Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 10 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2015 | , , ,

நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்திருந்தால் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விசயம், நீங்கள் இப்போது பார்க்கும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்று. 'மாசம் 30 -- சட்டி 60' என்ற கணக்கில் வேலை பார்ப்பவர்கள், தொழில் தொடங்கி ஒரு வாரத்துக்குள் "பாரம்' முதுகில் இருப்பதாகவே உணர்வார்கள். ஏனெனில் வேலை பார்க்கும் இடத்தில் அவர்களின் கடமையைச் சரிவர செய்யாததே. "என் முதலாளி ஒரு மொல்லமாரி... அவனுக்கு நான் பார்த்த வேலை அதிகம்தான்" என்று நினைத்தால், நீங்கள் இன்னும் வாழ்க்கையைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பேன்.
உங்களின் முதலாளியின் அட்டகாசம் பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்துகொண்டே அவரை திட்டுவது, சாபம் இடுவது எல்லாம் உங்களின் தூய்மையான நிலைப்பாட்டுக்கு வைரஸ் அட்டாக் வந்து விடும்.

எனவே பிரச்சினைகளை நேர்கொண்டு சமாளிப்பதே அழகு, அதை விடுத்து முன்னுக்கு விட்டு பின்னே திட்டுவது வாழ்ந்து ஜெயிக்கப்போகும் ஒரு வீரனுக்கு அழகல்ல. பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?... தாராளமாக அவரிடம் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்த்துக்கொள்ளலாம்.  வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அது அவ்வளவு ஈசியல்ல என்பது எனக்கும் தெரியும்....யாரையும் நம்பி இறைவன் உங்களைப் படைக்கவில்லை என்பதே உண்மை.

சம்பாதித்தைக் காப்பாற்ற.. செய்யும் முட்டாள்தனங்கள்.

இது ஓரளவு வாழ்க்கையில் செட்டில் ஆனவர்கள் செய்யும் கூத்து. தனது வசதிக்கு காரணம் தனது உழைப்பும், இறைவனின் கருணையும் என்பதை சில சமயம் மறந்து விட்டு சிலர் செய்யும் தகிடு தித்தங்கள் படைத்தவனுக்கே அடுக்காது. முதலில் இது ஏன் ஏற்படுகிறது என்றால் "ஏகத்துவத்தின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை." மற்றும் தொழிலில் ஏற்படும் தாழ்வு நிலை சூழ்நிலை எல்லோருக்கும் பொதுதான் எனும் சமாதான நிலையிலிருந்து வேறுபட்டு மனதுடன் போராடி பிறகு தோற்றுப்போவது.

இது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஒரு தாழ்வு நிலை வரும்போது வாழ்க்கையில் முன்னே நினைப்பவர்களும் , முன்னேறியவர்களும் [சிலர்] செய்யும் தவறு.

என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது  நமது அடிப்படையை அடகு வைத்தோம்?.

சிலர் தொழில் சிறக்க!!! செய்யும் அட்டூழியம்.

எதை நம்புவது என்று வழிதெரியாமல் நிற்கும்போது வரும் மகான் / அல்லது ஏதாவது, தட்டு, தகடுகளுக்கு இவர்கள் அடிமையாவது. சிலர் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இது மாதிரி விசயங்களும் இருந்து விட்டு போகட்டுமே என்றே சொல்வார்கள்....10 ரூபாய் திருடினாலும் திருட்டுதான் 10,000 ரூபாய் திருடினாலும் திருட்டுதான்.

கண்ட அன்னக்காவடிகளை வீட்டுக்குள் விடும் இவர்கள் தனது பொக்கிஷங்களான தன் வீட்டுப்பெண்களை காப்பாற்றத்தவறும் ஏமாளிகள் ஆகி விடுவது....இவர்களாகவே தன் தலையில் எழுதிக்கொண்டது.

இதுபோன்ற விசயங்களை நான் ஏன் இந்த படிக்கட்டில் எழுத வேண்டும் என நானே நினைத்ததுண்டு. இதற்கென்று மார்க்கம் அறிந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பல ஆதாரங்களுடன் எழுத முடியும்...இருப்பினும் இதை நான் எழுதா விட்டால் யார்தான் எழுதுவது. இப்போது முன்னேறுகிறேன் / முன்னேற்றத்தைக் காப்பாற்றுகிறேன் எனும் சிலரிடம் இது போன்ற மூடத்தனங்கள் இருப்பதை நான் எழுதாவிட்டால் சிலரின் "வேர்களில் உள்ள நோயைப்போக்காமல் மரத்தின் கிளைகளை அலங்கரித்து என்ன பயன்?" என்ற எண்ணம் நமக்கு வருவது சரிதானே?


இன்றே விதைத்து இன்றே அறுவடை செய்ய நினைக்கும் புத்தி.

நாம் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற நினைப்பது சகஜம்தான். ஆனால் சீக்கிரம் முன்னேற பெரும்பாலும் சட்டத்துக்கு பறம்பான தொழில்களில் மட்டுமே முடியும். "ஜெயில்களி' உங்கள் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் முயற்சிக்கலாம்!.

இல்லாவிட்டால் எல்லா தத்துவ ஞானிகளும் , கோட்பாடுகளும் சொல்லும் நேர் வழி மட்டும்தான். நிம்மதியான வாழ்க்கையைத் தரும்.

There is no shortcut for SUCCESS !

இப்போது இந்தியா எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான், ஒரு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து மெம்பெர் ஆகிவிடுங்கள், உடனே இந்த வாட்ச் அல்லது ஏதாவது பரிசுப்பொருள் தரப்படும், உடனே நீங்கள் செய்ய வேண்டியது 2 பேரை மட்டும் நீங்கள் மெம்பெராக உங்களுக்கு கீழ் சேர்க்க வேண்டும் அவர்களும் இதே மாதிரிதான், அவர்களும் உங்களைப்போல் ஆள் சேர்க்க சேர்க்க உங்களுக்கு கீழ் 300 பேர் வந்து விடுவார்கள்..பிறகென்ன அவர்கள் செய்யும் சேல் கமிசனில் வரும் உங்களுடைய பங்கு எத்தனை ஆயிரம் தெரியுமா?  ஒரு வருடத்துக்குள் நீங்கள் புதிய கார் வாங்கி விடலாம், புதிய வீடு இப்படி செட்டிலாகி விடலாம். மாத வருமானம் ரூபாய் 30,000 தாண்டும்...எந்த வித கஸ்டமும் இல்லாமல் வீடு தேடி வரும் இந்த பொன்னான வாய்ப்புக்கு உங்கள் முதலீடு வெறும் ரூபாய் 2000 தான் என்று சொல்லும் மல்டி லெவெல் கம்பெனிகள். பொருளாதார கஸ்டத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்களை இது மாதிரி எனக்கு தெரிந்து 25 வருடத்துக்கு மேலாக பல டுபாக்கூர் கம்பெனிகள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

இதில் இன்னும் சில ஏமாற்று வேலைகளும் இருக்கிறது. பரிசுச்சீட்டை சுரண்டினால் அதில் கார் படத்தை பிரின்ட் செய்து கார் படம் தெரிந்தவுடன் " ஹய்யா.. சார் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் உள்ளவர் சார்... ஒரே பரிசுச்சீட்டில் உங்களுக்கு கார்..அது உங்களுக்கு கிடைக்க ரெஜிஸ்டெரேசன், இன்சூரன்ஸ், ரோட் டேக்ஸ் எல்லாவற்றிற்கும் ஒரு 4000 தான் தேவைப்படும் அதை கொடுத்தால் அடுத்த வாரமே உங்கள் வீட்டில் கார்..இதோ பாருங்க சார் தர்மபுரிலெ கார் கிடைத்தவர்”   நீங்கள் இருக்குமிடம் தஞ்சாவூர் மாவட்டமாக இருக்கும் ..அப்போதுதான் நீங்களும் தர்மபுரிக்கெல்லாம் போய் செக் பன்ன மாட்டீர்கள். எவனாவது சட்டையை இன் செய்து கார் பக்கத்தில் போட்டோவில் நின்றால் அது அவனுடைய கார்தான் என்று சத்தியம் செய்யும் பல அப்பாவிகள் இருக்கும் வரை  ஏமாற்றும் ஆட்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை என்பது தெரிந்ததுதானே.

இதை ஏன்யா இந்த தன்னம்பிக்கை தொடர்னு போட்டுட்டு இதுலெ போய் எழுதிக்கிட்டுருக்கான் என சிலர் கேட்கலாம். காரணம் கண்களின் இமைகளுக்கிடையே கனவை சுமந்து செல்லும் இளைஞர் கூட்டம் கடமைகள் முதுகெலும்பை உடைப்பதை தவிர்க்க "எப்படியாவது சம்பாதிக்கனும்' எனும் தவறான தொழில்களில் தன் தலையை கொடுக்கலாம்.

எப்போதும் பாலிஷான விசயங்களைமட்டும் எழுதிக் கொண்டிருந்தால் சாக்கடைகளை எப்படி அடையாளம் காட்டுவது?...

இதை நான் எழுதாமல் வேறு யார்தான் எழுதுவது?

See you in next episode...
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN

7 Responses So Far:

Yasir said...

நகைச்சுவையுடன் நச் என்று குட்டி, உரைக்கும் படி சொல்லும் இந்த எழுத்துக்கலையை உங்களைவிட்டால் யார் செய்ய முடியும்....அந்த பரிசு சீட்டு / கார்படம் சிரிப்பையும் / சிந்தனையும் வரவழைத்தது....நன்றி காக்கா

sabeer.abushahruk said...

பணத்தேவை ஒரு போதை. அதை சடுதியில் சேர்த்துவிடத்துடிப்பவர்கள் இந்தப் படியில் இருந்து சிந்திப்பது நல்லது.

Ebrahim Ansari said...

சில சொந்த மருத்துவக் காரணங்களால் அதிகம் இணையத்தில் தலை காட்ட இயலவில்லை.

தமி ஜாகிரின் இந்தத் தொடரை நூல்வடிவத்தில் கொண்டு வருவது பற்றி ஆக்கபூர்வமாக செயலாற்றும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்.

sheikdawoodmohamedfarook said...

//ஜெயில்களிஉங்கள் வைற்றுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால்........./ ஜெய்ல்களிதிண்ணாமல்எத்தனையோகோடீஸ்வரர்கள் பள்ளி வாசல் திறப்புவிழாவில்மேடையில்முன்வரிசையில்இருந்ததையும் கண்டிருக்கிறேன்.திருடுவதற்கு என்றுஒருSkill இருந்தால் தேவா அமிர்தமே குடிக்கலாம்.

அப்துல்மாலிக் said...

நேத்து என் கம்பெனியில் சேர்ந்த ஒரு அக்கவுடண்ட் MLM லே இருக்கான்... இங்கு எல்லோரையும் பிரைன்வாஸ் செய்றான்.. நான் இடைபுகுந்து அதன் இடற்பாடுகளையும் கயவாலித்தனத்தையும் சொல்லிக்கொண்டிருக்கேன்.. என் கம்பெனி ஆட்களை “நான் காப்பாத்தாமல் யார் காப்பாத்துவா” சரிதானே காக்கா

ZAKIR HUSSAIN said...

oorukku 4 peru

MLMல் நடக்கும் கூத்தை இந்த 20 நிமிடப்படம் தெளிவாக சொல்கிறது. மிகவும் அழகாக எடுத்து இருக்கிறார்கள். நல்ல எடிட்டிங் / டைரக் ஷன் & நடிப்பும்.

https://www.youtube.com/watch?v=leQ0eLJpsnk

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு