Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்" 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2015 | , , , , , , , ,

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம் ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும் விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து நடத்திய கடைகளும் அதில் இடம் பெற்ற விற்பனைப்பொருட்களும் (நீங்களெல்லாம் பெரும், பெரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று மேலாளராகவோ, மேற்பார்வையாளராகவோ பணி செய்து வருவதால் அவற்றையெல்லாம் முற்றிலும் மறந்திருப்பீர்கள். அதனால் அவை இங்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தப்படுகிறது) நம் நினைவுகளில் டெமரேஜ் ஏதும் தராமல் நிரந்தமாய் தஞ்சமடைந்துள்ளன.


(லிஸ்டெ போட்ற வேண்டியது தான்)

1. கல்கோனா
2. கடலை மிட்டாய்
3. மஞ்ச கலரு கொடலு
4. தேன் முட்டாயி
5. பால் பன்னு
6. மைசூர் பாக்கு (அப்பொ கரிங்கல்லு மாதிரி இருக்கும். மன்சூராக்க கோவிச்சிக்கிடாதிய)
7. கொத்து மாங்கா (தோப்லேர்ந்து பறிச்சதுனால கூடுதல் லாபம் கிடைக்கும்)
8. மோரு (கருவாப்பிள்ளை, பச்ச மொளவா, கொத்து மாங்கா, கடுகு போட்டு தாளிச்சது)
9. சர்வத்து (ஜம்ஜா விதை ஊற வைத்து, ரோஸ் கலரு பாவு காச்சி வித்தாலும் ஐஸ் போட்டு விக்கிற அளவுக்கு வசதி இல்லை)
இன்னும் இங்கு விடுபட்ட விற்பனை பொருட்களை நீங்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்.

நாளாக, நாளாக விற்பனை நன்கு சூடு பிடிக்கும். பெரிய பசங்க சிலர் நம் கடையின் (அலங்கோலத்தை பார்த்து) சூழ்நிலையை பார்த்து இரக்கப்பட்டு (மொகத்தாச்சனைக்காக) நம் கடையில் ஏதேனும் வாங்கிச்செல்வர்.

பள்ளி திறக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த கூட்டாண்மை வியாபாரம் வரவு, செலவுகள் போக கணக்கு பார்க்கப்பட்டு முதலீட்டிற்கு தகுந்தாற்போல் (ரூபாய் 20 அல்லது 30க்குள்) லாபம் பிரித்து கொடுக்கப்படும் அல்லது எடுக்கப்படும். (வருமான வரி பயமோ, ஆடிட்டிங் தொல்லையோ, பணியாளர் சம்பள பிரச்சினையோ இங்கில்லை).

இந்த மாதிரி வியாபாரம் நாம் எஸனல் குர்'ஆன் ஓதப்போகும் வீட்டுப்பள்ளிகளிலும் அந்த ஒஸ்தார் மூலமே நடத்தப்பட்டது. என்ன செய்வது? அப்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கு இது போன்ற சிறு வருமானங்கள் கொஞ்சம் வீட்டுத்தேவைகளுக்கும் தோள் கொடுத்து உதவியது. இப்பொழுதுள்ள விலைவாசி, பொருளாதார சூழ்நிலைக்கு இதுபோன்ற வியாபாரங்களும், அதன் வருவாயும் வீட்டு கொல்லையில் மேயும் கோழிகளுக்கு தவுடு வாங்கி கொழச்சி வக்க கூட பத்தாது.

இதுபோல் நாம் சிறு பிராயத்தில் தொடங்கிய கடைகள் இப்பொழுது அதை நினைத்துப்பார்க்க சிலருக்கு வெட்கமாகவும், கொஞ்சம் கேவலமாகவும் (அரீர்ப்பாகவும்) கூட தெரியலாம். ஆனால் அன்று அது போல் கடை வைத்து தன் வாழ்க்கையில் வியாபாரம் என்றால் என்னவென ஆரம்பித்தவர்களில் பலர் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அல்ஹம்துலில்லாஹ் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றும், சிலர் அரபுலகத்திலும் குடும்பத்துடன் நல்ல சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும் படுறதில்லை.

இந்த கட்டுரை எழுத காரணம், சகோ அர.அல அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் இணைத்திருந்த இந்த அரிய புகைப்படமே காரணம். கொட்டகைக்குள் 5 பாட்டில்களும், 5 முதலாளிகளும் நமக்கெல்லாம் இங்கு ஃபோஸ் கொடுத்து ஏதோ சொல்லவர்ராங்க. கேட்டுக்கிடுங்க.....

தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு சர்வத்து கலக்கி குடும்மா.....

இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்திப்பில் சந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

3 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

/இங்குவிடுபட்டஐட்டங்களைபின்நூடத்தில்தொடரலாம்//அவிச்சகொண்டக்கடலை.வறுத்தவேர்க்கடலை.பட்டாணிகடலை. அவுச்சபனங்கெலங்கு.அவுச்சமரவள்ளிகெளங்கு.சக்கரவள்ளிகெளங்கு. சீனிகுச்சி[குறிப்புஇந்தபட்டப்பெயர்கொண்டவர்கள்என்னைகோவிச்சுகிடாவேண்டாம்]வின்சென்ட்சோடா.பள்ளிமுட்டாய்.கடலைமுட்டாய்.கருப்பட்டி.கீத்துபோட்டதேங்காய்.பெத்தண்ணநாடார்சீயாக்கைதூள். தென்னமரக்குடிஎண்ணை.திருச்சிடாக்கடர்மதுரம்பல்பொடி.

sheikdawoodmohamedfarook said...

R.S.மருந்து.யானைமேலேசிங்கம்மார்க்குசுருட்டு.தாஜ்மஹால்பீடி. சங்குமார்க்குசோப்பு.சிலேட்டுபலவை.சிலேட்டுகுச்சி.அரிக்கன்லாம்பு. நெருப்புபெட்டி.ஊதுபத்திசாம்புராணி.சாம்புராணிசட்டி.காஞ்சமொலவா.மிதிரிகட்டைவாரு அதுக்குஅடிக்கிறஆணி. பின்னத்தொப்பி அதுக்கு கஞ்சிபோட சாவ்வருசி.மற்றபடிஉங்களுடியஇன்வெஸ்ட்மென்ட்தொகைஎத்தனை மில்லியன்என்றால்இன்னும்ஐட்டங்கள்கூட்டலாம்.

sheikdawoodmohamedfarook said...

//R.S.மருந்து//என்பதைR.S.பதிமருந்துயெனமாற்றிக்கொள்ளவும்.// ஒருடொவ்உட்டு.படத்தில்மொத்தம்ஆறுமுதலாளிகள்இருக்கிறார்கள். கடையில்நாலுபிளாஸ்டிக்பாட்டலில்மட்டுமேசறக்குஇருக்கிறது.அதுவும் அரைவாசியேஇருக்கிறது.கடைசிபார்டனரோ கவலையால் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.நானும்மல்டிமில்லியன்டாலர்வால்மார்ட்கம்பெனி என்றுநினைத்து அட்வை சே போட்டுட்டேன். கடைசிபங்காளியின் கால் செருப்பை பார்த்தபின்தான் எனக்கு சந்தேகம்வந்தது. முன்னும்பின்னும் தெரியாமல்யோசனைசொன்னஎன்னைஅந்தசெருப்பாலேயேஅடிக்கணும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு