Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

செயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2015 | , , , ,


செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின்  ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).

அதனால், செயற்கை விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கில் கொண்டு பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன இது குறைந்தது 200 கி.மீ தூரத்தில் இருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தூரத்தில் பெரும்பாலான  செயற்கைக் கோள்களும் சுற்றி வருமாறு செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.

ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றது போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை மேலே தூக்கிக்கொண்டு போகும் எரிபொருள் தீர்ந்ததும் அது செயற்கை கோளில் இருந்து பிரிந்து கிழே விழுந்துவிடும். 

முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும்போது இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்து விடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டு விதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று திரவ ஏரிபொருள் மற்றொன்று திடஎரிபொருள். திரவ எரிபொருளில் ஹைட்ரஜன், கெரசின் (மண்ணெண்ணெய்) மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், (இடியப்ப மாவு அல்ல) அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு ஏற்றது.

எல்லாம் சரிங்க கோடி கோடியா செலவு பண்ணி எதுக்காக அதை மேலே சுத்த உடுறாங்கன்னு மேலே சுத்துரத கிழே பார்ப்போம்.

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதை மாற்றி இப்படியும் சொல்லலாம் பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில. பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில. இரண்டுக்கும் இடைப்பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில. செயற்கைக் கோள்கள் வட்ட வீதியிலும் நீள் வட்ட வீதியிலும் பலவாறாக சுற்றி வருகின்றன.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 35,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுவதால் ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றி வருவதால் ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தாற்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றி வரும்படி . இதன்  வேகத்தை அமைத்துக்கொள்வார்கள்  35,000கி.மீ. தொலைவில்   சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். (தமிழில் எப்படி  என்று தெரியவில்லை )

இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பது போல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் (சீரியல் பார்த்து கண்ணீர் வடிப்பவர்களுக்கு இது தெரியுமா) ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் இது போன்ற செயற்கை கோள்கள்தான்.

மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும்,(ரமணன் நினைவுக்கு வருவாரே, அவரைச் சுத்தலில் விடும் கோள்கள்) வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்று சுற்றி வர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப் படுகின்றன.

வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்துகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும். காரணம் எதிரி நாட்டு ராணுவ அசைவுகளை கண்காணிக்க இது போன்ற செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்களின் பட்டியலை கொஞ்சம் பார்த்துடுவோம்... ஏதும் விற்பனைக்கு வந்தால் மாடல் என்னவென்று தெரிந்து கொள்ள உதவும்.

07-Jun-1979 - பாஸ்கரா-1, எடை 442 கிலோ
31-May-1981 - ஆர்.எஸ். டி-1, எடை 38 கிலோ
20-Nov-1981 - பாஸ்கரா - 2, எடை 444 கிலோ
17-May-1983 - ஆர்.எஸ். டி-2 - எடை 41.5 கிலோ
17-Mar-1988 - ஐ.ஆர்.எஸ்.-1-எ. - எடை 975 கிலோ
13-Jul-1988 - ஸ்ரோஸ்-2 - எடை 150 கிலோ
20-Aug-1991 - ஐ.ஆர்.எஸ்.-1-பி. - எடை 975 கிலோ
20-Sep-1993 - ஐ.ஆர்.எஸ்.-1-இ. - எடை 846 கிலோ
15-Oct-1994 - ஐ.ஆர்.எஸ்.-பி-2. - எடை 804 கிலோ
28-Dec-1995 - ஐ.ஆர்.எஸ்.-1-சி. - எடை 1,250 கிலோ
21-Mar-1996 - ஐ.ஆர்.எஸ்.-பி-3. - எடை 920 கிலோ
27-Sep-1997 - ஐ.ஆர்.எஸ்.-1-டி. - எடை 1,250 கிலோ
26-May-1999 - ஐ.ஆர்.எஸ்.-பி-4 (ஒசென்சாட்-1). - எடை 1,050 கிலோ
22-Oct-2001 - டி.இ.எஸ்.(தி டெக்னாலஜி எக்ஸ்பைரிமெண்ட் சாட்டிலைட்) - எடை 1,108 கிலோ
15-Oct-2003 - ரிசோர்ஸ்சாட்-1. - எடை 1,360 கிலோ
05-May-2005 - கேர்டோசாட்-1. - எடை 1,560 கிலோ
10-Jan-2007 - கேர்டோசாட்-2. - எடை 650 கிலோ (64 ஜீபி கொள்ளலவு கொண்ட பதிவுப் பெட்டகம் உள்ளடக்கம்)
24-Apr-2008 - கேர்டோசாட்-2-எ. - எடை 690 கிலோ
28-Apr-2008 - ஐ.எம்.எஸ்.(இந்தியன் மினி சாட்டிலைட்)-1 - எடை 83 கிலோ
20-Apr-2009 - ரிஸாட்-2 (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்). - எடை ___ கிலோ
23-Sep-2009 - ஓசென்சாட்-2. - எடை 960 கிலோ
12-Apr-2010 - கேர்டோசாட்-2-பி. - எடை 694 கிலோ
20-Apr-2011 - ரிசோர்ஸ்சாட்-2. - எடை 1,206 கிலோ
12-Oct-2011 - மெகா டிரோபிக்குஸ் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 998 கிலோ
26-Apr-2012 - ரிஸாட்-1 (ரேடார் சாட்டிலைட்). - எடை 1,858 கிலோ
25-Feb-2013 - சாரல் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 407 கிலோ

1 July 2013 PSLV-C22 IRNSS-1A is the first satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS). It is one of the seven spacecraft constituting the IRNSS space segment

26 July 2013 Ariane-5 INSAT-3D is the meteorological Satellite with advanced weather monitoring payload.

30 August 2013 Ariane-5 GSAT-7 is the advanced multi-band communication satellite dedicated for military use. 

5 November 2013 PSLV-C25 The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan is India's first Mars orbiter.

5 January 2014 GSLV-D5  GSAT-14 is the twenty third geostationary communication satellite of India to augment the In-orbit capacity of Extended C and Ku-band transponders.

4 April 2014 PSLV-C24 IRNSS-1B is the second satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

10 November 2014 PSLV-C26 IRNSS-1C is the third satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

7 December 2014 Ariane-5 GSAT-16 is twenty fourth communication satellite of India configured to carry a total of 48 communication transponders.

28 March 2015 PSLV-C27 IRNSS-1D is the fourth satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

27 August 2015 GSLV-D6 GSAT-6 is a communication satellite. GSAT- 6 features an unfurlable antenna, largest on board any satellite. Launch of GSLV-D6 also marks the success of indigenously developed upper stage cryogenic engine.

28 September 2015 PSLV-C30 ASTROSAT is India’s first dedicated multi wavelength space Observatory.


இதுவரைக்கும் ஏவப்பட்டது அவ்வளவுதான் !

கோள்(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் !?

Sஹமீது

4 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹமீது,

இவ்வளவு சுருக்கமாக துணைக்கோள்கள் சம்பந்தமான (ஏறத்தாழ) எல்லா முக்கிய தொழில்நுட்பத்தையும் சொல்ல உங்காளால்தான் முடியும்.

அப்பவே இப்டி எழுதியிருந்தால் பத்துக்குப் பத்து வாங்கியிருக்கலாம்.

crown said...

செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).
----------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இப்படி செயற்கை கோளின் அளவுகோளை எல்லாரும் எளிதில் சொல்லிவிடமுடியாது!.இதில் சாகு(கோ)(ள்)ல் காக்கா வாத்தியார்.

crown said...

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.
--------------------------------------------------------------
செயற்கை கோளின் "டார்கெட்"டை வானில் கொண்டு நிறுத்தும் உந்துமேலூர்த்திதான் இந்த "ராக்கெட்"என்பதை அறியும் வண்ணம் எளிதாய் சொல்லியிருக்கிறார்கள்!பாராட்டு!

crown said...

ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
----------------------------------------------------------------------------
இப்படி யாராலும் பிட்"டு பிட்"டு வைக்கமுடியாது.பரிச்சையில் பிட் அடித்துதான் இதை எழுத முடியும்.!இப்படி வரிக்கு வரி குறிப்பிட்டு! எழுத ஆழ்ந்த அறிவியல் அறிவு தேவை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு