Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகக் கோப்பையை பிஜேபி அரசு கைப்பற்றும்! - SiLeNcE pLeAsE... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 15, 2015 | , , ,

"நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பையை பிஜேபி அரசு கைப்பற்றும் என்று முழங்குவதாக ஒரு செய்தி வெளியானதே...என்ன பினாத்தல் இது? உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? அப்துல் கலாமுக்கும் அத்வானிக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள்?"

"அச்சா... டாஸ்ஹை போடும்போதேஹை நல்ல நேரம்ஹை கெட்டநேரம்ஹை என்று கவனமாகஹை இருக்க வேண்டும்ஹை"

(குறுக்கிட்டு)

"சாதுர்யமாக ஹிந்தியை திணிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். தமிழிலேயே பேசுங்கள்"

"ஆமா ஹிந்திக்கு தார் அடிச்சவங்கதானே நீங்க? ராவு காலத்தில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய பணித்தும் சுபயோக கணத்தில் டோனியை பேட்டிங்குக்கு அனுப்பியும் மேட்ச்சை வெல்ல வைப்போம். 

ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு 8 ரன், இந்தியாவுக்கு எதிராகப் போடும் வைட் பாலை வைடஸ்ட் பால் (widest ball) என்று வர்ணித்து 2 ரன் கொடுக்கவும் இந்திய பொவ்லர்கள் வீசும் நோ பால்களை எஸ் பால்கள் (yes ball) என்று எடுத்துக்கொள்ளவும் சட்டத்திருத்தம் கொண்டு வருவோம். உச்சகட்டமாக, சமீபத்தில் கபாலத்தில் அடிபட்டு இறந்துபோன ஆஸ்த்ரேலிய பேட்ஸ்மேனின் காணொளியை எல்லா எதிர்க்கட்சி..மன்னிக்கவும்...எதிரணி நாட்டு டிவி ச்சேனல்களிலும் அடிக்கடி காட்டி அந்தந்த நாட்டு பேட்ஸ்மென்களை பீதியடைய வைப்போம்.  தேர்ட் அம்ப்பயர் ச்சேனலையும் விலைக்கு வாங்கி ரன் அவுட் மற்றும் கேட்ச்சுகளை கிராஃபிக்ஸ் மூலம் எங்களுக்குச் சாதகமாக ஸ்லோமோஷனில் காட்டி வெற்றிக்கு வழி வகுப்போம்.

எங்கள் அரசு எதையுமே பெண்டிங் வைக்காது என்பதை நிரூபிக்க, அம்பயரின் 'டிஸிஷன் பெண்டிங்(decision pending)' என்னும் ஆப்ஷனே இல்லாமல் செய்து, எங்களுக்குச் சாதகமானவற்றை ஸ்லோமோஷனிலும் எங்களுக்கு எதிரானவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டிலும் காட்டி பிரமிப்பான வெற்றிக்கு வழி வகுப்போம். ஆட்டம் பாட்டம் என்று அரைகுறையாக அவுத்துப்போட்டுக் காட்டினால் பல்லிளிக்கும் பரம்பரையில் வந்த எம் தேச விளையாட்டு வீரர்களுக்காக ஐ ப்பி எல்லைப்போல உலகக் கோப்பைக்கும் ச்சியர் கேர்ள்ஸை அறிமுகப்படுத்தி வீரர்களை உற்சாகப் படுத்தி கப்பைத் தட்டிப் பறிப்போம். திறமையாக விளையாடும் இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் அமைச்சகம் உருவாக்கி மந்திரிப் பதவிகள் வழங்குவோம். இதுதான் எங்கள் வெற்றி வியூகம். மோடி மஸ்தான் மந்திரம். போலோ ஜெய்ஹிந்த்!"

"ஒபாமாவை வரவேற்ற நிகழ்ச்சியில் உங்கள் தலைவர் தான் பிரதமர் என்பதையும் மறந்துவிட்டு இத்தனை ஊனா மானா ஆனது ஏன் என்று மீடியா கிழிகிழி என்று கிழிக்கிறதே?"

"காரணமுண்டு. தோரணமில்லாமல் மேடை இல்லை; காரணமில்லாமல் மோடி இல்லை! பிரதமர் ஆவதற்கு முன்பதாக அமெரிக்காவால் எங்கள் மோடிக்கு விசா மறுக்கப்பட்டபோது ஒரு சபதம் எடுத்தார். அது என்னவென்றால், அடைந்தால் அமெரிக்க விசா அடையாவிட்டால் மொறுமொறு தோசா! மோடி அலையை ஊதி திசை மாற்றி வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்தார். அந்த அலை அங்கே அடித்த அடியில் அடிச்சான் அமெரிக்கன் மோடிக்கு விசா! மிசா என்றொரு கொடுங்கோல் ஆட்சிசெய்த கட்சிக்கு இந்தியாவிலேயே இருக்க விசா மறுக்கப்படும் காலம் வெகுதூரம் நஹீ ஹே. ஒபாமாவை மோடி கட்டித்தழுவியதை ஏதோ மிஸஸ் ஒபாமாவையே தழுவியதுபோல் மீடியாதான் பெருசு படுத்துது.

"டெல்லி ஆப்பு பற்றிய தங்கள் கருத்து?"

"தலைநகரை குஜராத்துக்கு மாற்றும் திட்டம் விரைவு படுத்தப் படும்"

-மச்சான் மச்சி 'பெரளி' தொடரும் ஹிஹி.

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

2 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

உலகக்கோப்பையில் ஆரம்பித்து உலகையே ஆட்டங்கான செய்த குஜராத்து வரையிலும் உங்கள் வார்த்தை விளையாட்டு super. Gold cup உங்களுக்கே.

ஆனால் குஜராத் மேட்டர் இன்று வரையிலும் silent தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று (இந்திய)கம்பெனி ஜெயிச்சுடுச்சாமே.... !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு