நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, நவம்பர் 29, 2015 | ,


மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.

இந்தக் கண்டுபிடிப்பால்தான் உலகம் பரந்து விரிந்து அனைத்தும் தொடர்பில் இருக்கிறது. இல்லையேல் ஒவ்வொரு பகுதிகளிலும் மனிதர்கள் திட்டுத்திட்டாக தொடர்பில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் வாழும்படி ஆகி இருக்கும். வெற்றுப்பகுதியோ வேறு நாடுகளோ அறியாமல் போய் இருக்கும்.

மனிதன் இவ்வுலகில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்க்குச் செல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு வாகனம் தேவைப்படுகிறது. பண்டைய காலப்பயணத்தை கால்நடையாக ஆரம்பித்து பிறகு கால்நடை விலங்கினங்களான ஒட்டகம்,குதிரை, கழுதை,மாடுகளென இவ்வகை விலங்கினங்களின் மேல் அமர்ந்து பயணம் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது.

பிறகு இவ்விலங்கினங்களை கட்டை வண்டியுடன் இணைக்கச்செய்து சற்று சவுகரிகமாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். இப்படித்தான் வெகுகாலமாக மனிதனின் பயணம் தொடர்ந்தது. பிறகு விஞ்ஞானமும், நாகரீகமும், படிப்படியாக வளர்ந்து மனிதனின் தேவைகள்கூடி பயணங்கள் துரிதமாகத் தேவைப்பட்டன. ஆகவே அதிவேகப் பயணத்திற்கான ஆயத்தத்தில் புதுப்புது கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்க அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். அதன் ஆரம்ப கட்டமாக மிதிவண்டியில் தொடங்கி ரிக்க்ஷா,மோட்டர் சைக்கிள்,ஆட்டோ,கார்,பஸ்,லாரி,கண்டினர்கள் என பற்ப்பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு சாலைகளில் பெருகி ஓடத்துவங்கின.அத்துடன் நீராவியால் இயங்கும் புகைவண்டி, நிலக்கரியில் இயங்கும் இரயில் ,டீசலில் இயங்கும் இரயில், மின்சார இரயில், இப்போது மெட்ரோ இரயில் என தண்டவாளத்தில் செல்லும் இரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றியுடன் ஓட ஆரம்பித்தது.

அடுத்து பார்ப்போமேயானால் கடல் வழிப் பயணம் இது பண்டைய காலத்திலிருந்து இப்பயணம் மேற்க்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பயணத்திற்கு கப்பல், பாய்மரக்கப்பல், விசைப் படகு, நாட்டு படகு என தண்ணீரில் பயணிக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துப் போக்குவரத்துப் பயணத்தையும் விஞ்சும் வகையில் ஹெலிகாப்டர், ஏரோபிளேன், .என அடுத்த இலக்கை ஆகாயத்தில் பறந்து சென்று விரைவுப்பயணம் மேற்க்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது. நாடு விட்டு நாடு போகும் நாட்கணக்கான தூரத்தை 4,5 மணி நேரப்பயணத்தில் காலை உணவை தமது வீட்டிலும் பகல் சாப்பாட்டை பல்லாயிர மைலுக்கப்பால் இருக்கும் வேறு ஒரு நாட்டிலும் சாப்பிடும்படியான விரைவுப் பயணக்கண்டுபிடிப்பு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்புதானே.!

இப்படி அசுர வேகத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணக்கருவிகளும் கண்டுபிடித்ததால் மனிதர்களின் நெடுந்தூரப் பயணங்கள் இலகுவாகவும் விரைவாகவும் அமைந்திருக்கிறது.

இத்தோடு நின்று விடாமல் இன்னும் அதிக தூரப் பயணமான விண்வெளிப் பயணம்,வேற்று கிரகமான சந்திரனுக்கு சென்றுவர ராக்கெட்பயணமென தொடர்ந்து அத்தோடும் முடிவு பெறாமல் இதுவரையான பயணக் கண்டுபிடிப்புக்கள் அனைத்தையும் விழுங்கும் அளவிற்கு எல்லாவற்றையும் விட வெகுதூரத்திலுள்ள வேற்று கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்திற்கு போய் மனிதர்களை குடியமர்த்த முயற்ச்சிக்கும் அளவுக்கு இந்தப் பயணக் கண்டுபிடிப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது

அன்று நாள் முழுதும் பயணித்த தூரத்தை இன்று 1, 1/2, 1/4 மணிநேரத்தில் கணக்கிட்டுப் பயணிக்கும்படியான பயணக் கண்டுபிடிப்புக்கள் யாவும் வியக்கத்தக்கதேயாகும். ஒரு நிமிடம் சிந்தித்தால் மனிதனின் இந்தப் பயணக்கண்டுபிடிப்புக்கள் மிகவும் வியப்பில் ஆழ்த்தத்தான் செய்கிறது.!!!

அதிரை மெய்சா 

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…

மனிதனுக்கு நாடுவிட்டுநாடுபோகும் வேட்க்கை உண்டானபோது அவனுக்கு வாகனமாய்இருந்ததுஅவன்கால்களே! இதுதரை வழி பயணத்திற்கு உதவியது .கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம்போக அவன்உபயோகித்த முதல் வாகனம் மரம். தென்ஆப்பிக்கமுனையில்இருந்து குமரிகண்டம்வரை தன்கைகளை துடுப்பாக்கிகடலைவென்றவனும்அவனே!மனிதனின் தேடல் [ ஆசை]வளர்ச்சியின்அடிப்படை.

sheikdawoodmohamedfarook சொன்னது…

வண்டிக்குசக்கரத்தைகண்டுபிடித்துதரைவழிபயணத்தைஎளிதாக்கியவர்கள் ஈராக்கியர்கள்!இன்னும்மனிதனின்பயணங்கள்முடிவதில்லை!

Ebrahim Ansari சொன்னது…

தம்பி மெய்ஷா அவர்களே!

சுருக்கமாக ஆனால் தெளிவாக இந்த வண்டியை ஒட்டி இருக்கிறீர்கள். பிரேக் போடாமல் படிக்க வைக்கிறது. நல்வாழ்த்துக்கள்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.இந்த பயணம் பற்றிய எழுத்தாக்கம் நம் மரணம் பற்றிய தாக்கத்தை மறைமுகமாய் சுட்டுகிறது!

sabeer.abushahruk சொன்னது…

அறிவியல் கண்டுபிடிப்புகளில் தலையாய ஒன்றாகக் கருதப்படுவது சக்கரம்.

பல்சக்கரங்கள் உருவான பிறகு வேக முடுக்கம் சாத்தியப்பட்டது. சக்கரம் இல்லையேல் உலகம் சவலைப்பிள்ளை.

வேகவேகமா இருந்தது கட்டுரை.

வாழ்த்துகள் மெய்சா.

அதிரை.மெய்சா சொன்னது…

அன்பிற்குரிய பாரூக் காக்கா

//மனிதனுக்கு நாடுவிட்டுநாடுபோகும் வேட்க்கை உண்டானபோது அவனுக்கு வாகனமாய்இருந்ததுஅவன்கால்களே!//

ஆம் . அதுவே மனிதனின் பயணத்திற்கு முதல் துவக்கம்.
----------------------

அன்பிற்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா

//சுருக்கமாக ஆனால் தெளிவாக இந்த வண்டியை ஒட்டி இருக்கிறீர்கள். பிரேக் போடாமல் படிக்க வைக்கிறது.//

படித்ததும் பிரேக் போடாமல் பாராட்டு வழங்கியதற்கு மிக்க நன்றி காக்கா.
------------------------------

அன்பிற்குரிய சகோ.கிரவுன்

//அஸ்ஸலாமுஅலைக்கும்.இந்த பயணம் பற்றிய எழுத்தாக்கம் நம் மரணம் பற்றிய தாக்கத்தை மறைமுகமாய் சுட்டுகிறது! //

வாசிக்கும் கண்ணோட்டத்தை பொறுத்து. அப்படியும் வைத்துக் கொள்ளலாம் . .

இக்கட்டுரையை வித்தியாசமாக வேறு கோணத்தில் சிந்தித்தமைக்கு மிக்க நன்றி.
-------------------------------------------

அன்பின் நண்பன் சபீர்

//பல்சக்கரங்கள் உருவான பிறகு வேக முடுக்கம் சாத்தியப்பட்டது. சக்கரம் இல்லையேல் உலகம் சவலைப்பிள்ளை.//

நச்சென்று உணர்த்தியுள்ளாய். அருமை. ஆம். சக்கரம் எனும் பயணச்சுற்று இல்லையேல் உலகம் ஒரு சவலைப்பிள்ளைதான்.

ஒவ்வொருவரின் வித்தியாசமான பின்னோட்டம் வாசித்து அகம் மகிழ்ந்தேன். மற்றும் இத்தளத்திற்க்கு வருகை தந்து இக்கட்டுரையை வாசித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு