Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சைலன்ஸ் ப்ளீஸ் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2015 | , , ,


செரவடி பதில்கள்... ஸாரி...  சரவெடி பதில்கள் தொடர்கின்றன!

"இந்த பேட்டியில் கேட்கப்பட்டக் கேள்விகளின் முக்கியத்துவத்தையும் அவற்றிற்கு நீங்கள் அளித்த பதில்களின்(?) நவீனத்துவத்தையும் கண்டு கதிகலங்கிப்போன நேயர்கள் கேட்கச் சொன்ன கேள்விகளுக்கு இனி பதில் தாருங்கள்:

"முதற்கேள்வி:

"மாட்டுக்கறி உண்டால் மரண தண்டனை என்று உளறுகிறீர்களே?"

"எங்கள் அறிவுப்புகள் எப்போதுமே தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. அதனால்தான் சான்ஸ்கிரிட்டில் கல்வி கற்கச் சொல்கிறோம். மாட்டுக்கறியால் மரண தண்டனை யாருக்கு என்று சொன்னோம்? மாடுகளுக்குத்தானே மரணம் என்று சொன்னோம்? (பேட்டியாளர்: #*^%$£#)

மாட்டுக்கு மரணம் விளைவிக்காமல் மாட்டுக்கறி எப்படி சாத்தியம்? இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத எதிர்க்கட்சிக்காரர்களைத்தான் அடிமாட்டுக்குப்பதிலாக கேரளாவுக்கு அனுப்ப வேண்டும். நாங்களோ 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு" கொள்கையினர்.

மனிதர்களுக்கு மரண தண்டனை விதிக்க நாங்கள் என்ன காட்டரபிகளா? கீழ்ஜாதிக்காரன் 'தீட்டு' என்னும் ஹிமாலயக் குற்றம் செய்தால் மட்டுமே மரண தண்டனை.

"தீட்டு ?" 

"தீட்டு என்றால் அது ஒரு தொண்மையான தமிழ் கலாச்சார பழக்க வழக்கம். கீழ்ஜாதிப் பெண்ணை மேல்ஜாதி ஆணோ அல்லது வைஸ்வெர்சாவாகவோ மணந்தால் அது தீட்டு; மேல்ஜாதியினர் கீழ்ஜாதியினரை வச்சிக்கிட்டா அது ஹீட்டு. 

தீட்டு, தெய்வ குத்தம், பரிகாறம் போன்ற வார்த்தைகளை கீழ்ஜாதியினர் மீதும்; தேசத்துரோகி, ஜிஹாதி, தீவிரவாதி போன்ற வார்த்தைகளை முஸ்லிம்களுக்கு எதிராகவும் நாங்கள் ஆயுதங்களாகப் பிரயோகிக்கிறோம். தீட்டின் மூலம் நாங்கள் எங்கள் சுத்தத்தைப் பரைசாற்றுகிறோம், ஆனால், மூத்திரம் போனால் கழுவ மாட்டோம். ஏனெனில் அது மூத்திரத்திற்கு எதிரான...மன்னிக்கவும்... சாத்திரத்திற்கு எதிரான தீவிரவாதம் ஆகும்"

"இந்துப் பெண்கள் கட்டாயம் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போடப் போவதாக..."

"எங்கள் ரகசியத் திட்டங்களைக்கூட நேயர்கள் அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆம், இதில் என்ன தவறு? இதன் மூலம் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம். பெற்றெடுக்கும் நான்கில் ஒன்றை கரசேவைக் கழகத்திற்கு தத்து கொடுத்துவிட வேண்டும். அவர்களுக்கு 'புல்டோஸர் ப்ராஜெக்ட்' என்று ஒரு பயிற்சி கொடுத்து 'எப்படி பிற மத ஆலயங்களை, வழிபாட்டுத் தளங்களை இடித்துத் தள்ளுவது 'என்று சொல்லிக்கொடுப்போம். மிச்சம் இருக்கும் மூன்று பிள்ளைகளையும் பன்றிகளாக...ஸாரி... பண்டிதர்களாக வளர்ப்போம். அவர்களை வளர்க்க ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த செலவை சரிகட்ட ஏசு வரி என்று கிரித்துவர்களுக்கும் நாகூர் ஆண்டவர் வரி என்று முஸ்லிம்களுக்கும் விதித்து சரிகட்டுவோம்."

"கல்வி அமைச்சரை எதிர்காலப் புரட்சித்தலைவி என்கிறார்களே என்பது பற்றி... ?"

"ஒரு சின்னத் திருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். எதிர்கால புரட்சித்தலைவி அல்ல, நிகழ்காலப் புரட்சிதலைவி என்பதே சரி. ஒரிஜினல் புரட்சித்தலைவியின் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பு வந்த கணமே புரட்சித்தலைவியின் பதவியை மட்டுமல்ல; பட்டத்தையும் பரித்துக்கொண்டது மத்திய அரசு. ஆனால், அதற்கு பிஜேபி பொறுப்பேற்காது. 

இனி, அந்தப் பட்டம் கல்வியில் இமாலயப் புரட்சி செய்து வரும் எங்கள் கல்வி அமைச்சரையே சேரும். ஒரு மினிமம் கியாரண்டிக்காக அனிமேஷன் படம் ஒன்றில் புரட்சித் தலைவரோடு நடிப்பதுபோல் கல்வி அமைச்சரைக் காட்டி, "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ" என்று ஆடவிட்டு விசிலையும் ஓட்டுகளையும் வாங்கிவிடும் ராஜ தந்திரம் எங்களுக்கும் தெரியும்.

"எதிர்வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையை பிஜேபி அரசு கைப்பற்றும் என்று முழங்குவதாக ஒரு சேதி வெளியானதே... "

(சுத்த்கியடிக்கும் சுனாமி பதில்கள் தொடரும். ஹிஹி)

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

4 Responses So Far:

Yasir said...

இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறீங்களே அப்படியாவது புத்தி வருதாண்டு பார்ப்போம்....இவர்கள் திட்டங்கள் எல்லாம் மட்டம் ஆகிவிடும் விரைவில்....தொடருங்கள் காக்கா இந்த சரவெடியை

sabeer.abushahruk said...

யாசிர்,

லாங் டைம் நோ ஸீ!

Ebrahim Ansari said...

உட்டாலக்கடி கேள்விகள் உல்டா பதில்கள்.

Yasir said...

ஆமாம் புதிய பொறுப்புகள் / வருத்தெடுக்கின்றன காக்கா மிஸ்ஸிங் யூ லாட்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு