Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் (2/2) 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2015 | , , ,

பகுதி - ஒன்றின் தொடர்ச்சி

#########################ஃப்ளாஸ் பேக் ஸ்டார்ட் ###########################

நடுத்தர பணக்காரங்க ஊட்டுலே ஆம்புளைங்களுக்கு மட்டுந்தான் சீனிபோட்ட தேத்தண்ணி! மத்தவங்களுக்கு சக்கரைதான்.

பொருளாதாரத்தில் அடிநிலை குடும்பங்களில் சக்கரையே நாக்கில் தடவிக் கொண்டும் வெல்ல கட்டியே நக்கி கொண்டும் வெறும் தேத்தண்ணி குடிக்கும் நிலை இருந்தது. இன்று போல் அன்று கண்ட-கண்ட இடங்களில் எல்லாம் டி-கடை கிடையாது. கடைத் தெருவில் நூர் லாட்ஜ் கடை இருந்ததது. அதுக்கெல்லாம் தோட்டம் தொறவுவச்சு இருக்கிறவங்களும் கப்பவச்சு ஓட்டுற ஊர்பெரிய மனுசங்களே போவாங்க. புதுஸா பினங்குலேந்து வந்த சபுராளிய போயி சமுசா ஹல்வா வாங்கிட்டுஅப்புடியே வால்புடிச்ச மீன் வாங்கி ஓமளோ கைலே புடிச்சிகிட்டு கோபுரசாப்பு பனியனோடு வேவா வெயிலுலே சதுரமெல்லாம் வேர்வை வேத்து வடிய- வடிய கோபுர சாப்பு பணியன் நனைய-நனைய ‘வேகு- வேகு’ ன்டு நடந்து ஊட்டுக்கு வருவாங்க! அவங்க ஒரு கைலே ஓமலும் மறுகைலே வடே. போண்டா, சம்ஸா, ஹல்வா பொட்டலம் இருக்கும். மகபெத்த பிள்ளைகள் இருந்தால் மட்டுமே இரண்டாவது கையில் பொட்டலம் இருக்கும். மகன் பெத்த பிள்ளைகள் வீட்டில் இருந்தால்அந்த தீண் பண்டங்கள்’ நூர்லாஜ் கடையில் ’’வித்து போச்சு!’’  

சுதந்திரத்துக்கு முன் மெயின் ரோட்டில் செல்லியம்மன் கோயிலை ஒட்டி ஒரு டி கடை இருந்தது.அதன் உரிமையாளர் முத்து வேல்.அதனால் அதை முத்துவேல் கிளப் கடை என்பார்கள். அப்பொழுதுதெல்லாம் டி-கடைக்கு ‘கிளப்’ கடை’யென்று சொல்வதே வழக்கம். முத்துவேல் பழுத்த காங்கிரஸ்காரர் எட்டு முலகதர். வேட்டியும் கதர்சட்டையும் தூய வெள்ளைக் கதர் துணியும் அவர் அடையாளம். உள்ளமும் அப்படியே! ஆனால் உடல் மட்டும் கருப்பு! கருத்த அகன்ற நெற்றியிலே இடம் வலமாக மூன்று வெள்ளை பட்டை நாமம். 

அவர் உள்ளத்தில் அன்பும் பாசமும் மனிதாபிமானமும்’ அடைக்கலம் பெற்றிருந்தது. அப்பொழுது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும் ஏழு வயசுலேதான் ஒண்ணாங்கிளாஸ்லே சேப்பாங்க. போலீஸ் பள்ளிக் கூட்டத்தில் ஒண்ணாங்கிளாசோ ரெண்டாங்கிளாசோ படிச்சுகிட்டு இருந்தேன். அப்பொழுது நம்மூரில் மூன்று பள்ளிகூடங்கள் மட்டுமே உண்டு .ஹிந்து போர்ட் ஆண்கள் ஆரம்ப பாடசாலை.[ Board Hindu Boys School] இது மெய்ன் ரோட்டில். போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்ததால் இது போலீஸ் பள்ளிக்கூடம் என்றே அழைக்கப்பட்டதே தவிர போலீசு காரர்கள் படிக்க கட்டிய பள்ளிகூடம் அல்ல. ஆனால் அதில் படித்தவர்களில் பலரோ சிலரோ போலீஸ்காரர்கள் ஆகி இருக்கலாம். என்னோடு படித்த கரையூர்தெரு மறவன் பிள்ளை வழக்கறிஞர் ஆனார். அதே தெருவை சேர்ந்த மருத முத்து ஆசிரியர் ஆனார். 

பள்ளியில் இடை வேளை மணி அடிப்பார்கள். இதை நாங்கள் ஒன்னுக்கு அடிக்கும் மணியென்று சொல்வோம். சிலர் ரோட்டு ஓரம் நிண்டுகிட்டு அடிப்பார்கள். முஸ்லிம் பையன்கள் எல்லாம் உக்காந்துகிட்டே அடிப்பார்கள். இது அடிக்கவே பள்ளியில் மணி அடிப்பார்கள். ஏனெனில் மணியடித்தாலும் சத்தம் வரும்; இது அடித்தாலும் சத்தம் வரும்! அடித்த மணிக்கு ரோட்டோரம் நின்று நாங்கள் பதில் மணி அடிப்போம். அடித்தகையேடு நேராக தண்ணீர் குடிக்க ஓடுவது முத்துவேல் கிளப்புக்கு. அங்கே எங்களுக்கு யென்றே தனியாக ஒரு மண் பானைநிறைய குடி நீர் காத்திருக்கும்.பானைமேல் மூடிபோட்டு அதன் மேல் ஒரு பித்தளை குவளை தலைகீழாக கவுத்தி இருக்கும்.’’ டேய்! பசங்களா? வரிசையா நின்னு அண்ணாத்திதான் குடிக்கணும். எவனாவது வாயிலே எச்சி வச்சு குடிச்சான் நாளைக்கு யாருக்கும் தண்ணி குடுக்கமாட்டேன்’’ இது முத்துவேல் ஐயாவின் எச்சரிக்கை மணி. ஆகா உடலுக்கு உள்ளே தண்ணி போகவும் மணி அடிக்கிறது; உடலிலிருந்து தண்ணி வெளியாகவும் மணியடிக்கிறது... ‘மணி’ அடிச்சா நடக்காத காரியமெல்லாம் தானாகவே நடக்குமென்று சொல்வார்கள். 

முத்துவேல் கிளப் கடையில் கிளாஸ் கிடையாது. டவராசெட்தான். காபியோ டியோ அதில் தான் வரும். ஆத்தி அண்ணாத்திதான் குடிப்பார்கள் .அதை சிலர் ஆத்தும் ஸ்டைலும் குடிக்கும் ஸ்டைலும் ஒரு தனிஸ்டயில். அதை இன்றைய ரஜனிகாந்தால் கூட செய்ய முடியாது. நாங்களெல்லாம் அதை பாத்துக்கிட்டே நிப்போம். அவங்களும் எங்களை பாத்துக்கிட்டே ஸ்டைல் காட்டி குடிப்பாங்க.எங்கள் நாக்கு ஊறும் காபியின் வாசமோ மூக்குக்குள்ளே பூந்து மனசுக்குள்ளே ஆசையை கெளப்பும். மனசுக்குள்ளேயே ஆசை அசைபோடும். ’நாமளும் எப்போ அவங்க மாதிரி ஆத்திக் குடிகிறது?’’ என்பதே அந்த ஆசை. முத்துவேல் போல நல்லமனிதரை என்னால் மறக்க முடியவில்லை! ஒரு நாளைக்கு ஒருருபாய் காஸு கொடுத்து இரண்டுகு டம் தண்ணீர் வாங்கி பள்ளி பாலகர்களின் தாகம் தீர்த்த புண்ணியவானை ஈரமுள்ள நெஞ்சு செத்தாலும் மறக்குமோ? அந்த உடலை மண் தின்றாபோதிலும் மனிதம்என்ற உணர்வு மறக்கவே மறக்காது .

#########################ஃப்ளாஸ் பேக் எண்ட்###########################

கப்பலுலே வந்த சபுராளி மம்மசங்கனியியை மெனவ வந்த கூட்டமெல்லாம் ராவு ஒம்பது மணிக்குமேலே தான் ஓஞ்ஜூச்சுச்சு. தெருவும் ஊரும் அடிச்சு போட்டாப்புலே ஒசுண்டு போச்சு! ஒரு ஈங்குருவி நடமாட்டம் கூட இல்லே. மரம்மட்டேகூட அசயலே! மொணங்கு ஊட்டுஅபூபக்கர் மட்டும் செத்தனாளிக்கி ஒருக்கா ’லொக்கு-லோக்குண்டு. இருமிக்கிட்டும் காறிதுப்பிகிட்டும் இருந்தாரு! அவருக்கு நெஞ்சுலேகபம் புடிச்சு ராத்திரி பூறா தூக்கமில்லே..

தெருக் கோடியில் ஹம்சாம்மா ஊட்டு பக்கம் நாய்ஞ்ஞ விடாமல் கொலைக்கிற சத்தம் கேட்டுச்சு’’ ஏம்மா? எங்கேயோ நாய் ஊளை இடுறசத்தம் கேக்குதே! எங்கேம்மா? ”என்டான் மம்மசங்கனி.’’ அதா தெரு கோடியிலே ஒரு கெணறு இருந்துச்சு பாரு! அதுலே ஜொகராமா மவ பாத்துமாயி உலுந்து மௌத்தா போயிட்டா! இன்னைக்கி ஏலு நாளாவுது. அன்னையிளே ஈந்து எடுத்தநா கொலப்பு ராத்திரி முளுக்க அள்ளு அள்ளுண்டு அள்ளுது!’’ என்று மம்மசங்கனியோட உம்மாசொன்னாங்க!  ‘’யாம்மா பாத்துமாயி கெனத்துலே உளுந்து  மௌத்தா போச்சு?’’ மம்மசங்கனி கேட்டான். அந்த வவுத்தெரிச்சலே ஏண்டா கேக்குறே? நசிபு! அல்லா அவ தலைலே போட்ட நசிபு! அல்லா தலைலே போட்ட நசிபே மாத்த முடியுமா? அதுபடி அவ உசுரே மாச்சுகிட்டா.’’ என்றாள். ’’நீசொல்லுறது எனக்கு ஒன்னும் வெலங்கலேம்மா?! நல்லா சொல்லு’’ன்டான் மம்மசங்கனி. ‘’சொல்லுறேன்! கேளு!’’ என்று மம்மசங்கனியோட உம்மா சொல்ல ஆரம்பிச்சாங்க! ‘’கெனத்துலே உலுந்து மௌத்தாபோன ஜொஹராம்மா மவ பாத்துமாயிக்கி ரெண்டு புல்லேயளுவோ. மொதபுள்ளே அஞ்சு வயசுலே ஒரு பொம்புளே புள்ளே. ரெண்டாவதா பொறந்தது ஆம்புலே புள்ளே! வயசு மூனு சொச்சம் ஆகி இருக்கும். 

வாப்பாகாரனும் பினாங்கு சபுருதான். இருந்தும் என்ன பண்ணுறது’’ ரெண்டு புள்ளேயும் தாயும் ஈக்கிதேன்டு’’  நெனச்சு பாத்து சரியா ஒன்னும் அனுப்புறதில்லே! ரெண்டு மாசங் கூடி மூனுமாசங் கூடி நூறோ? நூத்தம்பதோ அனுப்புவான்! 

ரெண்டு சின்னஞ் சிறுசுகளை வச்சுக்கிட்டு வெலெவாசி ஏறுன இந்தக்காலத்துலே குடும்பம் நடத்தமுடியுமா? ஓடுறபாம் பைபுடிக்கிற ரெண்டுங்கெட்டான் வயசுலே உள்ள ஒன்னும் தெரியாத புள்ளளேயளுவோ, கண்டதே நின்டதே ஆசைப்பட்டு வாங்கி கேக்குங்க! வாங்கி’ இந்தாண்டு’ கொடுக்க பொடவை தலைப்பு முடிச்சுலே பாத்துமாயி காசா முடிஞ்சு வச்சிக்கிறா?’ பாத்துமாயி பாடு கஷ்டந்தான்.

ரெண்டு சின்னஞ் சிறுசுகளை வச்சுகிட்டு, தங்கச்சி பாத்துமாயி படுற கஷ்டத்தை பாத்துக்கிட்டு கூடப்பொறந்த ரெத்தம் சும்மா ஈக்கிமா? ‘தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்!’‘ன்னு சும்மாவா சொன்னாங்க? .உம்மாக்கு ஊருக்கு பணம் அனுப்பும்போது பாத்துமாயோட கூடப் பொறந்த காக்காமார் ரெண்டு பேரும் தங்கச்சிக்கிம் போட்டு அனுப்புவாங்க! அதுலே பாத்துமாயி ஓலே அடுப்பு பொகஞ்சுச்சு!

பாத்துமாயியோட கூட பொறந்த காக்கமாருவோ ரெண்டுபேரு.மூத்தவன் பேரு ‘மூத்தவன்’’தான் இளையவன் பேறு நாவூருபிச்சை. எல்லாரும் அவனை ’பிச்சே! பிச்சே’ன்னு தான் கூப்புடு வாங்க! அப்படி கூப்புடுறது அவனுக்கு புடிக்காது ! ‘’ஒன்னத்தையும் பிச்சு எறியாத என்னை போய் ஏன்டா ’’பிச்சே !!பிச்சே!’’ ன்டு சொல்லுரியளுறியளுவோ? உங்கூட்டு வேலியை யாட பிச்சேன்? உன் வேட்டி சட்டையை யாடா பிச்சேன்?’’ன்டு  சண்டைக்கி போவான்.

பாத்துமாயியோடகாக்கா’ மூத்தவனும்’ பிச்சேயும் பினாங்கு சபுருதான். அவங்களுக்கும் கல்யாணம் ஆயி, மூத்தவனுக்கு ரெண்டு புல்லேயளுவோ! ரெண்டும் ஆம்புளேபுள்ளே! இளையவேன் நாவூறு பிச்சைக்கி புள்ளே இல்லே. ரெண்டு தடவை ஊருக்கு வந்து ஆறுமாசம் நிண்டுட்டு போயியும் பொண்டாட்டி வவுத்துலே ஒரு பூச்சிபுளுகூட உசும்பலே ! பாக்காதவைத்தியம் இல்லே. திங்காத மருந்துஇல்லே, நேராத நேத்திக்கடன் இல்லே; ஒன்னும் பளிக்களே. பினாங்குலேந்து வந்துட்டு வந்துட்டு சும்மாபோனான். 

‘பிச்சே பினாங்குக்கு போயி மூனு மாசத்துக்கு பொறவு பிச்சையோட பொண்டாட்டி ரைமத்துகனிகிட்ட’’ இப்புடி ஓம் மாப்புலேயும் சபுருக்கு சபுரு வந்துட்டு வந்துட்டுசு ம்மாபோறானே!? நீனும் நமக்குண்டு ஒருபுள்ளே வேணுமுனு நெனைக்கமே இப்புடிபொடு போக்கிதனமா ஈக்கிரியேடி?                  ஆயிரமாத்தான் இருந்தாலும் ஊறா ஊட்டு புள்ளே ஊரா ஊட்டு புள்ளேதான். தனக்குன்னுதான் பெத்த ஒரு புள்ளே இருந்தாத்தான் நமக்கு நாளைக்கி நல்லது கெட்டதுக்கு ஓதவும்’’ என்றாள் அடுத்த ஊட்டு ஆசியா மரியம். ’’புள்ளே உண்டாவுரத்துக்கு என்ன மருந்து திங்கிறது?’’என்றுகேட்டாள்  பிச்சையோட பொண்டாட்டி ரைமத்துகனி. .’’இதுக்கு மருந்து-மருந்து’’ண்டு பணத்தை அழிக்காமே அதுக்கு முன்னாடி ’’பேய்க்கும் பா ரு-நோய்க்கு ம்பாரு’’ன்டு சொன்னாங்களுளோ அது மாதிரி இது பேய்கோளாறா? இல்லே நோய் கோளாறாண்டு பாத்துடனும். மொதலுலே பேய்க்கு பாரு!. அப்புறம் நோய்க்கு பாக்கலாம்’’ என்றாள் அடுத்த ஊட்டு ஆசியாமரியம். ’’பேய்க்கு எங்கே போய் பாக்குறது?’’ என்று நாகூர் பிச்சை பொண்டாட்டி ரைமதுக் கனிகேட்டாள்.’’அப்புடி கேளு. தொவரங்குருச்சிகாரன்ட்டே போயி கேட்ட உள்ளது உள்ளபடியா சொல்லி புடுவான்!’’ என்றாள் அடுத்த ஊட்டு ஆசியா மரியம்.

அடுத்த நாள் வெள்ளிக் கிழமை சாயந்தரம் அடுத்த வீட்டு ஆசியா மரியமும் நாஊர் பிச்சை பொண்டாட்டி ரைம்மத்துக்கனியும் தொவரங்குருச்சி போய் ‘என்ன? ஏதுண்டு பாத்ததுலே சத்திரிக்கா கொன்ணாந்து புட்டு புட்’’டு காட்டிப்புடுச்சு!. என்று மம்மசங்கனியோட உம்மா சொன்னாங்க! 

’’என்னாம்மா கொண்ணாந்து காட்டிபுடுச்சு?’’என்று உம்மா சொன்னது ஒன்னும் வெலங்காமே மம்மசங்கனி கேட்டான். ‘’அதாண்டா ஜின்னு கொண்ணாந்து காட்டி புடுச்சு! நாஊருபிச்சை பொண்டாட்டி வாவுத்துலேபுள்ளேயே தங்காது! ‘’ துன்னு. ‘’வவுத்துலே புள்ளேதங்க எதுவும் திங்கணுமா?’’ ன்னு கேட்டாங்களாம். .’’இல்லேம்மா! புள்ளேயே தங்காமேபோக ‘வேலேபாடு’ செஞ்சு கடலுலே கரச்சுருக்கு! இனிமே அதே யாரும் ஒன்னும் செய்யமுடியாது!’’ன்னு சொல்லிப்புட்டானாம். யாரு செஞ்சதுண்டு கேட்டதுக்கு’’ அதுக்கு வேற பார்க்கனும்னு  சொல்லிபுட்டான்.!’’ என்றாள் மம்மசங்கனியோடேஉம்மா ரைம்மாம்மா.

’’என்னத்தேமா போட்டு ஒடச்சு சொன்னான்?’’என்று கேட்டான் மம்மசங்கனி.’’ அதாண்டா! நாஊரு பிச்சேயோட சொந்த ரத்தத்துலே உள்ள வங்கதான் ஆணும் பொண்ணும்மா ஒன்னு சேந்து அவென் பொண்டாடிக்கி புள்ளேபொரக்காமே இருக்க செஞ்சதா காட்டுரதா தெரியுது’ ’ன்னு சொன்னான்.

இப்படி சொன்ன அந்த செய்தியே வாங்கி ஒன்னத்தையும் வெளியே காட்டிக்காமே நாவூர்பிச்சை பொண்டாட்டி ரைமத்துகனி மனசுக்குலேயே போட்டு ரெம்பநாளா பூட்டி வச்சுகிட்டா !எப்புடி ஈந்தாலும் பொம்புளே மனசு பொம்புளே மனசுதான். அது கடலுபோல!கடலுலே ஏதெ போட்டாலும் கொண்ணாந்து கரையிலே தள்ளிடும். அதுபோல பொம்புளே மனசுலே எதுவும் கெடக்காது. ஒருநாளு இல்லாட்டி ஒருநாளு ஒடச்சுகிட்டு வெளியே வந்துடும். ஒடச்சுகிட்டு போனஅந்தசேதி பாத்துமாயி காதுக்கும் போச்சு.அவஅதே வெளிஉடாமே கமுக்கமா மனசுக்குள்ளேயே போட்டு வச்சுக்கிட்டா. அதுதண்ணிலே போட்டகல்லாஅசையாமே கெடந்துச்சு.

ஒருநாளு சாயங்காலம் பாத்துமாயி மவன், இஸ்மாயி, மாமா நாவுரு பிச்சை பொண்டாட்டி மாமிரைமத்துக்கனி ஊட்டுக்கு வெளையாடப்போனான். அங்கே உள்ள சின்னபயலுவோ எல்லாம் ஒன்னாக்கூடி அவ்வூட்டு முத்தத்துலே வெளையாடுறது வளக்கம்.ரெவே வெளையாடு வானுவோ, கண்ணாமூச்சி வெளையாடுவானுவோ, கண்ணக் கட்டி வெளையாடு வானுவோ .கிளித்தட்டு வெளையாடுவானுவோ. இதையெல்லாம் திண்ணையிலே குந்தி பாத்துகிட்டு இருப்பா நாஊருபிச்சை பொண்டாட்டி ரைமத்துக்கனி. அன்னைக்கும்அப்புடியே உக்காந்து பாத்துகிட்டு இருந்த ரைமதுக் கணிக்கு ’’நமக்கும்ஒருபுள்ளே  இருந்தா இந்த புள்ளேயளுவோலோட ஒன்னா சேந்து விளையாடுமுளோ!’’ என்ற எண்ணம் அவள் மனசுலே நிழலாடியது.

அவள் முகத்தில் சோக மேகம் திரண்டு கூடி கருமை சூழ்ந்தது. கண்ணீர் கண்ணத்தில் வாய்க்கள் வெட்டி வழிந்தோடியது. என்னதான் கண்ணீர் வழிந்து-வழிந்து ஓடினாலும் ‘மலடி!’மலடி!” என்ற சொல்லை இந்தக் கண்ணீர் அழிக்குமோ? ஏதோ ஒரு இனம் புரியாத எண்ணத்தில் கல்லென சமைந்து உட்கார்ந்து விட்டாள் ரைம்மத்துக்கனி. சிறிது நேரம் கழித்து தன் சுய உணர்வு வந்தவளாய் எழுந்துபோய் அடுப்பங்கரையில் தேத்தண்ணிபோட உட்கார்ந்து விட்டாள்.

‘’வாங்கடா! வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு விளையாடுங்கடா!’’ என்று    கூப்பிட்டு ஆளுக்கொரு கொவலையில் தேத்தண்ணியும் கையில் ஒரு துண்டு கருப்பட்டி வட்டும் கொடுத்தாள். ‘’எல்லோரும் தேத்தண்ணியே அங்கே இங்கே சிந்தாமே சிதறாமே குடிச்சிட்டு கொவளையை களுவி அடுப்பங்கரைலே வச்சுடணும்!’’ இது நாவூரு பிச்சை பொண்டாட்டிபோடும் வழக்கமான ஆடர். ஆடர்படி பசங்கள் நடந்து கொள்ளுவானுக.

அன்னைக்கி என்னமோ தெரியலே பாத்துமாயி மவன் இஸ்மாயி தேத்தண்ணி குடிச்ச கொவளையை களுவி உள்ளே வைக்க போம்போது நிலைப்படி ஓரமா இருந்த அரிக்கன் லாம்பு அவன் காலுலே பட்டுகீலே உலுந்து ஒடஞ்சு போச்சு! ஏதோ ஒடஞ்ச சத்தம் கேட்டு ஓடிவந்த ரைமத்துக்கனி ஒடைஞ்ச லாம்புக்கு பக்கத்திலே இஸ்மாயி நின்றதை பார்ததும் அவளுக்கு ஏதோ ஏதோ நினைவுக்கு வந்தது. அடுப்பங்கரையில் போய் உட்காந்து கொண்டே விடாமல் தொடர்ந்து திட்டினாள். ரைமத்துக்கனியின் கோபத்துக்கு பயந்து அங்கே விளையாடிய பயலுவோலேல்லாம் ஓடி விட்டானுக. இஸ்மாயி மட்டும் ஓடவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி ஏறும்பானான்.

‘’கட்டுன புருசனுக்கு சாம்பாதியம் செய்யவக்கில்லை. மாமன்மார் சோத்தில் புள்ளலய  வவுத்து பாடும் தன்பாடும் ஓடியடையுது. எளயமாமனுக்கு புல்லே யில்லாமல் போனது பருத்தி பொடவையா காச்ச மாதிரியாச்சு .மஞ்சத்துலே கூடபடுத்துக்கேடக்குரவ ஒருத்தி. மஞ்சத்தேச்சு குளிக்கிரவ இன்னொருதியாச்சு. தமையன் பொண்டாடிக்கி புள்ளே வரப்புடாதுண்டு செஞ்சவ ஏன் அவ்வளவு தூரம் போகணும். அவளே தமையனே பாயிலே கூடப்போட்டு படுத்துக்கிட வேண்டியதுதானே? பெத்தபுள்ளேஎல்லாம் பசிஇல்லாமே மாமன் சோறு அப்பன் சோறு-அப்பன்சோறு மாமன் சோறு’’ என்று பெத்த புள்ளேயை யெல்லாம் வளக்கலாமுளோ?’’ என்று சொல்லிக் கொண்டே ரயிமத்துக்கனி அடுப்பங்கரையே விட்டுவெளியே வந்தாள்.

வந்தவளுக்குஅங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் எதிரே பாதுமாயி நின்று கொண்டிருந்தாள்.

‘’மஹ்ரிபு நேரமாகியும் இஸ்மாயி வீட்டுக்கு வரக் காணோமே!’’ என்று மகனை தேடிவந்த பாதுமாயி மச்சி ரைமத்துக்கனி வீட்டுக்குள் நுழைந்தாள். பாதுமாயி வீட்டுக்குள் வந்தது தெரியாமல் தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்த ரைமதுக்கனியின் கொச்சை வார்த்தைகள்  பாத்துமாயி காதிலே ஈயத்தைகாச்சி ஊத்தியது.

வெளியேவந்த ரைமதுக்கனி முற்றத்தில் நடுவே பாத்துமாயி நின்றதை கண்டதும் இடி ஓசை கேட்ட நாகம்போல் அவள் கை  கால்கள் நடுங்கியது. தலை சுற்றியது. ‘நான் திட்டியதெல்லாம் அவள்காதில் விழுந்தே                        இருக்கும்’.

’’எங்கும் அலஞ்சு தேடிகிட்டு வாரேன்! இங்கே வந்து ஏன்டா அளுவிகிட்டு நிக்கிறா?’’ என்று பாத்துமாயிமகனை அதட்டினாள். ‘’மாமி ஊட்டுக்கு வெளையாட வந்தேன். மாமி ஊட்டு-வெளக்கே தெரியாமே ஓடசுட்டேன். மாமி யேசுனாங்க!. ’’என்றான் இஸ்மாயி.

‘’இனிமே ஒனக்கு மாமி ஊடு மாமா ஊடேல்லாம் கெடையாது. அடுத்த தடவை இங்கே வந்தா களுத்தே நெருச்சு சாவடிச்சு புடுவேன்’’யென்று அவன் கைபிடிச்சு வெளியை இழுத்து முதுகில் ஓங்கி ஓங்கி அடித்தாள்.

’’அடிக்காதேமா! அடிக்காதேமா! இனிமே வரமாடேம்ம்மா!’’ என்று கதறி-கதறி அழுதான். பாத்துமாயி இப்போ ஒரு அம்ச அடக்கமான பெண்ணல்ல. அவள் ஒரு பேயானாள். அவள் பூமியிலே கால்பதித்து நடப்பது பூமிக்கே தெரியாது. அவள் கால் மிதிபட்டு ஒரு சித்தெறும்பு கூட செத்தது கிடையாது. நிலம் பார்த்து காலெடுத்து நடந்த நித்திலமணி அவள். அவள்முகம்பார்க்க நிலவுகூட ஆசைப்பட்டது. அவள் முகம் பார்த்த ஆண்கள் யாருமில்லை. இப்போ ஒரு தென்றல் புயலானது! ஏன்? ஒருவார்த்தை! அந்த ஒரு அநாகரீக-முறை தவறிய வார்த்தை ’’போட்டுக் கிட்டு..... வேண்டியதுதானே!.’’ மகன் இஸ்மீயிலே இழுத்துக் கொண்டு வீடுபோனால். அம்மாவிடம் சொல்லி-சொல்லி அழுதாள் .அம்மாவும் எவ்வளவோ ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும் அவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமானது.

மக்ரிபு தொழுகை முடிஞ்சுந்து கொஞ்ச நேரம் ஆனதும் கதவை திறந்து கொண்டு பாதுமாயி பொசுக்கென்று வெளியே போனாள். உம்மா கையில் அடிவாங்கி அழதுகிட்டு வந்த இஸ்மாயி பாய்விரிக்காமல் படுத்ததும் தூங்கி விட்டான். அவன் சோறுகூட உங்கலே!

போனவளைக் காணோம். இசாவுக்கு பாங்கு சொல்லி தொழுகையும் முடிஞ்சு ஆளுகளெல்லாம் ஊட்டுக்கு வந்துட்டாங்க. பாதுமாயியோட உம்மா ஜொஹராம்மாவுக்கு நேரம் போகப்போக ’மகளை காணோமே!’’ என்ற அச்சத்தால் நெஞ்சுக்குள்ளே படபடப்பும் பதட்டமும் கூடிக் கொண்டே வந்தது. 

அடுத்த ஊடு அண்டுன ஊடு எங்கும் போய்தேடிப்பார்த்து விட்டாள். எங்கேயும் அவள் இல்லை. வெறுங்கையோடு திரும்பி வந்து பிள்ளைகளை கட்டிபிடித்து ஓ.... வென்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். உம்மம்மா அழுவதைப் பார்த்த பிள்ளைகளும் அழத்தொடங்கியது. மூனு பெரும்பேரின் அழுகை சத்தமும் அடுத்தடுத்த வீடுகளுக்கு கேட்டு அவர்கள் எல்லோரும் ‘என்னமோ! ஏதோ!’ என்று போட்டது போட்டபடி ஓடி வந்தார்கள்.

செய்தி பரவி தெரு வெல்லாம் ஒரே கூட்டம். ஆண்களும் பெண்களும் திரண்டு வந்தார்கள். தெருவே அல்லோல-கல்லோலபட்டது. பேட்டரிலைட்டையும் அரிக்கன் லாம்பையும் எடுத்துக் கொண்டு மூலைக்கு மூலை-சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்துக்கு பொந்து என்று ஆணும்-பொண்ணுமா ஒன்னுகூடி தேடி தேடி பார்த்தும் ஒருவர் கண்ணிலும் பாத்துமாயி தென்படவில்லை.
தொடரும்
S.முஹம்மது பாருக்

6 Responses So Far:

sabeer.abushahruk said...

ஆஹா ஆஹா
அசத்தல் அருமை

குறும்படம் என்று நினைத்தேன் திரைப்படமாகவல்லவா ஒஅடுகிறது!!!!

Ebrahim Ansari said...

ஆஹா ஆஹா
அசத்தல் அருமை

குறும்படம் என்று நினைத்தேன் திரைப்படமாகவல்லவா ஒஅடுகிறது!!!!

படிச்சுப் புட்டு குதுரு மாதிரி நிக்கிறேன். ஒன்னும் பேச்சு மூச்சு வரலே. அதுனாலே தம்பி சபீரு எழுதுனதை அப்புடியே போட்டுட்டேன்.

அதிரை.மெய்சா said...

பினாங்கு சபுராளியுடன் பழைய அதிரையை நினைவூட்டி உங்கள் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் காக்கா. மிக அருமையானதொரு ஃபிளாஷ் பேக் ஆஃப் அதிரை.

அடுத்து என்ன சொல்லபோகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இது கற்பனை கதை என்றாலும் ஒரு திரை காவியம் போல்தான் எழுத்தோட்டம் உள்ளது. விழித்திரை நித்திரையை தழுவினாலும் ,பாத்திமாவின் நிலையால் நிலைகுழைந்ததால் கண்ணீர் திரையிட்டு நித்திரையும் தொலைந்தது.படித்தவன்,பாமரன்,ஏழை,பணக்காரன் என வாழ்வில் பல் அம்சம் இருந்தாலும்,ரோசம் என்பது இல்லாதிருப்பவனை காண்பது அரிது!அதிலும் வார்தை சிலதடித்திருப்பதும்,குத்தலாக, நக்கலாக இருப்பது அந்த வார்தை உயிரையே குடித்திடும் கொடிய விசம்!கக்கியவன் சாக மாட்டான் அந்த விசம் கண்டவன்,காதில் உண்டவன்!சாவான்!சிலரின் அர்தபிழையான வார்தை உயிர் காகிதத்தையே கிழித்துவிடும்.அச்சுப்பிழையிருந்தால் திருத்திவிடலாம்,ஆனால் நச்சு பாய்ச்சும் கருத்துப்பிழை! இதுதான் பாத்திமா போன்றோர் மூலம் கதைஆசிரியர் பாருக்காக்க சமூகத்துக்கு சொல்லும் பாடம்!இது கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது. நம்மூரில் அரிதாக நடந்தாலும்,அந்த காலத்திலும்,இந்த காலத்திலும் மார்க்கம் சரியாக புரியப்படாத நம் சமூகம் அதிகம் வாழும் ஊரில் சர்வ சாதாரனமாய் நடப்பதுதான்..அதனால்தான் பெருமானார்(ஸல்) நாவை அடக்கச்சொன்னார்கள்!

sheikdawoodmohamedfarook said...

நல்லகருத்துக்களைசொன்னதம்பிCrownனுக்குநன்றி.மற்றும் கருத்துபோட்டஅனைவர்களுக்கும்நன்றி!அஸ்ஸலாமுஅலைக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு