தங்கையைக் கட்டிக் கொடுத்தாச்சு
தங்கவும் கட்டிக் கொடுத்தாச்சு
அங்கமும் பூட்டிக் களித்திடவே
தங்கமும் கொட்டிக் கொடுத்தாச்சு
திங்கக் கெழமை நாள்குறிச்சி
அங்க இங்க கடன் வாங்கி
உங்க எங்க சனங்களுக்கு
திங்க உங்க விருந்தாச்சு
வாப்பா உம்மா மனங் குளிர
உம்மாவின் காக்கா மகனெடுத்து
காக்கா என்தங்கைக்கு வரனாக்கி
தங்கைக்குக் கணவன் கிடைச்சாச்சு
மாறி மாறி அழைச்சாச்சு
மாரி மா(தி)ரி செல வழிச்சாச்சு
பாரி யாகி வள்ளலைப்போல்
வாரி வாரி கொடுத்தாச்சு
மச்சான் மெத்தப் படிச்ச மச்சான்
அச்சம் இல்லாமக் கேட்கும் மச்சான்
எச்சம் அளவும் விட்டுவைக்காமல்
மிச்சம் இல்லாம தொடச்சி வச்சான்
வெட்டி வேலை செய்துவந்த
வேலை வெட்டி இல்லா மச்சான்
காலை மாலை கணக்கில்லாமல்
நாலு வேளை திண்ணும் மச்சான்
வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியும் மச்சான்
வெள்ளையர் தேசம் விசா வேண்டி
தங்கையின் நகையையும் ஆட்டையை போட்டு
சிங்கைவரை மட்டுமே போயும் வந்தார்
வெட்டி வேலையும் விணையாச்சு
வீட்டில் புதுவரவு கருவாச்சு
வெத்து வேட்டு மச்சானுக்கோ
‘கெத்து’ இன்னும் கூடிப்போயிடுச்சு
சீர்செனத்தி தொடர்கதை யாச்சு
பசியாத்த பரிசோதிக்க பிரவசத்திற்கு
அத்தனை செலவுக்கும் அடகுவைக்க
அண்ணன் தலைக்கு விலையுண்டா?
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
தங்கவும் கட்டிக் கொடுத்தாச்சு
அங்கமும் பூட்டிக் களித்திடவே
தங்கமும் கொட்டிக் கொடுத்தாச்சு
திங்கக் கெழமை நாள்குறிச்சி
அங்க இங்க கடன் வாங்கி
உங்க எங்க சனங்களுக்கு
திங்க உங்க விருந்தாச்சு
வாப்பா உம்மா மனங் குளிர
உம்மாவின் காக்கா மகனெடுத்து
காக்கா என்தங்கைக்கு வரனாக்கி
தங்கைக்குக் கணவன் கிடைச்சாச்சு
மாறி மாறி அழைச்சாச்சு
மாரி மா(தி)ரி செல வழிச்சாச்சு
பாரி யாகி வள்ளலைப்போல்
வாரி வாரி கொடுத்தாச்சு
மச்சான் மெத்தப் படிச்ச மச்சான்
அச்சம் இல்லாமக் கேட்கும் மச்சான்
எச்சம் அளவும் விட்டுவைக்காமல்
மிச்சம் இல்லாம தொடச்சி வச்சான்
வெட்டி வேலை செய்துவந்த
வேலை வெட்டி இல்லா மச்சான்
காலை மாலை கணக்கில்லாமல்
நாலு வேளை திண்ணும் மச்சான்
வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியும் மச்சான்
வெள்ளையர் தேசம் விசா வேண்டி
தங்கையின் நகையையும் ஆட்டையை போட்டு
சிங்கைவரை மட்டுமே போயும் வந்தார்
வெட்டி வேலையும் விணையாச்சு
வீட்டில் புதுவரவு கருவாச்சு
வெத்து வேட்டு மச்சானுக்கோ
‘கெத்து’ இன்னும் கூடிப்போயிடுச்சு
சீர்செனத்தி தொடர்கதை யாச்சு
பசியாத்த பரிசோதிக்க பிரவசத்திற்கு
அத்தனை செலவுக்கும் அடகுவைக்க
அண்ணன் தலைக்கு விலையுண்டா?
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
35 Responses So Far:
//அண்ணன் தலைக்கும் விலையாச்சு// இப்போதுள்ள விலைவாசிப்படி பாத்தா அண்ணன் தலை என்ன விலைக்கி ஓடும்? ஒரு குத்து மதிப்பா சொல்லுங்களேன்!
ஒருத்த வங்க கேக்க சொன்னாங்க! அண்ணனும் மாமியா ஊட்டுலே உக்காந்து உங்குற கேஸா அல்லது ஓடி ஆடி ஒடம்பை வலச்சு ஒளச்சு போடுற கேசாண்டும் விசாரிச்சுகிடுங்கோ!
தெரிஞ்சும் பொல்லா விதிலே பொண்ணை கொண்டே தள்ளக்கூடாது பாருங்கோ!
S, முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
எங்கவூட்டு மாப்பிள்ளை !
மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருக்கு பெண் வீட்டாரின் !
ஈரவரிகள் ஈரக்குளையை தொட்டது மட்டுமல்ல சுடவும் செய்கிறது !
எந்த கருவைக் கொடுத்தாலும் கவிக் குழந்தை பிறக்க வைக்கும் கைங்கரியம் !
அதெப்படி !?
இனிமேல் வரும் திருமணப்பத்திரிக்கைகளுக்கு இலவச இணைப்பாக இந்த கவிதையை இணைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துப்பார்த்தேன்...
கவிதையில் தங்கைக்கோர் கீதம் பாடிஇருக்கும் கவி வேந்தர் சபீரே
தங்கை என்னும் உறவில்லாமல்
கவிதை உருவானது எப்படியோ
ஊர் நடப்பை வெளிச்சம் போட்டிருக்கும் உன் கவிதையில்
உச்ச கட்டமாக அண்ணனின் தலைக்கு விலை வைத்திருப்பது
கவிதையின் கருவான அண்ணனின் தியாகத்தின் உச்சம்.
அபு ஆசிப்.
இதையெல்லாம் காரணம் காட்டி...இனிமேல் எல்லோரும் சிம்பிளா திருமணம் நடத்தினால் 'அதிரையில் எளிய முறையில் நடந்த திருமணம்' என்ற தலைப்பில் செய்தியும் புகைப்படமும் வரும் என்று ஒரு சகோவிடம் தமாஷாக சொன்னேன்.
அதற்கு அவன் "இப்படியெல்லாம் திருமணம் செய்தால் அவனை கஞ்சன் என்று முத்திரை குத்திவிடுவார்கள்" என்றான்.
இவங்களையெல்லாம் ஆயிரம் ஆர்டிகிள் போட்டாளும் திருத்த முடியாது!
மாப்பிள்ளை என்றால் “இத்துப்போன கயிரு” கூட “முறுக்கிக்கிட்டு” நிற்க்குமாம்....மாப்பிள்ளை என்ற ஆணவம் கொண்டு வாழும் சிலதுகளுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்.....பல அண்ணன்களும் சில தம்பிகளும் படும் கஷ்டங்களை சொல்லி மாயாது.......வெள்ளையும் சொள்ளைக்கும் குறைவு இருக்காது இந்த தொல்லைப்பிடித்த மச்சான்களுக்கு.....சிறந்த கவிதை கவிக்காக்கா
தலைப்பு : எங்கவூர் மாப்பிள்ளைக்கு மாற்றாக எந்தவூர் மாப்பிள்ளைன்னு வைத்திருக்கனுமோ !?
நற்கவிதை!
இம்மாதிரி மாப்பிள்ளை என்று சொல்லும் சில ஒட்டுன்னிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
தமையன்களின் தலைக்கு மட்டும்தான் விலையா? தமையன் அமையாத அல்லது இல்லாதவர்களின் தகப்பன்கள் தலைக்கு இல்லையா?
தம்பி சபீர் அவர்கள் இதை ஒரு தொடர் கவிதைக் காவியமாக எழுத வேண்டும்.
மச்சான் நல்லவராக இருந்தாலும் அவரை வைத்து பொம்மலாட்டம் நடத்தும் புள்ளிகளைப் பற்றியும் எழுதவேண்டும்.
//மாப்பிள்ளை என்றால் “இத்துப்போன கயிரு” கூட “முறுக்கிக்கிட்டு” நிற்க்குமாம்...//
கயிறு முறுக்கினால் கூட பரவாயில்லை. ஆனால் சில " சருகு" களும் முருக்குகிரார்களே! அந்த சருகுகளுக்கு சப்போர்ட் செய்து முதுகில் தட்டிக் கொடுத்து தூண்டியும் விடுகிறார்களே!
நடைமுறையில் நடந்துவரும் இத்தகைய நிகழ்வுகளை கவிவரியில் எடுத்து வந்து வெட்டி மச்சான்மார்களுக்கு நன்றாக உறைக்கும்படி உணர்த்தி இருக்கிறாய்.நண்பா.
வெட்டி மச்சானின் மெட்டுக்கவிதை அருமை.
If we translate this poem to English, we can translate as "My own culprit". How did you observe & produce this kind of poem without any prior experience Sabeer kaka?
அஸ்ஸலாமு அலைக்கும்.
எது எழுதினாலும் அதில் முத்திரை பதிக்கும் சபீர்காக்கா இங்கே சில மச்சான்களின் முகத்தில் குத்தியிருக்கிறார்கள்.
crown சொன்னது…
தங்கையைக் கட்டிக் கொடுத்தாச்சு
தங்கவும் கட்டிக் கொடுத்தாச்சு
அங்கமும் பூட்டிக் களித்திடவே
தங்கமும் கொட்டிக் கொடுத்தாச்சு
-----------------------------------------------------------------------------
வார்தைகள் யாவும் வைரமாய் ஜொலித்தாலும் பலர் வாழ்வில் முள்ளாய் குத்துவது உண்மை!தன் கையை கட்டிக்கொண்ட நிலமையில்தான் பல மைத்துணர்களின் நம்மூர் வாழ்கை அமைந்தது ஒரு வகை சாபம்.
திங்கக் கெழமை நாள்குறிச்சி
அங்க இங்க கடன் வாங்கி
உங்க எங்க சனங்களுக்கு
திங்க உங்க விருந்தாச்சு
--------------------------------------------------------
இங்கே வலி''மா விருந்துகூட வலியை வரவழைக்கும் விருந்தாய் அமைந்தது காலத்தின் கோலம்!
-------------------------------------------------------------
வாப்பா உம்மா மனங் குளிர
உம்மாவின் காக்கா மகனெடுத்து
காக்கா என்தங்கைக்கு வரனாக்கி
தங்கைக்குக் கணவன் கிடைச்சாச்சு
---------------------------------------------------------------------------
இங்கே சொந்தத்தில் வரன் பார்த்தாலும் பல ச"வரன்"களுக்கு உத்திரவாதம் இல்லாமல் திருமணம் அமைவதில்லை!தங்கைக்கு கணவ(வா)ன்( weight டாகவே )மதிக்கப்படுகிறார்கள்.
மாறி மாறி அழைச்சாச்சு
மாரி மா(தி)ரி செல வழிச்சாச்சு
பாரி யாகி வள்ளலைப்போல்
வாரி வாரி கொடுத்தாச்சு
--------------------------------------------------------------
பாரி வள்ளலாய் வாரி வழங்கினால் பாதியாய் நம் நிலை மாறினாலும்,தேரினில் ஏறிவரும் மாப்பிள்ளை நம் நிலையை நினைக்கத்தான் மனமும் உண்டோ??காரியத்தில் கண்ணாய் இருபதில் அவர்தாம் வீரனன்றோ!
மச்சான் மெத்தப் படிச்ச மச்சான்
அச்சம் இல்லாமக் கேட்கும் மச்சான்
எச்சம் அளவும் விட்டுவைக்காமல்
மிச்சம் இல்லாம தொடச்சி வச்சான்
-------------------------------------------------------------------------
நம் எச்சம்(சந்ததியும்)தெருவில் சுத்திதிரியும் நிலமையை உருவாக்கும் வர்க்கம் இந்த மாப்பிள்ளை எனும் சில மச்சான் வர்க்கம்.
ஆமாம் கவிஞரே இந்த மெத்த(மாடியா?)படித்த மாப்பிள்ளை என ஏன் அழைக்கப்பட்டார் அவருக்கு "மச்சி"யாய்(மாடி= நம்மூரில் மச்சி என அழைக்கப்படுவதாலா?) வந்த நம் தங்கையால் உச்சியில் (மாடியில்) தூக்கி வைக்கப்படுவதாலா?
வெட்டி வேலை செய்துவந்த
வேலை வெட்டி இல்லா மச்சான்
காலை மாலை கணக்கில்லாமல்
நாலு வேளை திண்ணும் மச்சான்
--------------------------------------------------------------
இப்படியும் இருக்காங்களா? நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.மேலும் அப்படித்தான் என் மைத்துனரும் சொல்லிகொள்வார் என நம்புகிறேன்??????ஹஹஹ்ஹஹஹாஹஹஹ்ஹா
-------------------------------------------------------------------------------------
வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியும் மச்சான்
வெள்ளையர் தேசம் விசா வேண்டி
தங்கையின் நகையையும் ஆட்டையை போட்டு
சிங்கைவரை மட்டுமே போயும் வந்தார்
---------------------------------------------------------------------------------------
கவிஞரே! பாத்தியலா ஆட்டைப்போட்டது மச்சான் அல்ல! சிங்கபூர். அந்த சிங்கம் செய்த வினைக்கு ஏன் மச்சானை வம்புகிழுக்கிறீங்க!
வெட்டி வேலையும் விணையாச்சு
வீட்டில் புதுவரவு கருவாச்சு
வெத்து வேட்டு மச்சானுக்கோ
‘கெத்து’ இன்னும் கூடிப்போயிடுச்சு
சீர்செனத்தி தொடர்கதை யாச்சு
பசியாத்த பரிசோதிக்க பிரவசத்திற்கு
அத்தனை செலவுக்கும் அடகுவைக்க
அண்ணன் தலைக்கு விலையுண்டா?
----------------------------------------------------------------------------------
தலைசுத்துது! தலைக்குவிலை? நாடு விட்டு நாடு ஓடும் தலைவிதிதான்.
------------------------------------------------------------------------
மலேயாவுக்கு போயி ரெண்டு மூனு வருஷம் கட்டுன பொண்டாட்டிக்கும் பெத்து உட்ட புள்ளேங்களுக்கும் ஒண்ணுமே அனுப்பாத மறுகனுட்டே இருந்து வந்துச்சு ஒரு ஏறுமெயிலு லாட்டறு!
ஒடச்சு படிச்சா ''அடுத்த பதுனாராம் தேதி ரஜூலா கப்பலுலே ஊர் புறப்பட்டு வருறேன்! நாகபட்டனதுக்கு மச்சானே வரச்சொல்லுங்க!” [இதிலே எல்லாம் கல்யாண பத்திரிக்கைளே பேருபோடுற மாதிரி [ Protocol System] கடைபுடிக்கனும்.
இல்லேனா பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்]. மருமகன்ல! சும்மாவா? அதுவும் சபுறு செய்ற கப்பல் மாப்புள்ளே!
மருமகன் வரும் கடிதாசி பாத்ததும் மாமியாருக்கு உடம்பிலே புது ரத்தம் பாஞ்சுச்சு !. அடுத்த ஊடு அண்டுன ஊடு எதுத்த ஊடு எங்கும் புகுந்து கோழி வாங்கி குஞ்சுக்கு வப்பாங்க!. மேலும் அடுத்த ஊட்டு கோழி இடும் முட்டையெல்லாம் எங்களுக்கே
தரனும் என்று அட்வான்ஸ் பத்து ரூவா கொடுத்து ஒரு M.O.U. ஒப்பந்தம் சைன் பண்ணிடுவாங்க.
சொன்னபடி மருமகன் உம்மா வீட்டில் வந்து இறங்கிடுவார். பெட்டி பிரிச்சு பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் ஆசைப்பட்டு வாங்கி வந்த சாமான் எல்லாம் உம்மா வீட்டில் அக்கா தங்கச்சிகளிடம் பறிகொடுத்து [-இது இரண்டாவது பறிகொடுப்பு-]
முதல் பறிகொடுப்பு நாகபட்டினம் கஸ்டம்ஸ் ஆபிசர் பறித்துக் கொண்டது.
இவன் ஆசையோடு பொண்டாட்டிக்கு உடுத்தி பார்க்க வாங்கி வந்த நைலக்ஸ் சேலையே முதலில் உடுத்தி புருசனோடு படுப்பவள் கஸ்டம்ஸ் காரன் பொஞ்சாதி!'
கறையான் புத்தெடுக்க அதில் கரு நாகம் குடி புகுந்ததாம்''அந்தக் கதைதான் இந்தக் கதையும். [அந்த ரஜூலா காலத்தில் இருந்த எச்சித்தனமான அதிகாரிகள் இப்போ ஜம்போஜெட் காலத்தில் இல்லை என்பது இந்தியாவின் சுயமரியாதைக்கு ஒரு மகுடம்!
இதுபோல் எல்லா துறையிலும் கை சுத்தம் இருந்தால் நாடு முன்னேறும்! இதுக்கு மேலே இருந்து தான் கீழே வரவேண்டும்!.] அன்று பகல் அம்மா வீட்டில் எறச்சிக் கறி சாப்பாடு!
இதற்க்கு முன்னே நான் ஒன்னு சொல்ல உட்டுட்டேன். மகனோட பொட்டி பாக்கட்டு [பாக்கட்டு=இது படுக்கும் பாய் mat] எல்லாம் தாய் வீட்டுக்கு வந்ததும் உம்மா ராத்த தங்கச்சிகளுக்கெல்லாம் தமையனோட மூனுவயசு புள்ளே மேலே திடீர் பாசம் வந்திடும். ''அடி எங்கேடி புள்ளே! புள்லேயே போயி தூக்கிட்டு வாங்கலேம்மா! வாப்பா 'கண்ணுலே' காட்டனுமுள்ள! வாப்பாக்கு புள்ளே மேலே ஒரே தேட்டமா இருக்கும்''ஆகா அற்புதமான டயலாக்!..
பிள்ளை பிறந்து மூனு வருஷத்திலே எவளும் அந்த பிள்ளையே பாத்ததே இல்லே என்னாண்டு கேட்டதும் இல்லே! பிள்ளையை தூக்குனதில்லை.. இந்த பாசம் வந்ததெல்லாம் மலாயா அல்லது சிங்கப்பூர் பெட்டி பாக்கட்டை பாத்து வந்த பாசம்!
பிள்ளையை தூக்கி வர ''நடுமனுஷி''ஒருத்தி போவா! ''புள்ளையே தாங்கலேம்மா! வாப்பா பாக்கணுமாம்'' இது புள்ளையை தூக்கப் போன நாடு மனுஷி சொன்னது.
''மூனு வருசத்துக்கு பொறவு இப்போத்தான் வாப்புச்சி மாமிக்கெல்லாம் புள்ளே மேலே ஒஹப்பு வந்து இருக்கோ? பெத்த வாப்பாவை வந்து பாக்கச் சொல்லு!'' [இன்னும் இரண்டு நாள் சென்று தொடரும் Please hold it until complete].
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.
அதிரை நகரின் மாப்பிள்ளை
............அடிக்கும் இந்த மகாக்கொள்ளை
............அழகுத் தமிழின் பாடலாக
............அமைத்துச் சொன்னீர்ச் சாடலாக!
மதியில் பாயும் எண்ணம்தான்
............. மயக்கும் சந்தம் வண்ணம்தான்
.............மனத்தில் ஊறும் இக்கரையில்
............. மனமும் ஊரின் அக்கறையில்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த மாப்பிள்ளை மேட்டர் சொந்த அனுபவத்தால் உதித்ததல்ல. கண்டும் கேட்டும் நொந்துபோன அண்ணன்களின் நிலையை அவதானித்தும் புனைந்தது.
இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தில் கலந்துகொண்டு கீழ்கண்டவாறு மொய்யெழுதியவர்களுக்கு நன்றி:
ஃபாரூக் மாமா,
அண்ணன் தலைக்கு விலை விதிப்பதில் சிக்கலிருப்பதால், அப்போதைக்கப்போது மச்சானுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அடகு வைத்தும் மீட்டும் அவதிப்படலாம். இப்படியெல்லாம் பார்த்துக்கொண்ட மைத்துனருக்குப் பெண்பிள்ளை பிறந்து மச்சானுக்கு ஆண்பிள்ளை பிறந்துவிடுமானால்...இப்பவே கண்ணக் கட்டுதே.
அபு இபு,
எங்கஊரு மாப்பிள்ளையை எங்கவூட்டு மாப்பிள்ளை என்று துவங்கியிருக்கிறீர்களே எழுத்துப்பிழையா ?
ஜாகிர்,
இலவச இணைப்பு பிரிண்ட்டிங் செலவு யாருதுடா?
காதர்,
அனுபவித்து எழுதினால் அது சுயசரிதை என்றாகிவிடும்.
ஜாஃபர்,
உங்கள் நண்பர் சொல்வது உண்மையே; அப்படியும் சொல்றாய்ங்கத்தான்.
யாசிர்,
இதோ இப்ப இதோட சரி என்று ஒரு எல்லை இருந்தாலாவது பரவாயில்லை. அண்ணன்மார்களை அமுதசுரபி என்றெல்லவா நினைத்துவிடுகிறார்கள்!
எம் ஹெச் ஜே,
பெண்ணுக்கு வாழ்வு கொடுத்ததாக வெளியே சொன்னாலும் ஒரு பெண்ணால் தனக்கு வாழ்வு தேடிக்கொள்ளும் ஈனப்பிறவிகள் இந்த மச்சான்ஸ்.
ஈனா ஆனா காக்கா அவர்கள்,
தொடர் காவியமாக எழுதுமளவுக்கு அவ்வளவு உள்குத்துகள் இதில் இருக்கா என்ன?
அதிரை மெய்சா,
உறைக்கும்ங்கிறே?
MSM,
i cant miss it MSM, when it happens just around me.
கவியன்பன்,
சுவையான பாடல்; சுயமான தேடல்!
ஃபாரூக் மாமா,
கப்பக்கல்லுக்கு வட்டிக்கு வாங்கி கட்டிட்டு திரும்பி போகப்போவதைச் சொல்லப்போகிறீர்களா?
சில்லறையாக ஏதும் செலவு வைக்காமல் மொத்தமாக தங்கையின் குடும்ப பாரத்தையே சுமக்க வைத்த தோப்பனார்கள் கதைகள் நம் தெருவில் ஏராளமாயிற்றே அதையா சொல்லப்போறீய.
கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இப்படி ஒன்றை எழுதத் துவங்கியதும் வார்த்தை ஜாலங்கள் வசமாக வாய்க்க வாய்க்க எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது.
இந்தப் பதிவில் என் பெயர் போடப்படாவிடில் இது நீங்கள் எழுதியதாகவே எண்ணத் தோன்றும்; அந்தளவுக்கு இதில் தமிழ் வார்தைகள் வாய்க்கப்பெற்றேன்.
எல்லோரும் இதைப் பாரட்ட நீங்கள் வழக்கம்போல் சீராட்டி
என்
சில்லரை எழுத்திற்கு
டாலர் அந்தஸ்த் கொடுத்து விட்டீர்கள்.
அத்துடன் இந்த ஏற்புரையைத் தங்களின் தீர்ப்போடு நிறைவு செய்கிறேன்:
""""தலைக்குவிலை?
...?
நாடு விட்டு நாடு ஓடும் தலைவிதிதான்.""""
வஸ்ஸலாம்.
/ஈனா ஆனா காக்கா அவர்கள்,
தொடர் காவியமாக எழுதுமளவுக்கு அவ்வளவு உள்குத்துகள் இதில் இருக்கா என்ன?//
உள்குத்துகள் ! ஆம் ! உள்ளன ஏராளம். !
பழைய குத்துகளுடன் புதிய குத்துகளும்.
மேலும் மச்சான் உடைய எண்ணங்களை மட்டும் வடித்து இருக்கிறீர்கள். இது ஒரு பகுதிதான் என்பதே என் கருத்தின் நோக்கம்.
மருமவனே சபீரு! அஸ்ஸலாமு அலைக்கும்!
கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கு!
அப்பன் பெத்த புள்ளைக்கும் அது பெத்த புள்ளைக்கும் நம்ம தெருவுளே
ரெம்ப பேரு கப்பம் கட்ட கப்பல் ஏறினார்கள்.. சாட்சிகள் மௌநித்த போதும், மரணித்த போதும் நீதி ஊமையாகிவிடும் .
S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
அன்பு மிக்க எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு ....நீங்கள் எழுதிய அந்த ரஜூலா கப்பல் / பெட்டி பிரிக்கும் சமாச்சாரம் / "புள்ளைய பாக்கனுமாம் தேட்டமா இருக்கு" சமாச்சாரம் எல்லாம் இன்னும் எழுதுங்கள்.
உங்கள் எழுத்தை படித்தவுடன் 70 களில் நான் பார்த்த
என் தெரு [ தரகர் தெரு ] மற்றும் கடற்கரைத்தெருவுக்குள் மறுபடியும் நடந்து வந்த உணர்வு வருகிறது.
அப்போதெல்லாம் வாழ்க்கையில் எந்த வசதிகளும் இல்லை...வசதிகள் இல்லாததால் உடம்பில் பிரச்சினைகளும் இல்லை.
//அப்பன் பெத்த புள்ளைக்கும் அது பெத்த புள்ளைக்கும் நம்ம தெருவுளே
ரெம்ப பேரு கப்பம் கட்ட கப்பல் ஏறினார்கள்.. சாட்சிகள் மௌநித்த போதும், மரணித்த போதும் நீதி ஊமையாகிவிடும் .//
தெருவுக்குள் வைக்க வேண்டிய கல்வெட்டு எழுத்துக்கள். தெருவின் பெயர் உள்ள போர்டு வைக்காவிட்டாலும் பரவாயில்லை.
இந்த வார்த்தைகள் இருக்க வேண்டும்.
Assalamu Alaikkum
Dear brother Mr. Abu Shahrukh,
Your poem shows a deep expression of empathy over a brother's hardships for making his sister's life comfortable. Good observation and socially responsible expression for reforming arrogant-ignorant fellows in the society.
Jazakkallah khairan,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
சபீர் மாமா! நம்ம ஊர்காரங்களுக்கு ஏத்தாப்ல கவிதை வடிச்சுட்டீங்க!!!மிக சரியா இருந்துச்சு
Post a Comment