Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத் தூதர் - 13 - வஸ்வாஸும் 'அது'வும் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2014 | , ,

வஸ்வாசுக்கு மூன்று இடத்தில் அசிங்கம் என்பார்கள், இதை பலர் கேள்விப் பட்டிருக்கக் கூடும். முதலில் வஸ்வாஸ் என்பதன் பொருள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டு, அது என்ன வஸ்வாசுக்கு மூன்று இடத்தில் poo poo என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வஸ்வாஸ் என்பது வீண் சந்தேகம் என்பது நேரடிப் பொருள். ஆனால் அதனுள் பல வகைகள் இருக்கின்றன. உதரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

நாம் கதவைப் பூட்டி தாழ்ப்பாள் போட்டிருப்போம் ஆது உறுதியாகவும் தெரியும். ஆனால், மீண்டும் மீண்டும் பூட்டை அல்லது தாழ்பாளைப் போய் பரிசோதிப்பது, இரண்டு பேர் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், அங்கு வஸ்வாஸ் உள்ள ஒரு நபர் அவர்களைக் கடந்து செல்கிறார். இவராக நினைப்பார், "ஆஹா இந்த இரண்டு பேரும் நம்மைப் பற்றி அல்லவா பேசிக் கொள்கிறார்கள்' என்று நினைத்து மனதை அலட்டிக் கொள்வது. கணவனை மனைவியும், மனைவியை கணாவனும் சம்பந்தமில்லாத விஷயங்களில், வீண் கற்பனைகள் செய்து கொண்டு சந்தேகப் படுவது, குடும்ப உறுப்பினர்கள், சக உறுப்பினர்கள் மீது, சக நண்பர்கள் மீதும், இல்லாததும் பொல்லாததும் பற்றி வீண் கற்பனைகள்ம் சந்தேகங்கள் கொண்டு பொய் பேசுவது, அவதூறு சொல்வது இப்படியாக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதுமட்டுமல்ல, குடும்பத்தில் யாரும் இறந்து விட்டால், 'ஆஹா ! நாமும் சீக்கிரமே இறந்து விடுவோமோ, அடுத்தது நம்மைத் தான் அல்லாஹ் கைப்பற்றப் போகிறான்' என்றும், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் 'போச்சி போச்சி எல்லாம் போச்சி எனக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்' இப்படியாக வீண் சந்தேகம் கொள்வது. வீண் கற்பனை செய்து அப்படியே நம்பி ஏற்பது வஸ்வாஸ் என்பதன் அடிப்படையாகும். இவைகளை உண்டு பண்ணி, நம்மைக் குழப்பி, அதில் குளிர் காய்ந்து, அல்லாஹ் -ரசூல்(ஸல்) இடமிருந்து பிரித்து ஷிர்க்கையும், பித்அத்தையும் செய்ய வைத்து, கழுத்தறுத்து கடைசியில் நரகித்திலும் தள்ளும் இந்த வஸ்வாஸ் தனத்தை தூண்டுபவன் ஷைத்தான் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சரி ! இப்போது நடைமுறையில் 'வஸ்வாசுக்கும் மூன்று இடத்தில் அசிங்கம்' என்று சொல்லப்பட்டு வருவதை இப்போது பார்ப்போம்.

ஒரு வஸ்வாஸ் எண்ணம் கொண்ட சந்தேகப் பேர்வழி தெருவில் போய்க் கொண்டிருந்தான், அப்போது தெரியாத் தனமாக அவ்வழியே கிடந்த மனித மலத்தின் மீது கால் வைத்து விட்டான் (தெருக்கள் அந்த அளவுக்கு சுத்தமாக இருந்திருக்கிறது) 'அடடா ! இப்போ என்ன செய்வது, நன்றாக அது மலம் எனத் தெரிகிறது, ஆனால் அவனுக்கு அது மலம் தானா என்று தெரிந்து கொள்ள மனது தூண்டியது (சந்தேகம்). அவன் தான் வஸ்வாஸ் ஆச்சே ! இருக்காதா பின்னே ! அதனால, அதைக் குனிந்து பார்ந்து தன் காலில் ஒட்டிவிட்ட அந்த அசிங்கத்தை தொட்டுப் பார்த்தான், இன்னும் உறுதியானது. இது மலம் தான்னு. 'அட ! அதோட விட்டிருக்க கூடாது, அந்த ஆளு, எதுக்கும் நுகர்ந்து பார்க்கலாமேன்னு நினைத்து மூக்கு பக்கம் தன் கையை கொண்டு போனான், பாவம் அவன் மூக்கு மேலேயும் பட்டுவிட்டது. இப்பதான் அவன் ஒரு முடிவுக்கு வந்து "இது மலம் தான்" என்று ஒப்புக் கொள்கிறான். ஆனால் என்ன, கால் கை மூக்கு எல்லா இடத்திலும் அந்த அசிங்கம் ஒட்டிக் கொண்டது அதைத்தான் வஸ்வாஸுக்கு மூனு இடத்தில் "அது" என்று சொல்வார்கள். இபோது புரிகிறதா ?

சரி! வஸ்வாஸ் இல்லாதவன் எப்படி நடந்து கொள்வான் என்று பார்ப்போம்.

வஸ்வாஸ் இல்லாதவன் நடந்து செல்கிறான், அவன் தெருவில் கிடந்த மனித மலத்தை மிதித்து விடுகின்றான். உடனே புரிந்து விட்டது, ஆஹா ! இது மேப்புடியான்ல !, சட்டென முடிவெடுக்கின்றான் எப்படி நடந்து சென்றால் மேலும் மிதிபடமால் அது காலின் மற்ற பகுதிக்கும் பரவாதோ அப்படி நடந்து சென்று அருகில் இருக்கில் நிரில் தனது கால்களை நன்றாக சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவான்.

இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.

இனி,  இந்த வஸ்வாஸ்தனத்துக்கு நம் மார்க்கம் என்ன சொல்கின்றது எனப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

5 Responses So Far:

Ebrahim Ansari said...

மனிதர்களின் மனோ நிலை தொடர்பான சரியான முடிச்சு.

இதை விளக்கமாகக் கூறி அவிழ்க்கும் முறை அழகாக இருக்கிறது.

எழுத்திலும் சிந்தனையிலும் மெருகு கூடிக்கொண்டே வருகிறது. மாஷா அல்லாஹ்.

தொடரின் அடுத்த பகுதியை படிக்க ஆவலுடன் '

நான் மட்டுமல்ல நாங்கள்.

sabeer.abushahruk said...

வஸ்வாஸுக்கு இப்பத்தான் சரியான அர்த்தம் விளங்குகிறது.

கத கொஞ்சம் கப்படிச்சாலும் தெளிவான உதாரனம்தான்.

கலக்குங்கள் தம்பி.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட வைக்கும் விளக்கம்!

adiraimansoor said...

மச்சான் உன்மையான வஸ்வாசை விளக்காமல் விட்டு விட்டீர்களே

1.ஒழு செய்யும்போது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று தடவை நன்றாக எல்லா இடங்களிலும் தண்ணீர் படும்படி கழுவினாலே ஒழு நிறைவேறிவிடும் ஆனால் இந்த சைத்தானின் ஊசலாட்டம் உள்ளவர்கள் அதான் ஒஸ்வாஸ் ஒவ்வொரு உறுப்பையும் பதினைந்து இருவது தடவை கழுவுவார்கள்

2. ஒழு செய்து முடித்துவிட்டு இமாம் ஜமாத்துடன் தொழ வரிசையில் நிர்ப்பவர் ஜமாத்து முடியும்வரை அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் என்று தக்பீரை கட்டி அவிழ்த்து அவிழ்த்து கட்டுபவ்ரும் அந்த வஸ்வாசில் முதல் இடத்தை பிடித்தவராவார்

இப்னு அப்துல் ரஜாக் said...

வாசித்த கருத்திட்ட துவா செய்த எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு