Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 9 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2013 | , ,


அகத்தின் அழகு முகத்திலும் முகத்தின் அழகு மூக்குக் கண்ணாடியிலும் தெரியும்!

மூக்குக் கண்ணாடி என்பது பார்வைக் குறைபாடுக்கான வரப்பிரசாதமாக இருந்த காலம் போய், இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் பொருளாகிவிட்டது.    1990 வரை தடிமனான ஃப்ரேம் உள்ள மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது.

மூக்கு கண்ணாடி என்றாலே சேவுப்பிள்ளை கணக்கப்பிள்ளை ஞாபகம்தான் எனக்குவரும் (சேவுப்பிள்ளை கடை என்பது கடைத்தெருவில் அன்சாரி கேப் மார்ட்டுக்கு எதிரில் இருந்த பேமஸ் மளிகை கடை மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு அவர் விடும் லுக் இருக்கே அந்த லுக்கே தனி.  அதற்கு பிறகு காலம் செல்லச் செல்ல, கண்ணாடி அணிவதால் கண்கள் இடுங்கிப்போவதும், மூக்கு வளைவதும் என முகமே மாறிவிடுகிறது என்பதால், கண்ணாடிகளின் உபயோகம் குறைந்து, கான்டாக்ட் லென்ஸ் வந்தது. இன்று இளம்பெண்களில் பெரும்பாலானோர் தேவைக்காக லென்ஸ் அணிந்தாலும், பேஷன், அழகுக்காக கண்ணாடியையும் பயன்படுத்துகின்றனர். அதிலும், மூக்குக்கண்ணாடியில் குறிப்பிட்ட ஃபிரேம் மட்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைப் பார்வையால் இழுக்க ஆரம்பித்திருக்கிறது. 


சென்னையில் இருந்தபோது ஒரு மூக்குக் கண்ணடி வாங்கினேன். அதைக் கழற்றி மேஜை மேல் வைத்தால் அது மின்சாரக் கம்பத்தை கண்ட ஆண் நாய் போல ஒரு காலைத் தூக்கிக் கொண்டே அமர்ந்தது. கடைக்காரனிடம் ஓடினேன்.

கடைக்காரப் பையன் கண்ணாடியை மேஜை மீது வைத்து அதைக் கூர்ந்து பார்த்தான்.

மறு கணம் அவன் பார்வை என் முகத்தின் மீது வந்த்து போட்டானே ஒரு போடு ."சார் ஒங்க மூஞ்சி கோணல் சார். எங்கு போய்க் கண்ணடி போட்டாலும் அது அப்படித்தான் சார் நிக்கும்", என்றான். அதற்கு முன்பும் என் கண்ணாடி அப்படி நின்றதில்லை. ஏன் அதன் பின்னரும் தான். மூக்கிலே மூச்சு நின்றாலும் மறக்க முடியுமா சென்னையில் மூக்குக் கண்ணாடி வாங்கியதை.! 

ஹலோ கொஞ்சம் என்னை பாருங்க நல்லாக் கண்ணைத் தூக்கிட்டு பாருங்க... 

நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான ஃபிரேம்களைப் போட்டு என்னை அலங்கரிக்கிறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது என்னை வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்.. கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.  

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக்கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயா ராகி வெளியே வர பல நாட்கள் ஆகின்றன.

'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.


அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.

நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ். இப்படி நான் உங்கள் முகத்தை அழகு படுத்துவதோடு நான் நின்றுவிடாமல் என்னால் முடிந்தவரை பார்வை குறைவுடையோர்க்கு நான் பக்க பலமாக இருப்பதை மறந்து விடாதீர்கள் என்னை மறந்தும் இருந்துவிடாதீர்கள் தடவப்போவது நான் அல்ல என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.

மூக்குக் கண்ணாடிகளின் வகை:

ஆரஞ்சு நிற லென்ஸ் கொ‌ண்ட மூ‌க்கு‌க் க‌ண்ணாடி சுற்றுப்புறத்தை பிரகாசமாக்கும். ஃபோட்டோ குரோமிக் லென்ஸ் வெளிச்சம் அதிகமாக ஆக இருண்டுக் கொண்டே வரும்.  எந்த நிறமானாலும் கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.  

கண்ணாடி வாங்குவதற்கு முன் அதை அணிந்து முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அந்தக் கண்ணாடி உங்கள் முகத்திற்கு பொருந்தி வருகிறதா என சரி பார்க்கவும்.

உங்கள் கண்ணாடியின் அளவு உங்கள் முக அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடாது. கூலிங் கிளாஸ் வா‌ங்குவதாக இரு‌ந்தா‌ல் காலை அல்லது மதியத்தில் வாங்கவும். அப்போதுதான் அது தேவையான அளவு கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா என்பது தெரியும்.

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி

மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.

அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக் கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர் (மொழி பெயர்க்கும் கருவி) இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.

இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

வெயிலிலிருந்து பாதுகாப்பு:

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.

இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களை சுற்றிவரும் கருவளையம் பற்றி பின்னர் விவரிக்கின்றேன். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆக மொத்தத்தில் சூரிய ஒளியைவிட்டும் கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10 வது தொடரில் மூக்குக்கண்ணாடி திரறையரங்குகளும் அதன் பரிமான வளர்ச்சி பற்றியும்  சிறிது அலசுவோம்.  

தொடரும்...
அதிரை மன்சூர்

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண் ஆடி ஆடி வாசிக்க வைத்தது இந்த 'கண்' 'நாடி'கள் !

நீங்கள் ஊரில் இருந்தாலும் இங்கே இரண்டு கண்களும் இருக்கட்டும் !

Shameed said...

//ஒரு மூக்குக் கண்ணடி வாங்கினேன். அதைக் கழற்றி மேஜை மேல் வைத்தால் அது மின்சாரக் கம்பத்தை கண்ட ஆண் நாய் போல ஒரு காலைத் தூக்கிக் கொண்டே அமர்ந்தது//

ஆகா ரொம்ப நுணுக்கமானா பார்வையா இருக்கே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிருபருக்கு தொடர் ஒளி தந்து கொண்டிருப்பதற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...

//ஒரு மூக்குக் கண்ணடி வாங்கினேன். அதைக் கழற்றி மேஜை மேல் வைத்தால் அது மின்சாரக் கம்பத்தை கண்ட ஆண் நாய் போல ஒரு காலைத் தூக்கிக் கொண்டே அமர்ந்தது//

ஹமீது,

அத்தோடு, தூரத்ல நாய் குறைக்கிற சப்தம் மட்டும் கேட்டிருந்தா மூக்குக் கண்ணாடியின் காலைச் செயின்ல கட்டிப்போட்டிருப்பாரோ!!!

மன்சூர்,

ஆங்காங்கே நகைச்சுவை மிளிர சொல்லியிருப்பது பதிவை ஆர்வத்தோடு வாசிக்கத் தூண்டுகின்றது.

Ebrahim Ansari said...

பார்ப்பதற்கு சாது போலத் தோன்றும் தம்பி மன்சூருக்குள் கடினமான பேசுபொருளையும் இலகுவாகவும் சுவைபடவும் அதிலும் நகைச்சுவையாகவும் எழுத்தும் ஆற்றல் ஒளிந்திருப்பது புரிகிறது. பாராட்டுக்கள்.

சேவுப் பிள்ளையை நினைவு படுத்தியதற்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.

Yasir said...

நல்ல நண்பன் வாய்த்தவனுக்கு மூக்கு கண்ணாடி தேவையில்லையாம் ( ஒரே தள்ளுல தள்ளி கதையை முடிச்சுடுவான் போல) ...உங்களைப் போன்ற ஆராய்ந்து எழுதும் எழுத்தாளர்களை பெற்ற எங்களுக்கு அறிவு என்பது சிரமில்லாமல் கிடைக்கின்றது...வாழ்த்துக்கள்

ஆமா இதைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்க....ஜீடெக்ஸ்-ல அலம்பல் விட்டானுங்க

கூகுள் கிளாஸ்

http://www.theverge.com/products/glass/6977

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நண்பா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மூக்குக் கண்ணாடியின் முன்னாடியிருக்கும் தூசியைத் துடைக்கவோ, பார்க்கவோ வேண்டுமானால், நம் இருகண்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணாடியைக் கழற்றித் திருப்பிப் பார்த்தால் தான் முடியும் என்கின்ற அளவுக்குத் தான் அற்புதப் படைப்பாளனான அல்லாஹ்வும் அமைத்து வைத்து விட்டான்; இப்படிப்பட்ட சிற்றறிவை வைத்துக் கொண்டு, எப்படித் தான் நாத்திகர்கள், “இறைவனைக் கண்ணால் காட்டுங்கள்” என்று அறைகூவல் விடுகின்றனர். தெளிவு படுத்துக.

crown said...

Yasir சொன்னது…

நல்ல நண்பன் வாய்த்தவனுக்கு மூக்கு கண்ணாடி தேவையில்லையாம் ( ஒரே தள்ளுல தள்ளி கதையை முடிச்சுடுவான் போல) ..
-------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஹாஹாஹாஹா..................

Anonymous said...

அம்மாடியோவ் !

இந்த மூக்கு கண்ணாடியில் இம்மாம் பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்குனு இப்போதான் தெரியுது !

எனக்கும் முப்பது வருசத்துக்கு முன்னே கண்ணில் பிரச்னைவந்த போது 'மூக்கு''கண்ணாடி போட்டுக்கோ''ன்னு
அட்வைஸ் பண்ணுனாங்க!

''அட! என்னாங்க நீங்க ஒன்னு. எனக்கு கண்ணுலே பிரச்னை மூக்கு கண்ணாடி போட்டுக்கோ''ன்னு சொல்லுரீங்கனு கேட்டேன்.

நானே போய் போட்டுக்கிட்டு வந்துட்டேன் முப்பது வருசமா கண்போல பாதுகாத்த கண்ணாடியே இந்த மூனாம் தேதி மாத்தி வேறு கண்ணாடி போட்டதும் கண்ணுலே தண்ணி தண்ணியா வருது!

முப்ப வருசமா கண்ணுனோடு கண்ணாக இருந்த கண்ணாடியே பிரிந்த சோகத்தில் கண்ணுக்கு கண்ணீர் வந்ததோ !

கண்கள் இரண்டும் தொடரை உற்று நோக்கி படித்தால் நாமே ஒரு கண் டாக்டர் ஆகலாம் போலே, இருக்கு!

தம்பி அதிரை மன்சூர்! அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த மாதம் 20தேதி என்னை வீடு தேடிசந்திக்க வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியே தந்ததோடு மட்டு மல்லாமல் அது உங்களின் சிறந்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் காட்டியது. நான் மிகவும் ரசித்து விரும்பும் வாசனை திரவியத்தை நீங்கள்
எனக்கு பரிசாக தந்தபோது மகிழ்ச்சியடைந்தேன்!

அதோடு ஆச்சரிமும் அடைந்தேன். வாசனை திரவியத்தின் மீது எனக்கு ஒரு தீராக் காதல் உண்டு என்று எந்தக் கண் கொண்டு கண்டீர்களோ? தெரியவில்லை!

இன்று நான்அதை பூசிக் கொண்டு கண் வைத்தியரிடம் சென்றபோது வாசனையே மோப்பம் பிடித்த டாக்டர் இது பெயர் என்ன? என்றார்!

கண்களை பற்றி எழுதுபவர் கொடுத்த பரிசு கண் டாக்டரையே கவர்ந்தது பொருத்தமானதே!

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் தன் அன்பையும்அருளையும் அருள துவா செய்கிறேன். ஆமீன்.நன்றி!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு