Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'வாடா' இங்கே ! [ரமளான் ஸ்பெஷல்] 10

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2014 | , , , , ,

அதிரையில் ரமளான் அதற்கான ஆயத்தங்கள், ரமளான் காலங்களில் பரபரப்பாகும் மாலை நேர இஃப்தார் தேவைகளுக்கான கடைகளின் அணிவகுப்பு அவர்களின் வியாபாரம் இப்படியாக.

ரமளான் என்றால் எண்ணெயில் பொரியும் அயிட்டங்களில் சற்றே அதிகமான மக்களால் விரும்பிச் சுவைக்கும் உணவு வகைதான் 'வாடா, சமோசா'. நோன்பு கஞ்சிக்கு பெரும்பாலான நேரங்களில் பக்கபலமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இந்த இரண்டு அயிட்டங்களும் கண்களை மட்டுமா ஈர்க்கும், நபுசையும் அசைக்கும் !

எல்லோரும் கடை போட்டுட்டாங்க இன்னும் நீங்கதான் ரமளான் கடை போடலையான்னு கேட்டுவிடக் கூடாது அல்லவா ! அதனால பசிக்கு ஏற்ற ருசியிருக்கும் சட்டியை நோக்கியது எமது மூன்றாம் கண் அதன் பளிச் கிளிக்தான் 'வாடா இங்கே' !

'வாடா இங்கே' உருவாகிறது !மென்மையான கூட்டாளிகள் !புது மாப்பிள்ளை முறுக்குடன் கம்பீரமாக செக்கசெவேலென்று பளிச்சென்று இருக்கும் மற்றுமொரு கூட்டாளிகள் கூட்டம்!


Sஹமீது
இது ஒரு மீள்பதிவு...

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா

உங்கள் படங்கள் பார்த்தே, வாடா சுட்டு விடலாம் போல் இருக்கிறது.அவ்வளவு பதவிசு!(பதவிசு-credit goes to msm(n) .

ஒரு மார்க்க ஆலிம் சொன்னார்,"நோன்பு இல்லாத காலங்களை விட,நோன்பு காலங்களில் தான்,நிறைய உணவு அயிட்டங்களையும்,வயிறு முட்டவும் உண்கிறோம்.உண்ணும் நேரங்கள் மட்டும்தான் வேறு."என்று.

அல்லாஹ்,நம் எல்லார் நோன்புக்களையும் ஏற்று,நிறைய கூலிகளால் நிரப்புவானாக,ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எஸ். ஹமீது காக்காவின் நப்ஸை அலங்கமலங்க படுத்தும் நல்லதொரு பதிவு. ட்ரண்டு மாறி வருவதால் அந்த பத்தாய்க்கைலிக்கு பதில் குதிரை மார்க் வெள்ளை வேட்டியில் ட்ரைப்பண்ணலாம்.

Aboobakkar, Can. said...

மெது வடைக்கு ஓட்டை போட்ட நீங்கள் வாடாவிற்கு
ஓட்டை போடாமல் சுட்டது பெரிய குற்றமாக்கும் ....

sabeer.abushahruk said...

ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க!

எம் எஸ் எம் மின் பதிவைத் தொடர்ந்து இப்ப ஹமீதின் இந்தப் பதிவு.

அது நெனப்ப ஊற வச்சுது; இது நாக்க ஊற வைக்குது!

இப்ப நாங்க இங்க எங்க பொழப்ப பாக்றதாஇல்லே ரிஸைன் பண்ணிட்டு ஊருக்கு ஓடிப்போறதா!

இப்டி தூண்டில் போட்றீங்களப்பா!

Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//மெது வடைக்கு ஓட்டை போட்ட நீங்கள் வாடாவிற்கு
ஓட்டை போடாமல் சுட்டது பெரிய குற்றமாக்கும் ....//

வாடவ திங்க சொன்ன ஓட்டையை என்னுரியல இது நியாயமா/

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//எஸ். ஹமீது காக்காவின் நப்ஸை அலங்கமலங்க படுத்தும் நல்லதொரு பதிவு. ட்ரண்டு மாறி வருவதால் அந்த பத்தாய்க்கைலிக்கு பதில் குதிரை மார்க் வெள்ளை வேட்டியில் ட்ரைப்பண்ணலாம்.//

இந்த பத்தாய் கைலி அடுத்த நோன்புக்கு கலர் வெளுத்து வெள்ளைகைலியா மாறிடும் கவலைபடாதிய

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. SHameed

Really crispy vaadaa, methu vadai, and samosa(they call samboosa in arabic here). The crystal clear pictures of varieties of vadais induces my nose to invoke the memories of each smell now itself. My nose is trying by sniffing to produce such smell.

Fortunately this post arrived not in Ramadan days.

Thanks for the post.

Jazakallaah khairan

B. Ahamed Ameen from Dubai.

ZAKIR HUSSAIN said...

நோன்பில் இந்த போட்டோவை பார்த்தால் நிச்சயம் பசிக்கும் !!

Yasir said...

நாவில் எச்சில் ஊறுகின்றது...ஆனால் மலிவான ஆயிலில் சூடப்படும் வாடா-வை தின்றால் ஏற்ப்படும் நெஞ்சரிச்சல் பயமுறுத்துகின்றது

Ebrahim Ansari said...

எனது இன்டர்நெட் இணைப்பு செய்த கோளாறால் நான் வந்து பார்ப்பதற்குள் இந்த வாடா ஆறி அவலாப் போச்சே.!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு