நான்
எண்ணமா செயலா?
எண்ணம் எனில்
நான் நல்லவன்
செயல் எனில்
நான் நல்லவன் மட்டுமல்லன்
என்
போர்வைக்குள் வாய்க்கும்
உஷ்ணம்
நானே உற்பத்தி செய்தது,
என்
எண்ணங்களும் அவ்வாறே
செயல்களோ
சில சமயம்
புறக்காரணிகளின் தூண்டுதல்களால்
அனிச்சையாகவே
இயங்கி முடிகிறது...
வரிசையில் காத்திருக்கும்போது
வாய் உமிழும்
வசவுகளைப்போல!
கெடுதி
எண்ணாதிருத்தலும்
செய்யாதிருத்தலுமே சிறப்பு
நல்லவனாக ஜீவிக்க
நல்லவை செய்தல் மட்டுமல்ல,
தீயவை எண்ணாதிருத்தலும் தகுதி
கெட்டவனாகக் காணப்பட
கெட்டவை செய்தலும்
கெடுதல் நாடுவதும் மட்டுமன்றி,
நல்லவை செய்யாதிருத்தலும் அடையாளம்
தெளிந்த நீரோடையில்
நெளிந்தோடும் மீனைப்போல
எண்ணங்கள்
ஒளிவு மறைவில்லாமல்
வாய்ப்பது
நல்லவனுக்கு மட்டுமே,
என்
ஆழ்மனம்வரையிலும்கூட
மறைக்க ஏதுமில்லை;
செயல்கள் சிலசமயம்
சேற்றைக் கிண்டி
கலங்கடிக்காதவரை!
தூர்வாரப்படாத
ஊர்க்குளத்தையொத்த
மனத்திலிருந்து
எண்ணங்கள்
வழிந்தொழுகி
விழலுக்கு வீணாகுமுன்
செயல்களால் சீராக்கிப்
பயிர்க்குப் பாய்ச்ச
அவகாசம் அற்றுப்போகும்போது
நல்லவன் அல்லன்
நான்!
இருப்பினும்
எண்ணங்களைச்
செயலாக்கும்
முனைப்பிலிருந்து நான்
பின் வாங்கிவிடக்கூடாது!
ஆகவே
நான்
எண்ணமே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
எண்ணமா செயலா?
எண்ணம் எனில்
நான் நல்லவன்
செயல் எனில்
நான் நல்லவன் மட்டுமல்லன்
என்
போர்வைக்குள் வாய்க்கும்
உஷ்ணம்
நானே உற்பத்தி செய்தது,
என்
எண்ணங்களும் அவ்வாறே
செயல்களோ
சில சமயம்
புறக்காரணிகளின் தூண்டுதல்களால்
அனிச்சையாகவே
இயங்கி முடிகிறது...
வரிசையில் காத்திருக்கும்போது
வாய் உமிழும்
வசவுகளைப்போல!
கெடுதி
எண்ணாதிருத்தலும்
செய்யாதிருத்தலுமே சிறப்பு
நல்லவனாக ஜீவிக்க
நல்லவை செய்தல் மட்டுமல்ல,
தீயவை எண்ணாதிருத்தலும் தகுதி
கெட்டவனாகக் காணப்பட
கெட்டவை செய்தலும்
கெடுதல் நாடுவதும் மட்டுமன்றி,
நல்லவை செய்யாதிருத்தலும் அடையாளம்
தெளிந்த நீரோடையில்
நெளிந்தோடும் மீனைப்போல
எண்ணங்கள்
ஒளிவு மறைவில்லாமல்
வாய்ப்பது
நல்லவனுக்கு மட்டுமே,
என்
ஆழ்மனம்வரையிலும்கூட
மறைக்க ஏதுமில்லை;
செயல்கள் சிலசமயம்
சேற்றைக் கிண்டி
கலங்கடிக்காதவரை!
தூர்வாரப்படாத
ஊர்க்குளத்தையொத்த
மனத்திலிருந்து
எண்ணங்கள்
வழிந்தொழுகி
விழலுக்கு வீணாகுமுன்
செயல்களால் சீராக்கிப்
பயிர்க்குப் பாய்ச்ச
அவகாசம் அற்றுப்போகும்போது
நல்லவன் அல்லன்
நான்!
இருப்பினும்
எண்ணங்களைச்
செயலாக்கும்
முனைப்பிலிருந்து நான்
பின் வாங்கிவிடக்கூடாது!
ஆகவே
நான்
எண்ணமே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
26 Responses So Far:
Assalamu Alaikkum
Dear brother Mr.AbuSharukh,
Who am I? The poem search and explores to find who is the self. And defining good and bad thoughts.
But the self is centre spirit from where the thoughts and actions spring.
Self is the superior high that has sense and sensibilities and thinking mind is instrument of the self.
So I am thinking and acting means that first of all I am a SUPERIOR SOUL NATURED BEING!!!!
The ultimate thing we need to do is to purify the soul and then thinking and actions will be streamlined as the self's will power.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai
எண்ணமே வாழ்வு.
எண்ணம்- திட்டம்- அமல்கள் வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள்.
//நல்லவனாக ஜீவிக்க
நல்லவை செய்தல் மட்டுமல்ல,
தீயவை எண்ணாதிருத்தலும் தகுதி
கெட்டவனாகக் காணப்பட
கெட்டவை செய்தலும்
கெடுதல் நாடுவதும் மட்டுமன்றி,
நல்லவை செய்யாதிருத்தலும் அடையாளம்//
இப்போது தங்கம் விற்கும் விலையில் மேற்கண்ட வரிகளை பொன் எழுத்துக்களால் பொறித்து வைப்பது சாத்தியமா? இல்லை.
இலவசமாக இதயத்தில் பொறித்து வைக்கலாம்.
உனக்கே உரித்தான உவமையுடனும் உதாரணத்துடனும் உன் சிந்தனைக்கடலில் சிறு துளியாய் எண்ணத்தை ஏற்றமாய் குறிப்பிட்டு வரிகளை முத்துக்களாய்ப் பதித்து வண்ணமாய் திண்ணமாய் ஒரு கவி படைத்துள்ளாய் வாழ்த்துகிறேன் நட்பே
Dear brother B. Ahamed Ameen,
Alaikkumussalam warahmaththullaahi wabarakkathuhu.
//The ultimate thing we need to do is to purify the soul //
Thanks for your comment.
I wished this posting should not be taken as if I am talking about myself but "self" of every individual whoever reads this and I am pleased you've done so.
You caught the main thread of my analysis and commented with the key of the same.
The one who tends to find his 'self' will certainly put efforts to purify his soul; Purified soul always thinks wise; practicing wise thoughts emerges noble personality; Noble person seldom commits bad actions.
If every self is wise, the world lives peacefully.
Thanks once again and I am really happy to find you standing in my row.
//எண்ணம்- திட்டம்- அமல்கள் வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள். //
அன்பிற்குரிய காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிக்க நன்றி!
அடிப்படை எண்ணம்தான் என்பதை எடுத்துரைக்கும் தங்கள் கருத்தே என் கரு. எண்ணிய வண்ணம் வாழ்வு என்பது கண்கூடு.
தங்க எழுத்துகள் வேண்டாம்
தங்கள்
அங்கமான இதயத்தில்
தங்கத் தந்ததே மகிழ்ச்சி!
(நாளாச்சு, நச்சென்ற கட்டுரைகளும் நக்கலான அரசியல் விமரிசனங்களும் நகைச்சுவையோடு நாட்டு நடப்புகளும் வாசித்து...ஹூம்ம்ம்)
உடல் நலத்தைப்பேணிக்கொள்ளுங்கள் காக்கா.
//எண்ணத்தை ஏற்றமாய் குறிப்பிட்டு //
அன்பு மெய்சா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆம், ஏற்றமான எண்ணமே நிறைவான வாழ்வுக்கு வழி வகுக்கும். உன் சமீபத்திய எழுத்துகளிலும் இப்படியான கருக்களை எடுத்துரைப்பதைக் காண்கிறேன்.
எப்போதோ எழுதியது:
//உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உன்னத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!//
வாசிப்பதற்காக எழுதுவது ஒரு வகை. கற்பிக்க எழுதுவது ஒரு வகை. நாம் நம் அனுபவத்தையும் கற்றதையும் கற்பிக்க எழுதுவோம்.
I prefer writing for people to study rather than to read.
Assalamu Alaikkum
Dear brother Mr. AbuSharuk,
Thanks for accepting my comments.
Purification of our soul is only possible in the connection with The Great Soul !!!, its impossible in any other ways.
If anyone know the other ways then
please let us know...
Jazakkallah khair,
B. Ahamed Ameen from Dubai.
Assalamu Alaikkum
I heard someone saying a quote that means Don't run that much faster by leaving your soul behind.!!! - Carry the soul with you man!!!
Jazakkallah khair,
B. Ahamed Ameen from Dubai.
மனிதனின் உள்நோக்கிய ஆத்ம பயணத்தில் [ Inner Journey ]ல் மட்டுமே கிடைக்க கூடிய சில உண்மைகள்.
ஒரு காலத்தில் மெளனி / ஜே.கிருஷ்ணாமூர்த்தி போன்றவர்கள் மட்டும் தொட்ட விசயம்.
பாய்மார்களில் ஒருவர் இதை எழுதினால் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்.
மெட்டாபிசிக்ஸ் இன்னும் கண்ணுக்குத்தெரியாத நுன் அறிவுகளில் பாய்மார்களின் பங்கு அளப்பெரியது.
இதை தொட்டு பேசினாலே 'நீங்க எந்த குரூப்?" என்று ஏதோ ரத்த தானம் கொடுக்க வந்தவனிடம் கேட்பது போலவே கேட்பார்கள்.
என்ன சொல்றாப்லெ கேட்போமெ...என்ற எண்ணம் இப்போது சிலரிடம் வெகுவாக குறைந்து விட்டது.
சிலருக்கு உள்நோக்கிய பயணம் ஏற்பட.....
1. யாராவது உங்களை ஏமாற்றி --அவனைப்பார்த்து நீங்கள் ஆத்திரப்படாமல் சிரித்திருக்க வேண்டும்
2. நமக்கு உதவி செய்தவன் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் அமைதியாக போயிருக்க வேண்டும்.
3. நாம் யாரை எதிரி என்று நினைத்தோமோ அவன் உதவி செய்திருப்பான்....யார் நம்முடன் பல நாள் பழகினானோ அவன் சரியான சமயத்தில் தெரிந்தே பல்டி அடித்திருப்பான்.
4. மதம் பேசும் மாநிடர்களில் ஒருவர் ஒரு பேரிடரை உருவாக்குவது மாதிரி நடந்திருப்பார்.
5. பணத்தையையும் மீறி சந்தோசம் அன்பில் உணரப்பட்டு இருக்க வேண்டும்.
6.6. கடலளவு கிடைத்தாலும் மயங்காமலும் / கையளவே ஆனாலும் கலங்காத உள்ளம் [ நன்றி- கண்ணதாசன் ]
அஸ்ஸலாமுஅலைக்கும்.எண்ண அழுக்கை வார்தை சுவர்காரம் போட்டு வெளுத்துஇருக்கிறார் கவிஞர்!சுவர்காரம் கரைந்தாலும் அடர்த்தியான எழுத்தின் காரம் அழுக்கின் தோற்றத்தை அழித்துக்கொண்டிருக்கும் அற்புத கவியாடல்!அருமை!ஜாஹிர் காக்கா(அஸ்ஸலாமுஅலைக்கும்) சொன்னதுபோல் நம்ம பாய்மார்களா?என்று நினைப்பவர்கள் உண்டு!அதையும் சொல்ல முடியும் என முனைவரில் கவியரசு சபீர்காக்கா பலமுறை உளவியல் தொட்டதுண்டு!
என்
போர்வைக்குள் வாய்க்கும்
உஷ்ணம்
நானே உற்பத்தி செய்தது,
என்
எண்ணங்களும் அவ்வாறே
---------------------------------------------------------
இந்த எண்ணச்சூட்டின் அடைகாப்பில் வெளிவந்த அருமையான குஞ்சுதான் இந்த கவிதை! என் உஷ்ணத்திற்க்கு நானே பொருப்பு இதயத்துக்கு சண்ணல் வைப்பதும் என் பொருப்பே! நல்லதொரு உவமானம் !அருமை!
செயல்களோ
சில சமயம்
புறக்காரணிகளின் தூண்டுதல்களால்
அனிச்சையாகவே
இயங்கி முடிகிறது...
வரிசையில் காத்திருக்கும்போது
வாய் உமிழும்
வசவுகளைப்போல!
--------------------------------------------------
தெரியாமல் காலை மிதித்துவிட்டால் அந்த வேதனை இருந்தாலும் பரவாயில்லை என சொல்லும் மனது!வேண்டும் மென்றே இடித்தால் சட்டன வரும் கோபம் போல் நம் செயல் பல நேரம் அனிச்சையாகவே நடை பெறுகிறது!ஆனாலும் அந்த கோபமும், சாந்தமும் அனிச்சைதான் !எனவே பல நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்த பழகிய மனம் ,சாந்தமாக போக தியானம் , நபி(ஸல்)அவர்களின் வழிமுறையை நடைமுறைப்படுத்தினாலே வெளிப்படும்.
நல்லவனாக ஜீவிக்க
நல்லவை செய்தல் மட்டுமல்ல,
தீயவை எண்ணாதிருத்தலும் தகுதி
கெட்டவனாகக் காணப்பட
கெட்டவை செய்தலும்
கெடுதல் நாடுவதும் மட்டுமன்றி,
நல்லவை செய்யாதிருத்தலும் அடையாளம்
---------------------------------------------------------------------------------
இதுதான் சூத்திரம்!
தெளிந்த நீரோடையில்
நெளிந்தோடும் மீனைப்போல
எண்ணங்கள்
ஒளிவு மறைவில்லாமல்
வாய்ப்பது
நல்லவனுக்கு மட்டுமே,
என்
ஆழ்மனம்வரையிலும்கூட
மறைக்க ஏதுமில்லை;
செயல்கள் சிலசமயம்
சேற்றைக் கிண்டி
கலங்கடிக்காதவரை!
-----------------------------------------------------------
ரசிக்கத்தக்க வைத்த வார்தை இது!குளிர்ச்சியா மகிழ்சியை கிளறுகிறது.இந்த வார்தையின் அர்த்தம் எதார்த்தம்!இதுதான் வாழ்கை!.
தூர்வாரப்படாத
ஊர்க்குளத்தையொத்த
மனத்திலிருந்து
எண்ணங்கள்
வழிந்தொழுகி
விழலுக்கு வீணாகுமுன்
செயல்களால் சீராக்கிப்
பயிர்க்குப் பாய்ச்ச
அவகாசம் அற்றுப்போகும்போது
நல்லவன் அல்லன்
நான்!
-------------------------------------------------------------
சரியான அளவீடு. நான் யார் என்பதின் வாக்குமூலம்! நிசத்தின் வழி! உண்மையின் நிழல்!கருத்து பெட்டகம்!எளிய முறை விளக்கம்!மொத்தத்தில் அருமை!அல்ஹம்துலில்லாஹ்! இதை யாவரும் புரியும் பொழுது எல்லாம் நன்மையில் முடியும்.
இருப்பினும்
எண்ணங்களைச்
செயலாக்கும்
முனைப்பிலிருந்து நான்
பின் வாங்கிவிடக்கூடாது!
ஆகவே
நான்
எண்ணமே!
-----------------------------------------
அவ்வாறே அனைவரும் என்னுவோம்!இப்படி அடிக்கடி மனதில் படிந்த கழிவுகளை தூர்வார கவிஞர் மாதம் ஒன்று இப்படி எழுதனும்!வாழ்த்துக்கள்!
//மனிதனின் உள்நோக்கிய ஆத்ம பயணத்தில் [ Inner Journey ]ல் மட்டுமே கிடைக்க கூடிய சில உண்மைகள். //
ஜாகிர்,
இனிய மொழியின் எளிய வார்த்தைகளைக்கொண்டு அகப்பார்வையை முயற்சி செய்யும்போது ஏதோ என்னைச் செலுத்துவதுபோல் உணர்கிறேன். தெளிவில்லாத முடிவுகளோடுதான் இதுபோன்ற தேடல்கள் நிறைவுறுகின்றன எனினும், எதையோ சொல்லி முடித்துவிட்ட ஒரு திருப்தி எனக்கு ஏற்படுகிறது.
இஸ்லாமிய இலக்கியங்களில் இவ்வாறான தேடல்களும் கோட்பாடுகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால், அவை அதிகம் அறியப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.
இந்தப் பதிவைப் பற்றிய கருத்துகள் அதிரை நிருபர் தளத்தின் தரத்தைப் பரைசாற்றுகின்றன.
வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக் கொண்ட அனுபவங்களை விதைகளாய்த் தூவி இருக்கின்றீர்கள்,எங்கள் மனவயலில்!
//எண்ண அழுக்கை வார்த்தை சுவர்காரம் போட்டு வெளுத்துஇருக்கிறார் //
அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
தங்கள் கருத்து இந்தக் கருவை இன்னும் விளக்கிச் சொல்லி எளிமையாக்குகிறது. அழகாக அலங்கரிக்கும் உங்கள் மொழி எப்போதுமே எனக்கொரு பேருபகாரம்.
//இதயத்துக்கு சன்னல் வைப்பது//
தென்றல் வீசும் தேன்தமிழ் கற்பனை என்னைச் சொக்க வைக்கிறது. என்போன்ற ரசிகர்களுக்கு பாராட்டுகளைவிட இதுபோன்ற பதில்மொழிகளே இஷ்டம்.
//இப்படி அடிக்கடி மனதில் படிந்த கழிவுகளை தூர்வார கவிஞர் மாதம் ஒன்று இப்படி எழுதனும்!வாழ்த்துக்கள்!//
இன்ஷா அல்லாஹ், க்ரவ்ன்.
நன்றி.
//வாழ்க்கைப் பயணத்தில்
கற்றுக் கொண்ட அனுபவங்களை விதைகளாய்த்
தூவி இருக்கின்றீர்கள்,
எங்கள் மனவயலில்!//
அன்பிற்குரிய கவியன்பன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நான் முயன்றிருப்பது நீங்கள் சொல்லிவிடாததல்ல. "நம்பிக்கை" கவிதையில் இதைத்தான் வேறு ஒரு phaseல் சொல்லியிருப்பீர்கள்.
நம் சந்ததியர் உயர்வான எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்றால் நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
(இப்படி அடர்த்தியான கருவோடு தங்கள் எழுத்தை இங்கு வாசித்து நாளாச்சு...ம்ஹூம்)
Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban Kalam,
Welcome here after very long gap. And we have rare event of receiving your comments.
Hope you are doing well...
Jazakkallah khairan
B. AAhamed Ameen from Dubai.
Assalamu Alaikkum
Dear All,
It feels great that each comment of the scholars here are winning and condensed with deep meanings packed with inspiring thoughts.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
சபீர் காக்காவின் மற்றுமொரு மிக யதார்த்தமான பதிவு .
மனதில் ஒன்றிய பதிவு .வாழ்த்துக்கள் சபீர் காக்கா .
//கெடுதி
எண்ணாதிருத்தலும்
செய்யாதிருத்தலுமே சிறப்பு//
//
கெட்டவனாகக் காணப்பட
கெட்டவை செய்தலும்
கெடுதல் நாடுவதும் மட்டுமன்றி,
நல்லவை செய்யாதிருத்தலும் அடையாளம்//
மனதில் நின்ற உங்களின் வரிகள்
////உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உன்னத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!//
--
Thanks
BAbdul Rahman [harmys]
மாஷா அல்லாஹ் காக்கா...எண்ணங்களின் தூய்மை/அசுத்தம் செயல்களில் எதிரொலிக்கும்.....தூய்மையான எண்ணம் கொண்ட உங்களிடமிருந்து ஹார்மி சொன்னதுபோல் மனதில் ஒட்டுக்கொண்ட கவிதை....வாழ்த்துக்கள் கவிக்காக்கா
மாஷா அல்லாஹ் காக்கா...எண்ணங்களின் தூய்மை/அசுத்தம் செயல்களில் எதிரொலிக்கும்.....தூய்மையான எண்ணம் கொண்ட உங்களிடமிருந்து ஹார்மி சொன்னதுபோல் மனதில் ஒட்டுக்கொண்ட கவிதை....வாழ்த்துக்கள் கவிக்காக்கா
Post a Comment