வண்டு மொய்க்கும்
வனமெல்லாம்
வாசம் மிகைக்கும்
மலரெல்லாம்
மொட்டவிழும் மலர் கண்டு -ரீங்கார
மெட்டவிழ்க்கும் இளம் வண்டு
தண்டுவழி வண்டூர
தன் னூற்றில்
தேன் சுரக்கும் மலர்
இதழ்விரித்தப் புன்னகையாய்
மடல்விரித்து மலர்ந்திருக்க
சின்னஞ்சிறு சிறகடித்து
மின்னலென வண்டுவரும்
வீண் குடியில் வீழ்ந்துபோன
மாந்தரைப் போலல்லாமல்
தேன் குடித்துத் திளைக்கும் வண்டு
தேன் கொடுத்துக் களிக்கும் மலர்
சட்டத் தடுப்புகளோ
சமூக வரம்புகளோ
கட்டுப்படுத்த இயலாத
கன்றுக் குட்டியென
துள்ளிக் குதித்து
வாய்த்த பூக்களிலெல்லாம்
வாய் வைக்கும் வண்டு
பூக்களைச் சொல்லிக் குற்றமில்லை
வண்டுகளுக்குத்தான்
வாலை
ஒட்ட நறுக்க வேண்டும்
மகரந்தத் தூள் பரப்பி
மலர்களின் சூல் நிரப்பி
இன விருத்திக்கு
தின முழைக்கும் வண்டு
வாசமோ வண்ணமோ
வண்டினைச்
சுண்டியிழுக்க
பூக்காடு காய்க் காய்க்கும்
புசிக்கக் கனி கிடைக்கும்
புடவையின் வண்ணமோ - கூந்தல்
பூக்களின் வாசமோ
சுண்டியிழுக்கும் பெண்மை
கண்டுயிளிக்கும் ஆண்மை
வனவாசம் விட்டொழித்து
சனநாயக சட்டமேற்று
பூக்கரம் பிடித்தால்
கட்டிவைத்துக் காத்திருந்த
பூச்சரம் உதிரும்
புதுச் சந்ததி விதிரும்
மகரந்தகத்திற்குத்தான்
மலர்த்தோட்டம்
மண அந்தரத்திற்கு
ஒற்றைப்பூவே உகந்தது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
வனமெல்லாம்
வாசம் மிகைக்கும்
மலரெல்லாம்
மொட்டவிழும் மலர் கண்டு -ரீங்கார
மெட்டவிழ்க்கும் இளம் வண்டு
தண்டுவழி வண்டூர
தன் னூற்றில்
தேன் சுரக்கும் மலர்
இதழ்விரித்தப் புன்னகையாய்
மடல்விரித்து மலர்ந்திருக்க
சின்னஞ்சிறு சிறகடித்து
மின்னலென வண்டுவரும்
வீண் குடியில் வீழ்ந்துபோன
மாந்தரைப் போலல்லாமல்
தேன் குடித்துத் திளைக்கும் வண்டு
தேன் கொடுத்துக் களிக்கும் மலர்
சட்டத் தடுப்புகளோ
சமூக வரம்புகளோ
கட்டுப்படுத்த இயலாத
கன்றுக் குட்டியென
துள்ளிக் குதித்து
வாய்த்த பூக்களிலெல்லாம்
வாய் வைக்கும் வண்டு
பூக்களைச் சொல்லிக் குற்றமில்லை
வண்டுகளுக்குத்தான்
வாலை
ஒட்ட நறுக்க வேண்டும்
மகரந்தத் தூள் பரப்பி
மலர்களின் சூல் நிரப்பி
இன விருத்திக்கு
தின முழைக்கும் வண்டு
வாசமோ வண்ணமோ
வண்டினைச்
சுண்டியிழுக்க
பூக்காடு காய்க் காய்க்கும்
புசிக்கக் கனி கிடைக்கும்
புடவையின் வண்ணமோ - கூந்தல்
பூக்களின் வாசமோ
சுண்டியிழுக்கும் பெண்மை
கண்டுயிளிக்கும் ஆண்மை
வனவாசம் விட்டொழித்து
சனநாயக சட்டமேற்று
பூக்கரம் பிடித்தால்
கட்டிவைத்துக் காத்திருந்த
பூச்சரம் உதிரும்
புதுச் சந்ததி விதிரும்
மகரந்தகத்திற்குத்தான்
மலர்த்தோட்டம்
மண அந்தரத்திற்கு
ஒற்றைப்பூவே உகந்தது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
33 Responses So Far:
சபீர் காக்காவின் அழகிய கவி வரிகள்.
இரட்டை இலைகள் இல்லாமல் தவிக்கும்
இவ்வெண் மொட்டுக்களுக்கு உருதுணையாய்
இரு திமுக வண்டுகள். வழக்குகளுக்கும், வாய்தாக்களுக்கும் இனி என்ன வேலை?
//இரட்டை இலைகள் இல்லாமல் தவிக்கும்
இவ்வெண் மொட்டுக்களுக்கு உருதுணையாய்
இரு திமுக வண்டுகள்.//
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வண்டு விழிப்பதற்கு முன்பான விடிகாலையிலேயே நீங்கள் இதைக் கண்டு விழித்தீர்களா?
பொழுது புலர்வதற்கும் பூ மலர்வதற்கும் முன்னரே பொழிந்த தங்கள் கருத்திற்கு நன்றி.
உங்கள் வர்ணனையில் சாக்கடை அரசியல் சந்தனம்ஆனது!
அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிஞரே நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதை இயற்கை சிறகு விரித்து து"வன்டு" போன இதயத்தை வண்டாய் கண்டு, கற்கண்டு சொற்கொண்டு இல்லற தர்மத்தை சொல்லவந்ததுக்கு முதலில் ஒரு வாழ்த்து பூச்செண்டு!
வண்டு மொய்க்கும்
வனமெல்லாம்
வாசம் மிகைக்கும்
மலரெல்லாம்
மொட்டவிழும் மலர் கண்டு -ரீங்கார
மெட்டவிழ்க்கும் இளம் வண்டு
-------------------------------------------------------------------
நொந்த மனங்களை கவிதை நந்தவனத்துக்கு இழுத்துச்சென்று தேன் புகட்டிய வரிகள்!வாசம் மிகைக்கும் வரிகளை பார்த்து திகைக்கும் படி மேலும் வாசகர் கூடும் படி இப்படி அழகாய் வடிக்கும் கவிதைத்தேன் ,எடுத்தேன்,கவிழ்தேன் என கொள்ளாமல் ரசித்து,ருசிக்கிறது மனம்.!
வீண் குடியில் வீழ்ந்துபோன
மாந்தரைப் போலல்லாமல்
தேன் குடித்துத் திளைக்கும் வண்டு
தேன் கொடுத்துக் களிக்கும் மலர்
-------------------------------------------------------------------
அருமை!அருமை!உவமானம்!குடித்து தன்மானம் இழக்கும் மா ந்(வெறும்)தரை போல் அல்லாமல்,இன்பங்களை பகிர்ந்து வண்டும், மலரும் இங்கே அழகிய இல்லறவியலை இலைமறைகாயாக சொல்லும் இயற்கை பாடம் அந்த ஐந்தறிவு ,அதனும் குறைஅறிவு ஜீவன்களுக்குள் இந்தனை இணக்கமா?அல்ஹம்துலில்லாஹ்!.
சட்டத் தடுப்புகளோ
சமூக வரம்புகளோ
கட்டுப்படுத்த இயலாத
கன்றுக் குட்டியென
துள்ளிக் குதித்து
வாய்த்த பூக்களிலெல்லாம்
வாய் வைக்கும் வண்டு
பூக்களைச் சொல்லிக் குற்றமில்லை
வண்டுகளுக்குத்தான்
வாலை
ஒட்ட நறுக்க வேண்டும்
-------------------------------------------------
ஹா,ஹா,ஹா,......இப்படியும் உவமான தொடருதா?வண்டுக்கு வால் முளைத்தால் வளர்ந்த "வாண்டு" அது எல்லை தாண்டு"ம் போது வாலை நறுக்கத்தான் வேண்டும்!(இறைவன் இயற்கையில் கொடுத்த இறக்கையை தவாறாக பயன்படுத்தினால்) ......ஆண் என்ற அதிகாரத்தை தவறாக பயன் படுத்தினால் இப்படித்தான் நறுக்க வேண்டும்!.
-----------------------------------------------
வ அலைக்குமுஸ்ஸலாம்.
அன்பின் க்ரவ்ன்,
//நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதை இயற்கை சிறகு விரித்து//
அப்துர்ரஹ்மான் (ஹார்மிஸ்), என் ஷஃபாத் மற்றும் தாங்களும் சேர்ந்து, இவ்வகையான கவிதைகளுக்கு அதிரை நிருபரில் தோற்றுவித்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சி இது.
தங்களின் தங்கத்தமிழைத் தொடருங்கள்.
வண்டுகளுக்கு மட்டும் வாசிக்கத் தெரிந்தால் பூவில் அமர்வதற்கு பதிலாக உன் கவி வரிகளில் வந்து அமர்ந்து கொள்ளும். இத்தகைய கவி வரிகள் உனக்குள் இருக்கும் தனிச்சிறப்பு அத்தனையும் முத்துச்சரம் அலங்கரிக்கும் பூவின் மணம்
//நொந்த மனங்களை கவிதை நந்தவனத்துக்கு இழுத்துச்சென்று தேன் புகட்டிய வரிகள்!வாசம் மிகைக்கும் வரிகளை பார்த்து திகைக்கும் படி /
நொந்த மனம
நந்த வனம்
மிகைக்கும் வரி
திகைக்கும் படி
என இயல்பாக வந்துவிழும் கவிதைக்கான வார்த்தைகளைக் கருத்து விலங்கிட்டு கட்டிப்போடுதல் எந்த ஊர் ஞாயமோ! ஒரு கருவைப்பற்றிக் கோத்துத் தந்தால் நாங்கள் தனி பதிவிட்டுப் படித்து மகிழ்வோமே?
மகரந்தத் தூள் பரப்பி
மலர்களின் சூல் நிரப்பி
இன விருத்திக்கு
தின முழைக்கும் வண்டு
-------------------------------------------------
தூள்!.............துள்ளல் போடும் தமிழ் !வண்டு அல்லல் படாமல் இருக்க மகரந்தம்(இந்த அந்தரங்கம் விதிவிலக்கு)தூள் பரப்பி மலர்களில் சூல் நிரப்பி!இப்படி கவிதை தேன் துளிகளை தூவி எழுத்ததெரியாத எங்களையும் எழுத தூண்டும் வ"சிகரம்!
//வண்டுகளுக்கு மட்டும் வாசிக்கத் தெரிந்தால் பூவில் அமர்வதற்கு பதிலாக உன் கவி வரிகளில் வந்து அமர்ந்து கொள்ளும்.//
அன்பின் மெய்சா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வண்டு வந்து அமர்வதைவிட 'கண்டது கேட்டது என எதைப்பற்றியும் சட்டென கவிபாடும்' நீ வந்து அமர்ந்ததுதான் அதிர்ஷ்டம்.
நேசிப்பவர்களல் வாசிக்கப்படுவதில் எழுதுபவனுக்கு ஒரு ஆறுதல்.
நன்றி-டா.
வாசமோ வண்ணமோ
வண்டினைச்
சுண்டியிழுக்க
பூக்காடு காய்க் காய்க்கும்
புசிக்கக் கனி கிடைக்கும்
புடவையின் வண்ணமோ - கூந்தல்
பூக்களின் வாசமோ
சுண்டியிழுக்கும் பெண்மை
கண்டுயிளிக்கும் ஆண்மை
வனவாசம் விட்டொழித்து
சனநாயக சட்டமேற்று
பூக்கரம் பிடித்தால்
கட்டிவைத்துக் காத்திருந்த
பூச்சரம் உதிரும்
புதுச் சந்ததி விதிரும்
---------------------------------------------------------
புளியங்காயும் இனிக்கும் படி ,சாம்பலும் சுவைக்கும் படி!கொடி இடையாள் அடிமடிக்கு மேல வயிற்றில் தாங்கி நிற்கும் நம் வாரிசு எனும் பரிசு,இறைவன் அருட்கொடை!
க்ரவ்ன்,
//ஹா,ஹா,ஹா,......இப்படியும் உவமான தொடருதா?வண்டுக்கு வால் முளைத்தால் வளர்ந்த "வாண்டு" அது எல்லை தாண்டு"ம் போது வாலை நறுக்கத்தான் வேண்டும்!//
வாலை நறுக்க வேண்டும் என்று சொல்லும்போது வாசிப்பவர் சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
நடத்திக்காட்டிவிட்டீர்கள்.
ஜட்ஜய்யா, இனி உங்களிடம் தீர்ப்பை எழுதி வாங்கிய பிறகு பதிவை வெளியிடுதல் நல்லது.
மகரந்தகத்திற்குத்தான்
மலர்த்தோட்டம்
மண அந்தரத்திற்கு
ஒற்றைப்பூவே உகந்தது!
---------------------------------------------------
இந்த ஓற்றை பூவே! பல "கற்றை பூவைவிட உயிர்பு மிக்கது!அதன் சார்பு நம்மை சேர்ந்தது!தித்திப்பு, ரசிப்பு,சகிப்பு மிக்கது மேலும் அன்பில் நிலைத்திருக்கும் இதன் ஓவ்வொரு சந்திப்பும் நம்மை பற்றியும், நம் எதிர்காலத்தை பற்றியுமே சிந்திக்கும் ......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பிற்குரிய சகோதரர் திரு சபீர் அபூஷாருக்,
வண்ணமலர் தோட்டத்தில்
வண்டுகளின் நடனம் நம்
கண்முன்னே கொண்டுவந்து அழகியல்
உணர்வலைகளில் திளைக்கவைக்கும்
மனங்கவரும் மணக்கவிதை!!!
ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்
அமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்
//மகரந்தகத்திற்குத்தான்
மலர்த்தோட்டம்
மண அந்தரத்திற்கு
ஒற்றைப்பூவே உகந்தது!//
ஓராயிரம் செய்திகளை உரக்க சொல்லும் வரிகள்.
மழைப் பெய்ந்த இரவு அன்று சுபுஹ் தொழுதுவிட்டு இரயில் நிலையம் பக்கம் போனால் அங்கு செடிகள் தாங்கி நிற்க்கும் மழைத்துளிகளுக்கு மத்தியில் சில வண்டுகள் பூக்களை சுற்றி வந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கும்...அந்த காட்சியை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது உங்கள் கவிதை,நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆஃபிஸ் டென்ஷனை மறந்து விட்டு இயற்கையோடு ஒன்றி வாழ்வது போன்ற உணர்வை 10 நிமிடம் தந்த இந்த கவிதை இன்னும் நீளாத என்ற ஏக்கத்தை உருவாக்கியது….வாழ்த்துக்கள் காக்கா
அன்சாரி மாமா சொன்னதுபோல்..ஆயிரம் அர்த்தங்களும் அறிவுரைகளும் பொதிந்தது அந்த கடைசி வரிகள்
//தேன் குடித்து திளைக்கும்வண்டு-தேன்கொடுத்து களிக்கும் மலர்// நல்லநாணயமான கொடுக்கல் வாங்கல் போல்தெரிகிறது! இதில் யாரும் இடைத்தரகர்புகுந்து கசாமுசாபண்ணாமல் அல்லாதான் காப்பாற்றவேண்டும்.
//வண்ணமலர் தோட்டத்தில்
வண்டுகளின் நடனம் //
வ அலைக்குமுஸ்ஸலாம் தம்பி B. அஹமது அமீன்,
ஆஹா, CNN தமிழ்ச் சேனல் ஆரம்பித்தது யாசிர் சொல்லித் தெரியும். இப்படி சொக்கத்தமிழில் முழங்குவது பிரமிப்பாய் இருக்கிறது.
நன்றி.
//இந்த
ஓற்றை பூவே - பல
"கற்றை பூவைவிட
உயிர்ப்பு மிக்கது-அதன்
சார்பு நம்மைச் சேர்ந்தது!
தித்திப்பு,
ரசிப்பு,
சகிப்பு மிக்கது - மேலும்
அன்பில் நிலைத்திருக்கும் - இதன் ஓவ்வொரு சந்திப்பும்
நம்மை பற்றியும்,
நம்
எதிர்காலத்தை பற்றியுமே
சிந்திக்கும் ......!//
க்ரவ்ன்,
முடிவு சிலருக்கு இப்படிக்கூட இருக்கலாம்:
.....
....
மண அந்தரங்கத்திற்கு
ஓரிரு பூக்களே உகந்தது!
//மழைப் பெய்த இரவு அன்று சுபுஹ் தொழுதுவிட்டு இரயில் நிலையம் பக்கம் போனால் அங்கு செடிகள் தாங்கி நிற்கும் மழைத்துளிகளுக்கு மத்தியில் சில வண்டுகள் பூக்களை சுற்றி வந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கும்//
அஸ்ஸலாமு அலைக்கும், யாசிர்!
ஆஹா...ஆஹா...ஆஹா...!!!
வண்டு களித்ததை
கண்டு களித்தீரோ
வார்த்தைகளுக்குப் பதிலாக
பார்த்தவற்றைப் பகிர்ந்து
வாழ்க்கைப்படத்தை
வரைந்து காட்டுகிறீர்கள்!
நன்றி.
//ஓராயிரம் செய்திகளை உரக்க சொல்லும் வரிகள். //
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
பல்லாயிரம்பேர்
பாராட்டிய சந்தோஷம்
ஒற்றை வாக்கியத்துள்
ஓராயிரம் புகுத்திய
வித்தகம்
மூத்த அறிஞர் தங்களின்
லாவகம்.
நன்றி.
//நல்லநாணயமான கொடுக்கல் வாங்கல் போல்தெரிகிறது! இதில் யாரும் இடைத்தரகர்புகுந்து கசாமுசாபண்ணாமல் அல்லாதான் காப்பாற்றவேண்டும்.//
அஸ்ஸலாமு அலைக்கும், ஃபாரூக் மாமா!
ஹாஹ்ஹா!
நல்ல இளமை ததும்பும் கருத்து. (நான் எழுதி, நீங்கள் வாசிச்சிட்டியலேன்னு லேசா வெட்கமா இருக்கு)
நன்றி.
//வண்டுகளுக்குதான் வாலைஓட்டநறுக்கவேண்டும்// ஆசிரமத்துவண்டுகளுக்குஇன்னும்வாலைஓட்டநறுக்கவில்லையே?
//ஆசிரமத்துவண்டுகளுக்குஇன்னும்வாலைஓட்டநறுக்கவில்லையே//
அ'வாளை' ஒட்ட நறுக்கும் வாள் கூர் மழுங்கியதால் அவாள் வாலை ரொம்பத்தான் ஆட்டுகின்றனர்.
//நான்எழுதிநீங்கவாசிசுட்டியலே!எனக்குதான்வெட்க்கமாஇருக்கு// வெட் கப்படவேண்டாம்மருமகனே!நான்ஹைதர்அலிகாலமாமாஅல்ல! ஜீனத்அமன்காலத்தைதாண்டிசில்க்காலத்தையும்தாண்டிஓடும்'என்றும் பதினாறு' பந்தையக்குதிரை!?
வ அலைக்குமுஸ் சலாம். தம்பி கவிஞர் சபீர்.
முதல் நாள் பட்டர்பிளை கார்டனில் தாங்கள் பார்த்த பார்வை மறுநாள் கவிதையாக மலர்ந்தது என்று அறிந்தேன். இப்படி பார்த்த உடனே உணர்வுகளை கவிதையாக வடிக்கும் லாவகம் - இறைவன் உங்களுக்குத் தந்த வரம்.
பாரதியாருடைய வரலாற்றில் ஒரு செய்தி உண்டு.
பாரதி மாணவப்பருவத்திலேயே கவிதை எழுதுவதில் பொறாமை கொண்ட அவரது வகுப்பாசிரியர் பாரதி சின்னப்பயல் என்று முடியும்படி ஒரு கவிதை எழுதச் சொன்னாராம். அந்த ஆசிரியரின் பெயர் காந்திமதிநாதன்.
பாரதியாரும் உடனே கவிதை எழுதிக் காண்பித்தாராம்
கவிதை இப்படி நிறைவுற்று இருந்தது.
" காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்"
இப்படி கற்பூரமாக பற்றிக் கொள்ளும் தன்மை எல்லா கவிகளுக்கும்வாய்க்காது.
ஒரு கவிதை கேட்டால் ஓரிறவு முழுதும் விழித்து, காபி குடித்து குடித்து பின் காகிதங்களை கசக்கி எரியும் கவிஞரகளைக் கண்டு இருக்கிறேன்.
இப்படி உடனே ஒட்டும் ஒட்டுவாரொட்டியாக கருத்துக்களையும் உணர்வுகளையும் கவிதைகளாக்கி கலக்குவது உங்களைப் போல ஒரு சிலர்தான்.
பாராட்டுகிறேன்.
வ அலைக்குமுஸ் சலாம். தம்பி கவிஞர் சபீர்.
முதல் நாள் பட்டர்பிளை கார்டனில் தாங்கள் பார்த்த பார்வை மறுநாள் கவிதையாக மலர்ந்தது என்று அறிந்தேன். இப்படி பார்த்த உடனே உணர்வுகளை கவிதையாக வடிக்கும் லாவகம் - இறைவன் உங்களுக்குத் தந்த வரம்.
பாரதியாருடைய வரலாற்றில் ஒரு செய்தி உண்டு.
பாரதி மாணவப்பருவத்திலேயே கவிதை எழுதுவதில் பொறாமை கொண்ட அவரது வகுப்பாசிரியர் பாரதி சின்னப்பயல் என்று முடியும்படி ஒரு கவிதை எழுதச் சொன்னாராம். அந்த ஆசிரியரின் பெயர் காந்திமதிநாதன்.
பாரதியாரும் உடனே கவிதை எழுதிக் காண்பித்தாராம்
கவிதை இப்படி நிறைவுற்று இருந்தது.
" காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்"
இப்படி கற்பூரமாக பற்றிக் கொள்ளும் தன்மை எல்லா கவிகளுக்கும்வாய்க்காது.
ஒரு கவிதை கேட்டால் ஓரிறவு முழுதும் விழித்து, காபி குடித்து குடித்து பின் காகிதங்களை கசக்கி எரியும் கவிஞரகளைக் கண்டு இருக்கிறேன்.
இப்படி உடனே ஒட்டும் ஒட்டுவாரொட்டியாக கருத்துக்களையும் உணர்வுகளையும் கவிதைகளாக்கி கலக்குவது உங்களைப் போல ஒரு சிலர்தான்.
பாராட்டுகிறேன்.
அன்பிற்குரிய காக்கா,
இதென்ன! மறு மதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்ட விடைத்தாளைப் போல இன்னும் கூடுதலாக மதிப்பெண்கள்!!!
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
Post a Comment