அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
முஸ்லிம்களின்
குறைகளை மறைத்தல்:
வெட்கக்கேடான
செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும்
மறுமையிலும், துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய
மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 24:19)
'உலகத்தில் ஓர் அடியானுடைய குறையை மற்றொரு அடியான்
மறைத்தால், மறுமை நாளில்
அல்லாஹ் அவனை (அவனது குறையை) மறைப்பான்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அவர்கள் ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 240)
''என் சமுதாயத்தில்
ஒவ்வொருவரும் வெற்றி பெறுவர். ஆனால் (பாவங்களை) பகிரங்கப்படுத்துவோரைத் தவிர. ஒருவன்
இரவில் ஒரு செயலைச் செய்கிறான். அதை அல்லாஹ் மறைத்திருக்கும் நிலையில் காலையில் எழுகிறான்.
(பின் தன் நண்பனிடம்) இன்னாரே இன்ன, இன்ன குற்றங்களை
இரவில் செய்தேன் என்று கூறுகிறான் இதுதான் (பாவத்தை) பகிரங்கப்படுத்துவதாகும். அவனது
பாவத்தை அவனது இறைவன் மறைத்திருந்தான். அவனோ காலையில் அல்லாஹ் மறைத்திருந்த (பாவத்தை)
பகிரங்கப்படுத்தி விட்டான்''என்று நபி(ஸல்
அவர்கள் கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 241)
முஸ்லிம்களின்
தேவைகளை நிறைவேற்றுதல்:
...நன்மையைச்
செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன்: 22:77)
ஒரு முஸ்லிம்
மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை
ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ்
இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில் ஒரு
கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது ஒரு குறையை மறைப்பான்
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 244)
''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூஹூரைரா (ரலி)
அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:245).
மக்களிடையே
இணக்கம் ஏற்படுத்துதல்:
தர்மம், நன்மையான
காரியம்,
மக்களிடையே
நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான
பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச்
செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம் (அல்குர்ஆன் :
4:114)
...எனவே
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 8:1)
நம்பிக்கை
கொண்டோர்(அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை
ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)
''மனிதர்கள்
தங்களின் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் சூரியன்
உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் தினமும் அதற்கு தர்மம் செய்தல் வேண்டும்.
இரண்டு பேர்களுக்கிடையே நீதமாக நடப்பதும் தர்மம் ஆகும். ஒருவருக்கு ஒரு வாகனத்தை
வாங்கித் தந்து. அதில் அவரை ஏற்றி அனுப்புவதும் தர்மம் ஆகும். அல்லது அவருக்கு
அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மம் ஆகும். நல்ல வார்த்தை (பேசுதலும்) தர்மம்
ஆகும். தொழுகைக்காக அவன் நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மம்
ஆகும். பாதையில் இடையூறாக இருப்பதை அகற்றுவதும் தர்மம் ஆகும்'' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 248)
''மனிதர்களிடையே
சமாதானம் ஏற்படுத்தி வைக்க, நல்லதை எடுத்துச் சொல்லியோ அல்லது நல்லதை கூறியோ இருப்பவர்
பொய்யர் அல்லர்'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 249)
நபி(ஸல்)
அவர்கள் தன் வீட்டு வாசலில் இருவர் சண்டையிடும் சப்தத்தைக் கேட்டார்கள். அவர்களில்
ஒருவர், மற்றொருவரிடம்
பணிவு காட்ட வேண்டினார். மேலும் தன்|(கடன்)
விஷயத்தில் தள்ளுபடி செய்யவும் வேண்டினார். அதற்கு அவர், ''அல்லாஹ்வின்
மீது சத்தியமாக, நான் இதைச்
செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்விருவர்களிடமும் நபி(ஸல்) அவர்கள்
சென்றார்கள். ''நல்லது செய்ய மாட்டேன் என, அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்தவர் எங்கே? என்று
கேட்டார்கள். ''நான் தான் இறைத்தூதர் அவர்களே! அவர்
விரும்பியது அவருக்கு உண்டு. (அவரது கடனில் சிலதைத் தள்ளுபடி செய்கிறேன். அவரிடம்
மென்மையாகவும் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 250)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அலாவுதீன் S.
0 Responses So Far:
Post a Comment