Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வீண் விரயம் செய்யாதீர்கள்! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2013 | , ,

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

இன்று நாம் அன்றாடம் பார்க்கின்றோம் எதை உண்ணுவது, எதை பருகுவது என்று கூட தெரியாமல் சேற்றிலும், செதும்பிலும் வாழும் பிராணிகளைப் போன்று மனிதனும் உணவுகளை சாப்பிடத் துவங்கி விட்டான். நல்ல உணவா, கெட்ட உணவா, ஆகுமா, ஆகாதா? என்று கூட பார்க்காமல் அவன் பருகும் நிலை சில நேரங்களில் பார்ப்போரை முகம் சுளிக்கும் நிலைமைக்குக் கூடத் தள்ளி விடுகிறது. எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும் உணவினை யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும்) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.

அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருந்து பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதி

வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

மனிதக்குலம் உணவின்றி வாடும் நிலையினைத் தவிர்க்க, பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்:

வறண்டவலையப் பிரதேசங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களைப் புதிதாக விவசாயத்துக்கென ஆக்கிரமிக்காது இருத்தல்.

இப்போது குறைந்த அளவிலான உற்பத்தியினை அளிக்கும் பகுதிகளை மேம்படுத்தி அதிக உற்பத்தியினை ஏற்படுத்துதல்.

நீர் மற்றும் உரம் இவை இரண்டினையும் உரிய வகையில் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிதல்.

இறைச்சி உண்பவர்கள் அதன் அளவினைக் குறைத்துக் கொண்டு, அதற்கான மாற்று வழிகளைப் பின்பற்றுதல்.

உணவு உற்பத்தியின் போதும், அதனைப் பின்னர் பகிர்ந்தளிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளை மட்டுப்படுத்தும் வழிகளை உருவாக்குதல்.

இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், புதிய விளைநிலங்களை உருவாக்காது தவிர்ப்பதன் மூலம் உயிர்ப்பன்மைத்துவ அழிப்பும் அதன் விளைவாய் ஏற்படும் கரிம வாயுவின் அதிகரிப்பும் தடுக்கப்படும்.

உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீர்வுகள் அனைத்தையும் உரிய வகையில் செயல்படுத்துவதன் மூலம், 2050 ல் ஏற்படப் போகும் உணவுத் தேவையினை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் ஜோநாதனது தலைமையில் செயல்படும் ஆய்வாளர்கள்.

உலகின் மூலை முடுக்குகளில் விளையும் சொற்ப அளவிலான உணவினையும்கூட, மற்றொரு கோடியில் அதற்கான் தேவையுடன் காத்திருக்கும் மற்றையவர்களுக்குத் தெரிவிக்கவும், அதனை அவர்களிடம் சேர்ப்பிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும் இன்றைய கணினிமய உலகில் சாத்தியமே. எதிர்வரும் சந்ததியினர் புத்திசாலித்தனதுடன் செயல்படின், 2050ல் இன்றிருக்கும் உணவுப் பற்றாக்குறைகூட இல்லாத நிலையினை ஏற்படுத்திட இயலும். 

அதிரை தென்றல் (Irfan Cmp)

10 Responses So Far:

sabeer.abushahruk said...

வீண்விரயம் செய்வதிலேயே மிகவும் மோசமானது உணவு பொருட்களை வீண்விரயம் செய்வதுதான் என்பதை நினைவூட்டும் தம்பி அதிரைத் தென்றலுக்கு நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி இர்ஃபான் (அதிரைத் தென்றல்) இடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிரம்ப உள. முன்னர்த் தண்ணீரை வீண் விரயம் செய்வதைப் பற்றி எழுதினார்கள்; இப்பொழுது உணவை வீண் விரயம் செய்வதைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்துச் செல்வத்தை வீண் விரயம் செய்வதைப் பற்றியும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். அன்புத் தம்பியிடம் அடக்கமாகியிருக்கும் அடக்கத்திற்குள்ளிலிருந்து இத்தனை ஆழமான விடயங்களும் அடக்கமாகியிருக்கும் என்பதையும் உணர்கிறேன்.
இன்னும் இன்னும் எழுதுங்கள்; சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள்!
அதிரைத் தென்றல் எழுத்துப் புயலாகியது!
வாழ்த்துகள்; பாராட்டுகள்!!

ZAKIR HUSSAIN said...

To brother இர்ஃபான் (அதிரைத் தென்றல்)

மிக மிக மிக முக்கியமான பதிவு இது. ஏனெனில் இப்போது சிரியாவில் அகதிகளாய் வாழும் அந்த நாட்டு மக்கள் , இன்னும் 2 வாரத்தில் கடும் குளிர் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கு இங்கு [ மலேசியாவில் ] போர்வை , துணிமனி எல்லாம் சேகரித்து அனுப்புகிறார்கள்.

ஆனால் இதுபோல் நமக்கெல்லாம் கஷ்டம் எதுவும் இல்லாமல் சாப்பிடும் உணவிலேயே வீண்விரயம் அதிகம் செய்பவர்கள் அதிகம். சில ஊர்களில் உள்ள சாப்பாட்டு விரயம் சில மாவட்டங்களின் தேவைக்கு போதுமானது.

Unknown said...

//அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.//

சகோ இர்பான் ,

இங்கே வீண் விரயம் செய்பவர்களை அல்லா ஷைத்தானின் தோழன் என்று குறிப்பிடவில்லை. ஷைத்தானின் சகோதரர்கள் ( ரத்த பந்தம்) என்று மிகக்கடுமையான வாரத்தையை அல்லாஹ் பயன் படுத்துகின்றான்.

"இன்னல்லாஹ லாயுஹுப்புல் முஸ்ரிபீன்'. இன்னல் முஸ்ரிபீன காண இஹவானுஷ்ஷயாதீன் '

அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக !

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இர்பான் நமது மக்களுக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்.

மிக மிக முக்கியமாக நமதூர்வாசிகள் கவணிக்கவேண்டிய ஹதீஸ்

//வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைஇ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்//
நமதூரில் நடைபெறும் வலிமா விருந்துகளில் ஏழை எழியவர்கள் மிகவும் புறக்கணிக்கப்படுகின்றனர் இந்த நிலையை மாற்றியமைக்க

ஒரு மாஸ்ட்டர் ப்லான்.

இந்த ஹதீஸை 2000 வால் போஸ்ட்டு அடித்து வைத்துக்கொண்டு திருமணம் நடக்க போகும் 4, 5 நாட்களுக்கு முன்னாடி அவர்களுக்கு ஞாபகம் மூட்டும் விதமாக
அந்த வீட்ட சுற்றி 4, 5 போஸ்ட்டு ஒட்டிவிடவேண்டும்
இப்படி செய்தால் இந்த ஹதீஸ் நடைமுறைக்கு தானாக வந்துவிடும்
இஸ்லாமிய பற்று அதிகம் இல்லாதவர்கள்
அட நம்ம வீட்டு முன்னாடியும் போஸ்ட்டர் ஒட்டிவிடுவாங்கடோய் என்று பயந்தே சிலரின் கல் மனதும் கரையும் எப்படியோ ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சமுதாயச் சிந்தனையும், தீமையைச் சுட்டி நன்மையை சூட அழைக்கும் எழுத்துப் பணியில் தம்பி இர்ஃபான் தொடர வாழ்த்துகிறேன்...

Ebrahim Ansari said...

சமுதாயச் சிந்தனையும், தீமையைச் சுட்டி நன்மையை சூட அழைக்கும் எழுத்துப் பணியில் தம்பி இர்ஃபான் தொடர வாழ்த்துகிறேன்...

//வீட்டில் சமைத்தது பிடிக்கவில்லை என்று விடுதிகளில் சாப்பிடுவது – கோபம் வந்தால் உணவுத் தட்டுக்களை உணவுடன் பறக்க விடுவது- ஆடம்பரமான திருமண விருந்துகள்- அஜீரணம் ஏற்படுத்தும் அறுபது வகை அயிட்டங்கள்- ஒரே நாளில் திட்டமிடாத பலர் வீட்டுத் திருமணங்கள்- விருந்துகள் - கொடி மரம் ஏற்றி அல்லது கொடி ஏற்றி, இறக்கி கூடைகளில் சோற்றை அள்ளி வீசும் செயல்கள்- இன்னபிற மனித இனத்தின் மூட ஆடம்பரச் செயல்களால்தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இறைவனின் சாபமும் உண்டாகிறது.

“நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சிலநாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும்” – என்று ஒரு கவிஞன் கண்ணீர் வடிக்கிறான்.//

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் அத்தியாயம் 13.

Shameed said...

உணவு பற்றிய பல ருசியான தகவல் அறிந்த நமக்கு உணவு பற்றிய பல உணர்வுள்ள தகவல்கள் இந்த கட்டுரை

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது..
\\முன்னர்த் தண்ணீரை வீண் விரயம் செய்வதைப் பற்றி எழுதினார்கள்; இப்பொழுது உணவை வீண் விரயம் செய்வதைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்துச் செல்வத்தை வீண் விரயம் செய்வதைப் பற்றியும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.//

இவ்வுலக உயிரினங்கலுக்கு அன்றாட தேவையான தண்ணீர் மற்றும் உணவின் வீண் விரயம் பற்றின தகவல்களை என்னால் சிறிதளவு பதிவில் தர முயன்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

செல்வத்தின் வீண் விரயம் பற்றின பதிவொன்றை எழுதலாம் என்று என்னிருந்தேன் அதேபோல் தாங்களும் எனக்கு எழுத அர்வமூட்டியுள்ளீர் இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன். ஜசக்கல்லாஹ் ஹைரன்

மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மேலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும்.பந்திக்கு பிந்திவிட்டேன். நல்லதொரு ஊட்டமுள்ள ஆக்க விருந்து தம்பி இர்பானுக்கு வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் வீ(ஊ)ன்விரயம் பற்றி இவ்வளவு வீரியத்துடன் விபரமாய் மார்க்க வெளிச்சத்துடன் ,உள்ள அச்சம் ஏற்படுமாறு எழுதிய பாங்கு அவசியம் அல்லாஹ்விடம் நற்கூலியைப்பெற்றுத்தரும் . ஆமீன்.

""வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும்
-----------------------------------------------
உணவினை யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு
---------------------------------------------
வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி
--------------------------------------------
உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு"".
-------------------------------------------
மேற்கோடிட்ட காரணிகளாளேயே "வறுமைக்கோடு"
ஏற்படுகிறது. இப்படி வருமைக்கோடு தொடர்ந்தால் "வருமே கேடு" என்பதை மறப்பது பெரும் குற்றம். அதிலும் பல "விரைட்டி" செய்து வீனாக்குவதுடன் ஏழைகளையும் உண்ண விடாது "விரட்டி" விடுகிறார்கள். அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு