நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் - 1 8

ZAKIR HUSSAIN | திங்கள், ஜூன் 30, 2014 | , , , ,

அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் விசயத்தை விட்டு அடுத்த விசயங்களில் ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் அதை பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் ...

பெண் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம்  Vs  நவீன முஸ்லீம்கள்

பசங்களை விட பெண் பிள்ளைகளின் மார்க் இப்போது அதிகம் பேசப்படுகிறது. காரணம் பசங்க இப்போது ஒரே பாடலில் ஃபேக்டரி கட்டி முன்னேறி, மெர்சிடிஸில் வந்து இறங்கும் ஹீரோக்களின் வாழ்க்கையை நடைமுறையில் வாழப்பார்ப்பதுதான். ['அது சினிமா, இது வாழ்க்கை ' என்று சொல்லி இந்த வெண்ணைகளுக்கு விளங்க வைக்க இதுவரை பெரிய முயற்சிகள் ஏதும் இல்லை].

தொடர்ந்து எல்லா விசயத்திலும் ஏமாற்றப்பட்ட தென் தமிழ்நாட்டு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம்கள் வெளிநாடுகளை நம்பி வந்ததும், பின்னாளில் அவர்களது பிள்ளைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைத்ததும், இப்போது பிள்ளைகளின் வாழ்க்கை மாற்றம், கல்வி முன்னேற்றம் எல்லாம் வரமாகவும் அதே சமயம் கல்யாண காலம் என்று வந்தவுடன் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளை அளவு படிக்காததால் ஒரு 'கால மிரட்டல்' மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகிறது என்பது என்னவோ உண்மை. இதில் மார்க்கத்தை பின்பற்றி வாழ்வது, நம் இந்திய கலாச்சாரங்கள் எல்லாமே ஒரு சவால் ஆகிவிடுகிறது. அமெரிக்கா / ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் பள்ளிவாசலை தானாகவே உருவாக்கி தொழ வேண்டிய கட்டாயத்தில் என நினைக்கிறேன்.

வளைகுடா நாடுகளில் மார்க்கம் பேன பிரச்சினை இல்லை என்றாலும், வேலைக் களைப்பில் வீடு / ரூம் திரும்பும் போது நாம் குடிக்கும் டீ யை நாமே போடும் அவலம். [ஆயிரம் வசதிகள் இருந்தாலும் யாராவது டீ போட்டுத் தருவது / கார் கதவை திறந்து விடும் சுகம் மாதிரி ஒரு சுகம் எதிலும் இல்லை ].


இதில் வாழ்க்கையை மாற்றி அமைக்க சிந்தித்து சிந்தித்து அதை நடைமுறை படுத்தலாம் என்று ஊர்வரும் போது பிள்ளைகள் யுனிவர்சிட்டிக்கும், அல்லது கல்யாணத்துக்கும் தயாராகி விடுகிறார்கள். இளமை வாழ்க்கையில் பெரும் சம்பாத்யத்தை வீட்டுக்கு கொட்டி கட்டிய சூழ்நிலை ஊர் மெச்ச கட்டிய வீடுகள் வருமானம் தராது என்று தெரிந்தும்  எதிர்காலம் - கையிருப்பு எல்லாம் மிரட்டலாக தெரிய பெருவாதிபேர் திரும்பவும் ஃப்ளைட்டில் ஏறி திரும்பி வரும்போது அடித்துப் போட்ட  மாதிரி தூங்கிப்போய் விடுகின்றனர்.

சரி இப்போது விசயத்துக்கு வருவோம்... இன்றைய சவால்தான் என்ன?.

அது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, உள்ளூரில் இருந்தாலும் சரி. பெண்களை முடக்கிப்போடும் புத்தி இன்னும் மாறவில்லை. பெண் படித்து , அவளாகவே வாழ்வதற்கு தடை போடுபவர்கள் சமயங்களில் மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசுவது மாதிரி  பேசினாலும், எப்போதும் எதிர்காலத்தை பற்றி நெகடிவ் ஆகவே பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நம் ஊரின் மக்கள் தொகையை 'அதிரை பிறை' வளைத்தளத்தில் பார்த்தேன். மொத்த அதிரை மக்கள் தொகையில் பெண்களை 50% எடுத்துக் கொண்டாலும் அதில் 40 சதவீதம் உழைக்கும் வயதில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு  44,315 ப்ரொடக்டிவ் நேரத்தை விரயம் செய்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையின் ஒரு மாத ப்ரொடக்டிவ் நேரம்.

ஆனால் இவை அனைத்தும் பசாது பேசவும், மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதிலும், டெலிவிசன் சீரியலிலும் அநியாயத்துக்கு அழிகிறது.
 
இப்படி வேஸ்ட் ஆகும் நேரத்தை என்ன செய்யலாம் என்பதை வாசகர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறேன். [உடனே பொம்பளைங்க எல்லாம் நாளைக்கே ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டாம். அதற்கு எல்லாம் ஒரு டைம் ஃப்ரேம் இருக்கிறது, தவிரவும் 'நீ என்ன படிக்கப்போறே?' என்று பெண்கள் கேட்டால் நாம என்ன செய்றது?].

பொதுவாகவே முஸ்லீம்கள் மார்க்கம் பற்றி பேச ஆரம்பித்தாலே அது என்னவோ உலகக் கல்விக்கு அப்பாற்பட்டது என்ற நிலையிலேயே பெரும்பாலான இடங்களில் சொல்லித் தரப்படுகிறது.

இப்போது இருக்கும் நவீன விஞ்ஞான முன்னேற்றம் மார்க்கத்தை மிக எளிதாக கொண்டு செல்ல உதவும். [மற்றவர்களிடம்]. இப்போது உள்ள சில இஸ்லாமியப் பள்ளிகள் அட்டோமிக் எனர்ஜி / நியூக்ளியர் மெடிசன் சொல்லிக் கொடுக்கும் அதே உத்வேகத்துடன் மார்க்கத்தையும் கற்றுத் தருகிறது. முஸ்லீம்கள் என்று பெயர் இருந்தால் மட்டும் போதாது,  இந்த உலகத்திலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ வேண்டும்.... அதை பெண்கள் உணர வேண்டும்.

எல்லாம் ஃபார்வேர்ட் மயம்

வாட்ஸப், இ-மெயில்களில் ஃபார்வேர்ட் ஆகும் விசயங்கள் இன்னும் பல வருடங்களுக்கான அறிவை வளர்க்க உதவும். ஆனால் விசயங்களில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்று வாட்ஸப் மெஸ்ஸேஜ். மருந்து அடையாறு கேன்சர் ரிசேர்ச் சென்டரில் கிடைக்கும் என இருந்ததால் சரி எதற்கும் இங்கு உள்ளவர்களுக்கு தேவைப்பட்டால் சொல்லலாமே என அங்கு உள்ள ஃபார்மசிக்கு டெலிபோனில் பேசினேன். அங்கு உள்ளவர்கள் சொன்னது நிறைய பேர் இது போல் விசாரிக்கிறார்கள், உண்மையில் ஒரு மருந்து இருக்கிறது , அது கேன்சரில் உள்ள பல டைப்களில் ஒரு டைப்பிற்கு ஒரு மருந்து. அதை ஆன்காலஜிஸ்ட் தான் பரிந்துறைக்க முடியும் இதை சாதாரணமாக இருமல் டானிக் மாதிரியெல்லம் வாங்க முடியாது என்றார்கள்.

வாட்ஸப்பிலும் , ஃபேஸ் புக்கிலும் எதற்கெடுத்தாலும் ஃபார்வேர்ட் செய்யும் ஆட்கள் தனது மனைவி குடும்பத்துக்கு ஒடி ஒடி உழைக்கிற மாதிரி தனது பெற்றோர்களையும் கவனிக்கிறார்களா என்று கண்டறியும் ஃசாப்ட்வேர் ஏதும் இருக்கிறதா.?. அப்படி இருந்தால்தான் உலகத்தை பற்றி கவலைப்பட முடியும் என்று ஒரு மெஸ்ஸேஜ் ஷேரிங் சட்டம் இருக்க வேண்டும்.

39-B

இது ஒன்றும் பல்லவன் பஸ் ரூட் அல்ல. மலேசியாவில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கான தூக்குத்தண்டனை சட்டத்தின் பிரிவு. 1911 சீனப்புரட்சியின் போது சீனாவின் தென் பகுதியிலிருந்து தென்கிழக்காசியாவான தாய்லாந்து / மலேசியா / பர்மா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா , ச்சந்தூ எல்லாம் இப்போது விஸ்வரூபம் எடுத்து வருங்கால சந்ததியினரை மிகப்பெரிய கேள்விக் குறிக்கு ஆளாக்கியிருக்கிறது.

போதைப் பொருளுக்கு ஆளாகி விட்டவர்களின் நிலை மிகவும் கொடூரமானது. நிமிர்ந்து நடக்கும் ஒரு மனிதனை அவனது முதுகெலும்பை அப்படியே அவனிடமிருந்து உறுவித் திருடுவதற்கு சமமானது.


தினம் தினம் மலேசிய ஏர்போர்ட்டில் போதைப்பொருள் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னாளில் அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் தூக்குத் தண்டனையில் அவர்கள் வாழ்க்கை கறைந்து போவதும் .... கொடுமையிலும் கொடுமை.

இதை நான் எழுதக் காரணம் இந்தியாவிலிருந்து  வரும் பயணிகளும் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். பண ஆசையை தவிர எதுவும் சரியான காரணமாக இருக்காது. இப்போதைக்கு நிறைய நைஜீரியர்கள், இரானியர்கள், பாகிஸ்தானியர்கள், மற்றும் இந்தியர்கள் இதில் நிறைய எலிப்பொறியில் மாட்டுவதுபோல் மாட்டுகிறார்கள். போட்டோ ஃப்ரேம், பால்மாவு பேக்கெட், ஷூ என்று எல்லாவிதமான நம்பியார் காலத்து டெக்னிக்களிலும் கடத்துகிறார்கள்.

டி.வி-யில் இவர்கள் சோதனையின் போது மாட்டும்போது இவர்கள் எப்படி செத்துப் போவார்கள் என்ற எண்ணம்தான் வரும், தூக்கு மாட்டப்போகும் முன், பெற்ற அம்மா, பிள்ளைகள் முகம் மனதில் ஒட... "சடக்" என காலுக்கு கீழ் உள்ள இரும்பு தளம் இரண்டாக விலகிக்கொள்ள  கால் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்து , கடைசியாக சாப்பிட்ட உணவும் தண்ணீரும் மலமாகவும், சிறுநீராகவும் வெளியாகி, நாக்கு தள்ளி, கண் பிதுங்கி...   ஒரு உயிரற்ற உடலை கறுப்பு பாலிதீனில் பேக் செய்து மொத்தமாக அனுப்பி விடுவார்கள். 

இதில் சிலர் பொதி சுமக்கும் கழுதையாகவும் தன்னை அறியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். 'இது சின்ன பார்சல்தான் கொடுத்து விடுகிறேனில்' நிறைய விசயங்கள் இருக்கும். அந்த பார்சல் உங்களை பார்சல் செய்து அனுப்பிவிடக் கூடும். கவனம் தேவை. எவ்வளவு பழக்கப்பட்டவராக இருந்தாலும் இதுபோல் மடையனாக வாங்கி வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள். மலேசிய சுங்கத்துறையும், நார்க் கோட்டிக் டிவிசனும் வைத்திருக்கும் ஸ்கேன் கருவிகளும், கேள்விகளும் மலச்சிக்கள் உள்ளவர்களுக்கு கூட டிசன்ட்ரீ வர வைத்து விடும். மற்றும் இங்கு இருக்கும் மோப்ப நாய்கள் நீங்கள் 35 வருசத்துக்கு முன் ப்ரைமரி ஸ்கூலில் பக்கத்து பையனிடம் திருடிய மாவடுவைக் கூட இப்போது பிடிங்கி காண்பித்து விடும்.

இந்த போதைக் கடத்தல் சட்டதில் கெத்தமின் மாத்திரைகளும் அடங்கும். மாத்திரை தானே வாங்கி வந்தேன் என்றெல்லாம் விவாதிக்க முடியாது. இதில் மிகப்பெரிய கவனம் சாதாரண மாத்திரை பேக்கிங். இதில் போதைப்பொருள் கடத்தினாலும் இங்கு ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்.

மற்ற நாடுகள் மாதிரி காத்திருந்து, ஜனாதிபதியின் கருணை மனு என்பதற்கெல்லாம் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. 

சனியனில் கைவைத்தால் சங்கு நிச்சயம்.

ZAKIR HUSSAIN

8 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

பெண்கள் படிப்பில் முந்தி முந்தி, ஒரு காலகட்டத்தில் ஆண் விடுதலைக்காகப் போராட வேண்டி வருமோ?

நல்லா படிக்கிற பெண் பிள்ளைகளை எனக்குத் தெரிந்த சிலர், "படிச்சி நமக்கு என்ன பிரயோஜனம்?" என்ற கேள்வியோடு கட்டிக்கொடுத்துவிட்ட அவலம் தெரியும்.

ஆண் படித்தால் சமூகம் மேம்படும்; பெண் படித்தால் குடும்ப நலன் சிறக்கும்.


sheikdawood mohamedfarook சொன்னது…

பெண்கள்படிப்பிலேயேகண்ணும்கருத்துமாய்இருக்கிறார்கள். ஆனால்ஆண்களோரசிகர்மன்றம்/கட்சிஅதுஇதுயென்றுபோய்டுறார்கள். இதற்கெல்லாம் மார்க்போடுவாங்களா?

sheikdawood mohamedfarook சொன்னது…

//சனியனில்கைவைத்தால்சங்குநிச்சயம்!//நம்மூர்சங்குரெம்பநாள்ஊதாமேகெடக்கே! அதேஇங்கேகொண்ணாந்துமாட்டுனாஎன்ன?

Ebrahim Ansari சொன்னது…

எப்படி பேசினாலும் உண்மையில் பார்க்கும்போது பெண்கள் மத்தியில் படிக்க வேண்டும் -தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வ உணர்வு மேம்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன். பையன்கள் ஏதோ - ஜாகிர் பாஷையில் சொல்லப்போனால் ஏதோ மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருக்கிறார்கள்.

அண்மையில் ஏ. எள். எம். பள்ளியில் நிகழ்வில் மாணவிகள் கைகளில் குறிப்புப் பேடுகளுடன் அமர்ந்து அவ்வப்போது குறிப்பெடுத்தார்கள். மாணவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தோம். நிகழ்ச்சி ஒரு மணி நேரத்தைத் தாண்டியதும் மாணவர்கள் நெளிய ஆரம்பித்தத்தைப் பார்த்து நிறைவு செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் அந்த நேரம் மாணவிகளின் கண்களின் ஆர்வம் தென்பட்டது.

நமது பகுதிகளில் பெண்கள் IDLE MANPOWER தான். ஒரு காலத்தில் பெண்கள் சும்மா இருக்காமல் வலை ( மால் ) பின்னுவார்கள், கூடை முடைவார்கள், பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னுவார்கள் . இன்று அவர்களுக்கெல்லாம் டிவி சீரியல் பார்க்க நேரம் போதவில்லை. கணவன்மார்களின் அபரிதமான ரெமிட்டன்ஸ் அவர்களை ஆடம்பரமாக வைத்திருக்கிறது.

இருந்தாலும் இன்றும் சில பெண்கள் குமார் இருக்கிறது என்று ஜமாத்தில் கடிதம் வாங்கி ஊருக்கு ஊர் அலையாமல் இடியப்ப மாவு தயாரித்து விற்றும், நான்க்கத்தான், சீப்புப் பணியாரம் போன்ற பலகாரங்களை ஆர்டர் எடுத்து தயாரித்துக் கொடுத்தும் வாழ்கிறார்கள். சிலர் இட்லிமாவு விற்கிறார்கள்.

பொருளாதாரத்துக்கு ஆண்களையே சார்ந்து இருக்க வேண்டிய சமுதாயமாக நமது சமுதாயம் இருக்கிறது. வாழ்க்கைச் செலவுகளைத் தந்து கொண்டிருக்கும் ஆண்கள் பொசுக் என்று போய்விட்டால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.

எவை எவையிலோ மாற்றங்கள் வந்துவிட்டன. பெண்களின் சுய சார்புத் தன்மையிலும் மாற்றங்கள் வரவேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மற்றும்... பதிவு சொல்வதும், இ.அ.காக்கா அவர்களின் கருத்தும்... ஒன்றைச் சொல்கிறது... படிக்கும் காலங்களில் பள்ளிப்புத்தகம் மட்டுமல்ல இன்னும் வழ்கைப் புத்தகத்தின் மற்ற பக்கங்களையும் பெண்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று !

சொல்ல வந்த விஷயங்களனைத்தையும் நறுக்கென்றும், நகைச் சுவையென்றும் சொல்லும் ஜாஹிர்காக்காவின் பதிவு இது.

எல்லாம் ஃபார்வேர்டு மயம் !

Iqbal M. Salih சொன்னது…

நீண்ட நாட்களுக்குப்பின் ஜாகிரின் 'மற்றும்' பிரசுரமாயிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்சினை ஒன்றை விளாசித்தள்ளி இருக்கிறது.

நண்பனின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கட்டும்.

ZAKIR HUSSAIN சொன்னது…

Thanx to all.

போதைப்பொருள் விசயமாக ஏன் எழுதினேன் என்று யாரும் கேட்கவில்லை. காரணம் டபுல் ஸ்ட்ராங்க் ஆனது. சாராய கங்கை ஒடும் நம் பகுதிகளில் போதைப்பொருளின் தாக்கம் இன்னும் ஏற்படவில்லை. ஆனால் அது ஏற்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் நாளடைவில் லெமூரியா மாதிரி காணாமல் போய்விடும்.

ஆண் பிள்ளைகள் ஏதோ ஹீரோ மாதிரியும், அவர்கள் தவறு செய்தால் கூட ' சேத்தெ பார்த்தா காலை விடுவான் , தண்ணியைப்பார்த்தால் காலை கழுவிக்கொள்வான்' என்று வெட்டித்தத்துவம் பேசும் பெண்கள் இருக்கும் ஊரில் போதையில் அடிமையாகும் பிள்ளைகள் இருந்தால் மிகவும் கவலைக்கிடமானது. இது அதிராம்பட்டினம் போன்ற இடங்களில் சாராயம் மாதிரி நுழைந்தால்

யார் வந்தாலும் காப்பாற்ற முடியாது. தந்தை வெளிநாட்டில், கையில் பைக், ஸ்மார்ட்போன் ஃபோன் என்று எதையும் சம்பாதிக்காமல் அனுபவிக்க மட்டும் இருக்கும் டீன் ஏஜ் பையன் கள் மிகப்பெரிய ரிஸ்க்.
மார்க்கம் சரியாக புரிந்தால் தப்பிக்கலாம்.

...அது சரி நாம் எந்த குரூப் என்பதிலேயே கவனம் இருப்பதால் மெயினான விசயத்தை எப்போதும் மிஸ் பன்னிட்டு வழக்கம் போல் தஞ்சாவூர் /பட்டுக்கோட்டை கோர்ட் போன்றவற்றில் செலவழிக்கிறோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மிகச் சரியே !

பட்டும் படாமல் இருப்பது பட்டதும் சுட்டதே என்று புலம்பும் அவலம் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை தேவை !

பலகாலம் மலேசியாவில் இருந்த ஒருவர் இந்த பதிவை வாசித்து விட்டுச் சொன்னது... இந்த அளவுக்கு எச்சரிக்கையூட்டும் பதிவு எவராலும் நம்மவர்களுக்கு எழுதிக் காட்ட முடியாது என்பதே !

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு