Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு! அனைவரும் வருக!! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 16, 2013 | , , ,

அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 முதல் மதியம் 2 மணிவரை லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. 

இதில் நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள நமது தொப்புகொடி உறவுகளான இந்து, கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம்  M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன் (சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்)

மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி) ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .

இந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும், வரவேற்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப்  முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர்) அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி-துறை கா.மு.கல்லூரி)அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .

இந்த இனிய செய்தியை அதிரை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்! தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள்!!  மாற்று மத அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை அழைத்து வாருங்கள்!!!

குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்:அதிரை ஈத் மிலன் கமிட்டி

8 Responses So Far:

Unknown said...

இச்சந்திப்பு மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவதோடு
மாற்றுமத நண்பர்களுக்கும் நமக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் வாய்ப்பாக அமையட்டும்.

அபு ஆசிப்.

عبد الرحيم بن جميل said...

இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியின் நோக்கம் சிறப்பாய் நடக்க சகல வல்லமையும் வாய்ந்த அல்லாஹு சுப்ஹானத் தஅலா அருள் புரிவானாக!

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ், இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு பெருநாளிலும் இந்தச் சந்திப்புகள் தொடரட்டும்; சமய நல்லிணக்கம்- மனித நேயம் படரட்டும்!

வாழ்த்துகள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

This kind of activities to be entertained throughout the nation to wipe out the racism & fascism in order to put sand mouths of all political culprits.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்நிகழ்வு மத, மனித நல்லிணக்கத்திற்கு அகிலத்திற்கே பாடமாய் அமைந்து அதன்படி மனிதம் இவ்வுலகில் வாழ அல்லாஹ் நாடிடுவானாக ஆமீன்.

Adirai pasanga😎 said...

அல்ஹம்து லில்லாஹ் இந்த நிகழ்ச்சியின் பலனை அனைவரும் அடைய அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

பெருநாள் முடிந்த ஓரிரு நாட்களில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

عبد الرحيم بن جميل said...

@தாஹா காக்கா! நீங்கள் மட்டும் இல்லை,அமீரகத்தில் எனது ரூம் மேட் களும் இதையே தான் சொன்னார்கள்.ஃபீல்டு ல இருக்கவங்களுக்கு தான் அதில் உள்ள நுனுக்கம் தெரியும்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
இந்த நிகழ்சியை நேரில் காண எமக்கு நேரலை!ஆனால் நேரலைமூலம் காண நேர்ந்தது மகிழ்சி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு