Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கருகும் காதல் – பிப்ரவரி 14 [வரலாறு!! : காணொளி] 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2015 | , , ,


பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பழகி
பாசத்தைப் பகிர்ந்து
பிழைத்தது பலநாட்கள்

தாத்தனும் பாட்டியும்
தமிழினில் திளைத்து
தூய்மையாய் இல்லறம்
சுகித்ததும் பலநாட்கள்

பிந்தைய நாட்களில்
எந்தையும் தாயும்
சந்ததி பெற்றுச்
சிறந்ததும் பலநாட்கள்

என்னிலே இவளும்
இவளிலே நானும்
இருந்து மகிழ்ந்திடும்
இல்வாழ்வு பலநாட்கள்

ஒவ்வொரு நாளிலும்
சொல்லிலும் செயலிலும்
அன்பினைச் சொன்னோம்
அழகுற பகிர்ந்தோம்

எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே

மேநாட்டு மனிதருக்கோ
அன்பினைச் சொல்ல
அவகாசம் இல்லை
பண்போடு பழக
படிப்பினை இல்லை

ஒற்றை நாளெடுத்து
அன்பு சொல் என்றனர்
காத்திருந்த கயமையின்
கட்டவிழ் என்றனர்

பண்பாடு கலாச்சாரம்
புண்பட்டு புறையோடி
நாற்றமெடுக்கு முன்
நல் வழி காண்பீர்

நாகரீகப் போர்வையில்
நயவஞ்சகக் கூட்டம்
நங்கையரை நசுக்கி
நல்லொழுக்கம் புதைத்து

நஞ்சினை விதைக்கும்
நாளிதைப் புறக்கனிப்போம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


காதலர் தின என்ற கிருஸ்தவ பூஜை தினம் பற்றிய வரலாற்று தகவல், அவசியம் கேளுங்கள்.

3 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

//நாகரீகப் போர்வையில்
நயவஞ்சகக் கூட்டம்
நங்கையரை நசுக்கி
நல்லொழுக்கம் புதைத்து//

காதல் என்ற வார்த்தையை தவறாக பயண் படுத்தும் காமர்களுக்கு செருப்பால் அடித்தார் போல் நான்கு நல் வரிகள்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...



கலாச்சாரத்தில் கலப்படம்!

காதலர் தினம்...
தமிழ் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி

இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி

வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை

இந்த
மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம்
சுதந்திர இந்தியனின்
அடிமைக் காலத்து
சோம்பேறிச் சுகத்தின்
மிச்சம் மீதி

பார்த்தும் ரசித்தும்
தொடுத்தும் முகர்ந்தும்
வருடியும் சூடியும்
கொண்டாடிய ரோஜாக்களைக்
கசக்கிப் பிழிந்து
குப்பையில் வீசிடும்
காமக் கொடூரத் தினம்

உறியில் தொங்கும்
கட்டுச் சோற்றுக்கு
காவல் பாவனை செய்யும்
கள்ளப் பூனையின்
கிளுகிளுப்புத் திருநாள்

இத்தினம்
இன்ப மென் றெண்ணி
இன்னலை விலைபேசும்
இளைமையின் அறியாமை தினம்

களவியல் ஒழுக்கத்தை
பேசுபொருளாக்கிக்
காப்பியங்கள் படைத்தவன்
இந்தியன்

நிலவும் பனியும்
இரவும் உறவும்
தனிமையில் கிடைத்திட்டும்
எல்லை மீறாத
இல்லறம் கண்டவன் தமிழன்

ஒவ்வொரு நாளிலும்
உரிமையுள்ள துணையைக்
காதலிக்கக் கற்றவனுக்கு

ஓராண்டுக்கு ஒருமுறை
ஒழுக்கங்கெட்டு உய்ப்பதும்
போதையும் புணர்ச்சியுமாய்
வீணாவதன்றோ
கயவர்கள் கொணர்ந்த
காதலர் தினம்?

இந்தியனே
எல்லாவற்றிற்கும்
அபயம் எதிர்பார்த்து
அடிமைப்பட்டுத் தொலையாதே

அன்புக்கும் பாசத்திற்கும்
நட்புக்கும் நேசத்திற்கும்
நாட்களை வகைப்படுத்தும்
நாகரிகம் நமதல்ல

அன்பையும் பாசத்தையும்
அனுதினமும் பகிர்பவர் நாம்

இந்தக்
கள்ளத்தனமான ஊடுருவலும்
கலாச்சரத் தீவிரவாதமும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்றி
மேற்கத்தியன் செய்யும் சதி

காதலர் தினம்
குடும்பவியல் கலாச்சாரத்தில்
குண்டுவைக்கும் கலப்படம்
சிக்கிக்கொள்ளாமல் சிந்தி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு