அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம்
அமைதி பெறும், நேர்வழியும்
கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)
அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால்,
உள்ளங்கள் அமைதி பெற்று
இம்மை மறுமை வாழ்வில்
வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
கல்வியின் சிறப்பு
அல்லாஹ் கூறுகிறான்:
இறைவா கல்வியை எனக்கு
அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114 )
அறிந்தவர்களும்,
அறியாதவர்களும் சமமாவார்களா? என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 39:9 )
உங்களில் இறை
நம்பிக்கையாளர்களுக்கும், அறிவுடையோருக்கும் பல பதவிகளை அல்லாஹ் வழங்குவான். (
அல்குர்ஆன் : 58:11 )
அல்லாஹ்வின் அடியார்களில்
அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன் : 11:85 )
''அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடிவிட்டால், மார்க்க விஷயத்தில் அவரை
அறிஞராக்குவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1376)
''இருவர் விஷயத்திலே தவிர பொறாமை கூடாது. 1) அல்லாஹ் செல்வத்தை
வழங்கி, அதை உரிய வழியில் செலவு செய்பவர். 2) அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதன்
மூலம் தீர்ப்பளித்து, பிறருக்கு கற்றுத் தருபவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்
(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1377)
''நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி
வைத்ததற்கு உதாரணம் : பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி
தண்ணீரை ஏற்றுக் கொண்டு, செடி-கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை
தேக்கி வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும்
அதிலிருந்து குடித்தார்கள். (கால் நடைகளுக்கு)
குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி,
கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச்
செய்யாது.
இதில் முதல் உதாரணம், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை
அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயன் அளித்து, (அதாவது) தானும் கற்று, பிறருக்கும்
கற்றுக் கொடுத்தவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரை உதாரணம்) மார்க்கத்தின்
பக்கம் தன் தலையைக் கூட திருப்பாமல், அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த
வழியை ஒப்புக் கொள்ளாமல் இருப்பவனுக்கும் உதாரணமாகும்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1378)
''நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களிடம், ''அல்லாஹ்வின் மீது
சத்தியமாக, அல்லாஹ் உம் மூலம் ஒருவனுக்கு நேர்வழி காட்டுவது, சிவப்பு நிற
ஒட்டகைகள் உமக்கு இருப்பதை விட சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1379)
''கல்வியைத் தேடியவராக ஒரு வழியில் ஒருவர் நடந்தால், அவருக்கு அல்லாஹ்
சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1381)
''நேர்வழியின் பக்கம் ஒருவர் அழைத்தால், அதைப் பின்பற்றுவோருக்கு
கிடைப்பது போன்ற கூலி அழைத்தவருக்கும் கிடைக்கும். இது, அவர்களின் கூலிகளில்
எதையும் குறைத்து விடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) அவர்கள்(முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1382)
''ஆதமின்
மகன் (மனிதன்)இறந்து விட்டால் மூன்றைத் தவிர மற்ற செயல்கள் எல்லாம் முடிந்து
விடும். 1) தொடர்ந்து நன்மை தரும் தர்மம் 2) இவர்
மூலம் பயன் பெறப்படும் கல்வி 3) அவருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1383)
''ஒருவர் கல்வியை தேடிச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை
அல்லாஹ்வின் வழியில் உள்ளார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1385)
''ஓர் இறைநம்பிக்கையாளர்,
சொர்க்கத்தை அடையும் வரை அவர் நல்ல காரியங்களில் (நன்மை பெறுவதில்)
திருப்தியடையமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூஸயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் (திர்மிதீ)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1386 )
''நிச்சயமாக அல்லாஹ், மக்களிடமிருந்து முற்றிலுமாக கல்வி அறிவைக்
கைப்பற்றி விட மாட்டான். எனினும் அறிஞர்களை கைப்பற்றுவதின் மூலம் கல்வி அறிவைக்
கைப்பற்றுவான். இறுதியாக எந்த அறிஞரும் இல்லை என்றாகி விட்டால் மக்கள் மடையர்களை
தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் (நியாயம்) கேட்கப்பட்டால்,
அறிவின்றி தீர்ப்புக் கூறுவார்கள். இதனால் அவர்கள் தானும் வழிகெட்டு, பிறரையும்
வழி கெடுப்பார்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா
இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1392 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
5 Responses So Far:
கல்வியின் சிறப்பைச் சொல்லும் அருமருந்து !
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !
கற்க கசடற என்பதை 1400 வருடங்களுக்கு முன்பே சொன்ன மார்க்கம் நம் மார்க்கம்; கற்பதில் சுணக்கம் காட்டிய மக்கள் நம் மக்கள்.
ஜஸாகல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.
கல்வியின் சிறப்பையும் தேவையையும் கூறும் இறைமறை மற்றும் நபி மொழிகள் கலந்த அருமருந்து.
மார்க்கக் கல்வி / உலகக் கல்வி என்று கல்வியை பிரித்து இருக்கிறார்கள். உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியையும் சேர்த்து கற்பிக்கும் நிறுவனங்கள் நிறைய உருவாக வேண்டும் .
மேலும் மார்க்க கல்வியை மட்டும் கற்று பட்டம் பெரும் ஆலிம்களையும் உலகக்கல்வி கற்று பட்டங்கள் பெறுவோர்களையும் சமூகத்தில் சரிநிகர் சமானமாகப் பார்ப்பது இல்லை. இது மிகவும் வேதனைதரும் சூழலாகும்.
ஆலிம்களுடைய சம்பளம் முதலியவைகளை முஹல்லா ஜமாத்கள் நிரப்பமாக கொடுப்பதில்லை
இத்தகைய காரணங்களால் - பொருளாதார நிலைமைகளை உத்தேசித்து மார்க்கக் கல்வி பயில பலர் முன் வருவதில்லை.
இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
சிறந்த தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைரைன்.
சிறந்த தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைரைன்.
சிறந்த தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைரைன்.
Post a Comment