அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..
அன்புச் சகோதர சகோதரிகளே:
நம் அனைவருக்கும் அல்-குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் காலச் சூழலில் ‘பணிச்சுமை’, கால அவகாசம் அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்ற எண்ணம் மனதில் இருக்கிறதா ?
நம் அனைவருக்கும் அல்-குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் காலச் சூழலில் ‘பணிச்சுமை’, கால அவகாசம் அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்ற எண்ணம் மனதில் இருக்கிறதா ?

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, துபை, சவுதி அரேபியா மற்றும் தூரகிழக்கு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், மற்றும் சிறுவர்களுக்கு இந்த தரம் வாய்ந்த பயிற்றுவிக்கும் பயிற்சி நேரடியாகவும், கணினி வாயிலாகவும் அளிக்கப்படுகிறது. உலகம் முழுதும் ஏராளமானவர்கள் இதில் பயன் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.
ஒன்பதே மணி நேரத்தில் அல்-குர்ஆனின் 50% மேல் அறிந்து கொள்ளுதல்.
மொத்தம் 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 9 மணி நேரம். அதில் நாம் (குர்ஆனில் உள்ள சுமார் 78,000 சொற்களில்) 40,000 முறை வரக்கூடிய 125 வார்த்தைகளைக் கற்று கொள்ள இருக்கிறோம் அது 50%க்கு நிகரான புரிதலை பெறுவதற்கு சமம்.
அப்படியானால், இந்தப் பயிற்சியை முடிக்கும் போது குர்ஆனின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களில் பாதிக்கு மேல் பொருள் அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்!
என்ன பயில இருக்கிறோம் !?
அரபி மொழியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டறிந்து. ஏற்கனவே நம் அனைவருக்கும் அரபி உரைநடை தெரியும் என்பதால் தினமும் நாம் பயில்வதை தொழுகையில் பயிற்சி செய்யலாம்!
பயிலக் கூடியது:
சூராஃபாத்திஹாமற்றும்குர்ஆனின்இறுதி 6 அத்தியாயங்கள்
தொழுகையின்வேறுபட்டநிலைகள்
அவசியமானஅடிப்படைஇலக்கணம்
பிரத்தியேகமானது: ஒவ்வொரு பகுதியிலும் ஈமானை உயர்த்தக்கூடிய தனித்தன்மையுள்ள பாடங்கள்.
இந்த பயிற்சியின் நோக்கம் என்ன?
தினமும் ஓதக் கூடியவற்றை (தொழுகையிலும் மற்ற சமயத்திலும்) புரிந்து ஓதுதல் – இது தொழுகையில் நம்முடைய கவனத்தையும் அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கும் தொடர்பையும் வெகுவாக முன்னேற்றும்.
குர்ஆன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, கண்டிப்பாக பெற வேண்டிய வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டி.
குர்ஆனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற எண்ணத்தை நிரந்தரமாகப் போக்குவது. இப்போது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பாதி சொற்கள் புரியும்போது, 100% குர்ஆனைப் புரிய ஆரம்பிப்பது மிகவும் எளிது!
இந்த பயிற்சி வகுப்பின் பயன்கள் என்ன?
குர்ஆன் தொடர்புடைய எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான முக்கியமான சூத்திரம்!
மிக விரைவாக படிப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வல்ல சக்தி வாய்ந்த, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கிய அணுகு முறை.
‘எவ்வாறு’என்ற பாடங்கள் உள்ளன. தொடர்பு கொள்ளுங்கள், கற்பனை செய்யுங்கள்,
இலக்கணம் கற்றுக்கொள்ள புரட்சிகரகமான யுத்தி; முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாடு- TPI (Total Physical Interaction).
இயன்றவரை எல்லாவிதமான கல்விச்சாதனங்களும் அளிக்கப்படும்: ஒளிப்படங்கள், எம்பி 3 (mp3),பவர் பாயின்ட் கோப்புகள், பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினா விடைகள் மற்றும் ஒரு இறுதித் தேர்வு.
UNDERSTANDING QURAN ACADEMY http://understandqurantamil.com/
இந்த அருமையான பயிற்சி வகுப்புகள் தமிழில் அமீரகம், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளிலும் இந்தியாவில், ஆங்கிலம் உருது தமிழ் ஆகிய மொழிகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் மற்றும் இன்னும் பல தன்னார்வச் சகோதரர்களின் பாரிய முயற்சியால் குர்ஆனை எளிதில் புரிந்து கொள்வது எப்படி என்ற வகுப்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
http://understandqurantamil.com/ தளம் பற்றி டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும் http://understandqurantamil.com/about-us மேலும் இது தொடர்பாக இந்த தளத்தின் பயிற்சியாளர் அவர்கள் தரும் தகவல்கள் இதோ காணொளியாக.
அமீரகத்தில் சகோதரர் சேக் ஜலாலுதீன் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்கள். இதில் நிறைய சகோதரர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதில் கலந்து கொண்டு பயனடைந்து வரும் நமது அதிரை சகோதரர்களின் பயிற்சிகளின் காணொளிகள் இதோ உங்கள் பார்வைக்கும்.
சகோதரர் T. அப்துல் காதர்.
சகோதரர் M. தாஜுதீன்
jalaludeens1@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு : வெள்ளிதோறும் காணொளிப் பயிற்சி பதிவுகள் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!
அதிரைநிருபர் பதிப்பகம்
8 Responses So Far:
நன்றி
மிக்க நன்றி.
இனியேனும் கேட்பார் பேச்சைக் கேட்காமல் சுயமாக ஆய்ந்து தெளிவு பெற ஒரு வழிவகை சொல்லித்தந்த தம்பி தாஜுதீனுக்கு
மிக்க நன்றி
நன்றி
இதுவரை நான் கண்ட பதிவுகளில்
மிக மிக ஈருலகத்திருக்கும் தேவையான ஒரு அருமையான காணொளிப்பதிவு.
வளர்க இதன் ஏற்ப்பாட்டாளர்கள் முயற்சி
ஈருலகத்திருக்கும் தேவையான ஒரு அருமையான பதிவு
உன்னதமான முயற்சி. அவசியம் வாய்ப்புள்ளவர்கள் தவறவிடாமல் அதிகமாக பங்கேற்று இதன் பலனை மற்றோரும் அடைய இவர்கள் ஒரு தூண்டுகோளாக இருக்கவேண்டும்.
ஜஜாகல்லாஹு கைரன்.
நன்மையான முயற்சி!
இதன் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும்,
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 10 மாதங்களுகு முன்னாடி ரியாதில் ஒரு இஸ்திரஹாவில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது
நானும் நமதூர் சகோதரர்கள் சிலபேரும் கலந்து கொண்டோம். மிக அருமையான புரோகிராம் மிக எளிதாக திருமறையை அர்த்தத்துடன் ஓதும் வழியை ஒரு எக்ஸசைஸ் மூலியமாக செய்து காட்டினார்கள் அதை செய்யும்போது அந்த வார்த்தைகள் எப்படி நமது மனதில் ஆழமாக பதிகின்றது என்பதை நனகு விளக்கினார்கள்
அன்று முதல் என்னுள்ளே இதை எப்படி நமதூருக்கு அறிமுகம் செய்வது என்ற சிந்தனையிலேயே காலம் கடந்தன.
எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இபி எஸ் ஸ்கூல்தான் ஆனால் அதுபற்றிய கூடுதல் தகவல்களை திறட்டி தருவதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை.
அந்த நேரத்தில் நான் அதிரை நிருபருக்குள் பிரவேசிக்கவுமில்லை
எனிவே சகோதரர்கள் தாஜுதீன், அப்துல் காதர் ஆகியோரின் மூலமாக குறிப்பாக அதிரை நிருபர் வலைத்தளத்தின் வாயிலாக இந்த நிகழ்ச்சி அறிமுகமாவதில் சந்தோசம்
இந்த நிகழ்ச்சியை இந்த வலைத்தளத்துடன் நிறுத்திவிடாமல் அதிரை நிருபர் சார்பாக இனயத்தை வளம் வராதவர்களுக்கும் போய் சேறும் விதமாக சம்பந்தபட்டவர்களை அழைத்து பொது நிகழ்ச்சி ஓன்று ஏற்பாடு செய்தால் மிக அருமையாக இருக்கும்
இது மிகவும் முக்கியமான விசயம் என்பதால் உடனடியாக ஏற்பாடு செய்தால் நலாமாக இருக்கும்
இந்த நிகழ்ச்சிக்கு உன்டான செலவுகளுக்கு நமது சகோதரர்களிடம் துண்டை மட்டும் நீட்டிப் பாருங்கள் அள்ளிதருவதற்கு போட்டிகள் ஏற்படும்.
//இந்த நிகழ்ச்சியை இந்த வலைத்தளத்துடன் நிறுத்திவிடாமல் அதிரை நிருபர் சார்பாக இனயத்தை வளம் வராதவர்களுக்கும் போய் சேறும் விதமாக சம்பந்தபட்டவர்களை அழைத்து பொது நிகழ்ச்சி ஓன்று ஏற்பாடு செய்தால் மிக அருமையாக இருக்கும்//
இறைவனருளால் இந்த நிகழ்ச்சி அதிரை நிருபர் சார்பாக அதிரையில் விரைவில் ஏற்பாடு செய்யப் பட வேண்டுமென்ற தம்பி மன்சூரின் கருத்தை வழி மொழிகிறேன். இதற்கான களப்பணி ஆற்றத் தயாராக இருக்கிறேன். இதற்காக துண்டு ஏந்த வேண்டாம். நாமே நமது பாக்கெட்டில் பெரிய மனதுடன் கை விட்டால் போதும் . இதனால்தான் பாக்கெட் இதயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
தம்பி அபூ இப்ராஹீம் ! Pls Approve and advice.
//இந்த நிகழ்ச்சியை இந்த வலைத்தளத்துடன் நிறுத்திவிடாமல் அதிரை நிருபர் சார்பாக இனயத்தை வளம் வராதவர்களுக்கும் போய் சேறும் விதமாக சம்பந்தபட்டவர்களை அழைத்து பொது நிகழ்ச்சி ஓன்று ஏற்பாடு செய்தால் மிக அருமையாக இருக்கும்//
இறைவனருளால் இந்த நிகழ்ச்சி அதிரை நிருபர் சார்பாக அதிரையில் விரைவில் ஏற்பாடு செய்யப் பட வேண்டுமென்ற தம்பி மன்சூரின் கருத்தை வழி மொழிகிறேன். இதற்கான களப்பணி ஆற்றத் தயாராக இருக்கிறேன். இதற்காக துண்டு ஏந்த வேண்டாம். நாமே நமது பாக்கெட்டில் பெரிய மனதுடன் கை விட்டால் போதும் . இதனால்தான் பாக்கெட் இதயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
தம்பி அபூ இப்ராஹீம் ! Pls Approve and advice. //
இன்ஷா அல்லாஹ் ! காக்கா... நம் சகோதரர்களுடன் அவசியம் ஆலோசித்து அறிவிப்பை வெளியிடுவோம் !
Post a Comment