நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மேகமே... மேகமே.... ! மீண்டும் வந்தாயோ ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 17, 2015 | , , ,

அதிரைநிருபரின் எழில் வருகையோ மேகக் கூட்டத்தை கவிஞர்களுக்கு பகிர்ந்திட பரிந்துரை வைத்ததை ஏற்று இதோ மற்றுமொரு மேகமே.. மேகமே..

முகில் மூலம் முயல் வரைந்து
வான்வெளியில் மேய விட்டு
தரை மயிலை ஆட விட்டு
மலை நுனியை முத்தமிட்டு

வண்ண வான வில்லை
வரவேற்பு வளைவாய் த‌ந்து
வேண்டியதை வரைபடமாய்
வரைந்து காட்டும் வான்மேகம்!

ஊருக்குப்போர்வை விரித்து
உள்ளத்தை குளிர வைத்து
மழைத்துளியாய் கரைந்து வந்து
மண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே!

அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்

வெண் கொக்கை மிதக்க விட்டு
குளிர் காற்றில் விசிறி செய்து
குதுகலமாய் வீசிச்செல்லும் மேகம்
ஊருக்குள் பெய்திடும் வான்மழை

ஆளில்லா வானில் தார்ரோடு போட்டு
சூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி
வெட்கப்படும் வெண்நிலவுக்கு
முந்தானையிடும் வான்மேகம்

புல்பூண்டும் போற்றிப்புக‌ழும்
அந்த‌ வ‌ல்லோனின் கிருபைத‌னை
வ‌ண‌ங்கினாலும் வணங்கமறந்தாலும்
வ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே!

காற்ற‌டித்து திசைதிரும்பும் க‌ருமேக‌ம்
சாட்டைத‌னை த‌ன்கையில் கொண்ட‌வனே
க‌ருணையுள்ள‌ ர‌ஹ்மானே! காப்ப‌வனே!
இயற்கையை ஆட்சி செய்யும் ஏகனே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது

11 Responses So Far:

Ahamed Ameen சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

பிரியத்திற்குரிய சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது,

இறைவனின் கருணையாம் அழகிய மேகக்கூட்டத்தை வர்ணிக்கும் கவிமழை.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்,

அமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். மண்ணின் மைந்தனின் வான் கவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது.முகிலை முயலாக முயல்கின்ற கற்பனை!வானை கழனியாக்கி அதில் மேயும் முயல் என வர்னித்து புதியதோர் கோனத்தில் வானத்தில் வரைந்த கவிஓவியம்!இது வானவில்லையும் சொல்லால் வளைக்கிறது!அருமை!.

crown சொன்னது…

ஊருக்குப்போர்வை விரித்து
உள்ளத்தை குளிர வைத்து
மழைத்துளியாய் கரைந்து வந்து
மண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே!
----------------------------------------------------------------
மேகமே,மேகமே என வேகமே எடுக்கும் கவிதை வார்தைக்கு அணி சேர்கிறது.
-----------------------------------------------------------------------

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

crown சொன்னது…

அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்
----------------------------------------------------------------
ஆதாயம் தேடி ஆகாயம் வழி செல்லும் நம்மை வாழ்த்தும் விதமாக முத்தமிடும் வான் என நம்மையும் பெரும் கண"வானாக" ஆக்கி மகிழ்கிறது உமது கவிதை!ஆ என வலித்தரும் காயம் என்றாலும் ஆற்றிடும் மருந்தாகிறது

crown சொன்னது…


வெண் கொக்கை மிதக்க விட்டு
குளிர் காற்றில் விசிறி செய்து
குதுகலமாய் வீசிச்செல்லும் மேகம்
ஊருக்குள் பெய்திடும் வான்மழை
-------------------------------------------------------------
உமக்கு விசிறியாகி என் மனம் ஆகாயத்தில் பறக்கிறது!
---------------------------------------------------------------------

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

ஆளில்லா வானில் தார்ரோடு போட்டு
சூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி
வெட்கப்படும் வெண்நிலவுக்கு
முந்தானையிடும் வான்மேகம்
-----------------------------------------------------------------------
முந்தானையிடும் வான் மேகம் என வர்னிக்கும் போது ,எனக்குத்தோன்றியது,முந்தானை தலையில் போர்த்தி அத்தானை அந்த முந்தானை செல்லமாய் ஆனை இட்டாள் எந்த ஆனை தகாத இடத்தில் கானவியலும்?!அப்படி முந்தானையில் முடிச்சி போடும் தந்திரம் பெற்ற பெண்,மதிப்பெண்னாவாள்!கவிஞர் காக்கா,மேதை இ.அ காக்கா ஆகியோர் அனுபவத்தை சொல்லலாமே?

crown சொன்னது…

புல்பூண்டும் போற்றிப்புக‌ழும்
அந்த‌ வ‌ல்லோனின் கிருபைத‌னை
வ‌ண‌ங்கினாலும் வணங்கமறந்தாலும்
வ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே!
----------------------------------------------------------
அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை பூண்டு! வாழும் வாழ்வில் வெற்றி உண்டு!பூண்டு உண்டு வந்தால் வாய்வு தொல்லை நீங்குவதுபோல் ,இறைவன் பால் பக்தி பூண்டு வாழ்ந்தால் வாழ்கை இம்மையிலும், மறுமையிலும் உண்மையில் சிறப்பாகும்.!இறைச்சிந்தனையை தூண்டும் ஆக்கமே சிறந்த ஆக்கம்!

sabeer.abushahruk சொன்னது…

மேகங்களையும் மழையையும் சொல்லத் துவங்கி கவிமழையென பொழிந்து முடிகிறது ''மேகமே மேகமே".

அருமை, தம்பி நெய்னா.

Shameed சொன்னது…

மண்ணின் மைந்தன் MSM மின் மண் வாசனை இப்போது மழை வாசனையாய் பொழிகின்றது

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+