அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லாஹ் உதவியால் முடிந்தவரை நானும் பேராசிரியர் அப்துல் காதர் சார்
அவர்களும் முயற்சி செய்து செக்கடிகுளம் மற்றும் அதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் நடைபயிற்சி மேடை பற்றிய ஆவணப் படம் ஒன்றினை தயார் செய்துள்ளோம்.
அவர்களும் முயற்சி செய்து செக்கடிகுளம் மற்றும் அதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் நடைபயிற்சி மேடை பற்றிய ஆவணப் படம் ஒன்றினை தயார் செய்துள்ளோம்.
கடந்த ஒரு வருடமாக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறப்பான வகையில் திறக்கப்பட்ட செக்கடி குளம் நடைபயிற்சி மேடைக்கு பணத்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் பெரும் பங்களிப்பு செய்த யாரும் தங்களை பற்றி இந்த ஆவணப்படத்தில் சுட்டிச் சொல்ல வேண்டாம் என்ற வேண்டிக் கொண்ட காரணத்தால் அவற்றை தவிர்த்து விட்டு, இதுபோன்ற நடைபயிற்சி அமைப்பு ஒவ்வொரு ஊர்களிலும் வரவோண்டும் அல்லது அதிரை இன்னபிற பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் எவ்வித பாரபட்ச்மின்றி வெளியிடுகிறோம்.
தமிழகத்தில் மற்ற ஊர்களைச் சார்ந்த இணையதளத்தினரும் இந்த தகவலை தங்களை தளங்களில் பதிந்து அனைவரும் பயன்பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
A.அபுல் ஹசன்
2 Responses So Far:
Masha Allah!
Great work!!
May Allah shower his grace on one and all involved in this project!!!
மிகச் சிறந்த பணி! நடை மேடையைத்தான் சொல்கிறேன். யார் இதில் பெரும் பங்கு வகித்தவர் என்பதை வெளியிட விரும்பாவிட்டாலும், அதிரை மக்கள் அவரை அறிவர். பொது நன்மையைக் கருதிய இக்கட்டமைப்பு, ஒரு 'ஸதகத்துன் ஜாரியா' ஆகும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை. இதில் ஒத்துழைப்பளித்த நற்சேவையாளர்களுக்கும் இறையருள் வாய்க்கட்டும்!
ஆங்காங்கு இறை நினைவை ஊட்டும் பலகைகள் அமைத்தது, it's a great and noble idea! அண்மைய எதிர்காலத்தில், நடை பயில்வோரின் கண்களையும் கருத்தையும் புனிதப்படுத்தும் பொருத்தமான அருள்மறை குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் வாசகங்களை அச்சிட்டுப் பலகைகளாக நட்டு வைத்து உதவி செய்ய 'அதிரை தாருத் தவ்ஹீத்' ஆயத்தமாயுள்ளது என்ற தகவலை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நடைமேடையின் பொறுப்பாளர்கள் மனமுவந்து அனுமதியளித்தால், விரைவில் பணியைத் தொடங்கலாம், இன்ஷா அல்லாஹ்.
- அதிரை அஹ்மத்
அமீர், 'அதிரை தாருத் தவ்ஹீத்'
Post a Comment