நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 17 - ஆங்கிலமும் ஆங்கிலேயனும் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூன் 29, 2014 | , ,

பொதுவாக நமது உலமாக்கள் பலர், மேடைப் பேச்சாளர்களாக, தலைவர்களாக, எழுத்தாளர்களாக என்ற ஒரு வட்டத்தில் - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் (உலமாக்கள்) எடுத்த முக்கிய முடிவு பற்றி தவறான அபிப்பிராயங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதாவது, "அந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த உலமாக்கள் பலர் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்' என்று சொல்லி, நம் மக்களை ஆங்கிலக் கல்வி படிப்பதை தடுத்தனால், படித்து பெற்று உயர் நிலைக்கு வரவேண்டிய மக்கள் கல்வியை இழந்து அதனால் பல நல்ல வாய்ப்புக்களை இழந்து இன்னும் பின்தங்கி இருக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்று முழங்கி வருவதையும், எழுதி வருவதையும் நாம் அறிவோம்.

உலமாக்கள் அவ்வாறு சொன்னது உண்மைதான் அதுவே என் பார்வையுமாகும், அதனால் நம்முடைய பல நல்ல வாய்ப்புக்களை இழந்து சுமாராக 50 வருடங்களுக்கு மேல், பின் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதும் உண்மைதான். நாம் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு, கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், சாதி இந்துக்கள் இன்னும் பிற சாதியினர் ஆங்கிலக் கல்வி பயின்று, அதன் மூலம் ஆங்கியேலே ஆட்சியில் உயர் பதவிகள் பெற்றும், பிறகு சுதந்திரம் கிடைத்த பின் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்ததும், வட இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் தினக் கூலிகளாக மாறிப் போனதும், தென்னிந்திய முஸ்லிம்கள் பலர் வியாபாரிகளாக இருந்தாலும் மொத்த சதவிகிதத்தில் பெரும்பான்மையோர் கூலித் தொழிலாளர்கள் என்பதும், நாம் ஆங்கிலம் / ஆங்கில வழிக் கல்வியை இழந்ததன் ஒரு பகுதி மூலம் கிடைத்த பரிசுதான் அது என்பதும் உண்மையே! ஆனால், அதன் மறுபுறம் நமக்கு கிடைத்த இன்னொரு பெரிய பரிசும் ஒளிந்திருக்கிறது. அதனைப் பலர் சொல்வதுமில்லை எழுதுவதுமில்லை.

நம் உலமாக்கள் மேலோட்டமாக ஆங்கிலேயர்களின் வெறுப்பால் மட்டும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ரு பத்வா கொடுக்கவில்லை, ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தை "மதமாற்றம்" செய்யும் ஒரு முயற்சியாக - பரீட்சித்துப் பார்த்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.

உதாரணமாக, கிறிஸ்தவ மிஷனரிகளை ஊக்குவித்து பள்ளி, கல்லூரிகள் திறந்து பயிற்று மொழியாக ஆங்கிலத்தை உருவாக்கி, அதனூடே மதப்பிரச்சாரமும், பைபிள் மூலம் உள்ள கதைகளை கட்டுரைகளை ஆங்கிலத்தில் பயிற்றுவித்து கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். மறுபுறம் காசு, பணம் கொடுத்தும், வசதியான வாழ்க்கை முறைக்கு ஆசை காட்ட்யும் கிறிஸ்தவத்தை வளார்க்கத் துடித்தார்கள். இதற்கு சில பலன்கள் அவர்களுக்கு கிட்டின.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் இது எதிரொலித்தது. சாதி இந்துக்கள் மற்றும் தலித் இன மக்கள் என்று பலர் சிறிது சிறிதாக கிறிஸ்தவம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இன்றும் கூட, இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதியின் பெயராலேயே கிறிஸிதவத்துக்கு மாறிய பின்பும் அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் கூட பல சிங்கள புத்த மதக்காரர்கள் கிறிஸ்தவம் நோக்கிப் போனார்கள். யாழ்பானம் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் என்ற இந்துக்கள் கிறிஸ்தவம் நோக்கிச் சென்றார்கள் இன்னும் இந்து மத சாதிகளின் மூலமாகவே கிறிஸ்தவத்திலும் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். சிங்களவர்களில் முன்பு யாருமே கிறிந்தவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களே ! ஆங்கிலக் கல்வியின் தாக்கம், அவர்களை தடுமாற வைத்தது எனவே, புத்த மதம் துறந்து கிறிஸ்தவம் தேடிப் போனார்கள்.

இந்நிலையில்தான், நபிமார்களின் வாரிசுகளான நம் உலமாக்களைக் கொண்டு அல்லாஹ் நம் மூதாதையர்களைக் பாதுகாத்தான். ஆம் ! அவர்கள் அன்று ஆங்கிலம் கற்பது திறிஸ்தவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மையும் நம் ஈமானையும் காற்றினான். இது அல்லாஹ் நமக்குச் செய்த பேரருள் என்றால் மிகையல்ல. ஆங்கிலம் கற்காமல் விட்டதனால், நம் இவ்வுலக முன்னேற்றம் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், மிக உயர்ந்த செல்வமாகிய "ஈமான்" காப்பற்றப்பட்டிருக்கிறது. அந்த நம் முன்னோர்களாகிய உலமாக்களின் பாவங்களை மன்னித்து கபுரை வெளிச்சமாக்கி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் என்ற உயரிய சுவர்க்கத்தைக் கொடுப்பானாக.

இப்போது அதே ஆங்கிலம் மூலமாக இஸ்லாம் மேலோங்கி வருகிறது, காஃபிர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ், சூழ்ச்சிக் காரனைவிட மிகப் பெரும் சூழ்ச்சிக்காரன் அல்லவா ! ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் திருக்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பை படித்து இஸ்லாம் நோக்கி முன்னேறுகிறது. இன்றைய சூழ்நிலைக்கு நமக்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். ஆரபி மொழியையும் ஆங்கிலத்தையும் கற்று நம் இனைமி இஸ்லாமை உலகெலாம் பரப்ப சூளுரை செய்வோம் ! இன்ஷா அல்லாஹ் !

குறிப்பு : நாம் எந்த நாட்டில் எந்த மொழி பேசும் மக்களிடையே வாழ்கிறோமோ அங்குள்ள இஸ்லாமிய சேவை நிலையங்களை (Islamic Cetner) தொடர்பு கொண்டு, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் புத்தகங்களை அம்மக்களுக்கு கிடைக்குமாறு செய்ய நாமும் ஒத்துழைப்பதோடு பொருளாதார உதவியும் செய்து, தாவா பணீக்கு முன்னுரிமை கொடுப்பது நம் கடமை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

7 Responses So Far:

Ahmed Ali சொன்னது…

////இந்நிலையில்தான், நபிமார்களின் வாரிசுகளான நம் உலமாக்களைக் கொண்டு அல்லாஹ் நம் மூதாதையர்களைக் பாதுகாத்தான். ஆம் ! அவர்கள் அன்று ஆங்கிலம் கற்பது திறிஸ்தவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மையும் நம் ஈமானையும் காற்றினான். இது அல்லாஹ் நமக்குச் செய்த பேரருள் என்றால் மிகையல்ல. ஆங்கிலம் கற்காமல் விட்டதனால், நம் இவ்வுலக முன்னேற்றம் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், மிக உயர்ந்த செல்வமாகிய "ஈமான்" காப்பற்றப்பட்டிருக்கிறது. அந்த நம் முன்னோர்களாகிய உலமாக்களின் பாவங்களை மன்னித்து கபுரை வெளிச்சமாக்கி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் என்ற உயரிய சுவர்க்கத்தைக் கொடுப்பானாக.///////

ஆமீன்.!!!! யா ரப்பல் ஆலமீன்.!!!!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வித்தியாசமான கோணம்தான்.

எனினும், கல்வியில் பின்னடைவிற்கான காரணமான ஆங்கில பகிஷ்கரிப்புக்கான காரணம் ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…


அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் காக்கா...

நிங்கள் சொன்ன மாதிரி கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தினை சொல்கிறது...

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Ibn AbdurRazzak,

The opposition against the English language was to show our hatredness towards the British occupying power. The fathwa against English language was a blunder mistake. There is no point in justifying this mistake, because language is a communication medium to convey our thoughts.

When we are well versed in the language we can(could) argue and debate against the british occupying power and fight effectively got the freedom earlier.

Non muslims could have been converted by christian missionaries because their faith is baseless and fuzzy. But its very rare to convert muslims to non muslim faith. Here again faith is the key, not the English language which is just a medium of communication.

Your statements in previous paragraphs are contradicting with final paragraph before the note.

Generally our readers are hesitating to write comments on religious articles to avoid unnecessary arguments in religous matters. But if the concepts explained are cotradicting lets not hesitate.

Brother Mr. Sabeer's opinion is right.

Thanks and regards,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari சொன்னது…

தம்பிகள் சபீர் & அமீன் ஆகியோரின் கருத்துக்களையே நானும் வழி மொழிய வேண்டிய நிலை.

இன்று நமது பிற்பட்ட நிலைக்கு ஒரு வலுவான காரணமாக அமைந்துவிட்டது. ஆங்கில மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாம் தழைத்தோங்குவதற்குக் காரணம் பொதுவான கல்வி வளர்ச்சி, தகவல் தொழில் நுட்பவளர்ச்சி, சிந்தனை வளர்ச்சிகள். அத்துடன் அல்லாஹ்வும் ஹிதாயத் கொடுக்கிறான்.

அதற்காக படிக்க வேண்டிய காலத்தில் ஆங்கிலத்தைப் படிக்காமல் விட்டதற்கான விலைகளை இந்த சமுதாயம் இன்னமும் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இதே போல் தான் புகை வண்டி நமது ஊருக்கு வரப் போகிறது என்றது ஊரின் அமைதி கெட்டுவிடும் என்று எதிர்த்தார்களாம். இதனால் வண்டிப் பேட்டியில் அமைய இரு ந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கடற்கரைப் பக்கம் போனதாம்.

நீண்ட நெடுங்காலம் என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் வெள்ளிக் கிழமை குத்பா ஓதிக் கொண்டிருந்த ஊர் நமதூர். அதன்பிறகு வந்தவைதான் பயான் போன்றவைகள்.

வளர்ச்சியை நமது எல்லைகளை மீறாத அளவில் ஏற்றுக் கொண்டு நாமும் சேர்ந்து வளர்வதில் தவறில்லை.

sheikdawood mohamedfarook சொன்னது…

//வண்டிபேட்டையில்அமையஇருந்தரயில்நிலையம்கடல்பக்கம்போனது//மைத்துனர்இப்ராஹிம்அன்ஸாரிசொன்னது.அடப்பா!இப்பதான்ப்பாஓஞ்சுச்சு!ஒரேகோகிச்சுகிச்சுகுச்சு!கோகிச்சு!நிம்மதியாதூங்குறோம்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

கருத்திட்ட வாசித்த துவா செய்த அனைவருக்கும் நன்றி.
மாற்றுக் கருத்தை வரவேற்கிறேன்.
கட்டுரையில் உள்ள spelling தடுமாற்றத்திற்கு மன்னிக்கவும்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+