Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூத்தோர் சொல்... முதுநெல்லிக்காய்! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | June 16, 2014 | ,

பீர்,

நான் சொல்வதை மட்டும் குறித்தால்
நீ நிருபன்
நான் சொல்ல நினைப்பதையும் குறி
நீ நிபுணன்!

உபதேசங்களை
உருவாக்கிச் சொல்ல
ஞானியல்ல நான்;
எதார்த்த வாழ்க்கையின்
நடப்பினைச் சொல்கிறேன்
மாந்தர் தம்
நடிப்பினை வடிகட்டி
படிப்பினை தேடிக்கொள்!

சொற்ப தூரத்தையும்
சுற்றிவளைத்துச் சொல்லிக்காட்டி
கடக்க முடியாதென
முடக்கப் பார்க்கும் உலகம்;
அப்பப்ப நிகழும்
தட்பவெப்ப மாற்றத்தில்
தூரமெனப் பயந்து
பறக்க மறுக்கும் பறவைகள்
இறக்க நேரிடும்;
நீ
தொடர்ந்து நடந்து பார்
கடந்துபோகும் கஷ்டம்!

அற்ப விடயத்தையும்
அருவருக்க அலங்கரித்துக் காட்டி
தாங்க முடியாதென
தேங்க வைக்கும் உலகம்;
குத்திட்டுப் பறந்துகொண்டே
கூர்ந்து நோக்கி
குபீரெனக் கொத்தும்
மீன்கொத்திப் பாய்ச்சலுக்கு
மீன் தப்ப முடியாது;
நீ
முழுமூச்சாய் முயன்று பார்
முன்னேறி விடுவாய்!

சுகமான சுமைகளின்மேல்
சுயநலமெனும் எடையேற்றி
சுமக்க முடியாதென
சுணக்கப் பார்க்கும் உலகம்;
ஒட்டகத் திமில் நீரும்
கங்காரு வயிற்றுப்பையும்
சுமையல்ல, தேவைகள்;
நீ
சீர்தூக்கிச் சுமந்து பார்;
ஊர்போற்ற உயர்ந்து நிற்பாய்!

வருவாய்க்கான வழிகளை
உருவாக்கி வைக்க வேண்டி
இருநாக்கில் பேசி
ஏமாற்றி வெளியேற்றும் உலகம்;
பூக்களும் புன்னகையும்
மலர்ந்திருக்கும் வரைதான்,
உதிர்ந்தபின் உபயோகப்படாது;
நீ
ஒருவாய்க் கவளம்
உணவாய்த் தரும்
உள்ளங்களை உருவாக்கு;
அகவை முதிர்ந்தாலும்
அரவணைக்க ஆளிருக்கும்!

படம் வரைந்து
பாகங்களைக் குறித்ததுபோல்
பளிச்சென்று சொல்ல
பல உண்டு வாழ்க்கையில்
புரிந்து கொள்ளப் பார்!

உதவி செய்; தடுக்க மாட்டேன்
உன் உதவியால் உயர்ந்தவரிடம்
எதையும் நீ
எதிர்பார்க்காதே
ஏமாந்து போவாய்!

உன்
உழைப்பை உறிஞ்சும்
ஒட்டுண்ணிகளை
உத்தமர் என்றெண்ணி
காலமெல்லாம் கஷ்டப்படாதே
கரை சேற மாட்டாய்;
நெற்றி வேர்வை உலர்வதற்குள்
பற்றிவிடு உன் பங்கை!

பொறுமை உயர்ந்ததுதான்
கொடுமைகளுக்கு எதிராக
பொங்கி எழாமல்
பொறுமையின் நிழலில்
உரிமைகளைப் பரிகொடுக்காதே!

வணக்கமும் வழிபாடும்
உனக்கும் இறைவனுக்குமானது;
உள்ளச்சமும் உளத்தூய்மையும்
உண்மையான முஸ்லீமை
உலகுக்குக் காட்டும்;

ஊருக்குக் காட்டவும்
உறவுகள் போற்றவும்
மார்க்கத்தை வைத்து
மாயஜாலம் செய்யும்
வேடந்தாங்கி
வேடர்களிடம் சிக்காதே!

கசிகின்ற கண்களைவிட
கருணையான கண்களையே நம்பு!

சிரிக்கின்ற பெண்களுனைச்
சிதைக்காமல் பார்த்துக்கொள்!

அழுகின்ற ஆணின் சதியில்
விழுந்து வீண் ஆகிவிடாதே!

நன்றாக ஆராய்ந்தே
நண்பனை அடைந்து கொள்!

மார்க்கம் சொன்னபடி
வாழ முயல்வது
வழமையான வாழ்க்கை;
உன்
இயல்பான வாழ்க்கையே
இஸ்லாத்தை ஒன்றியிருக்கக் காண்பதே எழுச்சியான வாழ்க்கை!

வாழ்க வளமுடன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...



மார்க்கம் சொன்னபடி
வாழ முயல்வது
வழமையான வாழ்க்கை;
உன்
இயல்பான வாழ்க்கையே
இஸ்லாத்தை ஒன்றியிருக்கக் காண்பதே எழுச்சியான வாழ்க்கை!

Aha!
Simple words
But it conveys the originality of life.
Simply superb.

ZAKIR HUSSAIN said...

Sabeer..........

நீ எழுதியிருக்கும் கவிதை வரிகள் பாரூக் மாமா அவர்களின் எண்ணப்பரிமாற்றத்தில் வந்தது என்றாலும் உண்மைகளை உனக்குள் கடந்து செல்ல அனுமதித்து எழுதியிருக்க்கிறாய்.

அவைகள் 'நீ" உணர்ந்து எழுதியிருப்பதால் உனக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது.

கவனமாக இரு , கவனமாக இரு ...ஏமாந்து போயிடாதே என்று நான் சொன்ன போதெல்லாம் இல்லாத விழிப்புணர்வு மூத்தவர் சொல்லில் நமக்குள் மாற்றம் வந்ததில் மகிழ்ச்சி.

Haja Mohideen said...

நிறை குடங்கள் எண்ணாலும் தழும்பாது என்பது உண்மை,

Unknown said...

Assalamu Alaikkum

An amazing brainchild of wisdom born
From insights of Uncle and brother Mr. Sabeer !!!

Set of golden keys to unlock the way to do excellence
Each line is carrying a well defined wisdom

A best collection of thoughts that tear the true face of this world(people).
A smart guidance only by knowledgeable & experienced elders

Lets repeat the lines often and grasp 100% to do well in our life.

Very happy to see the picture of Uncle and brother Mr. Sabeer.

Alhamdulillah.

Jazakkallah khairan

B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com

sheikdawoodmohamedfarook said...

நான் காட்டியது மூங்கில்புதரே! அதில் புல்லாங்குழல் எடுத்து இசைத்தபெருமை மருமகன்சபீரையை சாரும்.
வல்லவன் கையிலேபுல்லும்ஓர்ஆயுதமே!

Ebrahim Ansari said...

சொல்வதற்கு வார்த்தை வெளிவரவில்லை காரணம் கருத்துக் காற்றின் வேகம் தொண்டைக் கதவை அடைத்து சாத்துகின்றன.

எழுதலாமென்றால் எழுதவும் வார்த்தைகள் வரவில்லை. காரணம் தம்பி சபீர் சொல்லி இருப்பதற்கு மேல் எழுதவும் சொல்லவும் எண்ணவும் வேறு என்னதான் மிச்சமிருக்கிறது?

வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம். - கலைஞர்.

Shameed said...

//உன்
உழைப்பை உறிஞ்சும்
ஒட்டுண்ணிகளை
உத்தமர் என்றெண்ணி
காலமெல்லாம் கஷ்டப்படாதே
கரை சேற மாட்டாய்;
நெற்றி வேர்வை உலர்வதற்குள்
பற்றிவிடு உன் பங்கை!//

உன்னதமான வரிகள்

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மூத்தோர் மொழியும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் முடிவில் இனிக்கும் என்பது ஒரு பிரபல்யமான முது மொழி.

ஃபாரூக் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது உதிர்ந்த உதரிப்பூக்களை வாரியெடுத்துக் கோத்ததுதான் இந்தப் பதிவு.

இதை வாசித்துக்கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் து ஆவும்.

விரிவான ஏற்புரை எழுத நேரம் வாய்க்கவில்லை.

நன்றி, வஸ்ஸலாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மூத்தோர் சொல்... !

கவிக் காக்கா அவர்கள் உதட்டளவில் சொன்னாலும் உள்ளத்தில் உள்ளதை எக்ஸ்ரே எடுத்து விடுவார்கள்! என்பதற்கு இந்த முதுநெல்லிக்காய் சாட்சி...

இ.அ. காக்கா சொல்வது போன்று எதைச் சொல்லி எதை விடுவது ! எல்லாமே அற்புதம், அதனை அப்படியே சொல்லா உங்களால் மட்டுமே முடியும்.

சில வினாடிகள் சிந்தனை... ஸ்கேல் வைத்து அளவெடுத்திருக்கிறது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு