அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் செயற்குழு கூட்டம் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் நேற்று 21-08-2012 அன்று மாலை 04:30 மணி முதல் நடைபெற்றது..
A E T-யின் செயலாளர் ஜனாப் M.S.தாஜுதீன் அவர்களின் பித்யோக அழைப்பினை ஏற்று அதிரை மற்றும் வெளியூர்களில் வேலை செய்யும் நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் பெருநாள் விடுப்பில் ஊரில் இருந்த இத்தருணத்தை பயன்படுத்தி இக்கூட்டத்தில் கலந்து இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பாக நல்ல பல பயனுல்ல விடயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தை AET செயலாளர் M.S. தாஜுதீன் அவர்கள் தொகுத்து வழங்கியதோடு அல்லாமல் மிகவும் அமைதியாக வந்தவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து தகுந்த பதில்களை உடனே அளித்தது குறிப்பிடத்தக்கவை.
இக்கூட்டத்தில் பின் வரும் முக்கிய செய்திகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
- இந்த ஆண்டின் வரவு செலவு கணக்கு.
- இந்த ஆண்டின் இதுவரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரம்.
- பள்ளி சேர்க்கையில் நிர்வாகத்தின் தலையீடு.
- Smart Fee தொடர்பான விளக்கம்.
- மாணவர்களின் நடத்தை, குறிப்பாக +1 மற்றும் +2 மாணவர்களின் நடத்தை பற்றி மிக கவலையுடன் பேசப்பட்டது.
- இமாம் ஷாஃபி பள்ளியின் VISION 2015 என்ற prensentation.
- மார்க்க கல்வியின் அவசியம்.
- பள்ளியின் ஆசிரியர்களாக மாணவ மாணவிகளை உருவாக்க நிர்வாகம் ஊக்கப்படுத்துவது.
- புதிய கட்டிடத்திற்கான செலவு பற்றியும் பேசப்பட்டது.
மாணவர்களின் சேர்க்கையில் நிர்வாகத்தின் தலையீட்டால் ஒரு சில பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்ட மாணவர்களை இமாம ஷாபி பள்ளியில் சேர்த்தததால் +1 மற்றும் +2 மாணவர்களின் நடத்தைகள் சரியில்லாமல் போனதற்கு காரணம், ஆகவோ பள்ளி நிர்வாகம் இனி மாணவர் சேர்க்கையில் இனி தலையீடாது மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பள்ளி முதலவர் அவர்களே முழு பொறுப்பு ஏற்பார்கள் என்ற முக்கிய அறிவிப்பு இந்த கூட்டத்தின் முக்கிய செய்தி என்று சொல்லலாம்.
கருத்துப் பரிமாற்றத்தில், சகோதரர்கள் அதிரை அஹமது, இபுறாஹீம், மாஹிர், செய்யது, M. தாஜுதீன், MSM நெய்னா, சலீம், ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் M.S. தாஜுதீன் அவர்கள் பதில் அளித்தார்கள்.
பின்னர் M.S. தாஜுதீன் அவர்கள் அதிரை வலைத்தளங்களுக்காக ஓர் பிரத்யோக பேட்டி அளித்தார்கள், இதோ அதன் காணொளி.
நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
7 Responses So Far:
இமாம் ஷாஃபி பள்ளியின் VISION 2015 என்ற presentation
பள்ளியின் ஆசிரியர்களாக மாணவ மாணவிகளை உருவாக்க நிர்வாகம் ஊக்கப்படுத்துவது
I hope the management and staff will make an effort to achieve the above objectives. If it will be done, almost of Adirai People’s support turn to Imam Shafi School. As of recent result of this institute let us know its growth. We hope they will upsurge more and will run as a certain speculative institution forever.
Abdul Razik
Dubai
பலர் விடுப்பில் ஊர் வந்திருந்தும் முக்கியமான இந்த கூட்டத்தில் பங்கு கொள்ளாதிருந்தது மிகவும் வருத்தத்தக்கது.
மாணவர்கள் சேர்க்கையை அதிகமாக்கி வருவாயை அதிகமாக்கலாம். குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்புகளிலும் இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் இருந்தால் மாணவர்களின் தரத்திற்கேற்ப தனிப் பயிற்ச்சி கொடுக்கலாம். எல்லாவற்றிற்கும் பெற்றோர்களின் ஒத்துழைப்பே மிகவும் இன்றியமையாதது.
மார்க்கக் கல்வியோடு சேர்ந்த கல்வியை நம் பிள்ளைகளுக்கு கொடுத்தாகவேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வருமானால், MST காக்கா கூறுவதுபோல் இன்ஷா அல்லாஹ் இமாம் ஷாஃபி பள்ளி உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இமாம் ஷாஃபி படிப்பில் குறை, பணத்தில் நிறை என்று கூறுபவர்களிடம் அவர்களின் முழு விபரத்தை பெற்று, சென்னை மற்றும் பிற இடங்களில் படிப்பவர்களின் தகவல்களையும் ஆய்வு செய்து அவ்வப்போது குறையிருந்தால் நிவர்த்தி செய்ய வேண்டும்.அல்லது மற்ற ஊர்களை ஒப்பிட்டு இதன் சிறப்பம்சங்களை அடிக்கடி அதிரையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
தொழில் சூழ்நிலையை தவிர படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக அதிரையை விட்டு குடிபெயர்ந்து அதிரையின், குடும்பத்தின் நல்லது கெட்டதுகளை எல்லம் துறந்து வாழும் நம்மவர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய பெண் பிள்ளைகள் 12 வது அல்லது ஒரு சிலர் கல்லூரியில் சாதாரண பட்டப்படிப்பு படித்து பின் திருமணமாகும் காலம் வந்து விடுகிறது, மார்க்கத்தில் முழு அறிவில் தன்னிறைவு பெறுவதில்லை எனவே, குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு 7 - 8 வது முதலே பொதுப்படிப்பு என்ற முறையிலிருந்து விடுபட்டு 50% மார்க்கக் கல்வி 50 % உலகக் கல்வி முறையிலான தனி பாடத்திட்டதை கொண்டு வரவேண்டும். (உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி படிக்க நினைக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் பொதுக் கல்வி இருக்கலாம்)
ஏற்கனவே நான் பதிந்த கருத்தின் சாரத்தினை மீண்டும் பதிகிறேன்...
பள்ளி மற்றும் ஆசிரிரியர்களே மாணவமணிகளின் வெற்றிக்கு முறையா அடிகோல முடியும், அதற்கு பெற்றோர்களின் (குறிப்பாக தாய்மார்களின்) ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும்.
பள்ளிக்கு சென்று அடிக்கடி விவாதம் செய்வது, ஆசிரியர்களோடு நேரடி மோதல் இப்படியெல்லாம் இல்லாமல், பள்ளிக்கென்று நிர்வாகம் இருக்கிறது அவர்களின் முறையாக எழுத்து மூலம் எடுத் துச் சொல்லி நிவர்த்திக்க முயல வேண்டும்.
அதிரையர்கள் நம் அனைவரின் கடமை இந்த பள்ளியின் வெற்றிக்கு தூண்களாக இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் !
மார்க்கக் கல்வியோடு சேர்ந்த கல்வியை நம் பிள்ளைகளுக்கு கொடுத்தாகவேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வருமானால், MST காக்கா கூறுவதுபோல் இன்ஷா அல்லாஹ் இமாம் ஷாஃபி பள்ளி உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நான் படித்த பல பள்ளிக்கூடங்களில் எமக்கு அதிகம் மார்க்கபோதனையுடன் கூடிய கல்வியை தந்த ஒரே பாடசாலை இந்த இமாம் ஷாஃபி(ரஹ்).. இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை உதவுவோம்.. பாடசாலைகளை இழுத்து மூடுவது மிக எழுது.. ஆரம்பிப்பதென்பது மிக மிக அரிது..
குறை இன்றி எந்த ஒரு நிறுவனமும் இல்லை..அதற்காக நிறை மறந்து குறை மட்டும் கண்டு, சில நூறுகளை கொடுக்க மனம் வராமல் பல நூறு மயில்களை தாண்டி ஆயிரங்களை வாரி வழங்குவதை விட்டுவிட்டு இருப்பதை நல்லபடியாக உபயோகித்துக்கொள்வோம்..
தரமான கல்வி கிடைக்க தரமான வாத்தியார்கள் தேவை..
தரமான வாத்தியார் பெற தாராளமான பணம் தேவை...
இதை பெற்றோர்கள் புரிந்து பள்ளி கட்டண அதிகரிப்பை ஏற்பதே இப்போதிற்கு சிறந்த வழியாக எமக்குதோன்றுகிறது..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முதலில் நேரடியாக அழைப்பு நிறைய பேருக்கு விடுத்தும் வெகு சிலரே கலந்து கொண்டது வருந்த தக்கதே, அதோடு எங்களைப் போன்ற அயல்நாடு வாசிகள் பெரும்பாலோர் (தூரமாக இருந்தாலும்) நிர்வாகத்தின் உணர்வுகளோடு கலந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும் இதுமாதிரியான இணைய கருத்தாடலின் வழி வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.
சகோதர வலைத்தளத்தில் சகோதரர் ASA ஜலீல் அவர்களின் கருத்து அவசியம் கவனிக்க தக்கதாகவே இருக்கிறது அதில் அவர் தெளிவாக விமர்சனமாக இல்லை ஆலோசனையாக சொல்லியிருக்கிறார் என்றே நல்லெண்ண நோக்கில் பார்க்க வேண்டும் (அது சரி அதுக்கு அங்கேயில கருத்தை பதியனும் இங்கே ஏன்? என்று முணுமுணுப்பதும் கேட்கிறது).
இங்கே என் கருத்தை பதிவதற்கான அவசியம் நானும் பெற்றோர்களை குறை கண்டிருந்தேன் (நான் அறிந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே) என்னுடைய முந்தைய கருத்தில் அதனாலே அந்த சகோதரரின் கருத்தை பார்த்ததும் பெற்றோரை மட்டும் குறை காண்பது சரியில்லை என்ற நிலைபாட்டிற்கு வரவேண்டியுள்ளது.
சகோதரர் குறிப்பிட்டிருந்த ஆலோசனைகளை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியதே !
மாற்றுக் கருத்துகள் அல்லது பதிலுரைகள் இருப்பின் நிர்வாகத்திடம் கேட்டும் இங்கே பதியலாமே இன்ஷா அல்லாஹ்...!
அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை நிருபர் வலைத்தளங்கள் மற்றும் இப்பள்ளியின் தாளாளர் ஜனாப் MST காக்கா ஆகியோர்க்கு நான் அனுப்பிக் கேட்டிருந்த விடயங்கட்கு MST காக்கா அவர்களிடமிருந்து மறுமொழி பின்னூட்டத்தில் அல்லது என் மின்மடலில் இன்றுவரை காணாவிட்டாலும், இப்பேட்டியில் என்னுடைய ஆதங்கமான “ஸ்மார்ட் க்ளாஸ்” க்காக வசூல் செய்வதன் விவரம் சொல்லப்படும் என்ற ஒரு செய்தி மட்டும் தான் எனக்கு மறுமொழியாக எடுத்துக் கொண்டாலும், முழு விவரம் வெளியிட வேண்டும். எனது கடிதம் print out எடுக்கப்பட்டு அக்கூட்டம் நடந்த அன்று உரியவர்களிடம் அன்புச் சகோதரர் விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் தானாக முன்வந்து வழங்கியுள்ளதாக அறிந்தேன். ஆயினும், நான் கேட்ட விடயங்கட்குத் தீர்வுகள் என்ன?
வாசகர்/வாசகிகளின் பார்வைக்கு என் வினாக்கள் சுருக்கமாக:
1) ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ள இப்பள்ளியில் ஆங்கிலத்தில் உரையாடாமல் இருப்பது ஏன்?
2) ‘ஸ்மார்ட் க்ளாஸ்” வசூல் என்பது அப்பள்ளியின் ஆசிரியர்கட்குப் பயிற்சி அளிக்க நாம் கட்ட வேண்டியது என்பது அவசியமா?
3) மாதாந்திர/வாரத் தேர்வுகள் பள்ளியின் ப்ரார்த்தனை மைதானத்தில் நடக்கும் பொழுது ஓர் ஆசிரியர் கூட கண்காணிப்பதில்லையே ஏன்?
4) “இண்டர்வெல் பிரியடில்” வடை, சமுசா வாங்க மாணவர்கள் அடித்துபிடித்து (சட்டை கிழியும் அளவுக்கு)நெரிசலில் கூட்டமிடுவது ஏன்?
5) 460 மதிப்பெண்கள் எடுத்த மாணவி தன் ப்ளஸ் டூ அப்ளிகேசனை பூர்த்தி செய்யத் தெரியாமல் விழிபிதுங்கி மற்றவர்களிடம் உதவி கேட்டும் கெஞ்சும் அளவுக்குத் தான் ஆங்கிலப் புலமை அங்குக் கற்பிக்கப்படுகின்றதா?
இங்குப் பின்னூட்டமிடுபவர்களில் பெரும்பாலோர் (குரிப்பாக சகோதரர்கள் இர்ஃபான், நூர்முஹம்மத் போன்றோர்கள்) கா.மு. பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் ஆங்கிலப் புலமையில் விஞ்சி நிற்பதன் காரணம்; கா.மு.பள்ளியில் அப்பொழுது எங்கட்குக் கிடைத்த ஆசிரியர்களின் “தியாக மனப்பான்மையுடன்” கூடிய அர்ப்பணிப்பான உழைப்பு போல் இந்த ISMS லும் ஆசிரிய /ஆசிரியைகள் கிடைக்க வேண்டும் என்பதை உணரலாம்.
பர்கத் சார் ஓர் அற்புதமான ஆங்கிலப் புலமை மிக்க பேராசிரியர்; கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்றியவர்கள். அதனாற்றான் (எப்பொழுதும் ஆங்கிலப் புலமையில் ஆர்வம் உள்ள MST காக்கா அவர்கள் பர்கத் சார் அவர்களை இப்பள்ளியின் முதல்வராக தெரிவு செய்திருக்கலாம்)பர்கத் சார் அவர்களின் கடின உழைப்பில் / பயிற்சியில்/ உரையாடலில் அங்கு ஆங்கிலப் புலமை மிளிர வேண்டும் என்பது எங்களின் அவாவும் துஆவும்! நான் சென்ற விடுப்பில் கண்ட வேதனையான விடயம் இதுவே: பர்கத் சார் மட்டும் தான் ஆங்கிலத்தில் மாணவர்களிடம் உரையாடுகின்றார்கள்/ கட்டளை பிறப்பிக்கின்றார்கள். மற்ற ஆசிரியர்கள் பாட வகுப்பில் மட்டும் தான் ஆங்கிலம் பேசுகின்றனர்.
ஓர் அலுவலகத்தில் ஆங்கிலம் மட்டும் பேசும் நபர்களிடம் ஆஃபீஸ் பாயாக ஒருவன் இருந்தால் எப்படி அவனுக்கு ஆங்கிலம் பேசித்தான் ஆக வேண்டும் என்ற “கட்டாயம்’ ஏற்படுமோ, அப்படி ஒரு சூழலை அப்பள்ளியில் இருந்தாலொழிய எக்காலத்திலும் முன்னேற்றம் காண இயலாது; வேதனையின் வெளிப்பாடாக எழுதுகின்றேன்.
மேலும், மாணவிகட்கான பகுதியில் (புதிய கட்டிடத்தில்) ஆண் ஊழியரகள் புழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்
Post a Comment