அகிலத்தின் அதிபதியின் திருப்பெயரால்
அவனின் பகுதியான்மாவின் கருவின் உள்ளுயிராய்
உணர்விலாச் சிறுவுருவ எலும்பிற்போர்த்திய சதையாய்
தாயின் கர்ப்பக் கோளறையில் தன்னந்தனியேனாய்
உயிர்க்காற்றும் ஊணும் தொப்புற் கொடிவழியாய்
எனை நானே அறியாச்சிறு இருட்சூழ்ந்தவனாய்
என் சுயமும் உணர்வும் அறியா நினைவிலனாய்
எனினும் எனைப்படைத்துக் கருவில் முழுவுருவாக்கி
எட்டாயேற்றம் பெறும் புதைந்த நுண்ணறிவை
எனுள் ஏற்றி நானே எனைக் கேட்டிலன்
என் முடிவும் முயற்சியுமின்றியே இப்பூவுலகில் படைத்துப்
பரிபாலிக்கின் றென்னிறைவனுக்கே நான் அர்ப்பணம்
என்னை அரவணைக்க என் அன்னைக்கும்
எந்தைக்குமே மெய்யும் அன்பும் கருணைவுணர்வளித்து
வாய்ப்பான இப்புவிமேல் எம்பிறப்பு இறைச்சித்தம்
கருவறையுள்ளிலும் இறையில்லேல் உதவியற்றேன்
அதிகாரக்கட்டும் அண்டச்சராசரங்களின் பிடியும் அவனிடமே
இப்புவியறையினிலும் அவன் திட்டத்தில் அங்கமானேன்
விழிப்பிருந்தும் உணர்வும் உதவியும் சுயச்சார்பும்
சுற்றச் சார்பிருந்தும் இறையில்லேல் உதவியற்றேன்
பஹ்ருதீன் அஹ்மது அமீன்
19 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய தம்பி B. அஹமது அமீன்,
முதல் தமிழ் கவிதையைச் செய்யுள் தமிழிலும் இறைவணக்கமுமாய் யாத்திருப்பது மிகச் சிறப்பாக வந்துள்ளது. மொழியாடலில் ஒரு கம்பீரம் நிலவுவதை உணர முடிகிறது. (Ahamed Ameenizm? :-)
படைப்பிற்கான நன்றியும் அடிபணிதலும் அர்ப்பணமும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
வாழ்த்துகள் தம்பி.
//கருவறையிளுள்ளும் இறைஇல்லேல் உதவியற்றேன்// என்சிந்தையில்விளக்கேற்றியசிறந்தவரிகளில்ஒன்று. மருமகன்அஹமதுஅமீனின்தந்தையும்ஒரு கவிஞரே ! தொடர்ந்துகவிதைஎழுதவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய தம்பி B. அஹமது அமீன்,
முதல் தமிழ் கவிதையைச் செய்யுள் தமிழிலும் இறைவணக்கமுமாய் யாத்திருப்பது மிகச் சிறப்பாக வந்துள்ளது. மொழியாடலில் ஒரு கம்பீரம் நிலவுவதை உணர முடிகிறது. (Ahamed Ameenizm? :-)
படைப்பிற்கான நன்றியும் அடிபணிதலும் அர்ப்பணமும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
வாழ்த்துகள் தம்பி.
-------
நன்றி:கவி காக்கா சபீர்!.
எட்டாயேற்றம் பெறும் புதைந்த நுண்ணறிவை
எனுள் ஏற்றி நானே எனைக் கேட்டிலன்
என் முடிவும் முயற்சியுமின்றியே இப்பூவுலகில் படைத்துப்
பரிபாலிக்கின் றென்னிறைவனுக்கே நான் அர்ப்பணம்
------------------------------------
இந்த சமர்பணம் தான் இறைவனிடத்தில் கொள்ளும் பற்று!அவன் வழிப்பற்றி நல் வழி அடையும் சுயம்!அல்ஹம்துலில்லாஹ்!ஆற்றல் பெற்ற அல்லாஹுக்கே எல்லாப்புகழும்!
என்னை அரவணைக்க என் அன்னைக்கும்
எந்தைக்குமே மெய்யும் அன்பும் கருணைவுணர்வளித்து
வாய்ப்பான இப்புவிமேல் எம்பிறப்பு இறைச்சித்தம்
கருவறையுள்ளிலும் இறையில்லேல் உதவியற்றேன்
----------------------------------------------------------------------------------------------------------
அவனே படைத்தவன்!சகலமும் ஆற்றல் படைத்தவன்!அவன் உள்ளேயும் ,வெளியெங்கும் நிறைந்திருக்கும் ஆற்றல் இல்லையேல் ஏதும் இல்லை!அவனே முதலும்,முடிவும் ஆனாலும் முடிவில்லாதவன்! அவன் சித்தமே நாம் எல்லோரும்!அல்லாஹ்வின் பேறாற்றல் இங்கே அழகாய் சொல்லபட்டிருக்கு. தம்பி அமீன் ஞானம் பிரமிக்க வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!.
அதிகாரக்கட்டும் அண்டச்சராசரங்களின் பிடியும் அவனிடமே
இப்புவியறையினிலும் அவன் திட்டத்தில் அங்கமானேன்
விழிப்பிருந்தும் உணர்வும் உதவியும் சுயச்சார்பும்
சுற்றச் சார்பிருந்தும் இறையில்லேல் உதவியற்றேன்
-----------------------------------------------------------------------------------------------------
அவன் உதவியன்றி யார் உதவ கூடும்!இந்த உயிர் தாங்கிய உடல் கூடும் நடமாட அவன் உதவியன்றி என்ன வாகும்?எல்லாம் அவனே! அவன் செயலே!அவனிடமே சரனாகதி!அதுவே நம் விதியை நிம்மதி யாக்கும் சக்தி!அல்லாஹுக்கே எல்லா புகழும்! இனியும் சகோ. அமின் இதுபோல் பல்வேறு ஆக்கம் படைக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
//மருமகன்அஹமதுஅமீனின்தந்தையும்ஒரு கவிஞரே ! //
அப்படியா!!??
அவர்கள் எழுதியவை கைவசமிருந்தால் வாசிக்கத் தரலாமே?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பிற்குரிய சகோதரர் திரு சபீர் அபூஷாருக்,
தங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
மரியாதைக்குரிய மாமா அவர்களின் பாராட்டிற்கும் இன்னும் எழுதும்படி உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி.
அன்பிற்குரிய க்ரௌன் தஸ்தகீர்,
தங்கள் பிரத்தியேக கவியுரை என் கவிதைக்குக் கிடைத்துள்ள சிறப்பு பரிசு.
மற்றும் இக்கவிதையை வாசித்துப் பாரட்டிய, பயன் பெற்ற எல்ல நல்லுள்ளங்களுக்கும் என் ஆழ்ந்த நன்றியும் இறைஞ்சல்களும்.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்
அமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்
//மருமகன்அஹமதுஅமீனின்தந்தையும்ஒரு கவிஞரே ! //
//அப்படியா!!??
அவர்கள் எழுதியவை கைவசமிருந்தால் வாசிக்கத் தரலாமே?//
என் தந்தை நன்கு கவி பாடும் திறம் உள்ளவர். ஏதும் எழுதியதாக என்னிடம் இல்லை. சில தடவை மலேசிய நாட்டிலிருந்து தன் பாடுதல்களை ஒலிநாடாவில் பதிந்து அனுப்பியிருந்தார்கள்.
//அவர்கள்எழுதியது கைவசமிருந்தால் வாசிக்கத்தரலாமே// பள்ளிப்பரு வக்காலத்தில் கால்பந்து ஆடப்போகும் போதும் வரும் போதும் காகிதத்தில் எழுதியகவிதைகளைஎங்களிடம்படிதுக்காட்டுவார்.நாங்கள்சபாஷ் போடுவோம்.அத்தோடுசரி!எதையும்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் பழக்கம் தான் நம்தமிழ் முஸ்லிம்களிடம் இல்லை என்பது ஒரு வேதனையான விசயம்.
மாஷா அல்லாஹ்....CNN.சேனலில் இருந்து ஒரு தரம் வாய்ந்த தமிழ்க்கவிதையா ? வியக்க வைக்கின்றது உங்கள் மொழிப்புலமை....கவிதையின் கருவும் அதனை வார்த்தைகளை வைத்து தைத்த அமைப்பும் மனதை கொள்ளைக் கொள்கின்றன....கணிணிப்புலமையுடன் மொழிகளின் புலமைகளையும் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருப்பது பாக்கியம் தான் நண்பரே...வாழ்த்துக்கள்
உயிர்க்காற்றும் ஊணும் தொப்புற் கொடிவழியாய்
//எனை நானே அறியாச்சிறு இருட்சூழ்ந்தவனாய்
என் சுயமும் உணர்வும் அறியா நினைவிலனாய்
எனினும் எனைப்படைத்துக் கருவில் முழுவுருவாக்கி// ALLAHU AKBAR
//CNN.சேனலில் இருந்து ஒரு தரம் வாய்ந்த தமிழ்க்கவிதையா ?//
"Like"
அல்ஹம்துலில்லாஹ்.. நண்பர் யாஸீரின் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் துஆவும். என் தமிழறிவில் இருந்த தெளிவும் நம்பிக்கையுமே ஆங்கில மொழியாழுமைக்கு அடிப்படை என நினைக்கிறேன்.
ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நம் தமிழாசான் திருவாளர் புலவர் சன்முகம் அவர்களில் கண்டிப்பும் அரவணைப்பும் சேர்ந்த தமிழ் கற்பித்தலே ஏதோ இந்த அளவுக்கு என் தமிழ் எழுத்துக்கு உறுதுணை.
அன்பிற்குரிய சகோரர் திரு சபீர் அபுஷாருக்,
என் எழுத்துக்களுக்கு உத்வேகமும் ஆதரவும் அளித்தமைக்கு மீண்டும் என் துஆவும் நன்றியும்.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்
அமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்
என் முன்னாள் உடன் வேலை செய்த சகோதரர் யாசீர் அரபாத் ஈ-மெயில் மூலம்:
அஸ்ஸலாமு அலைக்கும் அமீன் பாய் ,
முதலில் உங்கள் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் , முதல் கவிதை என குறிப்பிடுள்ளிர்கள் ஆனால் வார்த்தைகள் மற்றும் அர்த்தங்களில் அவ்வளவு தெளிவு .ஏற்கனவே பல ஆண்டுகள் எழுதி அனுபவம் உள்ளவர்கள் போல , உங்கள் எழுத்துகள் தொடர எனது வாழ்த்துக்கள் .
(யாசீர் - சார்ஜாவில் இருந்து)
அன்பின் சகோதரர் அமீன், அஸ்ஸலாமு அலைக்கும். மரபின் வழிநின்று யாத்திட நினைக்கும் உங்கள் முயற்சிக்கு முதற்கண் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!
உங்களின் பாடல்களில் பாடுபொருள் ஆன்மீகத்தின் ஆழம் உள்ளது; அதனால் படிக்கப் படிக்கச் சுவையுடன் சிந்தைக்கும் விருந்தாக அமைந்து விட்டன.எந்தப்பா வகை என்று குறிப்பிட இயலாமற் கீழ்க்கண்டவாறு எதுகை,சீர், அசைகள் அமையாவிட்டாலும், இதனைச் சற்றுமாற்றி அளவொத்த ஓசைக்குள் அடங்கும் வாய்பாட்டில் அமைத்து, அறுசீர்/ எண்சீர்க் கண்ணிகளாக /வஞ்சி விருத்தமாக மாற்றலாம்.
விவரம் உங்களின் மின்மடலில் காண்க
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
என் அன்பிற்கினிய சகோதரர் திரு.கவியன்பன் கலாம்,
தங்களைப்போன்ற கவிஞர்களின் வாசிப்பின்றி என் முதற்கவிதையில் என்னால் ஒரு மன நிறைவில்லாமல் போயிருக்கக்கூடும். தங்கள் வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும் துஆக்களும்.
கவிதையின் கரு என் சிந்தையில் உதித்து சில காலம் வெளிப்பட சமயம் நோக்கியபடி இருந்தது. ஓரு சமயம் ஒரே அமர்வில் முழு உருவத்தில் வார்த்தைகள் கொண்ட வரிகளாய் பிரசவிக்கப்பட்டது. ஓவ்வொரு ஆன்மாவும் இறைக்குமுன் தன் நிலைமையை உணர வைக்கும் அழுத்தமான நோக்கம் இவ்வரிகளை எழுதும்போது என்னுள் நிலவியது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்
அமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்
மிக்க நன்றி; ஜஸாக்கல்லஹ் கைரன்.வளரும் கவிஞரே! கவித்துவமும் இறை தத்துவமும் இணைந்து வழங்கியதென்பதை உங்களின் மறுமொழியில் உணர்ந்து கொண்டேன்; செய்யுள்- மரபு வடிவம் என்று ஓர் அமைப்புக்குள் கொண்டு வர முயற்சித்தும்அந்த வடிவத்தில் அமைத்திட இயலாமலிருப்பதைச் சுட்டிக் காட்டி விட்டேன் ; எனவே, கவித்துவமும் இறை தத்துவமும் இணைந்த ஓர் அருமையான கவிவடிவமாய் ஏற்கின்றேன்.
Post a Comment