Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 12 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2015 | , , ,

இன்றைய திகதியில் குடும்பம் ஆகட்டும் அல்லது ஒரு நிறுவனம் ஆகட்டும் அல்லது ஒரு சின்ன கடை ஆகட்டும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் பயம் அல்லது புலம்பல்... நமக்கு இருக்கும் பொறுப்பு நமக்கு கீழ் இருப்பவர்களுக்கு இல்லை என்பதே, சரி பொறுப்பு என்பது தன்னால் வந்து விடுவதற்கு இது ஒன்றும் 2 1/2 மணியில் காண்பிக்கப்படும் சினிமாவோ, அல்லது தினம் 30 நிமிட மணித்தியாளத்தில் காண்பிக்கப்படும் சீரியலோ அல்ல. இது வாழ்க்கை, வீட்டில் பெரியவர்கள் / அல்லது ஒரு நிறுவனத்தின் மேனேஜர் மேற்குறிப்பிட்டபடி புலம்ப காரணம் தனது டீமை சரியாக வழி நடத்த முடியாத அந்த "திறமையற்ற' சூழல்தான். இப்படி எழுதிய உடன் மேளாளர் சமூகம் என்னிடம்" எனக்கு கீழ் உள்ளவன் ஒரு சப்பெ பார்ட்டிப்பா, அதுக்கு என்னெபோய் குறை சொல்றே.." என பொங்க வேண்டாம். உங்களுடைய பதவியே “Manager” ..that means you must know how to manage. இப்படி பட்ட வார்த்தைகள் ஒரு leadership qualityயை சார்ந்தது அல்ல.

பொறுப்புகளை உணர்த்தி வேலை வாங்க தெரிவது ஒரு கலை. ஆனால் சில சாம்பார் பார்ட்டிகளுக்கு வேலை வாங்க தெரியாததால் அய்யோ பாவம்- அவன் என்ன செய்வான் - அவன் பச்சை மண்ணுப்பா என்று அவர்கள் தலையில் உள்ளதை எல்லாம் ஊருக்கு எடுத்துச்சொல்வார்கள்.

இது போன்று நிர்வகிக்க தெரியாத ஆட்கள் குடும்பத்தில் இருந்து விட்டால் அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே உருவாகிறார்கள். இப்படி உருவாகும் ஆண்பிள்ளைகளை நம் ஊர் மாதிரி உள்ள இடங்களில் வைரசோடு பெண் வீட்டுக்கு அனுப்பிவிடுவதால் பெண் வீட்டிலும் பொருளாதார ரீதியாக ஒரு "ஸ்லோ" வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இதற்கு காரணம் பிள்ளைகளை தனது நல்ல முடிவுகளை எடுக்க சின்ன வயதிலிருந்து பழக்க தவறுவது . உங்களது மேற்பார்வை இருக்க வேண்டும். ஆனால் அவனது வேலைகளை நீங்கள் பார்க்க கூடாது . இந்த சின்ன  Fine line தெரிந்தால் உங்களுடைய பல நேரங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

முன்பு நான் குறிப்பிட்ட S.W.O.T  analysis மாதிரி இன்னொரு முக்கிய விசயம்
4D Formula.

Delegate / Destroy / Delay / Do It Your Self

DELEGATE
இது ஜப்பானியர்களின் கார்ப்பரேட் ட்ரைனிங்கில் அதிகம் போதிக்கப்படுவது. இது ஒரு குடும்பமாக இருந்தாலும் இது பயன்படும். முன்னேற  முடிவெடுத்தவர்கள் முக்கியம் செயல்படுத்த வேண்டிய விசயம்.

நிறுவனங்களில் அல்லது ஏஜென்சிகளில் ' இதை அவன் செய்ய முடியாது என்று மேல் நிலை பதவிகளில் உள்ளவர்கள் கீழ்நிலை வேலையில் உள்ளவர்களுக்காக செயல்படுவது... அல்லது "பொதிசுமப்பது" அந்த நிறுவனத்தின் Productive Timeஐ "சாப்டப்படும்".

குடும்பங்களில் சின்ன வயதினருக்கு தரப்படாத வாய்ப்பு தொடர்ந்து அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வர்க்கமாகவே மாற்றி விடுகிறது.

தனது உடலும், எண்ணமும், சேர்ந்து செயல்படும்போது மனிதன் தன்னை நம்ப ஆரம்பிக்கிறான். ஒருவனுடைய  முதல் வெற்றி அவனது அடுத்த வெற்றியின் முதல்படி.

The best motivation is always “ your own result”

நம் ஊர் போன்ற சின்ன இடங்களில் பாசத்தை காரணமாக்கி இளைஞர்களை சோம்பேறியாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்தான். பெரும்பாலான சமயங்களில் ஒரு மகன் தனது பிள்ளைப் பருவத்திலிருந்து இளைஞன் ஆகிவிட்டான் என்பதை உணராமல் அவனுக்கு எப்படி இவ்வளவு பெரிய வேலை செய்யத் தெரியும் என்று அவன் போட்டிருக்கும் துணிமனிகளை துவைப்பதை கூட பெண்களே செய்து பிறகு அவன் தனியாக வேலை செய்யும் போது அல்லது படிக்கும்போது உடல் வளையாமல் கஷ்டப்படுத்துகிறார்கள்.

எனவே வேலைகளை பங்கிட்டு தர வீட்டிலிருந்து பழக்கம் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது குமுதம் / ஆனந்த விகடன் படிக்க அனுமதிக்கவில்லை என்று முதலாளியை குறை சொல்லிவிட்டு நீங்கள் கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலைகூட திறக்காமல் வீடு வந்து சேர்ந்துவிடுவான்.

ஒரு பிசியான தொழிலில் இருப்பவர் எனக்கு செல்ஃப் டிரைவிங்தான் பிடிக்கும் என்று அடம் பிடிக்காமல் தனக்காக ஒரு டிரைவர் வைத்துக்கொள்வதும் ஒரு Delegation தான்.

Destroy

இது பேப்பர் மேனஜ்மென்ட்டில் முக்கியமானது. சில வேலைகளில் பேப்பர் அதிகம் நிரம்பி வழியும் வேலைகளும் உண்டு. அதை அடிக்கடி 'கைபார்க்காமல்" இருந்தால் எது தேவைப்படுமோ அந்த பேப்பர் நம் கண்ணில் சத்தியமாக அகப்படாது.

சிலர் தனது பாக்கெட்டில் ஒரு கட்டு, பேப்பர் சிட்டை என்று அலங்கோலமாக வைத்துக்கொண்டு 6 மாதத்துக்கு ஒரு முறைகூட அதை பார்க்காமல் வைத்துக்கொண்டு தேவைப்பட்டதை எடுக்க தெரியாமல் திணறுவதை பார்த்திருக்கலாம். இப்போது அது கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்து இ-மெயில்களில் திறந்து பார்க்காத இ-மெயில் 1500வரை தாண்டும். அது சரி எத்தனை இ-மெயில்கள் சம்பந்தமில்லாதவர்களுக்கு வருகிறது. சிலரின் இ-மெயிலை திறந்தால் 2009 - 2010 வருடங்களில் மலிவான ஏர்டிக்கட் தருவதாக வந்த பட்ஜெட் ஏர்லைனில் இ-மெயில்கள் இன்னும் திறக்கப்படாமலேயே "எதற்கும் தேவைப்படும் என்று 'இருக்கும். அலுவலகங்களில் தேவை இல்லாத பேப்பர்களை வீசத்தெரியாமல் வைத்திருக்கும் நபர்கள் ஒரு தடைக்கல். இவர்கள் காலம் போனது தெரியாமல் இன்னும் எம்.ஜி.ஆருக்கு ஒட்டுபோடுவதாக பேசுவார்கள்.

நீதி: தேவை இல்லாத பேப்பரை கடாசுங்கப்பா....

Delay it

சில முடிவுகள் அவசரப்படுவதால் கெடுவதும் உண்டு. தொழிலை பொறுத்தவரை போட்டிகள் வரும்போது எதிரியின் வியூகம் தெரியாமல் எதிரியின் நண்பனிடமே உளரிக்கொட்டுவது. இது அலுவலகங்களில் நடக்கும் அரசியலில் 'சகஜமப்பா".  மற்றும் சில ப்ராடக்ட்கள் வெளியிடப்படும்போது அதை மிஞ்ச சிறந்த இன்னொன்று வெளியிட சில கால தாமதம் தேவை. இது  Financial Sectorல் தவிர்க்க முடியாதது. அவசரப்பட்டால் நாம் வெல்ல முடியாது.

Do it Yourself

Delegation க்கும்  Do it yourself  க்கும் ஒரு    razor edge அளவு தான் வித்தியாசம். Delegation என்று சோம்பேறியாகி விடக்கூடாது. அதே சமயம்  Do it your self என்று பொதி கழுதையாகி விடக்கூடாது.

இருப்பினும் உங்கள் அனுபவம் உங்கள் செயல்திறன் சில வேலைக்கு நிச்சயம் தேவைப்படும், அதை நீங்கள் தான் செய்தாக வேண்டும். சில வேலைகளை நீங்களே செய்தால்தான் உங்களுக்கும் திருப்தி இருக்கும். சில சமயங்களில் விடுமுறை  தராத சந்தோசத்தை வேலைகள் தருவதன் காரணமும் அதுதான்.

இப்போதெல்லாம் மாணவர்களிடையே "காப்பி & பேஸ்ட்' கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. அது பரீட்சை எழுதும்போது நிச்சயம் பிரச்சினைகளை தரும். நீங்கள் படிக்க வேண்டியதை நீங்கள் மட்டும்தான் படித்து புரிந்துகொள்ள முடியும்.

தொழிலில் நீங்கள் செய்ய வேண்டியதை கணக்கு தெரியாத ஆட்களிடம் கொடுத்து விட்டு நான் எப்படி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தது இந்த காசு தெரியுமா?” என்று உங்கள் ஃப்ளாஷ் பேக் கதைக்கு எல்லாம் மரியாதை இருக்கும் என்று எப்படி இன்னும் 'அப்ரானி'யாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

குடும்பத் தலைவனாக எடுக்க வேண்டிய முடிவுகளை தவற விட்டு விட்டு பிறகு பெண்கள் / பிள்ளைகள் ஏற்படுத்திய பிரச்சினைகளை அகற்றவே பல பேருடைய ப்ராணன் போவது இப்போது ட்ரன்ட்.

So… take charge… accept your responsibilities first.

See you in next episode..
ZAKIR HUSSAIN

5 Responses So Far:

sabeer.abushahruk said...

//தனது உடலும், எண்ணமும், சேர்ந்து செயல்படும்போது மனிதன் தன்னை நம்ப ஆரம்பிக்கிறான். ஒருவனுடைய முதல் வெற்றி அவனது அடுத்த வெற்றியின் முதல்படி.//

அப்ளாஸை அள்ளிச்செல்லும் வாசகங்கள்!

sheikdawoodmohamedfarook said...

//உங்களுடையபதவியேManager.That means you must know how to manage// இதுசரிதான்.ஆனால்நிர்வாகம்செய்யும்திறமையுள்ளவன்கீழேவேலை செய்யும்முதலாளியின்மக்குமைத்துனன்.அவனைநிர்வாகி அதட்டிஉருட்டிவேலை வாங்கினால் ''என்னாங்கோ! நம்மகிட்டே வேலை பாத்துசம்பளம்வாங்கி பொலைக்கிறவன் என்தம்பியே'' அங்கேபோ! இங்கேபோ!''ன்னுஅதட்டுறானாமுல?அப்புடிகண்டவன்நிண்டவன் சொல்றதைஎல்லாம்செஞ்சுதான்என்தம்பிசோறுஉங்கனுன்னுஅவன்தலை எழுத்தா?''ன்னுபொண்டாட்டிகேட்டா மாமியா ஊட்டு கம்பெனிக்கு முதலாளியா இருக்கும் மருமகன்பொண்டாடிக்குபயந்துமேனேஜரை எச்சரிப்பார்.இப்படிப்பட்டசூழலில் How a manager can lead the company towards success?இதுபோன்றநிகழ்வுகள் தமிழ் முஸ்லிம்கள் நிறுவனங்களில் சர்வ சாதாரணம். முதலாளிமகன்செய்ததவறைகண்டித்தநிர்வாகியேபார்த்து முதலாளியே சொன்னார் ''அவன்தான் நாளைக்கு இந்தகம்பனி முதலாளி நாற்காலியில்உட்கார்ந்து உங்களையெல்லாம்வேலை வாங்குவான்'' என்றார்.அதற்க்குவிஷயம்தெரிந்தமற்றொருவன்சொன்னபதில் Tomorrow is another day.அந்தசிம்மாசனம்ஏறவேண்டியதிருமகன்இப்போDrug addict.

Shameed said...

//நீங்கள் கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலைகூட திறக்காமல் வீடு வந்து சேர்ந்துவிடுவான்.//

ஊறுகாய் புளித்தாலும் ஊறுகாய் செய்தி உண்மையோ

அப்துல்மாலிக் said...

//DELEGATE//
நல்ல விளக்கம், இன்னிக்கு நிறைய இளைஞர்கள் கஷ்டப்படாமல் வீணாப்போவதற்கு DELEGATE மிஸ் பிகேவ்தான்..

ZAKIR HUSSAIN said...

நன்றி அப்துல் மாலிக் / சாகுல் & சபீர்.

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு...

நீங்கள் சொல்வது சரிதான். நாம் வேலை பார்க்கும் கம்பெனியில் மேனேஜ் செய்ய முடியாவிடில் நம்மை மேனேஜ் செய்யும் கடப்பாட்டில் வேறு ஏதாவது நமக்காக செய்வதே நல்லது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.