Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 2 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, முன் மாதிரி என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இரண்டாவது அத்தியாயம் தொடருகிறது.

“திருக்குர்ஆனை மதிக்கிறோமா?”

திருக்குர்ஆன் இவ்வுலகில் அல்லாஹ்வால், நபி(ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் நம் யாருக்கு மாற்றுக் கருத்தில்லை. குர்ஆன், சுன்னா என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் நம் சமுதாயம் நமக்கு கிடைத்த காலத்தால் அழியாத அருட்கொடை திருக்குர்ஆனுக்கு உரிய மரியாதை கொடுத்து, நம்முடைய வாழ்வை திருக்குர்ஆனுக்காக கொஞ்சமாவது ஒதுக்கி இருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இந்த பதிவு ரமளான் நெருங்கிக் கொண்டிருப்பதற்காக மட்டுமல்ல. ஒரு சிலர் ரமளானில் திருக்குர்ஆனை ஓதிவிட்டு பெருநாளோடு மூடிவிட்டு அடுத்த ரமளானுக்குத் தான் திறந்து பார்ப்பார்கள். இன்னும் சிலரோ ரமளானின் முதல் இரண்டு நாட்கள் திறப்பார்கள், பின்னர் மூடிவிட்டு இறுதி மூன்று நாட்களுக்கு மட்டும் மீண்டும் திறந்து மூடுவார்கள். திருக்குர்ஆனை திறப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட திருக்குர்ஆனை மூடுவதில் மிக ஆர்வம் காட்டுகிறோம் என்பது நம்முடைய ஒவ்வொருவரின் மனசாட்சிக்கு தெரியும்.

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேத வசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும் என்பதை அல்லாஹ் பின் வரும் வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது

குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 
(அல்குர்ஆன் 54:32)

சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 10:57)

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.  (அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி)

இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)

இது போல் திருக்குர்ஆனின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் தேடினால் ஏராளம் காணலாம். ஆனால் நாம் எந்த அளவுக்கு திருக்குர்ஆனோடு நெருங்கியுள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆன் புரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நமக்கு எளிதாக்கி வைத்துள்ளான் என்பதை அறிந்த நாம், அந்த திருக்குர்ஆனை ஒரு பாரமாக நினைக்காமல், திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதி புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாமே!

இன்றைய காலகட்டத்தில், நம்முடைய இதயத்தில் ஏற்படும் நோய்களுக்கு நிவாரணம் என்பதை அறிந்துள்ள நாம் திருக்குர்ஆனை ஓதி, பொருள் உணர்ந்து நம்முடைய நோயை குணப்படுத்த முயற்சிக்கலாமே!

மனிதர்களில் சிறந்தவர், திருக்குர்ஆனை தானும் ஓதி, பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே என்ற நபிமொழியை அறிந்த நாம், இனி நாமும் ஓதி பிறருக்கும் ஓத கற்றுக்கொடுக்க முயற்சிக்கலாமே!

திருக்குர்ஆனைக் கொண்டே அல்லாஹ் ஒரு சிலரை உயர்த்துகிறான், ஒரு சிலரை தாழ்த்துகிறான். திருக்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி, அதனை நம் வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு அல்லாஹ் உயர்த்தும் அந்த நல்ல மனிதர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே!

திருக்குர்ஆனை நாம் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும், பொருள் உணர்ந்து ஓதவேண்டும், கற்றவைகளை நம் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

திருக்குர்ஆனை அழகிய குரலில் ஓதிய 11 வயது சிறுமி ஹாபிழ் பராஆ, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைத்தார் என்பது நாம் அறிந்தது. இந்த சிறுமியின் குரலில் வெளிவந்து உலக புகழ்பெற்ற சூரத்துர் ரஹ்மான் கிராஅத்தை தமிழ் மொழியாக்கத்துடன் காணொளிக் காட்சியாக தயாரித்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு.


சிறுமி ஹாபிழ் பராஆ அவர்கள் தூய இஸ்லாத்திற்காக திருக்குர்ஆனை ஓதி தன்னுடைய அழகிய குரலை அர்பணித்து இவ்வுலகை விட்டு மறைந்துள்ளார். ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் இந்த தூய இஸ்லாத்திற்காக நாம் என்ன அர்பணிப்பு செய்துள்ளோம்? இந்த கேள்வியை உங்களுக்கும் எனக்குமாக கேட்கிறேன்.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

3 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

Yasir said...

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவா

sabeer.abushahruk said...

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு