Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் கந்தூரி ஊர்வலத்திற்கு தடை! - வட்டாட்சியர் முடிவு. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 09, 2015 | , ,

அல்லாஹ்வின் பெயரால்.

அல்ஹம்துலில்லாஹ். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், கடற்கரைத் தெரு கந்தூரி ஊர்வலம் தொடர்பாய், தாரூத் தவ்ஹீது அமைப்பிற்கும், கந்தூரி கமிட்டியினருக்கும் வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தான் விளங்கி இருந்த தகவல்படி கந்தூரியினருக்கு இடஞ்சல் இல்லாத வகையில் ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆரம்பித்த வட்டாட்சியர். இரு தரப்பின் வாதங்களை கேட்டப்பின் இவர்கள்தான்( தாரூத் தவ்ஹீது) உண்மையான முஸ்லிம்கள். நீங்களும் (கந்தூரி கமிட்டியினரை) இவர்களை போல் முஸ்லிம்களாக மாறிவிடுங்கள் என்றார்.

பாகியத்துஸ்ஸாலிஹாத் பள்ளியை சுற்றி வருவதில் கமிட்டியினர் பிடிவாதம் காட்டியதை தொடர்ந்து,

கந்தூரி ஊர்வலம் கலவரத்தை தூண்டவே நடக்கிறது எனவே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறேன். என சிறப்பானதோர் முடிவு எடுத்து அமைதி பேச்சுவார்த்தையை கலைத்து விட்டார். கந்தூரி கமிட்டியினர் அப்ஜக்‌ஷனை கலக்டரிடம் தெரிவித்துக்கொள்ளுங்கள். என்று முடித்துவிட்டார்.

நன்றி : அதிரைந்தாருத் தவ்ஹீத்

7 Responses So Far:

sabeer.abushahruk said...

கழிசடைகளின் கேளிக்கையான கந்தூரியைப் புறக்கணிப்போம்.

crown said...

இரு தரப்பின் வாதங்களை கேட்டப்பின் இவர்கள்தான்( தாரூத் தவ்ஹீது) உண்மையான முஸ்லிம்கள். நீங்களும் (கந்தூரி கமிட்டியினரை) இவர்களை போல் முஸ்லிம்களாக மாறிவிடுங்கள் என்றார்.
----------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்."வட்டாட்சியர் கூட, நேர்கோட்டில்( நேர்வழி)செல்ல சொல்லும் அளவிற்கு நேர்வழியானது நம் மார்க்கம் அதில் எந்தவழியில் ஊர்(அ)வலம் போனாலும் அது தவறான வழிகேடே!

Ebrahim Ansari said...

ஒரு வட்டு வட்டாட்சியராக இல்லாமல் ஒரு GOOD வட்டாட்சியராக இருப்பதால் லட்டு போன்ற தீர்வு.

ஸ்வீட்ஸ் எடு கொண்டாடு.

முட்டாசு மட்டும் வேண்டாம்.

zahir hussain s/o Marhoom S.A.Jabbar said...

கழிசடைகளின் கேளிக்கையான கந்தூரியைப் புறக்கணிப்போம்.

zahir hussain s/o Marhoom S.A.Jabbar said...

கழிசடைகளின் கேளிக்கையான கந்தூரியைப் புறக்கணிப்போம்.

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்...

அதிரை பசுமை said...

கந்தூரி எனும் சவ ஊர்வலங்களும்! தாருத் தவ்ஹீத் முன்னுள்ள கடமைகளும்!!
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹ், அதிரை தாருத் தவ்ஹீதின் தொடர் முயற்சியால் கந்தூரி ஊர்வலத்திற்கு அரசினர் (வட்டாட்சியர்) தடை எனும் முதல் அடி விழுந்துள்ளது என்றாலும் நாம் மகிழ இதில் ஏதுமில்லை. கந்தூரி ஆதரவாளர்களுக்கு இணைவைப்பின் தண்டனைகளை எடுத்துக்கூறி அவர்களாகவே தாமே முன்வந்து இதுபோன்ற பாவ நிகழ்வுகளிலிருந்து விலகச் செய்வதே இருதரப்புக்கும் மறுமையில் பயன்தரும் நற்செயலாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

கடந்த 07.11.2015 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், கந்தூரி ஊர்வலமே கூடாது என்ற உறுதியான நிலையில் அதிரை தாருத் தவ்ஹீதும், ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் செல்வோம் என வீம்படித்த கந்தூரி கோஷ்டியினரின் அடாவடியால் கலெக்டரிடம் சென்று அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என வட்டாட்சியர் தடை விதித்துள்ளார் என்ற செய்திகள் இணைய தளங்களில் பரவியதை தொடர்ந்து பின்னூட்டம் என்ற பெயரில் சில அப்பாவிகள் எழுதியுள்ளதையும், கந்தூரி ஊர்வலத்தை அவர்கள் 'ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல்' பற்றி ஏதுமறியாது சாதாரண 'பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள்' என்ற அளவிலேயே பார்த்துள்ள பார்வையும் அவர்கள் மீது இரக்கம் கொள்ளவே செய்கின்றன. கண்டிப்பாக இத்தகைய மனப்பான்மையுள்ள சகோதரர்களிடம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துக்கூறினால் ஏற்றுக் கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ்.

இன்னும் ஒரு சிலர், அதை ஏன் தடுக்கவில்லை இதை ஏன் தடுக்கவில்லை என பட்டியலிட்டுள்ளனர். 'தவறுகள்' என விளங்கியுள்ள சகோதரர்கள் அந்தத் தவறுகளை தடுக்கும் பணியை தங்களிடமிருந்தே துவங்கட்டும், எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்புத் தான் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? குறைந்தபட்சம் ஒருசில விஷயங்களை தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள தங்களைப் போன்றோர் கந்தூரி போன்ற பாவங்களை செய்வதிலிருந்தும் விடுபட அல்லாஹ் அருள் செய்வானாக!

இந்து மத சகோதரர்கள் அவர்கள் வழக்கப்படி ஆட்டம் பாட்டத்துடன் சவ ஊர்வலம் செல்வதை பார்த்திருப்போம், நமது பார்வையில் அவர்களின் அறியாமையை எண்ணி முகம் சுழித்திருப்போம் ஆனால் தர்கா எனும் கல்லறையில் அடக்கப்பட்டுள்ள என்றோ இறந்த ஒரு மனிதருக்காக வருடாவருடம் கந்தூரி எனும் பெயரில் மட்டும் சவ ஊர்வலம் நடத்துவது மட்டும் சரியா? என சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்கட்டும்.

அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்களிடம் நாம் கேட்டுக் கொள்வதாவது, உங்களுடைய பணிகளை, பிரச்சாரங்களை 1980களில் துவங்கிய இடத்திலிருந்தே மீண்டும் ஆரம்பியுங்கள். இன்று அறியாமையினாலும், நமக்கு இளம்வயதில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு இன்றைய இளந்தலைமுறைக்கு குறைந்துவிட்டதாலும், தடமாறியுள்ள இளைய சமுதாயத்திற்கு இஸ்லாத்தை குர்அனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக்கூறி நேர்வழிபடுத்த வேண்டும்.

நாம் யார்? நாம் சொல்வது என்ன? என்பதை விளங்கப்படுத்த வேண்டும். இன்று கந்தூரிக்காக கவலைப்படும் சகோதரர்கள் விரும்புவார்களாயின் அவர்களுக்கு தேவையான தனி அமர்வுகள் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அதுபோல் குர்ஆன் ஹதீஸ் பேசக்கூடிய தனிநபர்களும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்புடன் கரம் கோர்த்து 'நல்லவற்றை ஏவவும், தீயவற்றை தடுக்கவும்' முன்வர வேண்டும்.

அதிரை தாருத் தவ்ஹீத் கந்தூரி, ஜாவியா, ஹத்தம், பாத்திஹா, மவ்லீது, தரீக்கா, விதவிதமான டான்ஸ் திக்ருகள் போன்ற அடிப்படை இணைவைப்பு எதிர்ப்பு எனும் வெற்றிடத்தையும் இன்னொரு முறை தீவிர விளக்கங்கள் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என வேண்டி நிறைவு செய்கின்றோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.