Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாமரம் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2015 | , , , ,

ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு (டூர்) ஊர்  வரும் வழியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நாட்டுமங்கலம் என்ற போர்டை பார்த்ததும் பண்ணை உள்ளே சென்று பார்க்க முடிவு செய்து காரை உள்ளே செலுத்தினேன் உள்ளே சென்றதும் பண்ணைக்கே உரித்தான பசுமை நிழலாடியது பண்ணையின் பசுமை மனதுக்கு இதமாக இருந்தது 

பண்ணை அதிகாரியை அணுகி ஒட்டு மாங்கன்னு ஒண்ணு வேணும்முன்னு சொன்னதும்  நுப்பது ரூபாய்க்கு பில் போட்டு கொடுத்துவிட்டு ஒரு மாங்கன்னு ஒன்றையும் கொடுத்தார் கொடுத்தவர் சொன்னார் இது உயர் ரக ஒட்டு மாங்கன்னு மூன்று வருடங்களில் காய்த்துவிடும் என்றார் 

ஒட்டு ரகம் என்றால்  என்ன என்று  கேட்டதும் அப்படியோ ஒட்டும்  இடத்திற்கு எங்களை ஓட்டி சென்றார் 


ஹை-பிரீடு என்ற ஆங்கில  சொல்லுக்கு தமிழில்    வீரிய ஒட்டு ரகம் என்ற   பெயர் காரணத்தை சொல்லிவிட்டு .ஒ ட்டும் விசயத்திற்கு வந்தார் அதாவது  ஒரே வகை மரத்தில்  வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டுரகங்களை வைத்து உருவாக்கப்படுவதுதான் இந்த வீரிய ரக ஒட்டு ரகம். ஒரு மரம் ஆணாகவும், மற்றொரு மரம்  பெண்ணாகவும்   பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு ஒரு மாமரத்தை  எடுத்துக் கொள்வோம். ஒருமாமரம் , நோய் எதிர்ப்புத் சக்தி  கொண்டதாக இருக்கும். ஆனால், காய்ப்பு  குறைவாக இருக்கும். மற்றொருமாமரம் , அதிக காய்ப்பு  தரும். ஆனால், நோய் எதிர்ப்பு திறன் இருக்காது. இப்படிப்பட்ட இரண்டு ரகங்களையும் ஒட்டு சேர்த்து உருவாக்கக் கூடிய முதல் தலைமுறைக்கு பெயர்தான் வீரிய ஒட்டு ரகம். என்று விளக்கம் கொடுத்தார் அத்தோடு ஒட்டும்  முறையும் விளக்கினார் 

முதலில் நோய் எதிர்ப்புத் சக்தி அதிகம்  கொண்ட மாங்கொட்டையை ஒரு பாலித்தின் பையில் மண் நிரப்பி ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை வளர்க்கின்றனர் அது வளர்ந்து ஒரு குறிப்பிட்ட  உயரம் வந்ததும் அதன் அடிபகுதியில் ஒரு நான்கு அல்லது ஐந்து அங்குளம் விட்டு நம் ஊரில் வாலை  மீன் வெட்டுவதுபொல் கிராசக வெட்டி விட்டு வேறு காய்ப்பு திறன் அதிகமுள்ள மாமரத்தின் நொனி கிளையை  (கொப்பு)கிரசக வெட்டி கொட்டையில்  இருந்துவெட்டி எடுத்த அந்த மேல் பகுதி மீது இந்த கொப்பை நன்றாக இணைத்து அசையாது கட்டி வைத்துவிடுகின்றனர்  மாங்கொட்டையில் இருந்து வரும்  சக்திகளை மேலே உள்ள இணைப்பு பெற்றுக்கொண்டு வளர தொடங்கும் என்று விவரித்தார் 

மேலும் கூறினார் இந்த  ரகத்திலிருந்து கிடைக்கும் விதையினை மீண்டும் விதைத்தால் நாம் எதிர்பார்க்கும் வகையில் காய்ப்பு இருக்காது அதற்க்கு காரணம் அங்கு  விதையில் பல  குழப்பங்கள் உருவாகும். இந்த விதை வாப்பா , அப்பா , முப்பாட்டன் போன்றவர்களின் குணாதிசயத்துடன் எக்கு தப்பாக இருக்கும். ஆகவே, முதல் தலைமுறையில் உருவான வீரிய ஒட்டு ரகங்களை மட்டுமே பயிரிடவேண்டும்.இது  சாதாரண ரகங்களைக் காட்டிலும்  50% வரை கூடுதல்காய்ப்பினை  கொடுக்கும்  என்று சொல்லி முடித்தார் 

அங்கு வாங்கி வந்த ஒட்டு  மாங்கன்றை வீட்டு கொல்லையில் வைத்து தினமும் நீர் ஊற்றி வளர்த்து வந்தேன் மரம் ஜம்முன்னு வளர்ந்ததே தவிர மூன்று வருடம் தாண்டியும் காய்க்கவில்லை ஒரு வேலை ஒட்டு மரம் என்று அட்டு மரத்தை தந்துவிட்டானோ  என்ற சந்தேகமெல்லாம் வந்தது வருஷ வருஷம் மரமாத்து வேலை செய்வதே பெரிய வேலையாய்  இருந்தது 

காய்க்கவே  மாட்டேங்குதே வெட்டி விடுவோம்  என்று முடிவெடுத்து  தோப்புக்காரனை  கூப்பிட்டு வெட்ட சொல்லிவிட்டேன் அவன் வந்து பார்த்துவிட்டு இப்படி பசுமையான மாமரத்தை ஏன் வெட்ட சொல்றிய முதலாளி என்று கேட்டான் நான் சொன்னேன் பல வருடம் ஆகியும் காய்க்கவில்லை என்றேன் அதற்க்கு அவன் சொன்னான் அடுத்த வருடம் காய்க்க வைத்துவிடுவோ மொதலாளி என்று சொன்னவன் விறுவிறு என்று  மாமர  தூரில் இருந்து ஒரு அடி விட்டு ஒரு அடி மேல மரத்தை சுற்றி ஒரு அடிக்கு மாமரத்தின் பட்டையை (மேல் தோல்)  பட்டையை சீவிவிட்டான் 

தோப்புக்காரன் சொன்னது போல் மாமரம் போன வருடம்  பூ பூத்து காயும் காய்த்தது. காய்களில்  ஒரு சில காய்களை மீன் ஆனத்தில் போட்டு சாப்பிட்டதில் உள்ள சுகத்தை இங்கு என்னால் விவரிக்க முடியவில்லை அத்தனை சுவை இந்த வருஷ சீசனுக்கு தற்போது பூ  பூத்துள்ளதாக செய்தி ஊரில் இருந்து வந்ததில் இருந்து மனதில் ஆனந்தம் ஆற்பரிக்கின்றது 

Sஹமீது

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விஞ்ஞானி விவசாயியாய் விளக்கியது அருமை!

அப்ப மே' யில் மீண்டும் மா+மீன் சாப்பிடலாம் புறப்படுங்க!

Ebrahim Ansari said...

மாங்காய் சீசன் இந்த வருடம் நன்றாக இருக்குமென்று சொல்கிறார்கள். இப்போது ஒட்டு மாங்காய் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் விலை?

ஒரு மாங்காய் முப்பது ரூபாய்.

ருசிகண்ட பூனைகள் வாங்கித்தான் செல்கின்றன. நானும் வாங்கினேன்.

மீன் ஆனத்தில் போட்ட ஒட்டு மாங்காயை சுவைத்து சாப்பிட்டுவிட்டு அதன் தோலை சாப்பிடுவதும் ஒரு ருசிதான்.

மாங்காய் போடாத தாளிச்சா சுவையற்று இருக்கும்.

கட்டுரையில் மாங்காய் போட்ட சுவை. சுவைத்தோம்.

sabeer.abushahruk said...

மாமரம் பூத்துக் குழுங்குவதைக் கற்பனை செய்தேன். புளிக்கவில்லை; இனித்தது.

காய்த்ததும் தானா திங்காம எங்கூட்டுக்கு ஒரு டஜனாவது அனுப்பி வைத்தால் அடுத்த எலக்ஷன்ல உங்களைக் கவுன்சிலராகத் தேர்ர்ந்தெடுக்க பாடுபடுவோம்!

sabeer.abushahruk said...

மாமரம் காய்க்க பரிகாரம் செய்தவர் 'ஏன் அப்படி செய்ய வேண்டும்' என்று சொன்னாரா ஹமீது?

Shameed said...

//காய்த்ததும் தானா திங்காம எங்கூட்டுக்கு ஒரு டஜனாவது அனுப்பி வைத்தால் அடுத்த எலக்ஷன்ல உங்களைக் கவுன்சிலராகத் தேர்ர்ந்தெடுக்க பாடுபடுவோம்!//

உங்க மச்சான் சம்பந்தி இருபாணி காகா சாப்பிட்டு மிச்சப்பட்டால் ஒருடஜன் என்ன இரண்டு டஜன்னே அனுப்புகின்றேன்.அவரு புளிபபுன்னா ஒரு ஒஹமாவுள்ள சாப்பிடுவாறு

Iqbal M. Salih said...

சாவண்ணா, புகைப்படம் வழக்கம்போல் அர்ர்ர்ர்ருமை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு