவில்லை ! மாறாக, உடண்பாடில்லை காரணம் (அறிவிக்கப்படாத) அரசியல் கட்சிபோன்று செயல்படுவது... //

/~/~/~/அறிவிக்கப்படாத அரசியல் கட்சி என்றால் என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள். அரசியல் தவறு என்கிறீர்களா? அல்லது அரசியலில் ஓட்டு பிச்சை கேட்காமல், சமுதாயத்தின் உரிமையைகளுக்காக பாடுபடுவது தவறு என்கிறீர்களா? /~/~/

தவறில்லை ! என்ன காரணம் காட்டி தனி இயக்கம் காணப்பட்டதோ அதுவே காலபோக்கில் இங்கேயும் நிகழ்ந்ததுதான் வருந்தக் கூடியது

//தனிமனித சாடல்.. //

/~/~/எதை தனி மனித சாடல் என்கிறீர்கள்? பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை பகிரங்கப்படுத்த வேண்டும். சில நேரங்களில் தனி மனிதனின் தவறை கூட சாடி அடையாளம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வது தவறு என்றால், எந்த வகையில் தவறு என்பதை மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கவும்.

தனி மனித சாடல் தவறு என்றால் அண்ணண் என்ற தனிமனிதனை நீங்கள் சாடுவது ஏன்? /~/~/

பகிங்கிரப்படுத்துவதில் இருக்கும் மும்முரம் அவர்களை திருத்துவதில் இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமே!

மாறாக "அண்ணன்" என்பது மரியாதைக்குரிய சொல்லே அன்றி வேறில்லை இன்றளவும் தனிப்பட்ட மரியாதை இருக்கத்தான் செய்கிறது அனைவரும் கொள்கைச் சகோதரர் என்ற வீரியத்திலே


//அரசியல் களம் காணவென்று முதலில் இயக்கம் துவக்கிய மரியாதைக்குரிய அண்ணன் அவர்களே அதிலிருந்து விலகி தனி இயக்கம் கண்டது...//

/~/~/ அரசியலில் ஈடுபடாமல் சமுதாயத்தின் உரிமைகளை வென்று எடுப்பது என்ற நோக்கத்தில் தான் தமுமுக ஆரம்பிக்கப்பட்டது. அரசியிலில் நிற்க மாட்டேம் என்று தான் அன்றைய தமுமுக நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரம் செய்தனர். அதிலிருந்து தரம்புரண்டு அரசியலில் போய் நிற்க வேண்டும் தமுமுக தடம்புரண்டாததாலும், தவ்ஹீத் பிரச்சாரம் எங்களின் வளர்ச்சிக்கு தடை என்று ஜால்ரா மன்னர் எழுதிக்கொடுத்தாலும், தமுமுகவின் கொள்கையான தேர்தலில் நிற்காமல் உரிமைகளை பேராடி வெல்ல வேண்டும் என்பதை தனது வழிமுறையாக கொண்டு, போராடி வருகிறது. சட்டமன்றாத்திற்கு சென்று சாதிக்க போனவர்கள் பன்னீர் செல்வாமே பொறாமைப்படும் அளவுக்கு சால்ரா அடிக்கிறார்கள் என்ற ரகசியம் உங்களின் காதுகளுக்கு வரவில்லை போலும். பிஜேபி தலைவருடன் கைகொர்த்து செய்த கோவில் மீட்பு போராட்டம் உங்கள் காதுகளுக்கு வரவில்லையே? /~/~/

இப்படி சாடுவதுவதில்தான் எனக்கு உடண்பாடில்லை, முதலில் சாடுபவரை தொடர்ந்து அவரைப் தொடர்ந்து மாற்றணியில் இருப்பவர் சாட இதுவே தொடர்கதையாக வளர்வதை யார்தான் விரும்புவார்கள்?

/~/~/ ஒருவரின் மீது கொண்ட வெறுப்பால் இல்லாததை அள்ளிவிடாதீர்கள்./~/~?

எப்படி இந்த முடிவுக்கு வருகிறீர்கள் வெறுப்பென்று யாரையும் சொல்லிக் காட்டியிருக்கிறேனா ?

/~/~/ தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கிப்பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அப்பறம் வண்டி வண்டியா வரும் அவர்களின் தவ்ஹீத். /~/~/

இந்த கருப்பொருள் ஏன் இந்த கடுத்தாடலில் வருகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள் பாவம் ! :)அதனை ஏன் கிளறுகிறீர்கள்

Yasir said...

பெருநாள் வட்டலப்பம் சாப்பிட்ட மயக்கம் இப்பதான் தெளிஞ்சுக்கிட்டு இருக்கு...நீங்க வேற T.J,B.Y,K.T,O.T,E.H,O.P.P etc....போன்று கம்யூட்டர் மால்வெர் போல பரவிக்கிடக்கும் இயக்க மயங்கங்களை போட்டு கோமாவிற்க்கு தள்ளிடாதீங்க....இந்த ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சான் மவனே

Unknown said...

//தாருத் தவ்ஹீத் கொள்கை குரான் ஹதீஸ் என்றால்..?
கோவை அயூப்பை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்..?//

அவர் குர்ஆன் - ஹதீஸ் மட்டுமே பேசுவார்; பிற அமைப்புகளைச் சாட மாட்டார் என்பதால்.

Unknown said...

அன்புச் சகோதரர் நெய்னா தம்பி அவர்களுக்கு,

ஸலாம்.

//தவறில்லை ! என்ன காரணம் காட்டி தனி இயக்கம் காணப்பட்டதோ அதுவே காலபோக்கில் இங்கேயும் நிகழ்ந்ததுதான் வருந்தக் கூடியது//


நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு இடத்தில் அல்லது இயக்கத்தில் தவறு நடக்கும் போது அதை அவர்களுடன் இருந்து திருத்த முயல வேண்டும். அவர்கள் திருந்தவிடில், அவர்களை புறக்கணித்து தனியாக இயக்கம் காண்பதில் தவறு ஏதும் இல்லை. பிஜேவும் தவ்ஹீத் பிரச்சாரர்களும் எடுத்த இந்த நிலைபாடு சரி என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. 1980 களிலிருந்து நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டேம் என்பதை சொல்லியும் செயல்படுத்தியும் வந்துள்ளது இந்த தவ்ஹீத் ஜமாஅத் (அல்ஹம்துலில்லாஹ்).

நீங்கள் வருந்தும் அளவுக்கு இங்கு தவறு ஏதுவும் நடக்கவில்லை. அசத்தியத்திற்கு ஆயிரம் ஆயிரம் ஆதரவு இருந்தாலும் அது அளிந்து போவதும், சத்தியத்திற்கு ஆயிரம் ஆயிரம் தடைகள் இருந்தாலும் அது எழுச்சி பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது.


//பகிங்கிரப்படுத்துவதில் இருக்கும் மும்முரம் அவர்களை திருத்துவதில் இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமே!//

திருத்துவதில் தான் அதிக கவனமும் அக்கரையும் இருக்க வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத் தவறுகளை எப்போதுமே அதிக கவனம் எடுத்து வந்துள்ளது. ஜாக் மற்றும் தமுமுக வில் இருந்து பிரிவினை ஏற்படுவதற்கு தவ்ஹீத் தாயிக்கள் இதை அளவுக்கு அதிகமாக செய்துள்ளார்கள். இவர்களை திருத்த முடியாது என்று வரும் போது, பிரிவினையை தடுக்க முடியாது.

சமுதாயம் 73 கூட்டமாக பிரியும் என்பதையும், அதில் ஒரு கூட்டம் மட்டும் தான் சுவர்க்கத்திற்கு சொல்லும் என்பதையும், ஒற்றுமைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் நானும், ஒன்றுபடுவது தான் இஸ்லாம் என்று சொல்லும் உங்களாலும் மறுக்க முடியாது.

//இப்படி சாடுவதுவதில்தான் எனக்கு உடண்பாடில்லை, முதலில் சாடுபவரை தொடர்ந்து அவரைப் தொடர்ந்து மாற்றணியில் இருப்பவர் சாட இதுவே தொடர்கதையாக வளர்வதை யார்தான் விரும்புவார்கள்?//

இங்கு தான் பல ஒற்றுமைவாதிகள் தவறு செய்கிறார்கள். தவறை சுட்டிக்காட்டி அதை திருத்துவது ஒவ்வோரு முஃமினின் கடமை. தவறை சுட்டிக்காட்டும் போது பிரிவினை தான் ஏற்படும், ஒற்றுமை ஏற்படாது. தவறை சாடிப்பேசினால், நீங்கள் நல்லாதை செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள். தவறுகளை கைகளாலும், நாவுகளாலும், மனதால் வெறுத்தும் ஒதுங்குங்கள் என்ற ஹதீஸ் எதை காட்டுகிறது?

தவறு செய்பவர்களை சாட மாட்டேன் என்பதால் தான் தர்ஹாவிற்கு போஸ்ட் அடிக்கும் முன்னோற்ற கழகங்கள் பலருக்கு தவ்ஹீத் இயக்கமாக தெரிகிறது. அவர்களை சாடுவதை விட்டுவிட்டு, சத்தியத்தில் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தை சாடுகிறர்கள்.

//மாறாக "அண்ணன்" என்பது மரியாதைக்குரிய சொல்லே அன்றி வேறில்லை இன்றளவும் தனிப்பட்ட மரியாதை இருக்கத்தான் செய்கிறது அனைவரும் கொள்கைச் சகோதரர் என்ற வீரியத்திலே.

எப்படி இந்த முடிவுக்கு வருகிறீர்கள் வெறுப்பென்று யாரையும் சொல்லிக் காட்டியிருக்கிறேனா ?//

உங்களின் எழுத்து எனக்கு அப்படி தென்ப்பட்டது. நீங்கள் அவ்வாறு இல்லை என்பதால், எனது கருத்தை திரும்ப பெறுகிறோன்.

Unknown said...

[தொடர்ச்சி]

அண்ணணின் பிரச்சாரம் மிகவும் பிடிக்கும் என்கிறீர்கள். அண்ணண் அவர்கள் பொதுவான அனாச்சாரங்களை பற்றி பேசிய பேச்சுகளை உங்கள் தளத்தில் போட்டு அந்த அனாச்சாரங்களை கழைய முன்வருவீர்களா? உதாரணத்திற்கு, சமுதாயத்தின் சாபக்கேடான வரதட்சணை, முஸ்லிம்கள் எனப்படுவோரால் செய்யப்படும் (மறுமை வாழ்வை நாசப்படுத்தும்) இணைவைப்பு. இவற்றை செய்ய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. நான் ரெடி தான், ஆனால் எங்கள் குழுவில் உள்ளவர்கள் உடன்படவில்லை என்றால், கொள்கை சகோதரர்களுடன் நீங்கள் சேர்ந்து இருக்கவில்லை என்பதையும், வெறும் ஒற்றுமை என்ற வெற்று கோஷத்தின் அடிப்படையில் சேர்ந்துள்ளீர்கள் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள்.

நீங்கள் இது போன்ற பிரச்சாரத்தை உங்கள் தளத்தில் வெளியிடாவிட்டாலும், சத்தியம் மக்களை வென்று எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.

கவிதை பற்றி வருட கணக்கில் தொடர் வெளியிடும் நீங்கள், நரகத்திற்கு அழைக்கும் மௌலுதை பற்றி எதையாவது எழுதியிருக்கிறீர்களா? இணைவைப்பை பகிரங்கமாக எதிர்த்து எழுதியிருக்கிறீர்களா? இதை எல்லாம் நீங்கள் செய்தால், உங்களின் கொள்கை கூட்டம் சிதரிவிடுவது நிச்சயம். சிதறும் போது தான் தெரியும் அவர்கள் கொள்கையும் உங்கள் கொள்கையும் வேறு என்று.

நீங்கள் நேரசிக்கும் அண்ணணின் பேச்சை மீண்டும் கேட்டு பாருங்கள்.

///~/~/ தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கிப்பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அப்பறம் வண்டி வண்டியா வரும் அவர்களின் தவ்ஹீத். /~/~/

இந்த கருப்பொருள் ஏன் இந்த கடுத்தாடலில் வருகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள் பாவம் ! :)அதனை ஏன் கிளறுகிறீர்கள்//

அவர்களின் வண்டவாலாங்களை தெரிந்து தான் வைத்துள்ளீர்கள். கந்தூரிக்கு போஸ்ட் அடித்து நரகத்திற்கு அழைக்கும் அந்த கூட்டத்தை கூட பலர் தவ்ஹீத் பீரங்கீ என்கிறார்களே! என்ன செய்ய?

மனதை புண்படுத்தும்படி எனது எழுத்து இருந்தால் மன்னிக்கவும்.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரர் அப்துல் ஹமீத்,

ஜஸாக்கல்லாஹ் ஹைர் பொறுமையாக கருத்தாடல்களில் கலந்து கொள்வதற்கு (அல்ஹம்துலில்லாஹ்)!

//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு இடத்தில் அல்லது இயக்கத்தில் தவறு நடக்கும் போது அதை அவர்களுடன் இருந்து திருத்த முயல வேண்டும். அவர்கள் திருந்தவிடில், அவர்களை புறக்கணித்து தனியாக இயக்கம் காண்பதில் தவறு ஏதும் இல்லை. பிஜேவும் தவ்ஹீத் பிரச்சாரர்களும் எடுத்த இந்த நிலைபாடு சரி என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. 1980 களிலிருந்து நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டேம் என்பதை சொல்லியும் செயல்படுத்தியும் வந்துள்ளது இந்த தவ்ஹீத் ஜமாஅத் (அல்ஹம்துலில்லாஹ்).//

சமீபத்திய அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் ஏராளம் இருக்கிறது தாங்கள் சார்ந்து இருக்கும் இயக்கம் எதிர்க்கும் இயக்கம் ஒரு நிலைபாட்டை எடுத்தால் அதற்கு நேர் மாறான நிலைபாட்டை எடுப்பதும் அதற்கு தகுந்தார்போல் காரண காரியங்களை உருவாக்கி விளக்கங்கள் சொல்வதும் கண்கூடாக கண்டதே.. (தயை கூர்ந்து ஆதாரம் கேட்கவேண்டாம் இணையத்தில் தேடினாலே கொட்டிக் கிடக்கிறது).

//நீங்கள் வருந்தும் அளவுக்கு இங்கு தவறு ஏதுவும் நடக்கவில்லை. //

மறைக்க வேண்டாம் நடந்து இருக்கிறது என்பதே உண்மை

//அசத்தியத்திற்கு ஆயிரம் ஆயிரம் ஆதரவு இருந்தாலும் அது அளிந்து போவதும், சத்தியத்திற்கு ஆயிரம் ஆயிரம் தடைகள் இருந்தாலும் அது எழுச்சி பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது.//

சந்தேகமே இல்லை ! அல்லாஹ் அதனை நிருபித்திக் காட்டிக் கொண்டிருக்கிறான்... (அல்ஹ்மதுலில்லாஹ்)

///தவ்ஹீத் ஜமாஅத் தவறுகளை எப்போதுமே அதிக கவனம் எடுத்து வந்துள்ளது. ஜாக் மற்றும் தமுமுக வில் இருந்து பிரிவினை ஏற்படுவதற்கு தவ்ஹீத் தாயிக்கள் இதை அளவுக்கு அதிகமாக செய்துள்ளார்கள். இவர்களை திருத்த முடியாது என்று வரும் போது, பிரிவினையை தடுக்க முடியாது. ///

ஒத்துக் கொள்கிறீர்கள் தவறுகளில் அதிக கவனம் செலுத்துவதை ! விலகியதற்கு பதிலாக அவர்களையல்லவா வெளியேற்றியிருக்கனும் ! எந்த நோக்கத்திறு 1980ல் இயக்கம் காணப்பட்டாதோ அந்த பெயர்களை அவர்களிடமே விட்டு விட்டு தனி தனி பெயர்களாக உருவாக்கி வழிகாடியாக அமைந்து விட்டு தப்பு செய்தார்கள் தனி இயக்கம் கண்டோம் என்பது ஏற்புடையதா ?

தவறு செய்த்வர்களை வெளியேற்றியிருக்கனும் அதைவிடுத்து விலகிச் செல்கிறேன், எங்களை விட்டுவிடுங்கள் என்று வெளியேறிவிட்டு இயக்கம் காண்டதையே நானும் குறிப்பிட்டேன்


//இங்கு தான் பல ஒற்றுமைவாதிகள் தவறு செய்கிறார்கள். தவறை சுட்டிக்காட்டி அதை திருத்துவது ஒவ்வோரு முஃமினின் கடமை. தவறை சுட்டிக்காட்டும் போது பிரிவினை தான் ஏற்படும், ஒற்றுமை ஏற்படாது. தவறை சாடிப்பேசினால், நீங்கள் நல்லாதை செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள். தவறுகளை கைகளாலும், நாவுகளாலும், மனதால் வெறுத்தும் ஒதுங்குங்கள் என்ற ஹதீஸ் எதை காட்டுகிறது?

தவறு செய்பவர்களை சாட மாட்டேன் என்பதால் தான் தர்ஹாவிற்கு போஸ்ட் அடிக்கும் முன்னோற்ற கழகங்கள் பலருக்கு தவ்ஹீத் இயக்கமாக தெரிகிறது. அவர்களை சாடுவதை விட்டுவிட்டு, சத்தியத்தில் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தை சாடுகிறர்கள்.


சகோதரரே தவறுகளை சுட்டிக்காட்டுகள் கண்டியுங்கள், அதற்காக தாறுமாறாக திட்டுவதும், சுட்டுவதும், எழுதுவதும் ஏற்புடையதல்லவே !

தொடரும்... 1 of 2

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர்கிறது 2 of 2

//அண்ணணின் பிரச்சாரம் மிகவும் பிடிக்கும் என்கிறீர்கள். அண்ணண் அவர்கள் பொதுவான அனாச்சாரங்களை பற்றி பேசிய பேச்சுகளை உங்கள் தளத்தில் போட்டு அந்த அனாச்சாரங்களை கழைய முன்வருவீர்களா? உதாரணத்திற்கு, சமுதாயத்தின் சாபக்கேடான வரதட்சணை, முஸ்லிம்கள் எனப்படுவோரால் செய்யப்படும் (மறுமை வாழ்வை நாசப்படுத்தும்) இணைவைப்பு. இவற்றை செய்ய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. நான் ரெடி தான், ஆனால் எங்கள் குழுவில் உள்ளவர்கள் உடன்படவில்லை என்றால், கொள்கை சகோதரர்களுடன் நீங்கள் சேர்ந்து இருக்கவில்லை என்பதையும், வெறும் ஒற்றுமை என்ற வெற்று கோஷத்தின் அடிப்படையில் சேர்ந்துள்ளீர்கள் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள்.//

அண்ணன் அவர்களின் பிரச்சாரம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் அவரின் செழுமையான பேச்சு, திறமையான வாதம், ஆழ்ந்த அறிவு இவ்வளவு சிறப்புக்களை கொண்டவரை யாருக்காவது பிடித்துப் போகாமல் இருக்குமா?. ஆனால் அவருக்கு யாரையாவது அல்லது எதனையாவது பிடிக்கவில்லை என்றால் கொள்கை சகோதரர்களாகிய நீங்கள் அனைவருக்கும் பிடிக்காமல் போவதுதான் விந்தை ! குர்ஆன் ஹதீஸ்தான் உரைகல் என்றிருக்கும் போது ஏன் அண்ணன் அவர்களை தக்லீது செய்ய வேண்டும் என்பதே என் ஆதங்கம்.

உங்கள் குழுவில் இல்லை என்றால் வெற்று ஒற்றுமை பேசுபவர்கள் என்று நீங்கள் மட்டுதான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் - கண்டிக்கிறேன் ! இது கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் இருக்கும் ஈரமான பாசப்பினைப்பை அறுக்கும் அகம்பாவமே அன்றி வேறில்லை


//நீங்கள் இது போன்ற பிரச்சாரத்தை உங்கள் தளத்தில் வெளியிடாவிட்டாலும், சத்தியம் மக்களை வென்று எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.

ஏன் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இந்த ஒரு தளத்தில் வரவில்லை என்றால் சத்தியம் அகலும் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா ?

//கவிதை பற்றி வருட கணக்கில் தொடர் வெளியிடும் நீங்கள், நரகத்திற்கு அழைக்கும் மௌலுதை பற்றி எதையாவது எழுதியிருக்கிறீர்களா? இணைவைப்பை பகிரங்கமாக எதிர்த்து எழுதியிருக்கிறீர்களா? இதை எல்லாம் நீங்கள் செய்தால், உங்களின் கொள்கை கூட்டம் சிதரிவிடுவது நிச்சயம். சிதறும் போது தான் தெரியும் அவர்கள் கொள்கையும் உங்கள் கொள்கையும் வேறு என்று.//

அந்த வேலையத்தான் நீங்கள் செய்கிறீர்களே அதிலும் நீங்கள் செய்வது மட்டுமே சரி என்று சொல்லி வருகிறீர்கள்! அவ்வாறான காரியங்களில் ஈடுபடும் (எதிர் பிரச்சாரம் யார செய்தாலும்) சகோதரர்களோடு ஒத்துப்போவதில்லை இதுதான் உங்கள் நிலைபாடு.

ஏதோ சிந்தாத சிதறாத கூட்டத்தோடு இருப்பதுபோல் குத்திக் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள், கிளை கிளையாக பிரிந்தது எங்கேயிருந்து என்பது விளங்கும்


நீங்கள் நேரசிக்கும் அண்ணணின் பேச்சை மீண்டும் கேட்டு பாருங்கள்.

அண்ணன் மட்டுமல்ல இன்னும் கொள்கைச் சகோதரர்கள் நிறையபேர் அண்ணன் அவர்களின் வளர்ப்பிலும், உந்துதலாலும் வீரியமாக பிரச்சாரம் செய்யும் பெரும்பாலான சகோதரக்ளின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அனைத்தும் நன்மைய நாடியே அன்றி வேறேதும் இல்லை

///~/~/ தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கிப்பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அப்பறம் வண்டி வண்டியா வரும் அவர்களின் தவ்ஹீத். /~/~/

இந்த கருப்பொருள் ஏன் இந்த கருத்தாடலில் வருகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள் பாவம் ! :)அதனை ஏன் கிளறுகிறீர்கள்//

அவர்களின் வண்டவாலாங்களை தெரிந்து தான் வைத்துள்ளீர்கள். கந்தூரிக்கு போஸ்ட் அடித்து நரகத்திற்கு அழைக்கும் அந்த கூட்டத்தை கூட பலர் தவ்ஹீத் பீரங்கீ என்கிறார்களே! என்ன செய்ய?


உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் ! இதயங்களை பிளந்து பார்த்ததுபோல் தீர்ப்பை வழக்கும் அதிகாரம் யாருக்குமே இல்லை !

வஸ்ஸலாம்.

Unknown said...

///தாருத் தவ்ஹீத் கொள்கை குரான் ஹதீஸ் என்றால்..?
கோவை அயூப்பை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்..?//

அவர் குர்ஆன் - ஹதீஸ் மட்டுமே பேசுவார்; பிற அமைப்புகளைச் சாட மாட்டார் என்பதால்.//

அது சரி. யாரையும் சாட மாட்டேன் என்பது இஸ்லாமா?

தவறை கண்டால் அதை கையால், நாவால் தடுத்து மற்றும் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும் என்ற ஹதீஸ் ஞாபகம் இருக்கிறாதா? அந்த ஹதீஸ் உங்களுக்கு பொருந்த வாய்ப்பு இல்லை.

உங்களின் இந்த சாடாத வழிகேட்டு தத்துவம், சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மக்களை தடுத்த கூட்டத்தை தடுத்தார்களே அவர்களோடு ஒத்துப்போகிறது. தடுத்தவர்களை தடுத்தார்களே அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

தரம்புரண்டவர்களை அவர்களே வாயாலேயே அல்லாஹ் சான்று பகர வைக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.

Unknown said...

சகோதரர் நெய்னா தம்பி அவர்களுக்கு,

கண்ணியமான முறையில் நமது கலந்துரையாடலை தொடர்வதற்கு நன்றி.

//சமீபத்திய அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் ஏராளம் இருக்கிறது தாங்கள் சார்ந்து இருக்கும் இயக்கம் எதிர்க்கும் இயக்கம் ஒரு நிலைபாட்டை எடுத்தால் அதற்கு நேர் மாறான நிலைபாட்டை எடுப்பதும் அதற்கு தகுந்தார்போல் காரண காரியங்களை உருவாக்கி விளக்கங்கள் சொல்வதும் கண்கூடாக கண்டதே.. (தயை கூர்ந்து ஆதாரம் கேட்கவேண்டாம் இணையத்தில் தேடினாலே கொட்டிக் கிடக்கிறது).//

இது உங்களின் கற்பனை. இது தவறு என்பதற்கு நான் ஆதாரங்களை அடுக்க முடியும்.

நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்தால், அதை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும். ஆதாரம் கேட்க வேண்டாம் என்று உங்களின் வாதமே உங்களிடம் உண்மை இல்லை என்பதை பறைசாற்றுகிறது. நான் உங்களின் மீது குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள். இதை பற்றி பல இணையதளங்களில் எழுதியுள்ளார்கள் என்று சொன்னால் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

குற்றம் சுமத்துபவர் தான் ஆதாரம் தர வேண்டும் என்பது இஸ்லாமிய நடைமுறை.

//மறைக்க வேண்டாம் நடந்து இருக்கிறது என்பதே உண்மை//

நடந்த சம்பவங்களை எடுத்து வையுங்கள். அப்போது தான் அதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த முடியும்.

//ஒத்துக் கொள்கிறீர்கள் தவறுகளில் அதிக கவனம் செலுத்துவதை ! விலகியதற்கு பதிலாக அவர்களையல்லவா வெளியேற்றியிருக்கனும் ! எந்த நோக்கத்திறு 1980ல் இயக்கம் காணப்பட்டாதோ அந்த பெயர்களை அவர்களிடமே விட்டு விட்டு தனி தனி பெயர்களாக உருவாக்கி வழிகாடியாக அமைந்து விட்டு தப்பு செய்தார்கள் தனி இயக்கம் கண்டோம் என்பது ஏற்புடையதா ?

தவறு செய்த்வர்களை வெளியேற்றியிருக்கனும் அதைவிடுத்து விலகிச் செல்கிறேன், எங்களை விட்டுவிடுங்கள் என்று வெளியேறிவிட்டு இயக்கம் காண்டதையே நானும் குறிப்பிட்டேன்//

ஆம், நன்மையை எந்த அளவுக்கு ஏவுகிறோமே. அதைவிட அதிகமாக தவறுகளை தடுப்பதிலும் கவனம் சொலுத்துகிறோம். இது தான் மார்க்கத்தின் போதனை. இது தவறு என்றால், குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு விளக்கவும்.

விழகுபவதற்கு பதில் தவறு செய்பவர்களை விளக்குவது தான் நல்ல வழிமுறை. ஆனால், இதை நேரத்திலும் செய்ய முடியாது. தவறு செய்பவர்களை எப்போது விளக்க வேண்டுமே அப்போது விளக்கியிருக்கிறது தவ்ஹீத் ஜமாஅத். உதாரணம், ஹாமீத் பக்ரி, பாக்கர் மற்றும் அவரின் ஆதாரவாளர்கள். தவறு செய்பவர்களை நீக்குவது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாது. தவறு செய்பவர்களை நீக்க வேண்டுமானால், இயக்கம் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இயக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தனி இயக்கம் காண தவ்ஹீத் தாயிக்கள் முன்வந்தது இல்லை.

இயக்கம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத போது, தனியாக பிரிவதை தவிர வேறு வழியில்லை. தமுமுக பிரிவினை ஏற்படுகிற நேரத்தில் தவ்ஹீத் தாயிக்களின் கட்டுப்பாட்டில் தமுமுக இல்லை (ஜால்ரா மன்னர் தான் அப்போது தலைவர்). தமுமுக தேர்தலில் நிற்பதை தமுமுகவின் அனைத்து நிர்வாகிகளும் ஆதரித்தார்கள், மூவரை தவிர (பிஜே மற்றும் வேறு இருவர்). இந்த இந்த மூவர் சேர்ந்து தவறு செய்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமற்றது. இதனால் தான், பிஜேவும் தவ்ஹீத் தாயிக்களும் பிரிந்து வந்தார்கள்.

ஜாக் பிரிவினை போதும் இதே நிலை தான். கமாலுத்தீன் மதனி தான் அப்போது தலைவராக இருந்தார். தலைவராக இருந்த பிஜே, தலைமை பொறுப்பில் இருப்பதால் பிரச்சாரம் அதிகமாக செய்ய முடியவில்லை என்று கமாலுத்தீன் மதனி அவர்களிடம் நம்பி அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது ஜாக் இயக்கத்தில் இருந்த பல உயர்மட்ட பொறுபாளர்கள் மற்றும் தாயிக்கள் மீது பொருளாதார மற்றும் பாலியல் குற்றச்சாட்டு வருகிறது. இதை கமாலுத்தீன் மதனி அவர்களிடம் எடுத்துச்சொல்லி, அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தவ்ஹீத் வளர்ச்சி மீது அக்கறைகொண்ட பல தாயிக்கள் முறையிட்டனர். கமலுத்தீன் மதனி அவர்கள் அவ்வாறு குற்றச்சாட்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கினர். இவ்வாறு குற்றம்சாட்ப்பட்டவர்களில் உங்கள் கொள்கை சகோதரர்களால் போட்டாப்படும் மறுமை போச்சாளரும் அடக்கம். தவறு செய்பவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கும் இவர்களுடன் இருந்தால், இதன் காரணத்தினாலேயே தவ்ஹீத் கொள்கையை மக்கள் வெறுக்க வேண்டிவரும் என்பதால் தவ்ஹீத் தாயிக்கள் தனி இயக்கம் காண வேண்டிய நிரபந்தம் உருவானது. தவறு செய்பவர்களை பதவி வைத்து அழகு பார்த்த ஜாக் அன்று அழிய ஆரம்பித்தது.

இது தான் நடந்தது. நடுநிலையாக சிந்தித்தால், தவ்ஹீத் தாயிக்கள் எடுத்த முடிவு சரியானதே என்று விளங்கும். தவறு செய்பவர்களை கண்டு கொள்ள கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறோன்.

தொடரும்...

Yasir said...

அன்புச்சகோதரர்களே...தங்கள் விவாதங்களை தனிமடலில் வைத்துக்கொள்ளுங்கள் “மனுநீதியை” படிக்க நிறைய மாற்றுமத சகோதரர்கள் வருகின்றார்கள்..உங்களின் இந்த விவாதம் தன் பல்லை குத்தி தானே மோந்துபார்ப்பதுபோல உள்ளது...அதிரை நிருபரில் எந்த இயக்க குழப்பவாதிகளுக்கும் இடமில்லை...தங்கள் செய்வதுதான் நல்லதாக அவரவருக்கு தெரிகிறது..அல்லாஹ் மறுமையில் அதற்க்கான தீர்ப்பை வழங்குவான்..with all respect please get rid from here...i am requesting A.N. moderator to stop comments for this page

Unknown said...

[தொடர்ச்சி]

//சகோதரரே தவறுகளை சுட்டிக்காட்டுகள் கண்டியுங்கள், அதற்காக தாறுமாறாக திட்டுவதும், சுட்டுவதும், எழுதுவதும் ஏற்புடையதல்லவே !//

தாறுமாறாக திட்டுவது என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? விளக்கவும். தவறு செய்பவர்களை அதற்கான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது தவறல்ல. குர்ஆன் கூட பொதி சுமக்கும் கழுதைகள் என்று கூறுகிறது.

//அண்ணன் அவர்களின் பிரச்சாரம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் அவரின் செழுமையான பேச்சு, திறமையான வாதம், ஆழ்ந்த அறிவு இவ்வளவு சிறப்புக்களை கொண்டவரை யாருக்காவது பிடித்துப் போகாமல் இருக்குமா?. ஆனால் அவருக்கு யாரையாவது அல்லது எதனையாவது பிடிக்கவில்லை என்றால் கொள்கை சகோதரர்களாகிய நீங்கள் அனைவருக்கும் பிடிக்காமல் போவதுதான் விந்தை !//

அண்ணன் அவர்களுக்கு பிடிக்காமல் போனவர்களும், பிடிக்காமல் போனவைகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பது மூலம் எதை சொல்ல வருகிறீர்கள்? விஷயத்தை சொல்லி விளக்கினால், பதில் தர வசதியாக இருக்கும். மேலேட்டமாக சொல்லிவிட்டு, விபரம் கேட்காதீர்கள் என்றால் இதுவும் வெற்று பேச்சாக தான் இருக்குமே தவிர, அறிவுடையவர்கள் இதை ஒரு ஏற்கத்தக்க விஷயமாக கருத மாட்டார்கள்.

// குர்ஆன் ஹதீஸ்தான் உரைகல் என்றிருக்கும் போது ஏன் அண்ணன் அவர்களை தக்லீது செய்ய வேண்டும் என்பதே என் ஆதங்கம்.//

குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்பது எங்களின் நிலைபாடு. ஸஹாபாக்களின் சொந்த கருத்துகள் கூட மார்க்கம் இல்லை என்று முழங்கும் நாங்கள் பிஜேவை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிஜேவை தக்லீத் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு இவ்வளவு விரைவாக இவ்வளவு விளக்கம் தரமுடியாது. நாங்கள் தக்லீத் செய்பவர்களாக இருந்தால், நீங்கள் சொல்லுவதை பிஜேவிற்கு எழுதி, அவரின் பதிலை பெற்று, அதை தான் உங்களுக்கு பதிலாக தந்துயிருப்போம். அப்படி நடக்கவில்லை என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோன்.

பிஜேவை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் எடுத்து வைக்கும் சொத்தை வாதம் தான் இது. பிஜேவை தக்லீத் செய்கிறார்கள் என்று சொல்லுபவர்கள் உண்மையாளர்கள் இல்லை என்பதை தான், தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தங்களின் சுயமான மார்க்க அறிவினால் நிரூபித்து வருகிறார்கள்.

//உங்கள் குழுவில் இல்லை என்றால் வெற்று ஒற்றுமை பேசுபவர்கள் என்று நீங்கள் மட்டுதான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் - கண்டிக்கிறேன் ! இது கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் இருக்கும் ஈரமான பாசப்பினைப்பை அறுக்கும் அகம்பாவமே அன்றி வேறில்லை//

உங்களின் பாச பினைப்பை நான் அறுக்க வேண்டிய தேவை இல்லை. கொள்கை சகோதரர்கள் என்று சொல்லும் நீங்கள் உங்களின் கொள்கை என்ன சேர்த்து விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களின் உயிரமுச்சு தவ்ஹீத் என்றால், மௌலுதை பற்றி ஏன் பேசவில்லை என்று வினவும் போது, அதான் நீங்கள் இருக்கிறீர்களே என்று கேட்க மாட்டீர்கள்.

//ஏன் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இந்த ஒரு தளத்தில் வரவில்லை என்றால் சத்தியம் அகலும் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா ?//

அண்ணன் பல நல்லதை சொல்கிறார் என்றீர்களே, அதனால் தான் கேட்டேன் அண்ணன் சொல்லுவதில் நல்லதை எடுத்து போட்டு மக்களை நல்வழிப்படுத்தினால் என்ன என்று. மற்றபடி நீங்கள் எடுத்து போட்டாலும் போடவிட்டாலும், சத்தியத்தின்ன் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று எற்கனவே சொல்லிவிட்டேன்.

அண்ணனை புகழுவது சும்மா அவரின் ஆதாரவாளர்களிடம் நானும் ஆதரிக்கிறோன் என்று சொல்லி நடுநிலையாக காட்டுவதற்காக என்ற சந்தேகம் எழுகிறது.

//அந்த வேலையத்தான் நீங்கள் செய்கிறீர்களே அதிலும் நீங்கள் செய்வது மட்டுமே சரி என்று சொல்லி வருகிறீர்கள்! அவ்வாறான காரியங்களில் ஈடுபடும் (எதிர் பிரச்சாரம் யார செய்தாலும்) சகோதரர்களோடு ஒத்துப்போவதில்லை இதுதான் உங்கள் நிலைபாடு.//

இங்கு தான் சற்று வசமாக சிக்கிவிட்டீர்கள். பிரச்சாரம் செய்யதான் நீங்கள் இருக்கிறீர்களே என்று விணவுவதன் மூலம் உங்களின் கொள்கை வேறு என்று காட்டிவிட்டீர்கள்.

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை யாரு செய்யதாலும் அது எங்களுக்கு நல்லதே! அதே நேரத்தில், நடிகர்களை எங்கள் குழுவோடு சேர்க்கவும் மாட்டேம். அவர்களை விமர்சனமும் செய்வோம். உதாரணத்திற்கு, வரதட்சனை தவறு என்று சொல்லிக்கொண்டு, வரதட்சணை திருமண பிரியாணியை பதம் பார்க்கும் அற்புத பிரச்சாரர்களை கிழித்து எடுப்போம். தமுமுகவில் இருந்து கொண்டு தவ்ஹீத் பேசுபவர்களை கூட பிரித்து மேய்வோம். காரணம் தமுமுக தவ்ஹீத்திற்கு எதிரான வேலைகளை செய்கிறது என்பதால்.

தொடரும்...

M.I.அப்துல் ஜப்பார் said...

//தாருத் தவ்ஹீத் கொள்கை குரான் ஹதீஸ் என்றால்..?
கோவை அயூப்பை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்..?//

//அவர் குர்ஆன் - ஹதீஸ் மட்டுமே பேசுவார்; பிற அமைப்புகளைச் சாட மாட்டார் என்பதால்.//

இவர்கள் விமர்ச்சிக்காதது ஏன்?

இவர்கள் யாரையும் விமர்சிக்க மாட்டோம் என்று கூறுவது நல்ல எண்ணத்தில் அல்ல, மாறாக யாரையும் விமர்சிக்க இவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை.

நபித்தோழர்களின் சொந்தக் கருத்துக்களும் மார்க்கம் எனக் கூறும் ஜாக்கை வைத்துக்கொண்டு குர்ஆன் ஹதீஸ் அல்லாத எதுவும் மார்க்கம் இல்லை என பேச முடியுமா?

மவ்லூத் ஓதும் பள்ளிகளில் நிர்வாகிகளாக இருந்துக்கொண்டு ஷிர்க், பித்அத்தை விமர்சிக்க தகுதியிருக்கா?

பிறை விசயத்தில் தங்களிடையே ஒத்தக்கருத்து இல்லாதவா்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பிறை நிலைபாடு பற்றி பேச முடியுமா?


பொன்னாடையை ஏற்றுக் கொள்பவர்கள் தனி மனித வழிப்பாட்டை விமர்ச்சிக்க முடியுமா?

இவர்கள் யாரையும் விமர்ச்சிக்க மாட்டோம் (தவ்ஹீத் ஜமாஅத்தையும் பீஜேவை தவிர) என்ற மார்க்கத்திற்கு மாற்றமான முடிவின் காரணத்தினால் தான், ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ரசிகர்கள் கூட இவர்களை பாராட்டுகிறார்கள்.

Unknown said...

[தொடர்ச்சி]

//ஏதோ சிந்தாத சிதறாத கூட்டத்தோடு இருப்பதுபோல் குத்திக் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள், //

அசத்தியத்தில் இருக்கும் கூட்டாத்தை விட, சத்தியத்தில் இருக்கும் கூட்டம் அதிகமாக அடிக்கடி சிதறும். அசத்தியத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு அட்ஜஸ்மேன்ட் செய்து கொள்ளவார்கள். சத்தியத்தில் இருக்கும் கூட்டம் தவறு செய்பவர்களை பாரபட்சமின்றி தூக்கி எறியும். அதனால், தவ்ஹீத் ஜமாஅத் சிதறாது என்று நாங்கள் வாதாடவில்லை. உங்களுக்குள் ஒற்ற கொள்கை இல்லை என்பதை நீங்கள் மறுக்க இயலாது.

//கிளை கிளையாக பிரிந்தது எங்கேயிருந்து என்பது விளங்கும்//

எந்த கிளையை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன, அதை சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறோன்.

மற்ற பிரிவினையை நீங்கள் சொல்லுவீர்கள் என்றால், அது ஆப்பரேசன். ஒரு பாம்பு வீட்டுக்குள் இருக்கும் போது அதை அடிக்கலாம். வீடு முழுவதும் பாம்பாக இருக்கும் போது, அந்த வீட்டை விட்டு ஒடுவது தான் அறிவுடமை.

ஒற்றுமை ஒற்றுமை என்று பேசும் நீங்கள் குர்ஆன் ஹதீஸிலிருந்து ஒற்றுமைக்கு ஆதாரம் தாருங்களேன்.

//அண்ணன் மட்டுமல்ல இன்னும் கொள்கைச் சகோதரர்கள் நிறையபேர் அண்ணன் அவர்களின் வளர்ப்பிலும், உந்துதலாலும் வீரியமாக பிரச்சாரம் செய்யும் பெரும்பாலான சகோதரக்ளின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அனைத்தும் நன்மைய நாடியே அன்றி வேறேதும் இல்லை//

உங்களிடம் மிகப்பெரிய ஒரு விபரிதம் உள்ளது. தவறு செய்பவர்களை தங்களோடு வைத்து அழகு பார்க்க வேண்டும். இப்படி அழகு பார்த்தினால் தான் ஜாக் என்ற ஒரு மாபெரும் இயக்கம் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்தால் இது தான் ஏற்படும். தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்க அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்த போதிலும், தவ்ஹீத் ஜமாஅத் ஏன் வளர்ந்து கொண்டே போகிறது? காரணம் என்ன தெரியுமா? மார்க்க விஷயங்களில் விட்டு கொடுக்காத, அதன் உறுதி தான். இது உங்களுக்கு தவறாக தெரிந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டுதல் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உள்ளது. தவறு என்றால், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சுட்டிக்காட்டுங்கள். அதைவிட்டு, எனக்கு பிடிக்காது, என் நன்பருக்கு பிடிக்காது என்று சொல்லுவதால் ஒன்று நடக்கப்போவதில்லை.

//உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் ! இதயங்களை பிளந்து பார்த்ததுபோல் தீர்ப்பை வழக்கும் அதிகாரம் யாருக்குமே இல்லை !//

பகிரங்கமாக கந்தூரிக்கு அழைப்பு கொடுப்பவர்களின் இதயங்களை பிளந்து பார்த்து தான் முடிவு செய்ய வேண்டுமே! நல்ல தான் இருக்கு உங்க கொள்கை. உங்களின் கொள்கை என்னவென்று இப்போது தான் புரிகிறது.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர்களே : (அப்துல் ஹமீது & M.I.A.J)

தயை கூர்ந்து ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், என் நோக்கம் "எனக்கு உடண்பாடில்லை" என்று ஆரம்பித்த என் கருத்தாடல் எப்படி சாய்கிறது பாருங்கள் தனிமனித தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என்று அவர் இப்படி இவர் இப்படி என்று.

இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் //"எங்கள் இடத்தில்தான், நாங்கள் சொல்லும் இடத்தில்தான் நடைபெறனும் / நடைபெறும் என்று அடம்பிடிக்காத//"

//உங்களின் கொள்கை என்னவென்று இப்போது தான் புரிகிறது. //

நானே வாதி, நானே நீதிபதி என்ற கண்ணோட்டத்தில் பட்டென்று முடிவுக்கு வந்து விடாதீர்கள் !

அண்ணன் பேச்சும் எழுத்தும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னது உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று காட்டுவதற்கான நோக்கமென்றல்லாம் சொல்வது உங்களின் வாதமே தவிர...! எங்களின் நிலைபாடு அல்ல!

உங்களைப் பற்றியே நீங்கள் பெறுமையாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அடுத்தவர்களை ஏசிக் கொண்டே இருக்கிறீர்கள் அதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மற்றவர்களை வழிகேட்டில் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

ஆதாரம் கேட்டு கேட்டே... நிறைய பேருக்கு ஆத்திரம் வந்ததுதான் மிச்சமானது (இதனை சகஜமாகத்தான் சொல்லேடைக்கா சொல்லி வைக்கிறேன் :))

நிதானமாக கருத்தாடலை பின்னர் தொடர்கிறேன்... :) (கை குடுங்க பாஸ் சலாம் கொடுத்துக்கலாம்)

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்கள் அப்துல் ஜப்பார் மற்றும் ததஜவின் கொள்கைகளுக்கு உட்பட்ட அன்பு சகோதரர்களே அடுத்தவரை சாடுவது தான் உங்கள் இஸ்லாம் என்றால் இது அதற்கான தளமல்ல என்பது என்னைப் போன்ற அதிரைநிருபர் வாசகர்களுக்கு தெரிந்துவிட்டது.. ஏன் பொருமையற்ற வெறித்தனமான இந்த அநாகரீக போக்கு என்பது புரியவில்லை.

விமர்சனம், சுட்டிக்காட்டல் என்பது வேறு, சாடல் என்பது வேறு, இது போன்ற தனிமனிதர்களை தரக்குறைவாக பேசித்திரியும் உங்கள் சாடல் போக்குகளால் தான் உங்கள் பதிவுகளை அதிரைநிருபரில் பதிவதில்லை என்று 100% சதவீதம் எண்ணத்தோன்றுகிறது. இதுவே உண்மை.

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே அறிவான் ஆனால் உள்ளத்தில் உள்ளவைகளை அறியும் குணம் அனைத்து ததஜ சகோதரர்களுக்கு மட்டுமே உள்ளது போல் அவர்களின் கருத்துப்பறிமாற்றம் இங்கு நிகழ்கிறது என்னைப் போன்ற ததஜ ஆதரவாளனுக்கு வருத்தமளிக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகிறது... அடுத்தவனை விமர்சனம் என்று சாடுவது மீடியாக்களில் மட்டும் கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள்.

தன் இயக்கத்தவன் சொல்லுவது தான் மார்க்கம் என்ற ஈகோவே குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் பேசும் மற்றவர்கள் மார்க்க பிரச்சாரகர்கள் பேசுவது மார்க்கமல்ல என்று அவர் செய்யும் சிறிய தவறுகளை (பெரும்பாலும் புனையப்பட்டவைகள்) மட்டுமே பேசி அம்மார்க்க அறிஞர்களை ஏதோ மிகப்பெரிய வில்லன்கள் போன்று சித்தரிக்கும் பிற்போக்கு சிந்தனையே எல்லா குழப்பங்களுகும் காரணமாகிவிடுகிறது. இது எல்லா இயக்கத்தவரிடமும் உள்ளது.

என்றைக்கு தான் திருந்தப்போகிறோமோ நம்மை நாமே குறைகூறி திரிவதை. அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற கொஞ்சம்கூட அச்ச உணர்வின்றிருக்கிறார்களே கொள்கை என்ற பெயரலவில் சொல்லித்திரியும் சகோதரர்கள். அல்லாஹ் நம் எல்லோரையும் நேர் வழிபடுத்துவானாக.

Unknown said...

இன்றுவரை ததஜ ஆதரவாளனாக இருக்கும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..

யாராவது ஒருவன் எந்த ஒரு இயக்கத்தையும் சாராதவன் ததஜவை விமர்சனம் செய்தால்... உடனே அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது 5% சதவீதம் என்றால் மீதி 95% சதவீதம் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, கோவை அய்யூப், அபூ அப்துல்லாஹ், பாக்கர், செங்கிஸ்கான், கமாலுதீன் மதனி, ஜாகிர் நாயக், இலங்கை மவ்லவிகள் இவர்களை பற்றிய விமர்சனம் என்ற பெயரில் பெரிய லிஸ்ட் போட்டு, லிங்குகள் எல்லாம் கொடுத்து அதிகபடியான சாடல்களே மிதமிஞ்சி இருக்கிறது.மேலும் விமர்சன் செய்பவனை பற்றியுமான் சாடல்களும் கொட்டித்தீர்க்கப்படுகிறது. காரணம் மற்றவர்களுக்கு புரிந்திருப்பதால் என்னவோ ததஜவை விட்டு விளகி இருக்கிறார்கள்... ஆனால் சத்தியமாக இதுவரை ததஜ ஆதரவாளனான எனக்கு எந்த காரணம் புரியவில்லை.. அதனால் தான் என்னவோ இன்னும் நான் ததஜ ஆதரவாளனாக இருக்கிறேன்.

Unknown said...

ஒருவன் செய்யும் தவறால் ஒட்டுமொத்த இயக்கத்த்தில் உள்ளவர்களையும் நார் நாராக கிழித்து சாடுவது தான் நியாயம் என்றால், ததஜவில் உள்ள ஏதோ ஒருத்தன் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ததஜவையும் சாடுவதும் நியாயம் தானே.. ஆனால் இவ்வகையான போக்கை இரு தரப்பினரும் கையாண்டாளுவது நாகரீகமா என்பதை நடுநிலையோடு ததஜ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

Unknown said...

அதிரை ததஜவின் சமீபத்திய இரட்டை நிலைபாடு...

1)
ததஜ அல்லாத மற்ற பள்ளிகளில் தொழமாட்டோம் காரணம் அந்த பள்ளி இந்த பள்ளிகளில் பித்அத்கள் நடைபெறுகிறது, இமாம் அவைகளை தடுப்பதில்லை, நிர்வாக தடுப்பதில்லை என்று சொல்லி இதுவே ததஜவின் கொள்கையை சுட்டிக்காட்டுவது ஒரு நிலை.

ஆனால் ஃபஜரில் குன்னூத் ஓதுவது பித்அத், இப்படி நடைப்பெரும் சில பள்ளிகளில் ஃபஜர் ஜமாத்துடன் தொழும் ததஜ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடு மற்றொரு நிலை.

2
நீ தொழும் ஜும்மா, ஒரு பள்ளிக்கூடம் அங்கு பள்ளி ஆண்டுவிழாவில் சிறுவர்கள் நடனமாடினார்கள் ஆகவே நீ தொழும் ஜும்மா கூடாது என்று குர்ஆன் ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் பத்வா கொடுப்பது ஒரு நிலை.

ஆனால் ததஜ நடத்துத்திய பெருநாள் தொழுகை நடைப்பெரும் இடம் ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம், அவ்விடத்திலும் அருகிலும் எப்படியாபட்ட அநியாயங்கள், (குடி) அக்கிரமங்கள் நடைப்பெருகிறது என்பது ஊர் மக்கள் அனைவரும் அறிந்தது. இது எவ்வகையான குர்ஆன் ஹதீஸ் என்பது இதுவரை புரியவில்லை.


இரட்டை நிலைப்பாடு சுட்டிக்காட்டல் இன்னும் தொடரும்... இன்ஷா அல்லாஹ்...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர்களே !

வழக்கமாக நடப்பதுதான் இப்போது தொடர்கிறது !

இதுவரை கருத்தாடலில் பங்கெடுத்த சகோதரர்காளுக்கு நன்றி !

விமர்சனமாக இருக்க வேண்டிய கருத்தாடல் பாதை சாடலாக செல்வதால் திசைமாறும் பாதைக்கு ஒரு பூட்டு வாங்கி போடக் கூட முடியலையான்னு அன்பான வாசகர்கள் தொடர் மின்னஞ்சல் அனுப்பும் முன்னர் பொட்டியை மூடிட்டலாம்னு முடிவு செய்துவிட்டோம்.

வஸ்ஸலாம்

நெறியாளர்
www.adirainirubar.in

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு