நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1 26

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 12, 2013 | , ,


இந்தியாவில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சாரங்கள் யாவும் துவேஷத்தை வளர்க்கும் வகையில் திட்டமிடப் பட்டு  முஸ்லிம்களுக்கும் சிறுபான் மையினருக்கும் எதிரான திசையில் திருப்பிவிடப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறது. இப்படி தேர்வு செய்யப் பட்டவர் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொலை செய்த பாதககரங்களுக்கு சொந்தக்காரர்.   தனது ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்குவதே அரசநீதி என்று அவர் நம்பும் நீதி நூல்களிலேயே கூறப்  பட்டிருக்க,  உயிரிழந்த தனது ஆளுகைக்குட்பட்ட குடிமக்களை காரில் அடிபட்ட குட்டி நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய உயர் குணம் படைத்தவர். இந்தியாவின் பணம் படைத்த பெரும் பணக்காரர்கள் நிறைந்த குஜராத் மாநிலத்தின் வட்டிக்கடை அதிபர்கள், தங்கக்கடை அதிபர்கள், சேட்டுகள் என்று அழைக்கப் படும் இந்தியப் பொருளாதாரத்தை தங்களது கை பொம்மலாட்டமாக்கி வித்தை காட்டும் உயர் சாதியினர் அடங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும் இந்தியாவில் இந்து தேசியத்தை அமுல்  படுத்தி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்க வேண்டுமென்று ஆர்ப்பரித்துத் திரியும்     ஆர் எஸ் எஸ்  , சங்க பரிவார் , முன்னாள் ஜனசங்க மற்றும் இந்நாள் பி ஜெ பி யினரும் கை கோர்த்து பெரும்         சதித்திட்டத்தின் அடிப்படையில் காய்களை விளம்பரங்கள் மூலமும் பார்ப்பன ஊடகங்கள் மூலமும் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். 

இந்த சமுதாய நரபலியை நிறைவேற்ற அவர்கள் கண்டுபிடித்த முன் அனுபவமுள்ள பூசாரிதான் நரேந்திர மோடியாகும். இந்த சதித்திட்டத்திற்கான காய்களை இவர்கள் நகர்த்தத் தொடங்கி வெகுநாட்கள் ஆகிவிட்டன. இவர்களே தீவிர வாதிகளின் செயல்களை செய்துவிட்டு பழியை சிறுபான்மையினர் மீது போடுவதில் இருந்து தன்  கட்சிக்காரனை தானே விளம்பரத்துக்காக கடத்திவிட்டு பிறகு விடுவிப்பதுவரை, தன் வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பழியை மற்றவர் மீது போட்டது வரை இவர்களது சதிச்செயல்கள் அம்பலமாகி இருக்கின்றன .  இவர்களின் சிறு தவணைத் திட்டங்கள் இவை என்றால் பெரும்பான்மை மக்களான இந்து சகோதரர்களின் மனதில் சிறுபான்மையினர் மீது வெறுப்பு உண்டாக்கும் வண்ணம் செயல்களை அமுல்  படுத்துவது பெருந்  தவணைத் திட்டமாகும். அதில் ஒன்றுதான் பல்வேறு அரசுத்துறைகளிலும் குறிப்பாகக் கல்வித் துறையில் தனது விஷ வேர்களைப் பாய்ச்சி, வளரும் இளம் தலைமுறையை துவேஷமும் வன்மமும் பிளவு மனப்  பான்மையும்  உள்ளவர்களாகவும் உருவாக்குவது என்கிற அவர்களின் திட்டமாகும்.   இவர்களின் இந்த விஷ வித்து விதைக்கப் பட்டு வளர்ந்திருப்பதற்குக்கு இவர்கள் பாய்ச்சி இருக்கிற நீர் வரலாற்றை திரிப்பதும் மறைப்பதுமாகும். 

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா என்ற தலைப்பிட்ட எனது நூலின் “ காலாவதியான மனுநீதி’ என்கிற  தலைப்பிட்ட எட்டாவது அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன். 

“மனு நீதிக்கு வக்காலத்து வாங்கும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் போன்ற அமைப்புகளால்  இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.

இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் மனு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன..

முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.

இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?

ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ்டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)

இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.”   ( பக்கம்  77 & 78  ) . 

இத்தகைய பள்ளிகளில்  மதச்சாயம் பூசப்பட்டு மறைத்து மாற்றி கற்பிக்கப் படும் வரலாற்றுச் செய்திகளை , அனைவரும்  அறிவதற்காகத் தருவதே இந்த வரலாற்றுப் பதிவுத்தொகுப்பின் நோக்கமாக அமையும். இப்படி ஒரு அநியாயம் நடைபெறுகிறது என்பதை இந்து மதச் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு உயர்சாதியினரின் கட்சி என்று கருதப் படும் கட்சி, தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை மாற்றி மறைத்து திரித்து சமுதாயத்தில் துவேஷத்தைப் பரப்ப செய்யும் முயற்சியை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். 

முதலாவதாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் மீது ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் ஆளுமைக்குட்பட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டு என்ன வென்றால் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து நாட்டின் செல்வங்களை     கொள்ளை யடித்தவர்களே முஸ்லிம்கள் என்பதும்  கொள்ளையும் அடித்துவிட்டு பிறகு இங்கேயே தங்கி, இந்த நாட்டில் சகல உரிமைகளையும் அரசியல் சட்டரீதியாக அனுபவிக்கிறார்கள் என்பதுமாகும். 

வெளிப்படையாகப் பார்க்கப் போனால் வரலாற்று நூல்கள் அப்படித்தான் திரித்து கூறுகின்றன. ஆனால் உண்மை வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை  அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து சுரண்டும் நோக்கத்தோடு குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். 

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் காட்டும்  இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே இந்த மண்ணின் மைந்தர்களை மடையர்களாக்க மனுநீதி எனும் சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள். 

One of the most interesting puzzles in archaeology, and one that hasn't been completely solved yet, concerns the story of the supposed Aryan invasion of the Indian subcontinent. The story goes like this: The Aryans were a tribe of Indo-European-speaking, horse-riding nomads living in the arid steppes of Eurasia. Sometime around 1700 BC, the Aryans invaded the ancient urban civilizations of the Indus Valley, and destroyed that culture. The Indus Valley Civilization were far more civilized than any horse-back nomad, having had a written language, farming capabilities, and led a truly urban existence. Some 1,200 years after the supposed invasion, the descendants of the Aryans, so they say, wrote the classic Indian literature called the Vedic manuscripts. (K.K.Hirst) இதுதான் உண்மை வரலாறு. ஆனால் நமது பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் வரலாற்று நூல்கள் இவற்றை பறைசாற்றுகின்றனவா? 

ஆக, இன்று குற்றம் சாட்டும் ஆரியர்கள் நிறைந்த ஆர் எஸ் எஸ் எஸ் மற்றும் அதன் அடிவருடிகள் அனைவரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இந்த நாட்டில் புகுந்தவர்களே என்பதே உண்மைச் சரித்திரம். இப்படி தன் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குறை சொல்ல இவர்களுக்கு அருகதை உண்டா? மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்கிற கதையைப் போல  பிராமண வரலாற்று ஆசிரியர்கள் அல்லது அவர்களது ஜால்ராக்கள்,  ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் வரும்போது “ஆரியர் வருகை” (Arrival of Aryas) என்று குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் வந்ததை  அதை  “இஸ்லாமியர் படை எடுப்பு” (Islamic Invasion) எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பாகுபாடான சரித்திர விபச்சாரத்தை சாடாத வரலாற்று ஆசிரியர்களோ நடுநிலை எழுத்தாளர்களோ இல்லை எனலாம்.  பாட நூல்களில் இப்படிப் பதிவு செய்வது  பிஞ்சு மனங்களில்  வகுப்பு வாதம் எனும்  நஞ்சைத் தடவும் நயவஞ்சகம் இல்லையா?

ஆரியர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான்.  சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். ஆனால் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் முஸ்லிம்களை மட்டும்  மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது  நியாயமற்ற விவாதம்ஆகும். 

நாடுகளைத்  தேடிப்  புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா  வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலகம் முழுதும்  நீளும். ஆனால் முஸ்லிம்கள்  கொள்ளையடிக்க வந்தார்கள் என்று பொருள்பட வரலாற்றில் பதிந்து வைத்திருப்பது வரலாற்றுக்கே செய்யும் அடிப்படை துரோகம். இது பற்றி ஆதாரங்களுடன் விவாதிக்கலாம். 

மேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள்   இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து சமுதாயக் கொடுமைகளை சாதி ஒடுக்குமுறைகளை நீக்கிக் கொள்வதற்காக   மதம் மாறியவர்கள்தான். இந்தக் காரணத்துக்காகவே இவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கவேண்டும் . மீண்டும் இந்து தேசிய கலாச்சாரத்தைப் பின்பற்றவேண்டும் அல்லது அவர்களைக்  கொன்று ஒழிக்க வேண்டுமென்று ஒரு கூட்டம் காவி உடைகட்டி அதற்காக ஒரு தளபதியை நியமித்துப்  பொய்யும் புரட்டும் சொல்லும் காவிக்கொடி பறக்கும் ஊடகங்களின் தேரில் ஏறி புறப்பட்டிருப்பது நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையே உருவாக்கும். அன்று அயோத்தியை நோக்கிப்  போன அத்வானியின் தேர் கணக்கற்ற உயிர்களைப் பலி கொண்டது. இத்தகைய வேண்டத்தகாத நிகழ்வுகளை நாடெங்கும் மீண்டும் இன்னும் தீவிரமாக அரங்கேற்றவே பாம்புக்குப் பரிவட்டம்  கட்ட அரைக்கால் டவுசர்கள் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றன.    

உண்மையான வரலாற்றின் பக்கங்களை ஆராயப் போனால் ,  முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தது வணிகத்துக்காக. வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள். அதே நேரம் பல இஸ்லாமிய மத போதகர்களும் இங்கு வர ஆரம்பித்தனர் . அவர்களின் நாணயமான நடத்தை, ஒழுக்கம், போதனை மற்றும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டவர்கள் பெருகியதால்  இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் இந்த அழைப்புப் பணி வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர். இந்த முறையில்தான் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது.  இதனால்தான் இந்திய முஸ்லிம்களை “இஸ்லாமானவர்கள்” என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமிய வரலாறு இப்படித்தான் தொடங்குகிறது.  

பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.  

இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வரலாற்றுக் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். 

பொருளாதார ரீதியில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சி அப்படியொன்றும் பொறாமைப் படத்தக்க அளவில் இல்லை என்பது சச்சார் கமிட்டியின் அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களும் இதர சிறுபான்மையினரும் மதசார்பற்ற சக்திகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களை அழித்து ஒழிக்க அவதூறுகளை அரங்கேற்றத் திட்டமிட்டுத்துவங்கி இருக்கிறது காவிக்கூட்டம். காரணம் சிறுபான்மையோரின் ஆதரவு இல்லாமல் எந்தக் கேடியையும் எண்ணூறு குட்டிக் கரணம் அடித்தாலும் பதவியில் அமரவைக்க முடியாது. ஆகவேதான்  காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிக்க பெரும்பான்மை மக்களை உணர்வு பூர்வமாக தூண்டும் வேலைகளுக்கு தூபம் போட்டுக் கொண்டு இருக்கிறது காவிக் கூட்டம். 

மேலும் இவர்கள் ஆண்டாண்டுகாலமாக செய்து வந்த பகீரத முயற்சிகள் யாவும் வெற்றிபெறவில்லை. மக்கள் விழித்துக் கொண்டனர்.
  • முதலாவதாக பிரம்மா             படைத்தவற்றில் நாங்கள்தான் உயர் படைப்பு என்று பீத்திக் கொண்டிருந்த இவர்களின் ஆட்டங்களை ஆடவிடாமல்  தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் இவர்களின் இடுப்பை ஒடித்துப் போட்டுவிட்டனர். 
  • நாட்டில் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டை அரசியல் சட்டமாக்கிய தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்து மற்றவர்களை பயமுறுத்திப் பார்த்தார்கள்.  பலிக்கவில்லை. 
  • தேவதாசி முறைகள் என்று ஒரு ரீல் ஓட்டிப் பார்த்தார்கள். அதுவும் தடை செய்யப் பட்டுவிட்டது. 
  • உடன்கட்டை ஏற வேண்டும் என்று ஒரு படுபாதகத்தை அரங்கேற்றப் பார்த்தார்கள். அதுவும் தனது மூச்சை விட்டது.
  • குலக்கல்வி முறையைக் கொண்டுவந்து  அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டுமென்று ஆட்டம் காட்டிப் பார்த்தார்கள் அண்ணாவும் காமராசரும் அதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள். 
  • மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதனால் இதைக் கொண்டுவந்தவரின்  அரசியல் வாழ்வே அஸ்தமிக்கும் நிலைக்குத்தள்ளப் பட்டு தோற்கடிக்கப் பட்டதால் வெற்றிபெற்ற கருணாநிதி அந்த சட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார்.
  • புனித ஹஜ் மாதத்தின் குர்பானியை  தடை செய்ய கோயில்களில் ஆடு மாடுகள் பலி கொடுக்கக் கூடாது என்று ஒரு தடைச் கட்டம் கொண்டுவந்தார்கள் அந்த சட்டம் கொண்டுவந்தவர்களையே  குர்பானி கேட்டது.  
  • முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் கற்பிக்க பல இடங்களில் இவர்களே வெடிகுண்டுகளை வைத்து இழி பெயர் சூட்ட  சதி செய்தார்கள். சட்டம் இவை அனைத்தையும் முறியடித்து முகத்திரையை கிழித்தது. 
வேறு என்னதான் செய்வது என்றுதான் இப்போது பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை மத ரீதியாகத் தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பெற, வரலாற்றை திரித்துக் கூறி காலம் காலமாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவை மத ரீதியாக துண்டாடி அமைதியைக் குலைக்க திட்டமிட்டு  நரபலி நாயகனை முன்னிறுத்துகிறார்கள். 

வரலாற்று ரீதியாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் வரலாற்றின் ஆதாரங்களோடு இந்தத்தொடரில் பதில் தருவோம்.  இவர்களது முதலாவது குறியும் முக்கியக் குறியும் அவுரங்கசீப் மீதாகும். பல வரலாற்றுக் களங்கங்களை இவர்கள் மன்னர் அவுரங்கசீப் மீது தேவைக்கும் அதிகமாகவே பூசிவைத்து இருக்கிறார்கள். 

அப்படி என்ன செய்தார் அவுரங்கசீப்? அதைத்தான் அடுத்துப் பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். 
தொடரும்
இப்ராஹீம் அன்சாரி
பதிப்புரிமை : அதிரைநிருபர் பதிப்பகம்

26 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும
ஆஹா... என்னவொரு இன்ப அதிர்ச்சி!!!

வார நாட்களில் மீண்டும் சனிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றனவா!!!

புதிய தொடருக்காக வாழ்த்துகளும் துஆவும்.

படித்துவிட்டு மீண்டும் வந்து கருத்திடுவோம்ல.

Aboobakkar, Can. சொன்னது…

நமது சமுதாயத்தின் நியானமான,உண்மையான வரலாறுகள் உலக மக்களை சென்றடைய இந்த தொடர் நிச்சயம் பெரும் பங்கை ஆற்றும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை தன்னலமிக்க அரசியல் வாதிகளின் மத்தியில் உங்களின் இந்த தன்னலமற்ற சேவை வாழ்க வளர்க .....மறைக்க பட்ட வரலாறுகளை நமது சமுதாயமே மறந்துவிடும் அவலமும் இருந்துவரும் தற்போதைய நமது மக்களுக்கும் இது போன்ற உண்மை வரலாறுகள் அவ்வப்போது நினைவு கூறப்படவேண்டும் .

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு வரி விடாமல் படித்து விட்டேன் காக்கா. என்னுடன் பணியாற்றும் இந்து நண்பர்கட்கும் குறிப்பாக என் மேலாளருக்கும் அனுப்பி விட்டேன். எனக்குள் ஒரு வியப்பு மேலோங்கி நிற்கின்றது இப்படியாக:

1) பொருளாதாரத்தில் மட்டும் தான் மேதை என்றல்லவா நினத்தேன்; வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.

2) தாங்கள் கவியார்வம் எங்களுக்குப் பின்னூட்டங்களில் அறிவிப்பதை வைத்துப் பார்த்தால், தமிழ் மொழிப் புலமையும் உண்டு என்றும் அறிகிறேன்.

3) படிக்கும் வாசகர்களைக் கட்டிப் போட்டுக் கண்களும் உள்ளமும் ஒன்றி- உன்னிப்பாகப் படிக்க வைக்கும் ஓர் எழுத்தாற்றலும் காண்கிறேன்.

ஆக, அதிரை நிருபர் என்னும் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே ஒரு பல்கலைக் கழகம் ஆகி விட்டீர்கள்.

நிற்க. தங்களிடம் ஓர் அவசியமான- அவசரமான வேண்டுகோள்:

அண்மையில் தொடங்கப்பட்ட “தி இந்து” தமிழ் நாளிதழில் “சிந்தனைக் களம்- சிறப்புக் கட்டுரைகள்” என்னும் பகுதிக்கு இக்கட்டுரையை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதிகமாகச் சகோதரச் சமய மக்கள்- அறிவுடையோர்ப் படிக்கும் தளமாகக் காண்கிறேன். என்னால் ஆங்குக் கட்டுரை எழுதியிட வேண்டும் என்ற பேரவாவுடன் இருந்தாலும், ஏனோ, எனக்குக் கவிதையைத் தாண்டி, கட்டுரை வடிவத்தில் எழுத மனம் இல்லை; அதனால் நல்ல கட்டுரைகட்குப் பின்னூட்டங்கள் மட்டுமே ஆங்கு இடுகின்றேன். தங்களின் கட்டுரை உறுதியாக மிகப் பெரும் வரவேற்பையும் , மாற்றத்தையும் பெறும் என்பதும் என் கணிப்பாகும், காக்கா.
அன்பு நெறியாளர் அவர்களின் அனுமதி பெற்று உடன் ஆவனச் செய்க.
Please visit this link: http://tamil.thehindu.com/opinion/

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

அன்பு நெறியாளர் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

நம் மதிப்பிற்குரிய இப்றாஹிம் அன்சாரிக் காக்கா அவர்களின் இத்தொடரை என் முகநூலின் குறிப்புகள் பகுதியில் எடுத்துப் பதிய, அனுமதி கோருகிறேன். என் முகநூல் தொடர்பில் சுமார் 5000 நண்பர்கள் உளர்; அவர்களின் அதிகமானோர்ச் சகோதரச் சமயத்தைச் சார்ந்தவர்களும், அறிவிற் சிறந்தவர்களுமாவார்கள்; அவர்களுக்கு இக்கட்டுரையைப் படிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த விழைகிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய காக்கா,

இவிங்க, நான் ஏழாம்ப்பு படிக்கிற வயசிலேயே "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ" என்று ஃபிகர்களோட கூந்தல் வாசம்பற்றி ஆராய்ச்சியைச் சொல்லித்தந்து சின்னப் பசங்களையெல்லாம் வழிகெடுக்கும் வரலாற்றைப் போதித்தவர்கள்.

அந்த வயதிலேயே எங்களுக்கு குர் ஆன் ஹதீஸ்களில் உள்ள வாழ்க்கை நெறிகளை வரலாற்றோடு சொல்லித் தந்திருந்தால் ஒழுக்க நெறியில் மேம்பட்ட சமுதாயமாக இந்தியக் குடிமக்கள் ஆகிவிட்டிருப்போமே!

அடுத்தவன் பொண்டாட்டியை லாவிக்கிட்டுப்போன ராவண, தன் பெண்டாட்டியைத் தீக்குளித்துக் கற்பை நிரூபிக்கச் சொன்ன ராம வரலாற்றைவிட மோசமானது எதுவுமே இருக்க முடியாது.

படிக்க வேண்டியதை மறைத்து படிக்கக் கூடாததை மனப்பாடம் செய்ய வைத்து எங்களுக்குச் சதி செய்த பாடத்திட்டத்தையும் ஒரு பிடி பிடிங்க காக்கா.

திரும்பியே பார்க்க வேண்டாம்
உங்கள் பின்னால்
நாங்கள் இருக்க
தொடருட்டும் தங்களின்
நிமிர்த்திய நெஞ்சும்
நேர்கொண்ட பார்வையும்
நிசப்பீடு நடையும்!

உடல்நலம் பேணிக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சாயம் போக்கி உள்ளதை சொல்லும் நிகழ்வுகள்!

ஆக இவர்கள் நேர்மையாக அரசியல் செய்ய தகுதியற்று குறுக்கு வழியில் வளர திட்டமிட்டு அவ்வப்போது மாட்டிக் கொள்கிறார்கள்.

இட்டுக்கட்டி இடைச் சொருகிய வரலாற்றை இடுகாட்டில் எரியூட்டி இன்று சொன்ன உங்கள் உண்மை நிகழ்வுகளை வரலாற்றுப் படுத்த வேண்டும்.

நீங்கள் சொன்ன உண்மை நீதி மட்டுமே வெல்ல அல்லாஹ் நாடுவானாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய கவியன்பன்,

தங்களின் ஆர்வம் பாராட்டுதற்குரியது.

காக்கா அவர்களின் வீரிய சிந்தனைகளும் அதைச் சற்றேனும் குறைக்காத ஆதாரபூர்வமான தீப்பொறிபறக்கும் எழுத்தும் சர்ச்சையான பேசுபொருளைப்பற்றி என்பதால், புத்தக வடிவம் பெறும்வரை யாவரும் இங்கு வந்து படிப்பதே சாலச் சிறந்தது.

அப்போதுதான் எங்களால் ஓங்கிக் குரல் எழுப்ப முடியும். காக்காவின் உடல்நலம் கருதி அவர்களை எங்கும் தனியாக விட நாங்கள் தயாராக இல்லை.

பொறுக்கவும்; அதுவரை எங்கும் தொடுப்புகளை மட்டும் கொடுக்கவும்.

M.B.A.அஹமது சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும
பொருளாதாரத்தில் மட்டும் தான் மேதை என்றல்லவா நினத்தேன்; வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.

M.B.A.அஹமது சொன்னது…

ஆயிரம்தான் சொல்வான் பாப்பான்
உண்ணை அறவனைத்திட மறுப்பான்.....
தீட்டு தீட்டு னு திட்டுவான்
தீ மிதிக்கமட்டும் உண்ணைதான் அனுப்புவான்....
உண் பணத்திற்க்கென தனி உண்டியல் வைக்கமாட்டான்
உண்விரல் அவன்மேல் பட்டால் மூன்றுமுறை குளிப்பான்....
கருவரையில் நீ நுழைய தடை என்பான்
அவன்வீட்டு கழிவரைய கூட தற மறுப்பான்.....
வந்தபாதை மறந்த வந்தேறி நாய்கள்
உண்ணை கீழானவன் என்றும் தீன்டதகாதவன் என்றும் இழிவு படுத்துவான்......
காக்கைக்கு தன்கரம்பட உணவளிப்பான்
உண் முகத்தில் முழித்தாலே காரி��யம் விலங்காதென
கொக்கரிப்பான்.....

தான்மட்டும் தான் வேதங்களை ஓதேவண்டும் என்பான்
நீ வேதம்படிக்க அனுஅளவும் அனுமதி மறுப்பான்.....

எனவேதான் சகோதரா நீ எப்படி இருக்கவேண்டும் என்ற முடிவை அடுத்தவனிடம் கொடுக்காதே...
உணக்கான முடிவு உண்ணிடமே உள்ளது
முதலில் நீ .
ஹிந்து வேதங்கள்
பைபிள்
அல் குர்ஆன்
இந்த மூன்று வேதங்களையும் நடுநிலையுடன் ஆராய்ந்துபார்
உண்மையை நீ தான் தேர்ந்தெடக்கவேண்டும்
குறிப்பு இந்த மூன்று நூல்களில்
அல் குர்ஆன் விடும் சவாலை நீஏற்றாலே போதும்
உண்மை எதுவென நிச்சயம் உணக்கு புரியும்.....
மேலே உள்ள புகைப்படம்
தீன்டாமை இல்லா முஹம்மதுவின் மார்க்கத்தில் லட்சக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று..

نتائج الاعداية بسوريا சொன்னது…

இஸ்லாமிய பொருளாதாரத்தை சிந்தித்த தாங்கள்,

தங்கள் கையில் தற்பொழுது எடுத்திருக்கும் இந்த வரலாற்று உண்மைகள்
துவேஷம் பிடித்த தரமற்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட உண்மை வரலாறுகளை மறைத்த கயவர்களுக்கு சொல் சாட்டையாலும், உண்மையின் வர்லாற்றுப்பதிவாலும் பதிலடி கொடுக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

உங்களின் இந்த எழுத்து ஆக்கம் உண்மை வரலாற்றை மறைத்த
இந்திய வரலாற்று பித்தலாட்ட ஆசிரியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்.
இன்ஷா அல்லாஹ்

அபு ஆசிப்.

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி கவியன்பன் அவர்களுக்கு,

தங்களின் அன்புக்கு முதலில் நான் நன்றி செலுத்துகிறேன். நானும் ஹிந்து பதிப்பை தினமும் படித்து வருகிறேன் ( தினமணியிலிருந்து உஜாலாவுக்கு மாறிவிட்டேன்) .நேற்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருந்த கல்வி சீர்திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் போல சிறப்பான கட்டுரைகள் அதில் வெளியிடப் படுகின்றன.

ஆனாலும் தம்பி சபீர் அவர்கள் குறிப்பிட நினைத்து இருப்பதைப்போல் நாம் முதலில் நமக்குள் பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம் என்று கருதுகிறேன். மீண்டும் தங்களின் அன்புக்கு நன்றி.

இன்ஷா அல்லாஹ் .

نتائج الاعداية بسوريا சொன்னது…

பாப்பானையும், பாம்பையும் ஒரு சேரக்கண்டால், முதலில் பாப்பானை அடி
பிறகு பாம்பை அடி - பெரியார்.

பாம்பைவிடக்கொடியவன் பாப்பான்.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا சொன்னது…

மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கத்தால் பரிந்துரை செய்யப்படும் ஒரு
கயவன், அமெரிக்க அரசால், விசா மறுக்கப்பட்ட தலைகுனிவுக்கு சொந்தாக்காரன், இவனுக்கெல்லாம் பிரதமர் பதவி ஒரு கேடா ?

நாடு எங்கே போய்க்கொண்டுருக்கின்றது?

ZAKIR HUSSAIN சொன்னது…

அருமையான தொடர் இது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு முதன் முதலாக உண்மையை உலகுக்கு சொல்ல எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி.

இந்த தொடரில் மற்ற சமுதாயத்தினரின் " சிலர்" எப்படி தனக்கு சாதகமாக வரலாற்றை மாற்றி எழுதினர் என்று ஆராயப்படும். அதற்காக , அந்த சிலருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையே நாம் தண்டித்து எழுதுவது கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்கள் அவதானிக்கவும்.

பேப்பர், ஓலை , புறா , தபால், தந்தி, டெலெக்ஸ், டெலிபோன், இன்டர்னெட் , இமெயில், ஃபேஸ் புக் , ட்விட்டர் , வாட்ஸப்.....இத்தனை இருந்தும் எப்படி நாம் இஸ்லாத்தை அவர்களிடம் போய் சேர்க்காமல் வைத்துக்கொண்டோம் என்று நினைத்துப்பார்த்தாலே அவர்கள் மீது நமக்கு கோபம் வராது.

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி கவியன்பன் அவர்கள் சொன்னது

//வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.//

நான் மதிப்பிற்குரிய பேராசிரியர் டி ஜெயராஜன் அவர்களின் மாணவன். அவரது வழிகாட்டலில் புகுமுக வகுப்பில் வரலாற்றுப் பாடத்தில் D Grade ( Distinction ) வாங்க அல்லாஹ் அருளினான். தகவலுக்காகவே சொல்கிறேன். காமர்ஸ் படித்தால் பேங்கில் வேலை கிடைக்கும் என்று சொல்லி என் மீது திணிக்கப்பட்டதே காமர்ஸ் டிகிரி. அதுவே பின்னர் பொருளாதாரப் பாடத்தின் மீது ஒரு பற்றை ஊட்டியது.

உண்மையில் சொல்லப் போனால் இந்தப் பேசுபொருள் தொடர் எனது நீண்ட நாள் கனவு. இதுபற்றி தம்பி தாஜுதீன் அவர்களிடம் பலமுறை விவாதித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதாரத் தொடரும் சொல்லப்பட வேண்டியதாக இருந்ததால் அதை எழுதி முடித்தேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்ததொடர் இப்போது அவசியம் என்று தோன்றியதால் குறிப்புகளை தூசுதட்டி எழுதத் தொடங்கி இருக்கிறேன்.

இன்றைய அரசியல் ஒப்பீடுகளுடன் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும் என நம்புகிறேன். தவறுகளை சுட்டிக் காட்டும்படி அனைவரையும் கோருகிறேன்.

அனைவரும் துஆச் செய்யும்படிக் கோருகிறேன்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

\\பொறுக்கவும்; அதுவரை எங்கும் தொடுப்புகளை மட்டும் கொடுக்கவும்.\\

அன்பின் கவிவேந்தரே! அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களின் அனுமதி பெற்று இதோ இந்தத் தொடுப்பினை மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், (இன்று சனிக்கிழமை எனக்கு விடுப்பு நாளாய் அமைந்ததும் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்து விட்டது; இ.அ. காக்கா அவர்களின் ஆக்கங்கள் சனிக்கிழைகளில் வருதல் எனக்கும் இவ்வண்னம் இணைப்புகளை இந்நாளில் (ஓய்வு நேரத்தில்) என் தொடர்புகளுக்கெல்லாம் அனுப்பி வைப்பதே என் முதற்கடன் என்று ஆக்கிக் கொண்டேன்.

ஆர்வத்தின் கரணீயமாக இ.அ..காக்கா அவர்களின் ஆக்கங்கள், நூலுருவில் வந்து வெளியாவதற்கு முன்னர் வேறு தளங்களில் வெளியிடுதல் கூடாது என்ற நெறியை மறந்து விட்டேன், கவிவேந்தே! மன்னிப்பீராக!

ஆயினும், ஏற்கனவே நூலுருவில் வந்து வெளியான “மனுநீதி மனிதனுக்கு நீதியா?” என்ற ஆக்கத்திலிருந்து பகுதிப் பகுதியாகத் தொடர்ந்து மேற்சொன்ன “தி இந்து” நாளிதழின் “சிந்தனைக் களம்” பகுதிக்கு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இ.அ..காக்கா அவர்கள் அனுப்பலாம் எனபதும் தமியேனின் தாழ்மையானக் கருத்தாகும்.

1)இ.அ. காக்கா அவர்களை இன்ஷா அல்லாஹ் பைத்துல் மால் நடத்தும் திருக்குர் ஆன் மாநாட்டில் சொற்பொழிவு நடத்த வைக்க வேண்டும்.

2) இ.அ.காக்கா அவர்கள் பகுதி நேரப் பேராசிரியராக (பொருளாதாரத்துறையில்) காதிர் முஹைதீன் கல்லூரியில் அல்லது மேனிலைப் பள்ளியில் பாடம் நடத்த வேண்டும்., இன்ஷா அல்லாஹ்.

3) இ.அ.காக்கா அவர்களின் ஆக்கங்கள் யாவும் நூலுருவில் அச்சு வாகனம் ஏறி அகிலமெலாம் வலம் வர வேண்டும்., இன்ஷா அல்லாஹ். (இதில் ஒரு நூல் வெளியாகி விட்டது; அதனைத் தமியேனும் அமீரகத்தில் உள்ள என் தொடர்புகளிடம் கொடுத்துள்ளேன்)

அவர்களின் ஆயுள் நீட்டிப்புடன், நோயற்ற வாழ்வும், குறைவற்ற வளமும் பெற்று எம்மை வழி நடத்தும் அமீராக இருக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ் (ஆமீன்)

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

வ அலைக்கும் ஸ்லாம்,

அன்பின் நெறியாளர் அவர்களின் அன்பான் ஆணைக்கிணங்கி யான் அவ்வண்ணமே முகநூலில் மட்டும் இவ்விணைப்பை இவ்வாறு

”மதச்சாயம் பூசப்பட்ட வரலாறுகள்” அறிந்து கொள்ள இவ்விணைப்பைச் சொடுக்கவும்

http://adirainirubar.blogspot.ae/2013/10/1.html

என்று என் முகநூலின் முகப்பில் இடுகிறேன். அதனைப் பகிர்ந்ததும் உறுதியாக என் தொடர்பில் உள்ளவர்களின் கண்களில் படும்; அதனால் உண்மை உணரப்படும்., இன்ஷா அல்லாஹ்.

Shameed சொன்னது…

இந்த காலகட்டத்திற்கு இது போன்ற தொடர் மிக அவசியம்

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

A bold and brave endeavour in peeling off the misconceptions about muslims of India.

Since its going to be justified by authentic historical evidences, the intellectuals and neutral personalities would agree the facts and come to know realities. InshaAllah.

Keep it up.

Jazakkallah Khairan

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

தாஜுதீன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான இப்ராஹீம் அன்சாரி காக்கா,

அவசியமான தகவல் தரும் தொடர்... அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து மேலும் இந்த சமுதாய விழிப்புணர்வில் உங்களின் பாங்களிப்பை தொடர் வேண்டும். து ஆ செய்கிறேன் காக்கா.

mohamedali jinnah சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும
அருமை.
“கவியன்பன்” கலாம் அவர்கள் கொடுத்துள்ள விளக்கமான் கருத்து பொருத்தமானது

Abdul Khadir Khadir சொன்னது…

நன்றாக குலோரெக்ஸ் போட்டு அழுக்குப்படிந்த இந்திய வரலாற்றை
துவைத்து ஒரு தூய வரலாற்றை தரும் முயற்சி.
.
இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்கு பலன் கிடைக்கும் என்று நம்புவோமாக !

அபு ஆசிப்.

Ebrahim Ansari சொன்னது…

தம்பி கவிஞர் சபீர் அவர்கள் சொன்னது.

//அடுத்தவன் பொண்டாட்டியை லாவிக்கிட்டுப்போன ராவண, தன் பெண்டாட்டியைத் தீக்குளித்துக் கற்பை நிரூபிக்கச் சொன்ன ராம வரலாற்றைவிட மோசமானது எதுவுமே இருக்க முடியாது.//

இந்தக் கதையால் ஏற்பட்ட விளைவு சேது சமுத்திரத்திட்டம் மரணப் படுக்கையில். இதோ இராமநாத புறம மாவட்ட மண்ணின் மைந்தர் ஒருவர் இப்படிப் புலம்புகிறார்.
===================
உயிர் வாழப் போராடும் கருவாடு .
=============================
பேராசிரியர் முனைவர் மு. முனீஸ்வர மூர்த்தி.

என்ன வளம் இருக்கிறது
இராம்நாட்டில்
ஏன்வாழவேண்டும் இந்தக்
கருவக்காட்டில்?

ஆசியக் கண்டமே
அண்ணாந்து பார்க்கும்
பாம்பன் பாலம் .....

சீதேவி
சிதைமணலால் சேவித்த
சுதை லிங்கம்.....

பருத்திக்குப் பரமக்குடி...
மிளகாய்ச் சந்தைக்கும்
பெரிய கண்மாய்க்கும்
பெயர்போன இராசசிங்கமங்கலம்...

தஞ்சைக்கு அடுத்ததான
தமிழகத்து நெற்களஞ்சியம்
திருவாடானை...

வள்ளல் சீதக்காதி
வாழும் வரம்பெற்ற
கீழக்கரை...

தாயுமானவரை
அமைதியாய் அடைக்கலம் பெற்ற
கேணிக்கரை....

சேதுபதிகள் பேருசொல்லப்
போதுமான அரண்மனை...
மதம் பரப்ப எண்ணி
மண்ணில்
செந்நீர் சிந்தியருளும்
ஆனந்தர்...

பைத்திய உலகில்
வாழத் தெரியாதோர்க்கு
அடைக்கலம் வழங்கும்
அன்பு ஏர்வாடி ....

அப்பப்பா....
எம்மண்ணில் தான்
எத்தனை எத்தனை
புனிதங்கள்
எத்தனை எத்தனை
புனிதர்கள்!

அவசரப்பட்டு
ஆனந்தப் படாதீர்
இராமனாதபுரத்தாரே....!

“தேன்” னு
“ தாள்” ல எழுதி
நக்குனா இனிக்காது

வாய்மணக்க வரலாறு பேசினா
காது குளிரும்
வயிறு நிரம்பாது!

அடடே....
வாங்க இராமநாதரே!
உம்
பொண்டாட்டியக் காப்பாத்த
எங்க ஊருக்
கடல் வழிதான் கிடைச்சதா?

கட்டியதுதான் கட்டினாய்
ஒரு பஸ்சு
போற மாதிரி கட்டக்கூடாதா?
‘ நான் எந்தப்
பாலம் கட்டினேன்’ னு
நடந்த (க)தை நீர்
சொன்னாலும்
உன்னை நம்ப
உச்ச நீதிமன்றமும்
தயாரில்லை.

வாய்க்காத் தகராறுக்கு
வயலை வித்தாவது
வழக்கு நடத்தும்
அருமை மன்னரும்
நம்பிக்கையை
நம்பி, கையை
விரித்துவிட்டார் ...
அன்னாடங்காய்ச்சி
எதிர்த்தரப்பு என் செய்யும்?

எது எப்படியோ
ராமரே....
தேய்ஞ்ச சீமைய
தெளுச்சியாக்க
உருப்படியா வந்த
ஒரு திட்டமும்
உம்பெயரால் கோவிந்தா....
கடைசி வரைக்கும்
என்சனங்க கருவாடுதானா?

“ எல்லாம் அவன் செயல்
இதில்
என் சித்தாந்தம் எதுவுமில்லை
மானிடா....

இந்தப்
பாண்டிய நாட்டுக்கு வந்த
சோதனையைப் பார்த்தீரா....
வழியொன்று சொல்லிச் செல்லும்
வடநாட்டாரே ....!

எமக்குத் தெரியாது
எதுவும் .... இருந்தும்
உமக்கொரு உபாயம்
உரைக்கிறேன் –
எம் பெயர்சொல்லி
‘ சோழனாட்டார் ‘ பாடிய
சுந்தர காவியத்தில்
இதற்கான வழி
இருக்குமே....!

என்னன்னு?
“ விதி மகனே விதி” .
- பேராசிரியர் முனைவர் மு. முனீஸ்வர மூர்த்தி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நல்லதொரு இந்தியவை வரைந்து பார்க்க ஆசை... ஆனால் சாயம் பூசி சாக்கடையாக்கி வைத்திருக்காய்ங்களே !

இருந்தாலும் இரும்புத்திரை போர்த்தியிருக்கும் கருவை எடுத்து கரும்புச் சுவைகூட்டி விரும்பி வாசிக்க காத்திருக்கும் எங்களுக்கு எடுத்துரைக்க வந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம் !

இதென்ன புதுப் பழக்கம்னு கேட்கப்படாது....!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.அறிஞர் காக்காவுக்கு பேராசியர்களுக்குரிய எல்லாத்தகுதியும் இருக்கு. எல்லாவற்றிலும் திறமை பளிச்சிடுகிறது. ஆனால் இவர்கள் எல்லாத்துறையிலும் பேராசிரியராக பணியாற்றினால் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.காக்கா இன்னும் ,இன்னும் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!

saint satan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+