சில நாட்கள் முன்பு மதுரையில் உள்ள இந்த ‘அரவிந்த்’ மருத்துவ மனைக்கு Routine Check-up காகச் சென்றேன். வரவேற்புக் கவுண்டரில் ரூபாய் ஐம்பது மட்டும் செலுத்தி, கோப்பு திறக்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. அரை மணி நேரம் காத்திருந்த பின், நர்ஸ் ஒருவர் சற்று உயரமான பலகைக் கட்டை மீது ஏறி நின்று, “நான் பெயர் வாசிக்கும் எல்லாரும் எனக்கருகில் வந்து கூடலாம்” என்று மைக்கில் அறிவித்து, ஒவ்வொருவராகப் பெயர்களை வாசித்தார்.
“அகமது வாங்கோ. அந்தோணி வாங்கோ. புஷ்பம் வாங்கோ.....” என்று பட்டியலை வாசிக்கத் தொடங்கி, சுமார் பத்துப் பேர்களைத் தன்னருகில் கூடச் செய்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளுடைச் செவிலி ஒருவரைக் காட்டி, “இவரோடு போங்கோ” என்றார்.
சிறிது தூரம் அந்தச் செவிலியைத் தொடர்ந்த பின்னர், அவர், “இந்தக் கவுன்டருக்கு முன்னால், வரிசையாக நில்லுங்கோ” என்றார். நின்றோம். இங்குதான் file opening செய்யப்பட்டது.
BP உண்டா? sugar உண்டா? என்பது போன்ற விசாரணை செய்த பின்னர், நமது பெயரில் ஒரு கோப்பு (file) உருவாக்கப்பட்டது. அதைக் கையில் வாங்கியவுடன், மறுமையில் நமது செயலேடு நம் கையில் தரப்பட்டது.,
إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا (நீயே உன் புத்தகத்தைப் படித்துப் பார், மனிதா! இன்று உனக்கு எதிராகக் கணக்குப் பார்க்க நீயே போதும்.) (17:14) என்ற மறை வசனம்தான் என் இதயத்தில் இடி இடிக்கத் தொடங்கிற்று! இதற்குள்,
“அகமத் வாங்கோ, சக்கீனா வாங்கோ! நீங்க இந்தச் சேர்ல உக்காருங்கோ. அவரை முடித்துவிட்டு, உங்களைக் கூப்பிடுவார் டாக்டர்”. என் இல்லாளை என்னை விட்டுக் கழற்றிவிட இவளுக்கு என்ன ஒரு தெனாவெட்டு! ராக்கெட் தனது வான்வெளிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, அதன் கீழ்ப்பகுதி கழன்று விழுந்து, அதன் முன் பகுதி முன்னேறிச் செல்வது போன்று, முதல் மூன்று இடங்களில் பார்வைப் பரிசோதனைகள்.
ஐந்தாவது பிரிவில் eye pressure சோதனை. ‘கண்ணுக்குமா ப்ரஷ்ஷர் இருக்கும்?’ “ஆமாம்” என்கிறது கண் மருத்துவ நிலையத்தின். இந்தப் பிரஷ்ஷர் பிரிவு. இதற்காக ஐம்பது ரூபாய் செலுத்தி பில் வாங்கிக் கொண்டபின், ஆறாவது பிரிவில் காத்திருப்பு. அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரம் சற்று அதிகமாயிற்று. எனது பெயர் கூப்பிடப்பட்டபோது, எழுந்தேன். நர்ஸ் காட்டிய அறைக்குள் சென்றபோது, டாக்டர் எனக்கு வழக்கமான BP பார்க்கும் முறைப்படி இரத்த அழுத்தப் பரிசோதனை செய்தார்.
ஏழாவது பிரிவில் டாக்டர் என் இரு கண்களிலும் சொட்டு மருந்தை ஊற்றினார். தாடையையும் நெற்றியையும் வைத்து, மருத்துவரின் ஆய்வுக்கு உள்ளானதன் பின்னர், அவர் ‘glovcoma’ என்று என் கோப்பில் எழுதினார். இது cateract என்ற கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு முந்திய நோய்.
மூன்றாவது மாடியின் gloucoma பிரிவின் 304 ஆவது காத்திருப்புப் பகுதி. இங்கு இருந்த டாக்டர் வடநாட்டுக்காரர் போல் தெரிந்தது. “க்யா பாத் ஹே?” என்றார். நான், “டீக்” சொல்லிவைத்தேன்; Just for formality. அவர் ஒரு நிமிடம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, முந்திய டாக்டர் எழுதிய ரிப்போர்ட்டை ‘கண்’ணும் கருத்துமாகாகப் பார்த்தார். ‘படித்தார்’ என்றுதான் சொல்லவேண்டும்.
Gloucoma பிரிவு முதல் மாடியின் பதினொன்றாம்
ஹாலில்தான் இருக்கிறது. அங்கு ஒற்றைக் கண் மறைத்த இஸ்ரேல் பிரதமர் ‘மொஷே தயான்’ போல், நான்கைந்து பேர் எனக்கு முன் அங்கே இருந்து, வானம் பார்த்து இருந்தனர்.
ஹாலில்தான் இருக்கிறது. அங்கு ஒற்றைக் கண் மறைத்த இஸ்ரேல் பிரதமர் ‘மொஷே தயான்’ போல், நான்கைந்து பேர் எனக்கு முன் அங்கே இருந்து, வானம் பார்த்து இருந்தனர்.
“உங்க பேர்தானே அகமது?” என்று என்னிடத்தில் வந்து கேட்ட நர்சுடன் போய், டாக்டர் ஒருவரின் அறைக்குள் நுழைந்து, “Good adfternoon Doc” சொன்னபோது, என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த லேடி டாக்டர். “என்னடா இது? கைலி உடுத்தி, தலையில் தொப்பி வைத்து, நீண்ட தாடியும் வைத்து, நமக்கு ‘wish’ பண்ணுறார் இந்த பாய்!?”
‘அதுக்கென்னம்மா? நீ உன் கடமையைச் செய்’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு, “இப்போ கண்ணாடிக்கு எழுதித் தாரேன். அப்றம், ஆறு மாசம் கழித்து வாங்கோ. glaucoma ஆபரேஷன் செஞ்சுக்குவோம். வெறி சிம்பிள்”’ என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.
அதன் பின்னர், நேற்றுத்தான் மறுபடியும் போக முடிந்தது. இம்முறை பழைய ‘கேஸ்’ ஆனதால், ரிசப்ஷனில் காசு வாங்கவில்லை. அதே ரோட்டீன் செக்கப் முறைகள்தான். ஆனால், அடுத்த நான்கு மாதங்களின்பின் கண்டிப்பாகப் போய், கண் புரை நீக்க வைத்தியம் செய்யத்தான் வேண்டும்
இதைப் படிக்கும் எல்லாரும் துஆச் செய்யுங்கம்மா! செய்வீங்கதானே....?
அதிரை அஹ்மத்
18 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவனின் உதவியால் எங்கள் அறிவு கண்னை திறக்கும் உங்களுக்கு . பார்வை கண் குணமடைய இறைவன்டம் இருகரம் ஏந்துகிறோம்.
யா நூர்!
நல்ல குணத்துடன் நல்ல பார்வையை கொடுப்பாயாக ஆமீன்!
நலமாய் வளமுடன் வாழ வல்ல இறைவனை வழுத்துகிறேன்
இறைவனின் உதவியால் எங்கள் அறிவு கண்னை திறக்கும் உங்களுக்கு . பார்வை கண் குணமடைய இறைவன்டம் இருகரம் ஏந்துகிறோம்.
إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا (நீயே உன் புத்தகத்தைப் படித்துப் பார், மனிதா! இன்று உனக்கு எதிராகக் கணக்குப் பார்க்க நீயே போதும்.) (17:14) என்ற மறை வசனம்தான் என் இதயத்தில் இடி இடிக்கத் தொடங்கிற்று! //
இதே போன்ற மறுமை சிந்தனை எங்களுக்கும் வர துவா செய்யுங்கள்
//இதைப் படிக்கும் எல்லாரும் துஆச் செய்யுங்கம்மா! செய்வீங்கதானே....?//
செய்துட்டோம் ! செய்கிறோம்!. செய்வோம்!. இன்ஷா அல்லாஹ்.
தங்கள் பார்வை மென்மேலும் கூர்மை பெறவும் விரைவில் குணமாகவும் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.
இறைவனின் உதவியால் எங்கள் அறிவு கண்னை திறக்கும் உங்களுக்கு . கண் சிகிச்சை பாதுகாப்புடன் முடிந்து குணமடைய இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
லா பாஸ் தஹூர இன்ஷா அல்லாஹ் (கவலைப் படாதீர்கள்; அல்லாஹ் இதன் மூலம் உங்களை தூய்மைப் படுத்துவானாக)
தங்கள் பார்வை மென்மேலும் கூர்மை பெறவும் விரைவில் குணமாகவும் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.
//BP உண்டா? sugar உண்டா? என்பது போன்ற விசாரணை செய்த பின்னர், நமது பெயரில் ஒரு கோப்பு (file) உருவாக்கப்பட்டது. அதைக் கையில் வாங்கியவுடன், மறுமையில் நமது செயலேடு நம் கையில் தரப்பட்டது.,
إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا (நீயே உன் புத்தகத்தைப் படித்துப் பார், மனிதா! இன்று உனக்கு எதிராகக் கணக்குப் பார்க்க நீயே போதும்.) (17:14) என்ற மறை வசனம்தான் என் இதயத்தில் இடி இடிக்கத் தொடங்கிற்று! //
இது போன்ற சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அல்லாஹ்வின் நினைவை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
உங்கள் கண்ணுக்கான சிகிச்சை மிக எளிதாக நிறைவுற்று, நல்ல சுகம்பெற வல்லவன் ரஹ்மான் அருள் புரிவானாக.
கண்ணில் ஏற்படுள்ள புரையை அறுவை சிகிச்சை இன்றி அகற்ற வழிகள் உள்ளனவா என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
ஹீலர் பாஸ்கர் இது பற்றி சொல்லி இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். விபரம் அறிந்தவர்கள் இங்கு பகிரலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பன்னூலாசிரியர் அஹமது சாச்சாவின் கண்கள் சிகிச்சைக்குப்பின் அன்று பிறந்த பாலகனின் கண்கள் போல் ஒளி பெற்று நீண்ட ஆயுளுடனும், நிறைந்த சுகத்துடன் இன்னுமாயிரமாயிரம் மார்க்க மற்றும் உலக அறிவை வளப்படுத்தும் நன்னூட்கள் பல எழுத அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரிய வேனும் என உளமார நானும் து'ஆச்செய்கின்றேன். விரைவில் மக்கா உம்ரா செல்லும் தருணமும் பைத்துல்லாஹ்விலும் து'ஆச்செய்கின்றேன்.
அன்று ஒரு நாள் சர்க்கரை வியாதியால் இரு கண்களும் தெளிவற்று, பார்வை மங்கலாகி முதலில் ஒரு கண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை செய்து நான்கைந்து நாட்களுக்குப்பின் அறுவை சிகிச்சை செய்த கண்ணில் போடப்பட்டிருந்த கட்டை மருத்துவமனையில் மருத்துவரால் அவிழ்த்து விடும் பொழுது காலஞ்சென்ற எனதருமை தாயார் சொன்னது "தம்பீ! கண்ணு பச்சப்புள்ளையில தெளிவா தெரியிர மாதிரி நல்லா தெளிவா பளிச்சிண்டு தெரியுது" என்று சந்தோசப்பெருமூச்சில் சொல்லி அல்லாஹ் அவர்களுக்கு அன்று கண்ணொளி மூலம் சுகமளித்தை இன்று நினைவு கூறுகின்றேன். இன்னொரு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை எப்படியும் செய்து அதையும் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பிய அவர்களுக்கு பின்னர் சர்க்கரை நோயும், சிறுநீரகக்கோளாறும் இடமளிக்க மறுத்து கடைசி வரை அவர்களின் உள் விருப்பம் நிறைவேற முடியாமல் போனது கண்டு எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது அதை நினைக்கும் தருவாய் எல்லாம். அல்லாஹ்வே அவர்களின் கப்ரை ஒளியோடு பிரகாசமாக்கி வைக்கப் போதுமானவன்.
மு.செ.மு.நெய்னா முஹம்மது
அரவிந் கெஜ்ரிவால்க்கு வாக்குகளை அள்ளி போட்டது போல். அரவிந்து மருத்துவமனை என்றதும் கருத்துகளை போட அ.நி தொண்டர்கள் சுருசுருப்பாக போட்டு வருகிறார்கள்.
காக்கா, தங்கள் பார்வை மென்மேலும் கூர்மை பெறவும் விரைவில் குணமாகவும் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.
Dear Brother Adirai Ahmad,
Glaucoma / Cataract ஆப்பரேசன் எல்லாம் இப்போதைக்கு நம்முடன் கூட வந்தவர் ஓன்னுக்கு போயிட்டு வருவதற்குள் செய்துவிடுகிறார்கள்.
3 நாளைக்கு அதிராம்பட்டினத்து புழுதி இல்லாமல் / [ வீட்டில் சமயலறை புகை இப்போதைக்கு அவுட்டேட் அயிடுச்சி ] மற்றும் ஓய்வுடனும் இருந்தால் இறைவன் உதவியால் உடன் நிவாரணம்.
உங்களைப்போல் நல் உள்ளம் படைத்தவர்கள் இறைவன் உதவியால் சீக்கிரம் குணமடைவீர்கள்.
நம்மைப்பற்றி சிந்திக்க இறைவன் கொடுத்த ஓய்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.
காக்கா, தங்கள் பார்வை மென்மேலும் கூர்மை பெறவும் விரைவில் குணமாகவும் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.
شكرا جزيلا لكل واحد منكم
தங்களின் நோய் தீரவும் நீண்ட ஆயுளுடன் வாழவும் அல்லாஹ் அருள் புரியட்டும்
தெளிவான பார்வையுடன் தீர்க்கமான சிந்தனையுடன் தங்களின் அறிவார்ந்த நூல்களை கொண்டு ஏற்றம் பெறட்டும் எதிர்க்கால சந்ததிகள்
Post a Comment