Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2013 | , ,

அதிரை தாருத் தவ்ஹீத் - (ADT) என்ற பெயர் அதிரை மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே !. அதன் தூய பரிணாமத்தின் சுவடுகளை அறிந்திருக்கும் வாய்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அறியும் வண்ணமாக "தூய பரிணாமத்தின் அறிமுகம்" என்ற மடக்கோலையை வெளியிட்டிருக்கிறார்கள்

அதிரை தாருத் தவ்ஹீத் பரந்து விரிந்து நிமிர்ந்த நடைபோடும் தூய பரிணாமத்தின் அறிமுகம் இதோ:-







அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்.

விளக்கமான அறிமுகம். அறிமுகம் என்பதைவிட மீளெழுச்சி என்பதே பொருந்தும். காரணம்، அறிமுகம் என்னும் வார்த்தைக்குள் தெரிந்தோ தெரியாமலோ "இது புதுசு" என்னும் அர்த்தம் புதைந்து கிடக்கிறது. ஆனால், நடத்திக்காட்டியிருக்கும் காரியங்களின் பட்டியலோ பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கின்றது.

அத்துடன், நிறுவனர், நடத்துபவர்கள் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் இச்சேவையின் நம்பகத் தன்மை கூடும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

எச்செயலும், அது நற்செயலே ஆனாலும் செய்பவர் பொறுத்தே செயலில் ஈடுபாடு காட்டும் என்னைப்போன்றோர் ஏராளம் இருப்பர் என்பது என் துணிபு.

ஏ டி ட்டியின் நிய்யத்துக்காகவும் செயற்திட்டங்களுக்காகவும் என் துஆவும் ஆதரவிற்கான ஒப்பமும்.

Unknown said...

A.D.T ( அதிரை தாருத் தௌஹீத்) என்னும் தூய குழந்தை பிறந்து இன்றோடு 34 வருடங்கள் கடந்திருந்தாலும் இன்னும் செயலில் இளமையாக ஒரு துடிப்புள்ள இயக்கமாக அனைத்து கோணத்திலும் ஓரிறைக்கொள்கையை ஒங்கிச்சொல்லும் ஒரு பகுத்தறிவு பாட சாலையாக இயங்கி வந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவு.

இதன் நிர்வாகிகள் இன்றளவும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதில் அவ்வளவு அக்கறை செலுத்தாதது அவர்களின் பெருந்தன்மையையே காட்டுகின்றது. இது முற்றிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செயல்படுவதால்.

இந்த அறிமுக பதிவை தொடர்ந்து இன்றுள்ள மார்க்கம் அறியா இளம் சிறார்களுக்கு இந்த இயக்கம் மார்க்கத்திற்காக செய்த நல்ல பல செயல் திட்டங்களை இங்கு பதிந்து வந்தால் அனைவருக்கும் இதன் தூய நோக்கம் நலம் பயக்கும் என நினைக்கின்றேன்.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

திட்டமிட்ட செயலகம் விரைவில் உருவாகி அதன் நல்ல நிய்யத்தும் நிறைவேறிட அல்லாஹ் நாடிடுவானாக!

ZAKIR HUSSAIN said...

மிகவும் பூர்த்தியான ஒரு மார்க்கத்தில் பல்வேறு இடைச்செருகல்களை களையெடுத்து அதன் பூர்வீகத்தன்மையிலேயே மக்களுக்கு எடுத்துச்செல்லும் உங்களின் [ அதிரை தாருத்தவ்ஹீத் ] முயற்சி இறைவனின் கருணை உங்களுக்கு கிடைக்க வழி வகுக்கும். [ஆமீன்...யாரப்பல் ஆலமீன் ]

Ebrahim Ansari said...

அதிரையில் அண்மையில் நடைபெற்ற ஈத் மிலன் மத நல்லிணக்க நிகழ்ச்சியைப் பற்றி சில நண்பர்கள் கேட்டபோது இதை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பு நடத்துகிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை சில இளைஞர்களின் எண்ணமே நடத்துகிறது என்று சொன்னேன்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு தொடர்ந்த வழிகாட்டுதல் பணிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

முக்கியமாக அதிரையில் மட்டுமல்ல . குறைந்த பட்சம் அருகாமையில் இருக்கும் ஊர்களைச் சேர்ந்தோருக்கும் இவ்வழி காட்டுதல் அவசியப்படுகிறது. அத்துடன் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களை நமது வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து ஒரு சமூக அந்தஸ்து கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.

பல இயக்கங்கள் இரைப் பணியில் கவனம் செலுத்த, அதிரை தாருத் தவ்ஹீத் இறைப் பணியில் தன்னை அர்ப்பணித்து இருப்பது மனதுக்கு நிறைவுதரும் செய்தியாகும். மாஷா அல்லாஹ்.

//அத்துடன், நிறுவனர், நடத்துபவர்கள் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் இச்சேவையின் நம்பகத் தன்மை கூடும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.//

என்கிற கவிஞர் சபீர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.


Unknown said...

//அத்துடன், நிறுவனர், நடத்துபவர்கள் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் இச்சேவையின் நம்பகத் தன்மை கூடும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.//
என்கிற கவிஞர் சபீர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.//

அல்லாஹ்வுக்காகவும் மறுமை நற்பலனுக்காகவும் செயல்படும் நிர்வாகிகள், உறுப்பினர்களை கொண்டு தாருத் தவ்ஹீத் செயல்படுவதால், நடத்துனர்களின் பெயர்களை இம் மடக்கோலைகளில் குறிப்பிடவில்லை.என்றாலும் பலருக்கு நிர்வாகிகள் யார் என்பது தெரிந்தாலும் செயல்பாடுகளை கவனித்து, தங்கள் ஆலோசனைகளை ADT ஈமெயிலுக்கு அனுப்புங்கள்.

மேலும் சிறப்பாக இறைபணிகள் செய்ய நிதி பற்றாக்குறைதான் பிரச்சினையாக இருப்பதால்,"நன்மையான காரியங்களில் ஒருவருக்கு ஒருவர் துணை நில்லுங்கள்" என்ற இறை கட்டளைக்கிணங்க, உங்கள் நிதியினை இம்மடக்கோலையில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி ADT ஈ மெயிலுக்கும் தகவல் தாருங்கள். தாருத் தவ்ஹீத் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

Unknown said...

இன்றைய அவசியத் தேவை இது. ஆறம்பகாலத்தில் அச்சடிக்கப்பட்ட லட்டர் ஹெட் ( Letter head) இன்றும் என்னிடம் உள்ளது. பலரும் பல வழிகளில் சென்றுவிட்டதால் தொடர்பு இல்லமல் போய்விட்டது எனக்கு.

அலாவுதீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு