அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை
இல்லா எந்தன் சொந்தமே!
என் தாயின் துணையே!
எந்தையே, என் தந்தையே!
நான்
தீராத அன்பு கொள்ளும் அன்பே!
நான்
என்றும் தங்கள் நாணின் அம்பே!
என்
மூச்சு காற்றின்
மூலக்காற்றே!
என்னை
அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத்தந்த வரமே!
அலிப் சொல்லித்தந்த
முதல் ஹஜ்ரத்தே!
அகரம் சொல்லித்தந்த
முதல் ஆசானே!
நபிவழி
நடக்கச் சொல்லித்தந்த
நஜாத்தே!
சமூகத்தின் பாதையில்
நடக்க சொன்ன - சுன்னத்துல்
ஜமாத்தே!
நான் வாழ
தேய்ந்த நிலவே!
நான் இன்பம் கான
என்னில் வந்த கனவே!
உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே!
என் விந்தையே! தந்தையே!
உலகில் எம்முன்னே
மறைந் தாலும்
எனை ஆளும்
உம் அன்பு!பாசம்,தியாகம்!
நான் முன்னே இறந்தாலும் ,
கவலை வேண்டாம்
நீர்
என்னை என்றும்
மனதில் சுமக்கும் தாய்!
வாழ்க நீர் பல்லாண்டு
என் தந்தையே!
என் உயிரின் உந்தே!
அ.ர.முஹமது தஸ்தகீர்(கிரவுன்)
18 Responses So Far:
அஸ்ஸலாமுஅலைக்கும். என்பெற்றோர்களுக்கு
து ஆ செய்யுங்கள்.
வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
காலை எழுந்தவுடன் கருத்தைக் கவர்கிறது இந்தக் கவிதை.
தந்தைக்காகத் தாங்கள் உருகுவது வாசிப்பவரையும் உருக்குகிறது.
உணர்ச்சிவசப்படுகின்றன வார்த்தைகள்! சரிதானே? அகரம் மட்டுமா அப்பா! ஆகாரம் தர அயராது உழைத்தவர்!
அவருக்கான இந்த அலங்காரம் அவசியம்தான்.
அடிக்கடி எழுதுங்கள்!
//உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே//
சுமைதாங்கியாய் உமைத் தாங்கி; அழுத்தும் பாரத்தின் வலி மறைத்து; உங்கள் வாழ்வை நிமிர்த்தி இன்பம் மட்டுமே தந்த தங்கள் தந்தை ஓர் உதாரண மனிதர்.
அதற்காக நன்றி பாராட்டும் தங்கள் பண்பும் போற்றத்தக்கது.
இன்றைய பொழுது இனிதாய் விடிந்தது
எப்போதும் தாமதமாகக் கூவும்
என் வீட்டுத் தென்னைமரக் குயில்
இன்றென்னவோ சற்று சீக்கிரமாகக் கூவியதாக உணர்வு
இறைவணக்கம் முடித்து இருக்கையில் அமர்ந்ததுமே
கருப்பட்டிக் காபி குடிக்கும் முன்பே
கைகள் ஏனோ பரபரத்தன
கருப்புப் பெட்டியைத்
திறந்ததுதான் தாமதம்
வெகுநாளாய் நான் வேண்டி நின்ற
வெள்ளம் !
பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடியது.
கணினியில் கவிதைவடிவில் வார்த்தை வெள்ளம்
கண்களிலோ கட்டுப் படுத்த இயலாத கண்ணீர் வெள்ளம்
அன்புத் தம்பி தஸ்தகீர்!
நீர் எழுதியது புதுக்கவிதையல்ல
பொதுக் கவிதை.
கட்டுரையாளனையும்
கவிதை எழுதவைத்த
கண்ணீர்க் கவிதை!
இந்த விதைகளை உம் கையால் தூவ
அதிரை நிருபரே அன்றாடம் தவமிருந்தது - நீர்
விதை தூவிப் பயிர் வளர்ப்பீர் என்று
எண்ணி இருந்த நேரம் - ஒரு
ஆலமரத்தையே இங்கு நட்டுவிட்டீர்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.
தம்பி கிரவுன் !
நினைவிருக்கிறதா இந்த உரையாடல் ?
நீங்கள் : காக்கா ! நீங்கள் கவிதையும் எழுதவேண்டும்.
நான் : இல்லை என்னால் முடியாது- தெரியாது
நீங்கள் : உங்களால் முடியும்
நான் : நீங்கள் கவிதை எழுதுங்கள் நான் அதற்கு கவிதையால் கருத்திடுகிறேன்.
DONE. ( தெரிந்தவரை)
sabeer.abushahruk சொன்னது…
உணர்ச்சிவசப்படுகின்றன வார்த்தைகள்! சரிதானே? அகரம் மட்டுமா அப்பா! ஆகாரம் தர அயராது உழைத்தவர்!
அவருக்கான இந்த அலங்காரம் அவசியம்தான்.சுமைதாங்கியாய் உமைத் தாங்கி; அழுத்தும் பாரத்தின் வலி மறைத்து; உங்கள் வாழ்வை நிமிர்த்தி இன்பம் மட்டுமே தந்த தங்கள் தந்தை ஓர் உதாரண மனிதர்.
----------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இது எழுதியவைமட்டுமே!எழுத்தில் அடக்க முடியாதவை பல கோடி! மேலும் சுய புரானமாய் மாறிவிடும்!என் எல்லாவற்றிருக்கும் ஆதாரசுருதி!/மனதார வாழ்தியதற்கு நான் நன்றி எப்படி சொல்வது இருந்தாலும் நன்றி கொன்றவன் ஆகாமல் இருக்க நன்றி.!
தம்பி Crown!உங்கள்தந்தைகாகஇருகரம்ஏந்திஅல்லாவிடம்துவாசெய்கிறேன்,
அஸ்ஸலாமுஅலைக்கும்.அ.இ.காக்காவுக்கு!,
-------------------------------------------
யார் சொன்னார் ?
உங்களுக்கு யார் சொன்னார்?
பார் முழுதும் பாராமலே,
பாரா,பாரா வாக எழுத முடிந்த
உங்களுக்கு யார் சொன்னார்?
கவிதை எழுத முடியாதுன்னு.யார் சொன்னார்?
ஊரில்,நேரில் சென்று பார்தவருக்கும்,
அங்கே நேர்ந்த நிலை தெரியாது!
ஆனால்
ஒத்தனும் சொல்லாத ரகசியம்
ஒற்றனும் கானாத செய்தியும் ,
உம்மை தவிர உன்மையா யார் தர முடியும்?
கவிக்கோவின் கவிகேட்ட செவிக்கு
கவிக்கோவின் கவியரசின் புவிக்கு
ஓர் படைவீரனாய் இருந்த உமக்கா?
கவியெழுத தெரியாது?
கருப்பட்டியும்,கருப்பு பெட்டியும்
என கருத்தில் கவிவடிக்கும் உமக்கா கவிதை தெரியாது?
சொல்லுரவன் மலடியின் மூத்த மகனா?
இல்லை
வரலாறு தெரியாமல் உளரும் காவி கேடியா?
யார் சொன்னார் ?
உங்களுக்கு யார் சொன்னார்?
sheikdawoodmohamedfarook சொன்னது…
தம்பி Crown!உங்கள்தந்தைகாகஇருகரம்ஏந்திஅல்லாவிடம்துவாசெய்கிறேன்,
----------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பிற்கு நன்றி நானும் உங்களுக்கு துஆ செய்கிறேன். இதை விட கைமாறு இருக்குமாறு என்னிடம் ஏதும் இல்லை.
ஒரு
ஆலமரத்தையே இங்கு நட்டுவிட்டீர்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.
-------------------------------------------------------------------------------------
ஆலமரத்த, அதன் விழுதே எழுதும் படி அமைந்ததும். அதற்கு உங்களின் அன்பான கண்ணீரும். இதைவிட சிறந்த விருது ஏதும் இல்லை. எனக்கு இனி ஒன்று கிட்டினாலும்? இரண்டாம் தரமே!
தந்தையெனும் தரமான உறவை
தாங்களின் தரமான வரிகளால்
வாரியணைத்துள்ளீர்கள்.
தாய்ப்பாசம் என்பது எவ்வளவு உயர்வானதோ
அதுபோல் தந்தையின் தியாகமும் பாசமும்
தங்கத்தைப்போன்றது என்பதை உங்கள் கவிவரியில்
காணமுடிந்தது.
அருமை. இன்னும் எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.
தன் பிள்ளைகளை தர்பியத்தாக, கவனித்து, அன்பு செலுத்தி, அரவணைத்து வளர்க்கும் ஒவ்வொரு தகப்பனார்களுக்கும் இக்கவிதை அர்ப்பணம்
உங்களின் தகப்பனாருக்கு துவாச்செய்தவனாக...உங்கள் வாப்பாவின் நல் வளர்ப்பை எதிரொலிக்கும் கண்ணாடியாக உங்களைக் காண்கின்றேன்
உங்கள் தந்தைக்காக மற்றும் இத்துடன் எனது தந்தைக்காகவும் இருகரம் ஏந்தி துவா செய்கிறேன்
கிரவ்னு !
வாப்பாதானே(டா) கிரவ்ன் உன் தலைக்கு !
உன் கவிதைக்கெல்லாம் விரிவுரை எழுதற அளவுக்கு இன்னும் உரை`நடை பயிற்சி யாக்கனும்(டா) !
(உன்)வாப்பாவும் பெத்த மக்களுக்கும் என்றும் துஆ இன்ஷா அல்லாஹ் !
//தம்பி கிரவுன் !
நினைவிருக்கிறதா இந்த உரையாடல் ?
நீங்கள் : காக்கா ! நீங்கள் கவிதையும் எழுதவேண்டும்.
நான் : இல்லை என்னால் முடியாது- தெரியாது
நீங்கள் : உங்களால் முடியும்
நான் : நீங்கள் கவிதை எழுதுங்கள் நான் அதற்கு கவிதையால் கருத்திடுகிறேன்.
DONE. ( தெரிந்தவரை) ///
காக்கா.... : கவிதை சூப்பர்... இத இத இப்படித்தான் டெவலப் செய்து... கிரவ்னுட்ட கொடுத்துட்டா... போதும் !
This is True words from his hearts....
This is True words from his hearts....
அஸ்ஸலாமுஅலைக்கும்.பின் கருத்திட்ட சகோதரர்கள்.மெய்சா,யாசர்,அபு.இபு.அப்துற்றஹ்மான் ஆகியோரின் அன்பிற்கும் கருத்திற்க்கும் என் பெற்றோர்களுக்கு துஆவிற்கும் நன்றிகள் பல!
Post a Comment