Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 15 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2013 | ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய பதிவில், நபி (ஸல்) அவர்கள் மனைவியரிடம் எப்படி  அன்பாக நடந்து கொண்டு சந்தோசமாக இருந்தார்களோ அவற்றில் ஒரு சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி படிப்பினைகளை அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் பார்ப்போம்.

பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.   “என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்)  (அல் குர் ஆன்  43:67 – 43:70). 

மேல் குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்தில் மூலம் நாம் விளங்குவது, எவர்கள் அல்லாஹ்வுக்கு பயபக்தியுடையோராக இருக்கும் தம்பதியினர், அல்லாஹ்வின் வசனங்களை ஈமான் கொண்டு முற்றிலும் வழிபட்டு முஸ்லீமாக இருந்தால், நிச்சயம் சுவர்கத்தில் ஒன்றாக நுழையலாம் என்பதை விளாங்கலாம். அப்படிபட்ட தம்பதிகளாக அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அன்னை ஆயிசா அவர்களும் வாழ்ந்து மரணித்துள்ளார்கள். இருப்பினும் கணவன் மனைவி எப்படி இணக்கத்தோடு அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்பதை அவர்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்துள்ளார்கள். இதோ மேலும் ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்தில் உறங்கினார்கள், அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் உறங்கிவிட்டார்கள் என்று எண்ணி மெதுவாக எழும்பினார்கள், மெதுவாக அவர்கள் மேலாடையை அணிந்தார்கள், காலணியை அணிந்தார்கள், வீட்டின் கதவை சப்தமில்லாமல் மெதுவாக திறந்து வெளியில் செல்ல ஆரம்பித்தார்கள். இவைகள் அனைத்தையும் தூங்குவது போல் அவதானித்துக் கொண்டிருந்த அன்னை ஆயிசா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் இந்த நடுநிசி இரவில் எங்கு நபி(ஸல்) அவர்கள் வேறு மனைவி வீட்டிற்கேனும் செல்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள ஆயிசா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள்.

அருமைத் தோழர்கள் மேல் பாசம் நேசம் மரியாதை அன்பு வைத்துள்ள அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பக்கீஹ் மண்ணரைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்ட அருமைத் தோழர்களுக்காக துஆ செய்தார்கள். இந்த காட்சியை அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகத்தோடு வந்த ஆயிசா(ரலி) அவர்களின் எண்ணத்திற்கு மாற்றமாக கணவர் அருமைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய உடன் பிறவா சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் திரும்பி வருவதற்கு முன்னரே அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் தங்களின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். சிறிது நிமிடத்தில் நபி(ஸல்) அவர்களும் வந்துவிட்டார்கள். ஆனால் அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கு வேகமாக திரும்பி வந்த களைப்பில் மூச்சு இரைக்கிறது. நபி(ஸல்) அவர்கள் உடனே, ஆயிசாவே ஏன் மூச்சு இரைக்கிறது, உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஆயிசா நடந்தவைகளை சொன்னார்கள், உடனே நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசாவை செல்லமாக தன் கையால் அவர்கள் தோலில் குத்திவிட்டு சொன்னார்கள். இரவில் வானவர் ஜிப்ரீல் வந்தார், என் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்ய அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொன்னார், அதனால் நான் பிரார்த்தனைச் செய்ய பக்கீஹ் சென்றேன் என்று கூறினார்கள்.

இது போன்ற சம்பவம் நம் வீடுகளில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளை என்றவுடன் நபி(ஸல்) அவர்கள் தூக்கம் என்று பார்க்கமால், தன் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்ய சென்றார்கள். இரவில் கணவன் உறக்கத்தில் இருக்கும் போது மனைவியர் அல்லாஹ் மிகவும் விரும்பும் தஹஜ்ஜத் தொழுகை தொழுவதை அவதானித்து பெருமைப்படும் கணவன்மார்கள் எத்தனைப் பேர் உள்ளனர்? இது போல் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும் போது கணவன் கடைசி இரவில் எழுந்து அல்லாஹ் மிகவும் விரும்பும் தஹஜ்ஜத் தொழுதுவதை பார்க்கும் மனைவியர் எத்தனை பேர் உள்ளனர்? இருவரும் சேர்ந்து அல்லாஹ்வுக்கு விருப்பமான தஹஜ்ஜத் தொழுகை தொழுது, அந்த சமையத்தில் முதல் வானத்திற்கு இறங்கி வரும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் கையேந்தி துஆ செய்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இது போன்று சேர்ந்து செய்யும் வணக்க வழிபாடுகளினால், இருவர் மனதிலும் நல்ல எண்ணங்கள் ஏற்படும். இதனை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.

மற்றொரு முறை அன்னை ஆயிசா(ரலி) அவர்களும், நபி(ஸல்) அவர்களும் போர் நடைபெறவிருந்த ஒரு இடத்தில் ஒர் இரவில் வெளியில் நடந்து சென்றார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களைப் பார்த்து “நாம் இருவருக்கும் ஓட்டப்போட்டி வைக்கலாமா? ஆயிசா(ரலி) அவர்கள் சரி என்றார்கள். அங்கு அருகில் இருந்த ஸஹாபாக்களை முன்னுக்கு செல்லச் சொல்லி விட்டு, நபி(ஸல்) அவர்களும் ஆயிசா(ரலி) அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். சிறிது தூரம் ஓடினார்கள் இருவரும், அந்த போட்டியில் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனை நபி(ஸல்) அவர்கள் மனதில் வைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள், மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வருகிறது, மீண்டும் நபி(ஸல்) அவர்கள் கேட்கிறார்கள் “நாம் இருவருக்கும் ஓட்டப்போட்டி வைக்கலாமா?” ஆயிசா(ரலி) அவர்கள் சரி என்றார்கள். இந்த போட்டியில் நபி(ஸல்) அவர்கள் வெற்றிப் பெற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களைப் பார்த்து “இந்த வெற்றி அன்று நான் தோற்றதிற்காக” என்றார்கள். 

இதனை வாசிக்கும்போது எப்படி சந்தோசமாக உள்ளது. இதுபோன்ற ஆரோக்கியமான போட்டிகளோ, மனைவியோடு கணவன், அல்லது கணவனோடு மனைவி போட்டி போட்டு விளையாடினால் எவ்வளவு சந்தோசமான வாழ்க்கையாக இருக்கும். இது நம் வாழ்வில் உள்ளதா? நபி(ஸல்) அவர்கள் தன் மனைவியோடு இப்படி விளையாடி உள்ளார்கள் நாமும் இதுபோல் விளையாடுவோம் என்று கணவன் மனைவியிடத்தில் கேட்க அவன் ஈகோ தடையாக உள்ளது. மனைவி தன் கணவனிடத்தில் கேட்க வெட்கமும் அவள் ஈகோவும் தடையாக உள்ளது என்பது தான் எதார்த்த நிலை. இது மாற வேண்டும். நமக்கு முன்மாதிரி நம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு செயல்களிலும் நமக்கு படிப்பினை உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவோ கஷ்டமான காலத்திலும், வறுமையிலும், யுத்த களத்திலும், ஆட்சி காலத்திலும் அவர்களோடு அன்பு செலுத்தி வாழ்ந்த காரணத்தால் தான் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பும் அவர்களை நினைத்து நினைத்து அழுதுள்ளார்கள். ஒரு முறை அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கு வித விதமான உணவுகள் வைக்கப்படுகிறது, அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அதனைப் பார்த்ததும் தன் முகத்தை திருப்பிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். சந்தோசமாக உணவு பரிமாறும் சந்தோசமான சூழலில் ஏன் அன்னையே அழுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் “நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த காலத்தில் ஒரு வேலைகூட இது போன்ற உணவு வகைகளை நபி(ஸல்) அவர்கள் உண்டதில்லை. அவர்கள் மரணித்த பின்பு நாம் இது போன்று நபி(ஸல்) அவர்கள் வயிறார உணவு வகைகள் சாப்பிட்டதில்லை, அதனை நினைத்தேன், என் கண்கள் கலங்கியது, வேதனையடைந்தேன் என்று கண்ணீர் மல்க சொன்னார்கள். என்னதான் வருமையில் இருந்தாலும் வாழ்வில் சந்தோசமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொரு சம்பவங்களின் மூலம் அறியலாம்.

சாதரண நாட்களில் ஊரில் ஒன்றாக இருந்தாலோ அல்லது இருவரும் பிரிந்து மனைவி ஊரில், கணவன் வெளிநாட்டில் இருந்தாலோ இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம் என்றாலும். பெருநாள் போன்ற கொண்ட்டாட்ட தினங்களிலும் சின்னச் சின்னவைகளுக்காக ஈகோவினால் கணவன் மனைவிக்கு இடையில் பேச்சு வார்த்தை இல்லாமல் போவதும் பொதுவாக நாம் கண்டுவரும் நிகழ்வுகள். இவைகள் மாற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
தொடரும்...
M. தாஜுதீன்

9 Responses So Far:

Unknown said...

கணவன் மனைவி உறவு முறையில் எவ்வளவு அன்யோன்யம் வேண்டும் என்பதற்கும், புரிந்துணர்வு, தியாகம் , விட்டுக்கொடுத்தல் , கலகலப்பு, மகிழ்ச்சி, அனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு அண்ணல் நபி (ஸல்) , ஆயிஷா (ரலி) இவர்களின் வாழ்க்கை ஓட்டம் .

இவர்களின் வாழ்க்கை ஓட்டத்தில் நமக்கும் அல்லாஹ் நல்ல பல படிப்பினைகளையும், தியாக உணர்வுகளையும் தர போதுமானவன்.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சந்தோசமான படிப்பினை சம்பவங்கள்!

நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Shameed said...

அருமையான படிப்பினை சம்பவங்கள்

Unknown said...

மிகத்தெளிவான விளக்கமான தொடர்..

நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் தவுர் குகை வரலாறு நம்மை அறியாமலேயே கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்.

அவ்விடத்தை நேரில் காணும்போது நிச்சயம் நம் கண்கள் கலங்கிவிடும்.

sabeer.abushahruk said...

படிப்பினை தரும் அற்புதமானப் பதிவு.

நன்றி தாஜுதீன்.

Shameed said...

// இந்த போட்டியில் நபி(ஸல்) அவர்கள் வெற்றிப் பெற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களைப் பார்த்து “இந்த வெற்றி அன்று நான் தோற்றதிற்காக” என்றார்கள். //

உண்மையில் இந்த வரிகள் மனதை கவர்ந்தது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓடி விளையாடு பாப்பான்னு ஒரு 'பாட்டி' கவி சொன்னாள்... ஆனால்..

எங்கள் உயிரினும் மேலான உயிரோ ஓடிவிளையாடினாலும் டாப்பாகத்தான் இருக்கும் என்று செயலால் செய்தும் காட்டியிருக்கிறார்கள்...

ஒ.வி.ய.ம். இந்த தொடர் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

Anonymous said...

நடுநிசி நேரம்! பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனையாளுக்க தெரியாமல் ஒரு ஆண் வீட்டுக் கதவை ஓசை படாமல் திறந்து பூனை போல் வெளியே போனால் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சந்தேகம் வருவது மனித இயல்பே!.

ஆனால் ரசூலுல்லாஹ் அவர்கள் அந்நேரத்தில் வெளியேறிய நோக்கம் ஒரு சராசரி மனிதனின் நோக்கத்திற்கு மிக மிக அப்பாற்பட்டது மட்டுமல்ல அது சராசரி 'மனிதன்' என்பவனுக்கும் ஒரு வழிகாட்டல் ஆகும்.

மரணித்த தன் தோழர்களுக்கு நள்ளிரவில் தன்னந்தனியாக மயான பூமி சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் எத்தனை மனிதர்கள் இங்கே உண்டு?

இதுபோன்ற கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவே ரசூலுல்லாஹ் நமக்கெல்லாம் செய்து காட்டி பாடம் கற்று தந்தார்கள்'!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு